பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 20, 2009

கருணாநிதி 'நண்பர்' பேச்சுக்கு சோனியா பதில் சொல்ல வேண்டும் - ஜெ

CNN-IBNக்கு ஜெயலலிதா அளித்த பிரத்தியோக பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள்

* Why is Rajiv's widow silent on Karunanidhi
* Sonia must respond to Karunanidhi statement
* Sharad Pawar is a very senior political leader. He has the necessary maturity, wisdom and experience to be a prime ministerial candidate
பேட்டி விவரம் கீழே...

முதல்வர் பதவியை உணர்ந்து கருணாநிதி செயல்படவில்லை என முதல்வர் கருணாநித மீது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றச்சாட்டி உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார்.

அப்போது, பிரபாகரன் எனது நண்பன். அவர் பயங்கரவாதி அல்ல என கருணாநிதி தெரிவித்தது குறித்த தங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த செய்தியில் இருந்தே, அவர் முதல்வர் பதவியை உணர்ந்து செயல்படவில்லை என்பது தெரிகிறது.

கருணாநிதி விஷயத்தில் சோனியா மவுனம் காப்பது ஏன்? சோனியா தானே காங்கிரஸ் கட்சி தலைவர்? இது குறித்து அவர் நிச்சயம் கருத்து தெரிவிக்க வேண்டும். ஆனால், இதற்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலும், இது குறித்து எந்த கருத்தையும் சோனியா வெளியிடாமலும் இருப்பது பெரும் வருதத்திற்குரியது.

பிரபாகரன் குறித்த கருணாநிதி செய்திக்காக, அவரை போலீசார் கைது செய்யவேண்டும். ஆனால் தமிழக போலீசார் முதல்வர் கைபிடிக்குள் இருக்கும் போது, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.‌ இது குறித்து மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்த கேள்விக்கு, சரத்பவார் முதர்ச்சியும், அனுபவமும் உள்ள மூத்த அரசியல் தலைவர், அவர் நிச்சயம் பிரதமர் வேட்பாளராக முடியும் என தெரிவித்தார்.

24 Comments:

வண்ணத்துபூச்சியார் said...

ஜெ பற்றிய செய்தியானதால் பச்சை கோடு போட்டு வீட்டீர்களா..??

You Too Idli Vadai ..??

UMA said...

மக்களின் எதிரிகளை அறிந்துகொள்ளுங்கள்:

இலங்கை பிரச்சனை நம்ம பிரச்சனை அல்ல .அதை கிளப்புபவர்களும் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்கள் அல்ல. அப்படி தமிழை தாய் மொழி யை உள்ள நெடுமாறனுக்கு பின்னல் ஒரு பத்து பேர் கூட இல்லை. இலங்கை பிரச்சனையை கிளப்புவது இப்போதுள்ள நல்ல அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை மக்கள் எண்ணி பார்த்து வோட்டு போட்டு விடாமல் தடுக்கும் திட்டமே. நாம் இதற்கு மயங்க கூடாது. போன மாதம்தான் இலங்கை அரசு தீவிரவாதிகளை ஒடுக்கும்போது ஒரு சிலர் சாவார்கள் என்றவர் இப்போது திடீர் கருணை காட்டுவது மக்களை ஏமாற்ற என்பது மரம் வெட்டி , கள்ளத்தோணி இவர்களுக்கும் இந்த அம்மையாரின் திருட்டு புத்தி தெரியும். ஆனால் வோட்டு ஒன்றே குறியாய் உள்ள இவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

1.இலவச தொலைகாட்சி , ஒரு ரூபாய் அரிசியை மக்களை சோம்பேறியாக்கும் என்று குறைகூறும் எதிர்கட்சிகள், குறைந்தவிலை மின்சாரமும் , பெட்ரோலும், சமையல் எரிவாயுவும் தான் மக்களை சோம்பேறியாக்கும் என்று உணரவேண்டும். அதனால் புது புது திட்டங்கள் வராமல் தட்டுபாடு ஏற்பட்டு ஏழைகள் சிரமபடுகிரர்கள் .இப்போதைய மின்சாரத்தட்டுப்பாட்டுக்கு ஜெயா , ராமதாஸ், மற்றும் இடதுசாரிகலே ஆவர். அனால் அவர்கள் வீட்டில் மின்சாரத்தட்டுப்பாடு கிடையாது. ஜெனரேடர் உள்ளது. அப்பாவி மக்கள் துன்ப்படுகிறார்கள்.

2. பெரிய மேம்பாலங்கள், நல்ல ரோடு , புதிய பேருந்துகள், புதிய தொழில் சாலைகள், குறைந்தவிலை உபகரணங்கள் ( மொபைல் போன்), கணிபொறி அதிக சம்பளம், போனஸ் ஆகியவற்றை எதிர்க்கும் ஜெயா மற்றும் கள்ளத்தோணி, காடுவெட்டி, மரம் வெட்டி கூட்டணி.
3. நெல் , கரும்பு கொள்முதல் விலை ஏற்ற வேண்டும் ஆனால் அரிசி, சர்க்கரை விலை குறைய வேண்டும் என்று மக்களை ஏமாற்றும் ஜெயா மற்றும் கூட்டணி.
ரேஷன் அரிசியை எதிர்க்கும் இவர்கள் அந்த அரிசி எங்கிருந்து வந்தது என்பதை அறிவார்களா?.

ரேஷன் அரிசிக்கு என்ன குறை. அது சாணியிளிருந்தா தயாரிக்கப்பட்டது.

சேற்றிலும் வெயிலிலும் பாடுபட்டு பயிரிட்ட கோமணத்துடன் வேலை செய்த விவசாயிகளை , சொகுசாக மடிப்பு கலையாத சட்டை அணியும் இவர்கள் குறை கூறுவதை எப்படி ஒத்துகொள்ளமுடியும் . குறைந்த விலை என்ற காரணத்திற்காக . நியாயமாக அந்த ரேஷன் அரிசி ஏழை மக்களுக்கு தான் . எந்த மடிப்பு கலையாத சட்டை அனயும் ஆந்திர பொன்னி சாப்பிடும் கயவர் களுக்கு அல்ல.

அரசு கொள்முதல் செய்த நெல்லிலிருந்து வந்த அந்த அரிசியை குறைந்த விலை என்ற காரணத்திற்காக அலட்சியம் செய்யும் இவர்களை சுண்ணாம்பு காளவாயில் வைத்து கொளுத்தவேண்டும்.

யாரும் உணவு இல்லாமல் பட்டினி கிடக்க கூடாது . ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படுவது போன்ற பட்டினி சாவுகளை தடுக்கத்தான் ரேஷன் அரிசி . மேட்டு குடி காரர்களுக்கு அல்ல .

விவசாயி கணக்கு பார்த்தல் படிகாசு மிஞ்சாது , ஆனாலும் தனக்கும் மற்றவருக்கும் உணவு வழங்கும் அவர்கள் தரும் அரிசியை/ நெல்லை பழிக்கும் இவர்களைபட்டினி போட்டு சாகடிக்க வேண்டும் .

விவசாயகடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி என்று சிதம்பரம் அறிவித்தவுடன் அது முடியாது ஏமாற்று என்றன எதிர்கட்சிகள். முதலில் பணம் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்றனர் பின்னர் ஒதுக்கிய பணம் பத்தாது என்றனர் . முழு பணமும் வங்கிக்கு கொடுக்கப்பட்ட பின்னர் கடன் பணம் ஒழுங்காக கட்டியவர்களுக்கு என்ன என்றனர்.எவ்வாறு எதையும் எதிர்ப்பது நமது எதிர் கட்சிகளின் வாடிக்கை . இதற்கு ஏழைகளின் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் இடதுசாரிகளும் துணை.

தமிழ் நாட்டில் இனிமேல் விவசாய கடனுக்கு இனிமேல் வட்டி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை எந்த ஒரு எதிர்கட்சிகாரனும் மக்களிடம் சென்றடயாதபடி வேறு ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத இலங்கை பிரச்சனை கிளப்பி மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த அயோக்கிய எதிர்க்கட்சிகளே விவசாயிகளின் முதல் எதிரிகள்.

சேது சமுத்திர திட்டத்தால் அடையபோகும் நலனை தொழில் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் தடுக்க நினைக்கும் வாடா இந்திய தலைவர்களின் கெட்ட எண்ணத்தை தடுக்க வேண்டும். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மட்டும் எப்படி இத்தனை தொழிற்சாலைகள கொண்டுள்ளது என்பதை சிந்திக்கவேண்டும். தமிழ் நாட்டிலும் பெரிய தொழிற்சாலைகள் வரவேண்டுமானால் பெரியதுறைமுகங்கள் தேவை. அதை வர விடாமல் தடுக்கும் சக்திகளை மக்கள் ஒழிக்க வேண்டும்.

டாட்டா ஆரம்பிக்க இருந்த டைட்டாணியம் தொழிற்சாலை , கடலூர் மினசார நிலையம் மற்றும் சில தொழில் பேட்டைகளை வரவிடாமல் தடுத்த மக்கள் விரோதிகளை ஒழிக்க வேண்டும்.

UMA said...

இலங்கை பிரச்சனை நம்ம பிரச்சனை அல்ல .அதை கிளப்புபவர்களும் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்கள் அல்ல. அப்படி தமிழை தாய் மொழி யை உள்ள நெடுமாறனுக்கு பின்னல் ஒரு பத்து பேர் கூட இல்லை. இலங்கை பிரச்சனையை கிளப்புவது இப்போதுள்ள நல்ல அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை மக்கள் எண்ணி பார்த்து வோட்டு போட்டு விடாமல் தடுக்கும் திட்டமே. நாம் இதற்கு மயங்க கூடாது. போன மாதம்தான் இலங்கை அரசு தீவிரவாதிகளை ஒடுக்கும்போது ஒரு சிலர் சாவார்கள் என்றவர் இப்போது திடீர் கருணை காட்டுவது மக்களை ஏமாற்ற தான்

ஜெயா எப்போதும் தமிழ் பாசம் இல்லாதவர். அவரது இலங்கை தமிழர் நிலை முழு பித்தலாட்டம். ஒரு முறை எதிர்ப்பார். மறுமுறை ஆதரிப்பார். அனால் எப்போதும் கருணாநிதியை திட்டுவார். அதற்காகவே உண்ணாவிரதம் என்ற பெயரில் கூத்தடித்தவர் .

ஹோகனேகல், தெலுங்கு கங்கா ,பாலாறு, பெரியாறு அணை உயரம், சிக்கன் குனியா, மழை, குளிர், வெயில், வயித்துவலி, முதுகுவலி ,அனைத்துக்கும் கருணாநிதிதான் காரணம் என்பர். வீராணம் தண்ணீர் என்று கடலூர் நிலத்தடி தண்ணீரை எடுத்து அங்கு உள்ள விவசாயிகள் போர் போடா முடியாமல் செய்தவர். பித்தலாட்டம் என்பதன் மறு பெயர் ஜெயா.

ஏதேனும் வெள்ளம் , மழை, பிணம் விழுந்தால் நாம் கட்டிய (மக்கள) வரிபணத்திலிருந்து ஐந்து லக்ஷம் கொடு , பத்து லக்ஷம் கொடு எண்டு முறையற்ற விதத்தில் கஜானவை காலி பண்ண சொல்லுவார்.

முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும். அதேதான் கருணாநிதி செய்துள்ளார். எப்போது மக்கள் முதலிலிருந்து சிந்தித்து பார்க்கவேண்டும். யார் யார் என்ன என்ன சொன்னார்கள் ? பின் எப்படி மாற்றி மாற்றி சொல்கிறார்கள்? யாரை திட்டுகிறார்கள் ?எல்லாவற்றிற்கும் கருணாநிதியையே குறை கூறுகிறார்கள் என்பது மட்டும் முழு உண்மை. எல்லாம் வோட்டுக்காக. ஜெயா நடிப்பது வோட்டுக்காக, வைகோ ஜெயாவிடம் மண்டியிடுவது வோட்டுக்காக , ராமதாஸ் அடிக்கடி கூட்டணி மாறுவது சில சீட்டுகளுக்காக மற்றும் அன்புமணி மந்திரியாக என்பது நன்கு சிந்தித்தால் புரியும்.

எனவே இலங்கை தமிழர் பற்றி கருணாநிதி. சொல்வது இந்த பித்தலாட்டக்காரர்களை மக்களிடம் தோலுரித்து காட்டத்தான்.

மக்கள் சிந்திக்கவேண்டும்.

UMA said...

இலங்கை பிரச்சனை நம்ம பிரச்சனை அல்ல .அதை கிளப்புபவர்களும் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்கள் அல்ல. அப்படி தமிழை தாய் மொழி யை உள்ள நெடுமாறனுக்கு பின்னல் ஒரு பத்து பேர் கூட இல்லை. இலங்கை பிரச்சனையை கிளப்புவது இப்போதுள்ள நல்ல அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை மக்கள் எண்ணி பார்த்து வோட்டு போட்டு விடாமல் தடுக்கும் திட்டமே. நாம் இதற்கு மயங்க கூடாது. போன மாதம்தான் இலங்கை அரசு தீவிரவாதிகளை ஒடுக்கும்போது ஒரு சிலர் சாவார்கள் என்றவர் இப்போது திடீர் கருணை காட்டுவது மக்களை ஏமாற்ற தான்

ஜெயா எப்போதும் தமிழ் பாசம் இல்லாதவர். அவரது இலங்கை தமிழர் நிலை முழு பித்தலாட்டம். ஒரு முறை எதிர்ப்பார். மறுமுறை ஆதரிப்பார். அனால் எப்போதும் கருணாநிதியை திட்டுவார். அதற்காகவே உண்ணாவிரதம் என்ற பெயரில் கூத்தடித்தவர் .

ஹோகனேகல், தெலுங்கு கங்கா ,பாலாறு, பெரியாறு அணை உயரம், சிக்கன் குனியா, மழை, குளிர், வெயில், வயித்துவலி, முதுகுவலி ,அனைத்துக்கும் கருணாநிதிதான் காரணம் என்பர். வீராணம் தண்ணீர் என்று கடலூர் நிலத்தடி தண்ணீரை எடுத்து அங்கு உள்ள விவசாயிகள் போர் போடா முடியாமல் செய்தவர். பித்தலாட்டம் என்பதன் மறு பெயர் ஜெயா.

ஏதேனும் வெள்ளம் , மழை, பிணம் விழுந்தால் நாம் கட்டிய (மக்கள) வரிபணத்திலிருந்து ஐந்து லக்ஷம் கொடு , பத்து லக்ஷம் கொடு எண்டு முறையற்ற விதத்தில் கஜானவை காலி பண்ண சொல்லுவார்.

முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும். அதேதான் கருணாநிதி செய்துள்ளார். எப்போது மக்கள் முதலிலிருந்து சிந்தித்து பார்க்கவேண்டும். யார் யார் என்ன என்ன சொன்னார்கள் ? பின் எப்படி மாற்றி மாற்றி சொல்கிறார்கள்? யாரை திட்டுகிறார்கள் ?எல்லாவற்றிற்கும் கருணாநிதியையே குறை கூறுகிறார்கள் என்பது மட்டும் முழு உண்மை. எல்லாம் வோட்டுக்காக. ஜெயா நடிப்பது வோட்டுக்காக, வைகோ ஜெயாவிடம் மண்டியிடுவது வோட்டுக்காக , ராமதாஸ் அடிக்கடி கூட்டணி மாறுவது சில சீட்டுகளுக்காக மற்றும் அன்புமணி மந்திரியாக என்பது நன்கு சிந்தித்தால் புரியும்.

எனவே இலங்கை தமிழர் பற்றி கருணாநிதி. சொல்வது இந்த பித்தலாட்டக்காரர்களை மக்களிடம் தோலுரித்து காட்டத்தான்.

மக்கள் சிந்திக்கவேண்டும்.

ஹரன்பிரசன்னா said...

Did you see this interview? CNN-IBN just quote that J gave the interview. If you have the link, pl share it. thanks.

Anonymous said...

Hi IV followers,
In our office we all received one spam mail from somebody with the below link. when click that it directs to Srilankan Defence website.

http://www.defence.lk/new.asp?fname=20090420_12

SEE HOW DARE THEY DO THE THINGS????? anybody received like tha above?!!!!!

கிரி said...

//கருணாநிதி 'நண்பர்' பேச்சுக்கு சோனியா பதில் சொல்ல வேண்டும் - ஜெ //

என்னடா! இன்னும் ஜெ எதுவும் சொல்லவில்லையேன்னு பார்த்தேன் ;-)

ஜெ அம்மா..உங்களுக்கு ஒரு அறிக்கை மற்றும் கவிதை தயார் ஆகிட்டு இருக்காம்.. :-))

Naren's said...

UMA......pattaasu thaan ponga...valid and good pimts...

எட்வின் said...

உமா மேடம் சொல்வது அனைத்தும் உண்மை.

இப்படி ஒருவர் மாறி ஒருவர் குறை சொல்வதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு அதனை எந்த அரசு செய்தாலும் வரவேற்கும் மனப்பான்மை அனைத்து கட்சிகளுக்கும் வர வேண்டும்.

R.Gopi said...

"தல"யை சமாளிக்கும் திறன் தமிழ்நாட்டில் "ஜெ.ஜெ" ஒருவருக்கு மட்டுமே உண்டு.

ஜெ-யின் முதல் கேள்வி பல டன் மிளகாய் காரம்.

ஜெ.யும் சந்தடி சாக்கில் ஷரத் பவார் அவர்களை முன்னிலை படுத்துகிறார்.

"தல" ஒரு மஞ்சள் கவிதை எழுதிக்கொண்டிருப்பார்.

நண்பர் நரேன் சொன்னதுபோல், உமாவின் எழுத்து சரவெடி.

எது எப்படியோ, இட்லிவடை-க்கு இன்னும் நிறைய வேலை வந்து கொண்டிருக்கிறது.

neysamy said...

ஜெயாவின் வேஷம் கலைந்தது

ஜெயாவிடம் ,கூட்டு சேர்ந்துள்ள வைகோ, ராமதாஸ் , நெடுமாறன் , இடதுசாரிகள் இப்போதாவது ஜெயாவின் கேட்டு புத்தியை புரிந்து கொள்வார்களா ? கருணாநிதியை சோனியா கண்டிக்கவேண்டும் என்ற கேடு கேட்ட புத்தியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போதாவது வைகோ, ராமதாஸ் , இடதுசாரிகள் ஜயாவை விட்டுவிட்டு கருணாநிதியிடம் வரவேண்டும். உண்மை தமிழ் தலைவர் யார் என்பதை உணரவேண்டும். better late than never .

neysamy said...

WELL SAID:

Drop LTTE issue from campaign, says Swamy:

Janata Party president Subramanian Swamy on Monday urged Tamil Nadu Chief Minister M. Karunanidhi and AIADMK general secretary Jayalalithaa to “get real” and drop the LTTE issue from the ongoing election campaign. Instead, they should debate on issues that concerned the common man, he said.

“Flip-flop”
In a statement, Dr. Swamy said Mr. Karunanidhi’s “flip-flop” on the LTTE issue was symptomatic of a deeper malaise in the thinking of pro-LTTE Tamil Nadu leaders. They were “torn between the reality that the people of Tamil Nadu do not care about the fate of the LTTE and their vanity about the Dravidian movement …”

Dr. Swamy urged Mr. Karunanidhi and Ms. Jayalalithaa to remove the LTTE issue from the political discourse and instead focus on citizen’s issues such as good governance, development, and law and order.

சித்து said...

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இப்பொழுது அந்த குட்டைய குழப்பிக்கொண்டிருக்கின்றன.

padukali said...

எய்யா இட்லி வடை

கமல் பற்றிய ஒரு பதிவு போட்டு வில்லங்கமாகி பின்னர் மாமி சொன்னதால் வாபஸ் வாங்கி தங்கள் வாசகர் வட்டம் அபாயகட்டமாய் சரிந்த போது வருந்தினேன்.

காலம் சற்றே சுழன்று அதிரடி அரசியல் பதிவுகள் மலரத் தொடங்கியதும் 430 பாலோயர்ஸ் - இப்போது நிலவர படி

சபாஷ் .... இட்லி வடை

அடிரா சக்கை

Anonymous said...

உமா அவர்களே ,
நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை. கருணாநிதி , ஜெயலலிதா இவர்களில் மக்களுக்கு அதிக நன்மை செய்தவர் யார் என்று பார்த்தால் அது கருணாநிதியாக தான் இருக்கும்.
சென்னையில் உள்ள ஒரு மேம்பாலம் கூட ஜெயலலிதாவால் கட்டப்பட்டது இல்லை.
கருணாநிதியை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா தான். ஆனால் உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. அவருடைய சிந்தனையெல்லாம் கருணாநிதியை எப்படி திட்டுவது என்பதிலேயே இருந்துவிட்டது. அவர் நமக்காக என்ன செயதார்.இருந்த ஒரு எம் எல் ஏவையும் ஓரம் கட்டிவிட்டார். காஞ்சி பெரியவாளை சிறையில் அடைத்தது தான் அவர் செய்த ஒரே சாதனை. இதற்கெல்லாம் அவர் தண்டனை அடைந்தே தீரவேண்டும். நமக்கு என்று அவர் ஒன்றுமே செய்யாத போது நாம் ஏன் அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும்?
. நண்பனுக்கு துரோகம் செய்பவனை விட ,நன்மை செய்யும் எதிரியே மேல்.

அமுதப்ரியன் said...

தூத்துக்குடி ரிசல்ட் இன்னும் 2 நாட்களில்........இது கருத்துக்கணிப்பு கிடையாது...

மானஸ்தன் said...

அட்ரா சக்கை...அட்ரா சக்கை!


ஒரு முடிவுலதான் இருக்கீங்க போல, தூத்துக்குடி அமுதப்ரியன்! :-D

மானஸ்தன் said...

"தலையோட" NDTV மற்றும் "பச்சையம்மவோட" CNN-IBN interviews இருந்தா கொஞ்சம் upload பண்ணுங்க இட்லிவடை.

R.Gopi said...

//அமுதப்ரியன் said...

தூத்துக்குடி ரிசல்ட் இன்னும் 2 நாட்களில்........இது கருத்துக்கணிப்பு கிடையாது...//

********

தூள் கெளப்புங்க அமுதப்ரியன்.

ஆமாம், இந்த மேட்டர் நம்ம "தலை"க்கு தெரியுமா??

இத மட்டும் என்கிட்டே சொல்லிடுங்க, யாருக்கும் சொல்ல மாட்டேன் ("தலை"க்கு கூட)

Subramanian said...

// UMA said...
மக்களின் எதிரிகளை அறிந்துகொள்ளுங்கள்:
//

I dont have time to comment on each and every point your support on TN Goverment.

I have some questions,

1. Did you ever saw and tried the 1kg rice/1Rs ?

2. Do you think giving interest rebate to farming loan will really help farming to grow ?

3. Can you list down any visionary plans that MK govt have, to promote farming grow in future ?

4. Giving Color TV's to every family is it a good project?

5. Giving 2k to every family due to rain casuality is good action?

6. as a tax payer I never felt my village received good plans or neither...

I dont have time to count on

-Subbu

Anonymous said...

http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1088408

here is the link

UMMA said...

//எனவே இலங்கை தமிழர் பற்றி கருணாநிதி. சொல்வது இந்த பித்தலாட்டக்காரர்களை மக்களிடம் தோலுரித்து காட்டத்தான்.

மக்கள் சிந்திக்கவேண்டும்//

ரொம்ப சிந்திச்சுட்டேன்!! இந்த மாதிரி ஜால்ராக்கள் இருந்தா மஞ்ச மலத்துக்கு கொண்டாட்டம்தான்..

UMA said...

1.We are using ration rice only.It is very good. In most of our villages, we sell paddy at Govt Depot at Govt rate.We purchase rise from ration shop.
2.I have not benefited from the loan waiver because I have fully re-paid the loan amount in time. However I am happy that my other friends got their loan waived.
3.I am happy that in future there is no interest to be paid for agricultural loan.
4.If all the agricultural lands are converted into housing plots, you will not get any rise.
5.The main problem for the farmers are they are not able to fix the selling price for the paddy they produced.
6.If the price is de-controlled we may get good price.Consequently the price of rice will be Rs100 per KG. Then only all people will realise the importance of farmers.
7.I am not supporting free rice. But I want the price of paddy to be market driven.
8.Ration rice supply causes the low price of free market rice.
9.If the ration rice was stopped the free market rice price may be around Rs50-60 per Kg and if the agricultural loan was also stopped the market price may be around Rs100 per Kg.
10. In short I want that only.
11. Like wise all tax rebates and subsidy for housing loan,gas, petrol,bus fare,train fare,air fare ,season tickets must be abolished.

Boston Bala said...

CNN-IBMம் எதிரி டிவி ஆயிடுச்சா?