பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 24, 2009

காங்கிரஸில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் ?


கேள்வி கீழே...

பின்னூட்டதில் நல்ல கமெண்டுக்கு பரிசு உண்டு.
பிகு: பழைய பரிசுக்கள் கூடிய சீக்கிரம் நிச்சயம் அனுப்பி வைக்கப்படும் )
( படம் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.4.09, அனுப்பிய நண்பருக்கு நன்றி )

62 Comments:

Krishna said...

காக்கா பிடிக்க வேண்டும்.
:)

Krishna said...

குல்லா போட வேண்டும்.

Another IT Guy said...

Thalaivan/Thalaivi edathil Kaka pidika vendum..
or
Emael edathail ( Top Place) Kaka pidika vendum...

Anonymous said...

காக்காகளுக்குத்தான் காங்கிரசில் இடமுண்டு என்பதை அறிந்த "பொழைக்கத்" தெரிந்த காக்கா!

Karthik said...

'அன்னை'யோ தந்தையோ காங்கிரசில் இருக்க வேண்டும்

Karthik said...

அன்னையும் மற்றவர்களும் பண்ணும் பஜனைக்கு நன்கு ஜால்ரா போடா வேண்டும்.

Swaminathan said...

kulla pottu Kakka Pidikkanum ...

Mr. M said...

Kulla Pottu Kakka Pidikkanum

டன்மானடமிழன் said...

'கா' ந்தியை (கள்ளத்தனமாக) பதுக்க தெரிந்து இருக்கவேண்டும்
'கா' ந்தியின் (இத்தாலி) கொள்ளைக்கு உடன் பட வேண்டும்

நேரு மாமா சொன்னது:
காக்கா பிடிக்க மட்டும் கூடாது
அதை தலையில் வைத்து வளர்க்க தெரிய வேண்டும்

வெ.காளிமுத்து said...

எச்சரிக்கை
==========

தலைவர்கள் சிலை மேல்
எச்சமிடும் காகம்
சுவரில் அறிவிப்பு "அசுத்தம் செய்யாதே!!"

REFLEX said...

yaar evlo thuppinalum , aai ponalum, asayama irukkanum melidam solra varai.

Anonymous said...

you just need to insult hindus...

Subbu said...

தமிழனை கொல்ல தெரிந்தால் மட்டும் போதும் :(

Navaneeth said...

குல்லா போட்டுக்கொண்டு காக்கா பிடிக்கவேண்டும்

Beschi said...

காக்காவாய் இருக்க வேண்டும்
(அ)
காக்கா மாதிரி கூடு கட்ட வேண்டும்
(அ)
குல்லா மேல கூடு கட்ட வேண்டும்
(அ)
அடுத்தவன் கட்டுன கூட்டுக்குள்ள வொக்காந்து நம்ம வூடு மாதிரி போஸ் குடுக்க தெரிந்திருக்க வேண்டும்
(அ)
அடுத்தவன் கூட்ட கலைச்சு விட்டு நம்ம கூட்டுக்குள்ள வொக்காந்து வேடிக்கை பாக்க தெரிந்திருக்க வேண்டும்.
(அ)
காக்காவை கலைக்காமல் புறா பிடிக்க வேண்டும்
(அ)
என்ன நடந்தாலும் பேசாமல் வேடிக்கை பாக்க வேண்டும்
(அ)
கூடு கட்ட வேண்டும் (அடுத்தவன் தலையில்)

Anonymous said...

குல்லா போடுவோரை காக்கா பிடிக்கவேண்டும் & ஜால்ரா போடா வேண்டும்.

Anonymous said...

"
காக்கா பிடிக்க வேண்டும்.
:)குல்லா போட வேண்டும்."

Both. Sokka Sokka namakillai namakillai...

நாகு (Nagu) said...

நேருவுக்கும் தன் குஞ்சு பிரதம குஞ்சுதான்!

நாகு (Nagu) said...

எல்லோருக்கும் புறா பொம்மையைக் காட்டிவிட்டு மேலிடத்தில் ஒரு காக்காவை வைத்துவிட வேண்டும்.

Anonymous said...

Thuttu venum

Anonymous said...

கூட்டணியில் / கூட இருப்போருக்கு வெள்ள புறாவை(பொம்மையதான்....) கொடுத்திட்டு...
'சிரசில்' இருக்கும் காக்காவை பிடிக்க வேண்டும்....அப்போதுதான் காங்கிரசில் இடமுண்டு........

Sethu Raman said...

தமிழ் நாடெங்கும் சுத்தி பாத்தேன்! எல்லா இடத்திலேயும் ஒரே காக்கா கும்பல்!
யாருமே வராத இடம் இந்த நேரு சிலை தான், அதான் இங்கே கூடு கட்டிக் கிட்டேன் - பாலு தள்ளிடுவாரோ?

Krish said...

மானம், , ரோசம், சூடு சொரணை Not Allowed

கிரி said...

//"காங்கிரஸில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் ?"//

கோஸ்டி சண்டையில் நல்ல திறமையாக இருக்க வேண்டும்

ஈழ தமிழர் சாகும் போது கை கொட்டி சிரிக்கவேண்டும்

எவன் செத்தாலும் நம் கொள்கையில் குறியாய் இருக்க வேண்டும்

மறந்தும் சுயமாக முடிவெடுக்க கூடாது

அன்னை (அம்மா அல்ல) என்ன சொன்னாலும் வேத வாக்கா எடுத்துக்கொள்ள வேண்டும்

கோஷ்டி சண்டையில் வேட்டியை உருவ தெரிந்து இருக்க வேண்டும்

கலந்து பேசுகிறோம் பேசிக்கொண்டு இருக்கிறோம் பேசுவோம் என்று கூறி கொண்டே இருக்க வேண்டும் ஆனால் எதுவும் பண்ண கூடாது


இட்லி வடை - நீங்க ஒரு படத்தை கொடுத்து கேட்டு இருந்தீங்க.. காங்கிரஸ் பற்றி என்பதால் மறந்து இதை போல எழுதி விட்டேன்.. மன்னிக்கவும்

Unmai said...

நேரு: என்ன எல்லா காக்கையும் இங்க வரீங்க
காக்கா: காங்கிரஸ் காரங்க எல்லாம் எங்கள பிடிக்க அறிவாலயம் போயிருக்காங்க
நேரு: (கா)ந்தியையும் (கா)மராசரையும் யாருக்கும் பிடிக்கல போல.
அதன் அவரை அண்டங்காக்கை -ன்னு சொன்னவங்கள தேடி போய்ட்டாங்க

Anonymous said...

நேரு தலையில மு.க ....சாரி ,.. காக்கா ..இனி நான் சூப் தான் ஜூட்

lalitha krishnan

Erode Nagaraj... said...

புறாக்களின் நகர்தலால்
புலால் உண்ணும் காகங்கள்
புலம் பெயரும்; புதிதாய்க் குடிவரும்,
அலகுகளை அகலத் திறக்கும்.

அழைப்பதற்கு என்றெண்ணுகையில்,
அஞ்சுவதால் அலறி அலறி
கூட்டம் சேர்க்கும்;
கூடும் கட்டி அமரும்.

மாண்டு விட்ட கணவர்களை
'மதம்' கொண்டு மறந்து போகும்,
மன்னிப்பென்று மழுப்பிவிட்டு
நளினமாய் சிறை மீட்கும்.

மைனாக்கள் வருகுதென்று
மைதுனிக்கும் மனங்களூடே,
அந்தோ! நீயோ! மைனாவோ!!
என்று புறாக்கள் கிளம்பிவிடும்...

கடைசி முறையாய்
கரம் பற்றி விடைகொடுக்கும்.

உலகம் நம்மைச் சுற்றி விரையும்;விரியும்...

பந்தயத்திற்காய் பறக்கவிடினும்
பரவாயில்லை
திரும்ப வரும்
பாவம் மெகாக்கள்...
இல்லையில்லை, புறாக்கள்.

மடல்காரன்_MadalKaran said...

காகம் : நல்ல காலம் நேரு நம்ப கஷ்டம் தெரிஞ்சு அப்பவே குல்லா போட்டுகிட்டாரு. இப்ப நான் செட்டிலாகி, அத போட்டோ வேற புடிச்சிட்டாங்க. இதுதான் பாத சனியோ? (அட காகத்திற்குதாங்க)

மடல்காரன்_MadalKaran said...

காகம் : கொஞ்சம் பகுத்தறிவோட யோசிப்போம். வாஸ்து சாஸ்த்திரப்படி எந்த பக்கம் வாசற்படி வெக்கலாம்?

மடல்காரன்_MadalKaran said...

காகம் : நல்ல காலம் இவரு தமிழ் நாட்டுல பொறக்கல பொறந்திருந்தா இவுரு ஜாதி காரங்க இவரோட பிறந்த/மறைந்த நாளைக்கு மாலையோட வந்திருப்பாங்க.

மடல்காரன்_MadalKaran said...

காகம் : பக்கத்துலேயே ராஜேந்திர பரசாத் சிலையும் வச்சுட்டாங்கன்னா ஒரு பக்கத்து வீட்டுகாரனும் துணைக்கு எனக்கு இருக்குல்ல ஏன் தான் இந்த மனுஷங்களுக்கு இது தெரியலையோ?

கொடும்பாவி-Kodumpavi said...

இனி கத்திப்பாரான்னு சொல்லக் கூடாது காக்காப்பாரான்னுதான் சொல்லனும்.

Anonymous said...

காக்கா அறிவுள்ள பறவை. நேரு சிலை கிட்ட யாரும் - முக்கியமாக காங்கிரஸ்காரன் வ்ரமாட்டான்னு தெரியும்..பாதுகாப்பான இடத்தை கண்டு பிடிச்சு இருக்கு.

milagaipodi said...

karunanidhiyidam seat kekkanum....

oru goshtikkavathu thalaivara irukkanum (easy thaan, thaane oru goshti aarambichida vendiyathu thaan)... appo thaan oru getha irukkum....

R.Gopi said...

"கா கா" என்று காக்காவே வெட்கப்படும் அளவு காக்கா பிடிக்க வேண்டும்.

"ஜால்ரா"வே உடையும் அளவு ஜால்ரா சத்தம் இந்தியாவை உலுக்க வேண்டும்.

எல்லாம் பேசலாம் (சோனியாவிடம் சொல்லிவிட்டு)

நாமக்கலையில் வல்லவராக இருக்க வேண்டும்.

காக்கா பிடிக்கறது பெரிசில்ல. அதை எப்படி பத்திரமா, தலையில் கூடு கட்டி பாதுகாப்பா வேச்சுக்கரோம்னு பாக்கணும்.

"தலை"இடம் சிபாரிசு கடிதம் வாங்கி, டெல்லிக்கு போக வேண்டும்

சோனியாவை - "அன்னையே வருக, அரசாள வருக" என்று ஜல்லி அடிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

வலைஞன் said...

ஈரோடுநாகராஜ் அவர்களின் கவிதை அருமை . இது போல அடிக்கடி எதிர்பார்க்கிறோம்

வலைஞன் said...

புத்திசாலி காகங்கள்

"நேருவின்" தலையில் வீடு கட்டினால்
"இட்லி வடை" தாராளமாக கிடைககும்
என்று அறிந்துள்ள
இக்காகங்கள்
புத்திசாலிகள் தான்

Bart said...

கிழக் காகங்கள் தலையில் உட்கார்ந்து கக்காப் போனாலும்
இளம் புறாக்களை பறக்க விடுவது போல் பாசாங்கு செய்ய வேண்டும்.

இதில் புறாக்கள் பொம்மைகள்; காகங்கள் பழம் தின்று கொட்டை போட்டுக் கொண்டே இருப்பவை.

Anonymous said...

காக்கா பிடிக்கவும், சமாதான புறாவை (இலங்கை) கைவிடவும் தெரிய வேண்டும்....

Btw, ஈரோடு நாகராஜ் அவர்களின் கவிதை அருமை. Hats off to u Sir.

- Ashok

rksrini said...

தலையில் கறுத்த(காக்கா) எண்ணத்தை கொண்டு வெளியில்
சமதானம் செய்வதுபோல் ( புறா ) வெள்ளை உள்ளம் கொண்டவர் போல்
இருக்க தெரிய வேண்டும்.

R.Gopi said...

இப்போதிருக்கும் "காந்தி" (சோனியா) வை புகழ தெரிய வேண்டும்.

அப்போதிருந்த "மாகாத்மா"வை ஏராளமான பெட்டியில் வைத்து பூட்டி, (500, 1000 கட்டுகளாக மட்டும்), அந்த பெட்டிகளை அன்பளிப்பாக "தலை"மையிடம் அளிக்க வேண்டும்.

நிறைய பெட்டிகள், நிறைய சீட்டுகள்
மற்ற அனைவரும் இங்கே வெட்டிகள்.

Erode Nagaraj... said...

thank you வலைஞன் and ashok...

dhideerena atonio maino ninaivukku vandhadhu, idhai ezhudhikkondirukkaiyil...

மடல்காரன்_MadalKaran said...

ஈரோடு நாகராஜ் கவிதை அருமை.

மாயவரத்தான்.... said...

மொதல்ல அந்தக் கட்சியில கோஷ்டி ஆரம்பிக்க வேன்டும். (அதாங்க, உறுப்பினர் ஆக வேண்டும் - ஒவ்வொரு உருப்பினரும் ஒரு கோஷ்டி தானே?!)

மாயவரத்தான்.... said...

நேரு குடும்பத்துக்கு காக்கா (கூட்டம்) தான் புடிக்கும்!

மாயவரத்தான்.... said...

காக்கா (கூட்டத்தை) பாருங்க. அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க!

Vijay said...

காக்கா பிடிக்க கத்துக்கணும்! ;-)

- விஜயஷங்கர், பெங்களூரு.

Krish said...

கா கா கா.......கா கா கா

Inba said...

பெரியார் பரம்பரையில் பிறந்தாலும்
இன, மான உணர்வு இருக்கக்கூடாது

இத்தாலியில் பிறந்தவர் தலைவராய் இருப்பதால்
தேச பக்தி இருக்கக்கூடாது

தொண்டர்களே இல்லை என்று தெரிந்தாலும்
நானே தலைவர் என்று கோஷமிடவேண்டும்

கொள்கைகள் தெரியாவிட்டாலும்
காந்தியையும் காமராஜரையும் எப்படி
தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது
என்று தெரிந்துகொள்ளவேண்டும்

Inba said...

காங்கிரசில் மட்டுமில்லை வேறு எந்த
கட்சியில் சேருவதற்கும்

உள்ளொன்று (காக்கை) வைத்து
புறமொன்று (புறா) பேச தெரிந்துஇருக்கவேண்டும்

Anonymous said...

அண்ணாச்சி!
ரிசல்ட் என்னிக்கு போடுவீங்க? நம்ம ஊரு தேர்தல் மாதிரி "ஒரு மாசம் கழிச்துதானா?

இன்னிக்கு பூரா ஒரு போஸ்டும் இல்லை. வேட்பாளர்களின் சொத்து, மற்றும் அதை சார்ந்த "வடசென்னை" "issue" பத்தி கொஞ்சம் எழுதுங்க.
(எப்படியோ, தா.பா. எஸ்கேப் ஆயிட்டார்!). "கடைக்குட்டி" சொத்தப் பத்தி எல்லாம் யாரும் கேக்க மாட்டாங்களா? இதுக்கு RTI act-ல ஏதாவது வழி இருக்கா?

Anonymous said...

ithe polappa onaku.. olunnggu..

Baski said...

Kakka: Andava Election apparam DMK Congress Alliancelae irrukanum,illati Nehru Silai kuda museumthaku mathi viduvanga

Simharn said...

Erode Nagaraj poetry very superb.

mayiladuturai said...

'காக்கா' ராதாகிருஷ்ணனைப் பிடித்தால்
காங்கிரஸில் சீட் பிடிக்கலாம்.

மாயவரத்தான்.... said...

Whoz that mayiladuthurai?!

R.Gopi said...

//மாயவரத்தான்.... said...
Whoz that mayiladuthurai?!//

************

உங்க ஊர்காரர்தான்...... என்ன, "தல" சொல்லி, சுத்த தமிழ்ல பேரு வச்சு இருக்காரு!!!

Anonymous said...

///mayiladuturai said...
'காக்கா' ராதாகிருஷ்ணனைப் பிடித்தால்
காங்கிரஸில் சீட் பிடிக்கலாம்.///

//மாயவரத்தான்.... said...
Whoz that mayiladuthurai?!//


காக்காயப்பத்தி "மயில்" பேசறதுனால ஒரு விஷயம் சொல்றேன்! கேட்டுக்கங்க.

காங்கிரசிலேயே ரொம்ப "செவப்பான காக்கா" மயிலாடுதுறை காக்காதானாம்!

R.Gopi said...

//காங்கிரசிலேயே ரொம்ப "செவப்பான காக்கா" மயிலாடுதுறை காக்காதானாம்!//

*******

"தல' பக்கமோ, வால்பக்கமோ, லேசா மஞ்சள் அடிச்சு பாருங்க.... அப்புறம் அந்த காக்காவுக்கு தமிழ்நாட்டுல எத்தன மவுசுன்னு ........

தமிழ்நாட்டுல "மஞ்சள்" னா செம மவுசுப்பா.............

லவ்டேல் மேடி said...

டாப் டென்

1. இத்தாலி குடியுரிமை இருந்தா காங்கிரஸ்ல மொத உரிமைய
வாங்கிபுடலாமுங்கோவ்....2. ஹிந்தி பாச தெரியோனுமுங்கோவ் ..... அப்பத்தான் யாராவது பார்லிமன்ட்டுல
ஹிந்தியில அசிங்கசிங்கமா திட்டுனாகோட தெரியுமுங்கோவ் .....3. அமெரிக்க மாதிரி நாட்டுகிட்ட கூல கும்புடு போடா
தெருஞ்சிருக்கொனுமுகோவ்....4. யாராச்சிமும் செருப்புலையே அடுச்சாலுமும் கம்முனு
இருந்துக்கொனுமும்கோவ்... யாராவது சொரண இல்லியான்னு கேட்டா .... " நா
அவன மன்னுச்சு போட்டன்னு சொல்லோனுமுங்கோவ்....."


5. அடிக்கடி பாரின் டூர் போவ தெரிஞ்சிரு் க்கொனுமுங்கோவ் ......6. ஊட்டுக்குள்ள ஜீன்ஸ் , டி-சர்ட் போட்டாளுமும் ... வெளியில வந்தா கதறு துணி
போட்டு ஊர ஏமாத்த த்ரியோனுமுங்கோவ் ்.....7. நல்லா டாட்டா காட்ட தெரியோனுமுங்கோவ்......8. நமபுளுக்கு அடுத்தது காங்கிரஸ் அரசியலுக்காக நேந்துடுரதுக்கு ஒரு வாரிச
பெத்து வழக்கோனுமுங்கோவ் ......


9. யாரபார்தாலும் ஜி போட்டு பெசொனுமுங்கோவ்.......


10. கண்கிரசுல இருந்தாளுமும் ...... நாம தனியா ஒரு கொஷ்ட்டிய வெச்சுகிட்டு காங்கிரஸ் கச்சிக்குலாரையே அடுத்தவன் மண்டைய பாத்து கல்லெறியோனுமுங்கோவ் .... அப்பத்தானுங்கோ நாட்டுக்குள்ள இப்புடி ஒரு கச்சி இருக்குதின்னு மக்களுக்கு தெரியுமுங்கோவ்.......அவ்வ்ளோதானுங்கோவ்...........!! போயிட்டு வாரமுங்கோவ் .....!!!!

Erode Nagaraj... said...

மானஸ்தன் said...
//காங்கிரசிலேயே ரொம்ப "செவப்பான காக்கா" மயிலாடுதுறை காக்காதானாம்!//

mAnasthan, here is the correct spelling for red-eye-err

"Money-Sank-Arai-yer"

Anonymous said...

தம்-புறா(ரா) வேண்டாம் என்று பறக்க விட்ட தலைவனின் குல்லாவிலே ஏறி
"பலச்ருதியில்" "உல்லாலாலா" எனப் பாடத் துடிக்கும் எழரையின் வாகனமே!

"தங்க" மனசுடன் கூடி வாழும் குணமும் -"பாலு"ம் பழமும்" பலருக்கும் கொடுத்துன்னும் நல்பழக்கம் உனக்கிருக்க

மாமா தலையில் கூடு கட்டிய ஒரே குற்றத்திற்காக

சத்தியம் என்றால் என்னவென்றே அறியாத சத்தியமூர்த்திபவனின்

சாகச-சக"வாசன்"களை "காக்கைக்கூட்டம்" எனப் பலரும் (நான் உள்பட)

விளையாட்டாக விளிப்பது உனக்கொரு "அவமானமே"!