பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 17, 2009

தா(க்)கி கவிதைகள்

சமீபத்தில் படித்த இரண்டு கவிதைகள்.

கவிதை - 1
நட்புரிமை கொண்டவரே - முன்னாள்
நம்மனச் செம்மலாய் இருந்தவரே!
நண்பரே! நல்ல தமிழ்ப் பாண்டியரே!
நாற்பது தொகுதிகள் இருக்கும்போது
``நான்மாடக் கூடல் நகர்'' தொகுதியில் மட்டும்
நான் தனிக் கவனம் செலுத்துவதேன் என்று
நாவை அசைத்து நறுக்கென்று கேட்கின்றீர்;
நன்று, நன்று; நான் அதற்கு எதிர்க் கேள்வி,
ஒன்று கேட்டு விட்டால் ஓடி ஒளியாமல்
உடன் பதில் சொல்லும்; ஒழுங்காகச் சொல்ல முடியாவிடில்;
நமது நண்பர் மகேந்திர வர்மன் மந்திராலோசனை மண்டபத்தில்
நமது தோழர் நடேசனாரைக் கலந்தாலோசித்து விளக்கம் கூறும்!
மதுரையில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்
மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவுரைகள் ``தினமணி'' கூறியதை
மந்த மதி படைத்தவரும் படித்துத் தம் போக்கினை
மாற்றிக் கொள்ள முன்வருவாரே; உமக்கோ
சொந்த மதி நிரம்ப இருந்தும் அதனை அரசியலில்
சோரம் போக விடலாமோ?
என்ன செய்தனர் மார்க்சிஸ்ட்கள் மதுரையில்?
சின்னத் துரும்பெடுத்து அதைத் தூணாகச் சித்தரித்து
வீடு கட்டத் தொடங்கும் வேடிக்கை போல
விதம் விதமாய்ப் பொய்ப் புகார்கள் சோடித்து
வேட்பாளர்கள் விண்ணப்பங்களை போடுவதற்கு முன்பே
வீதிகளில் ஊர்வலங்கள் - முழக்கங்கள்!
அது கண்டு, என்னே பேதைமை யென்று
மதுரையே கை கொட்டிச் சிரித்ததாலே
ஆங்காரம் - சீற்றம் எல்லாமே கொண்டு
ஆத்திரத்தில் இருப்பவர் போல் நடித்துக் கொண்டு;
அம்மை லீலாவதி கொலையையும்,
அருமைக் கிருட்டிணனது கொலையையும் இழுக்கின்றீர்.
அம்மை லீலாவதி கொலையில் அரசு வக்கீல் வேண்டாமென
அவர்கள் கோரிய கட்சி வக்கீலையே வைத்து
வாதாடச் செய்த கழக அரசின் வாய்மையை;
தோதாக அதற்குள் மறந்தா போனீர்?
கிருட்டிணன் கொலையின் பின்னணி என்ன?
ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல்
அவரையும் நடுவீதியில் வீழ்த்தி;
அப்பழியையும் கழகத்தின் மீது சுமத்தி
இரு விளையாடல் நடத்தி மகிழ்ந்தனர்
திருவிளையாடல் நகராம் மதுரையம்பதியில்;
கொலை பற்றிப் பேசுதற்கும் கட்டுரை தீட்டுதற்கும்
நிலையற்ற மனிதர் இன்று நீட்டோலை வாசிக்கின்றார் என்றால்;
தலை மறைவு வாழ்க்கையின் போது தபோதனராய் மாறி நின்று
தன் நண்பனுக்குத் தாரமாய் வாய்த்தவளை தாபத்துக்குப் பலியாக்கி
தடுத்து நின்ற தோழனைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்து
ஆயுள் தண்டனை பெற்றுச் சிறைப்பட்ட தண்டாயுதத்தின் பேரால்
அமைத்தீர்கள் கட்சி இல்லம் - அழைத்தீர்கள் பரோலில் அவரை;
அருணாசலேஸ்வரர் நகரில் இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு!
பாவம்; பாண்டியனார் தன் கண்ணில் கிடக்கும் தூணை மறைத்தவாறு - அவர்
பகையெனக் கருதும் எம் கண்ணில் துரும்பென்று பொய்க்கதை கூறுகின்றார்!
மற்றும் இருக்கின்ற பல தொகுதிகளை விடுத்து;
மகன் தொகுதியில் மட்டும் மட்டற்ற அக்கறை எனக்கென்கின்றார் -
மற்ற தொகுதிகள் அனைத்தையும் விடுத்து;
மதுரை தொகுதியில் மட்டும்
மாஸ்கோ வீரர்க்கு; இத்தனை
ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு ஏனோ?
அண்ணாவையும், பெரியாரையும் சந்தித்திராவிட்டால்
அடியேனும் கம்யூனிஸ்டாகியிருப்பேன் என்று சொன்னேன்!
அனுபவத்தில் அவர்களோடு பழகிய பின் -
அதனை இப்போது அடியோடு மாற்றிக் கொண்டு
``கம்யூனிசம்'' தான் எனைக் கவர்ந்தது;
``கம்யூனிஸ்டுகள் அல்ல, அல்ல'' என்று கல்லில் எழுத்தாய் செதுக்கிவைப்பேன்.

கவிதை - 2
நமது அரசியல் பண்பாடு பற்றி
நற்கண்ணப் பெரியீர் உபதேசம் செய்கின்றீர்-
நன்று, நன்று; நானும்
நன்றேயென அதனை வழி மொழிகின்றேன்!
அரசியலில் கடைப்பிடிக்கும் பண்பாடு
அனைவர்க்கும் வேண்டும்தானே?
அணு ஒப்பந்த விவகாரத்தில்
அகில இந்திய காங்கிரசுடன் மோதிக்கொண்டீர்-
அத்துடன் நிறுத்தாமல்
அத்துமீறி எம்மிடமும் தகராறு ஏன் தொடருகின்றீர்?
ஏடுகளை எடுத்துப்புரட்டிப்பார்த்தால்-
கேடு பல எழுதி நாள்தோறும் எமைத்திட்டியது நீரேயன்று;
தேதி வாரியாகச் செய்திகளைக்காட்டி மெய்ப்பிக்கத் தயார்!
வாதிப்பதற்கு வழியுண்டா உமக்கு?
தா.கி.பற்றி தாறுமாறாக எழுதியதற்கு
தடிகொண்டு அடிப்பதுபோல் பதில் தந்தால்
தண்டாயுதத்துக்கு வக்காலத்து வாங்கி
தகுதியற்றோர்க்கெல்லாம் தங்கப்பதக்கம் தருகின்றீரே?
தகுமா? முறையா?
முதலில் சொன்னது யாராம்?
முகத்தில் திருப்பி அடித்தால்
முகாரி ராகம் பாடலாமா?
தா.கி.கதையை இப்போது சொல்லி
தா.பா.வம்புக்கு இழுப்பானேன் தேவையின்றி!
தமிழர் பண்பாட்டைத் தாமதமின்றி
தவறாமல் அவருக்கும் சொல்லலாமே?

தா.கி பற்றி யாராவது வாயை திறந்தால் கலைஞர் அவரை தாக்கி கவிதை எழுதிவிடுவார் போல

இந்த இரண்டு கவிதைகளுக்கும்(?) யாராவது பின்னூட்டதில் சரியான விளக்கம் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

11 Comments:

மானஸ்தன் said...

"தலையோட" இந்த கவிதையைப் படிக்க கழகக் கண்மணிகளும் உடன் பிறப்புகளும் உள்ளார்கள். என்னால இந்த "காமெடி" எல்லாம் படிச்சு அதுக்கு விளக்கமும் சொல்ல டைம்
இல்ல!

மன்னிக்கவும்! :-D :-)

Anonymous said...

இதெல்லாம் ஒரு கவிதை ...
இதுக்கெல்லாம் ஒரு விளக்கம்
கவுண்டமணி சொல்லற மாதிரி
கையில பேனா , பென்சில் எடுத்தவனெல்லாம் கவிஞன் ...
காலம்டா ...

Anonymous said...

சோ... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே....

Anonymous said...

இட்லிவடை, இந்த ரெண்டு கவிதையையும் படிகரதுக்கு சும்மா இருக்கலாம். வேற எதாவது interesting news இருந்தா போடுங்க. இது ரொம்ப மொக்கையா இருக்கு

Anonymous said...

வரியை மடித்து எழுதினால் கவிதையா?ஆம் இந்த கட்டுரையின் தலைப்பை ஏன் போடவில்லை?

Krish said...

உரைநடையை உடச்சி எழுதி, அதை கவிதை யக்கிறாங்க!

தண்டோரா said...

நான் கொடுப்பேன்..ஆனா இட்லி வடை அதை போட மாட்டார்கள்...என் வலைதளத்தில் ஒரு பக்கம் போடுகிறேன்

தண்டோரா said...

நான் கொடுப்பேன்..ஆனா இட்லி வடை அதை போட மாட்டார்கள்...என் வலைதளத்தில் ஒரு பக்கம் போடுகிறேன்

Baski said...

//சரியான விளக்கம் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். //

திருத்தம். இது கவிதை இல்லை. மதுரையில் மூத்த பையன் தோத்து போய்விடுவானோ என்ற அப்பனின் பிதற்றல்.

அஞ்சா நெஞ்சன் கொலை எதுவும் செய்யவில்லையாம்.
ஒரு வருங்கால மத்திய அமைச்சருக்கு இப்போவே வக்காலத்து.
அதுமட்டுமல்ல, எவனாவது பழைய கேச (case) கிளருனா, அருவா பேசும்னு சொல்றார்.

அப்படினா, தா. கிருட்டிணன், தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாம் பாகிஸ்தான் சதியோ என்னவோ?
(அதை நாம் சி பி ஐ இடம் கேட்க வேணுமாம் (அழகிரி சொல்லியது)).
அதையும் நீங்களே சொல்லிடவேண்டியது தானே. நான் வேணும்னா எடுத்துதரேன்.
"போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அஞ்சாநெஞ்சன் குற்றமற்றவர் என இந்த கேசை தள்ளுபடி செய்கிறோம்"

ஆயிர கணக்குல கொன்ன ஜெகதீஷ் டைட்லர் கேசை தான் இப்போ பாத்தாச்சே?
மு.க அவரது பையனை விட்டுவிடுவாரா என்ன.??

( முழுசா விடியோல புடிச்சும், நம்ம காவல் துறை நடவெடிக்கை எடுக்கமாட்டைகுதே.?
அதை விட அசிங்கம் என்னானா., "தயாநிதியும் திரும்பி போய் அழகிரிக்கு பிரச்சாரம் பண்ணுவது" இதையெல்லாம் பாக்கும் போது..... என்னையும் அறியாமல் "அழகிரி வாழ்கன்னு" கத்தனும் போல இருக்கு.)

"கேக்குறவன் (படிக்கிறவன்) கேனயனா இருந்தா, கேப்பைல நெய் வழியுது சொல்லுவாங்க" என பழமொழி உண்டு.

இட்லி வடை அவர்களே , மு.க பிதற்றலை வெளியிட்டு மொத்தத்தில் எங்க எல்லாத்தையும் **** ஆக்கிடீங்களே ??

-- பாஸ்கி

Prabhu Swaminathan said...

oops..ithuku explanation eluthanumna neeraya ketta varthai therinchu irukanume..ennaku aavalava theriathu so sorry...

R.Gopi said...

இதற்கு விளக்கம் கொடுத்தால், அதற்கும் பதில் ஒரு கவிதையே கிடைக்கும்.

நண்பர் ஒருவர் கூறியது போல்,

"இது அழகிரியின் தோல்வியை கண்டு பயப்படும் "தல"யின் உச்சகட்ட பிதற்றல்"

இதே கம்யூனிஸ்ட் கூட இருந்தபோது அவர்களை பிடித்தது, இப்போது அவர்கள் இல்லை என்றதும், கம்யூனிஸ்ட் பிடிக்காது, கம்யூனிசம் மட்டும்தான் பிடிக்கும்... ஆகா, :

"வாக்காள பெருமக்களே, "நீங்கள் "பல்டி" அடிக்க வேண்டுமானால், எந்த ஒரு குரங்கை பார்த்துகூட கற்றுக்கொள்ளலாம்,

ஆனால், அந்தர் பல்டி அடிக்க வேண்டுமானால், நம் "தல"யை சில நாள் பார்த்தால் போதும். இதற்கு ஒலிம்பிக் பதக்கம் இருந்தால், தங்கம் அவருக்கு, அவரை சில நாட்கள் பார்த்ததால், வெள்ளி உங்களுக்கு, உங்கள் கூட இருப்பவருக்கு, வெண்கலம் நிச்சயம்."

இட்லிவடை, இது ஒரு சாமானியனின் விளக்கம். இன்னும் பல அறிஞர்கள் வருவார்கள், விளக்கம் சொல்வார்கள், அதையும் படிப்போம், அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்.

நீங்க, இப்போ இதுக்கு அர்த்தம் சொல்லுங்க :

"யக்கக்க ஜக்க ஜகக்க
மக்கக்க டக்கா நண்டு"