பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 07, 2009

சி.பி.ஐ டைரி குறிப்பு

"சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை" என்று இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக
ஷூவை கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார் சீக்கிய பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்.

சி.பி.ஐ நிஜமாகவே ஒரு சுதந்திரமான அமைப்பு தானா பழைய பதிவுகளில் தேடியதில் கிடைத்த சில பதிவுகள் கீழே..குறிப்பு - 1
1986 ஆம் ஆண்டு ராஜிவ் அரசு பீரங்கி வாங்க லஞ்சம் பெற்றனர் என்று செய்தி வந்தது. ஹிந்து பத்திரிக்கை மூலம் ஊழலின் முழு உருவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியது. ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கு க்வாட்ரோச்சி பல தரகு வேலை செய்தார். க்வாட்ரோச்சி வெளிநாட்டில் சரண் புகுந்தார். அவருடைய வங்கி கணக்குகள் முடக்கபட்டன. முடகப்பட்ட தொகை 21 கோடி ரூபாய். க்வாட்ரோச்சி குற்றவாளி என்பதை கடைசி வரை நிருப்பிக்க முடியாமல் போகலாம். ஆனால், செய்திதாள்களில் ராஜிவ் காந்தி குடும்பத்தினரும் குவாட்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு/ஆதாரங்களை தெளிவாக வெளிப்படுத்திவிட்டன. சட்ட பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை அல்லது அரசு விடவில்லை அல்லது தாமதப்படுத்தி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.

சி.பி.ஐ க்வாட்ரோச்சியின் மீதான வழக்கை கைவிடவில்லை; அவரை இந்திய நீதிமன்றம் முன் கொண்டு வந்து நிறுத்தும் முயற்சிகள் கைவிடப்படவில்லை; அவர் குற்றவாளியாக அறிவிக்கபட்ட நிலை மாறவில்லை என்று இருக்க, இந்திய அரசு பிரிட்டனிடம் க்வாட்ரோச்சியின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவருடைய வங்கிக் கணக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிபாரிசு செய்கிறது. ஓசைப்பட்டமல் இந்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இதற்கு கூடுதல் சொலிஸிடர் ஜெனரலை பிரிட்டனுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கிறார்.
( இதற்கு முன்பும் இதே போல் ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்று செய்தியும் வெளியாகியுள்ளது )

வழக்கம் போல் பத்திரிக்கைகள் இதை அம்பலப் படுத்துகிறது. சி.பி.ஐ தன்னை கலந்தாலோசிக்காமல் பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவு என்கிறது. அதாவது சி.பி.ஐ குற்றவாளி என்று கூறுகிறது ஆனால் மத்திய அரசு அவருக்கு நிரபராதி என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது!.

15 வருடங்களாக க்வாட்ரோச்சி குற்றவாளி; அவர் மீதான குற்றப் பத்திரிகையை நாங்கள் வாபஸ் பெறவில்லை, அவர் மீது சர்வதேச எச்சரிக்கை தொடர்கிறது; அவர் இந்திய நீதிமன்றத்தில் நிறுத்துவது எங்கள் கடமை என்ற சி.பி.ஐ நான்கு நாட்களில் ஒரு பல்டி அடித்து சி.பி.ஐ முழுப் பொறுப்பேற்கிறது அதாவது க்வாட்ரோச்சி குற்றவாளி இல்லை என்கிறது.

க்வாட்ரோச்சியின் கணக்குகளை விடுவிக்கக் கூடாது என்று பொதுநல மனு உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட, அதனை விசாரித்து தடை போடும் முன் க்வாட்ரோச்சி பணத்தை எடுத்துவிட்டர்.

சோனியா காந்திக்கு இந்த இத்தாலியர் உறவினர்களும் தப்பித்தால் போதும் இல்லையென்றால் இவ்வளவு ஓபனாக செய்திருப்பார்களா ? அல்லது சி.பி.ஐக்கு 15 வருடத்திற்கு பிறகு தீடீர் ஞானோதயம் வருமா ?

குறிப்பு - 2
சமாஜ்வாடி கட்சி தலை வரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் அள வுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சதுர்வேதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சாதகமாக தீர்ப்பு கூறியது.

அப்போது முலாயம் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வந்தது. எனவே இந்தபிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்ட காங்கிரஸ் சி.பி.ஐ.யை முலாயம் சிங்குக்கு எதிராக திருப்பி விட்டது.

சி.பி.ஐ.யில் முலாயம்சிங் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் முலாயம்சிங் காங்கிரசுக்கு ஆதரவாளராக மாறினார். இதனால் இப்போது மத்திய அரசு இந்த வழக்கில் முலாயம்சிங்குக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி உள்ளது.

முலாயம்சிங்குக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், "முலாயம்சிங் தொடர்பான இந்த வழக்கு விஷயமாக மத்திய அரசின் சட்ட ஆலோசனை யை கேட்டோம். அவர்கள் நாங்கள் தாக்கல் செய்த வழக்கு தேவையற்றது என்று கூறியுள்ளனர். எனவே அந்த வழக்கை வாபஸ் பெற்று கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டு உள்ளனர்.

குறிப்பு - 3
மதுரை தினகரன் அலுவலகம் தாக்குதல் நடந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. அந்தத் தாக்குதல் நடந்தபோது உங்கள் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது. அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சி.பி.ஐ.யே கூறியுள்ளது.’’ - அழகிரி பேட்டி

குறிப்பு - 4
மே-13 உ.பி. முதல்வராகப் பதவி ஏற்கிறார் மாயாவதி. பதவி ஏற்று ஒருமாதகாலம் கூட ஆகவில்லை. மாயாவதியும் சோனியாவும் தில்லியில் சந்தித்துக் கொள்கிறார்கள். பேச்சுகளும் பேரங்களும் நடக்கின்றன. உ.பி. மாநிலத் திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி நிதி தருவதாக மத்திய அரசு அறிவிக்கிறது; மாயாவதி மீதான ரூ. 175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி. மாநில ஆளுநர் டி .வி. ராஜேஸ்வர் அறிவிக்கிறார்!. மாயாவதி ஆட்சிக்கு வந்ததுமே ‘தாஜ் காரிடார்’ வழக்கு கிடப்பில் போடப்படுகிறது

குறிப்பு - 5
CBI's Motto Mission Vision
Motto:
Industry, Impartiality and Integrity

Mission:
To uphold the Constitution of India and law of the land through in-depth investigation and successful prosecution of offences; to provide leadership and direction to police forces and to act as the nodal agency for enhancing inter-state and international cooperation in law enforcement.

Vision:
Based on its motto, mission and the need to develop professionalism, transparency, adaptability to change and use of science and technology in its working, the CBI will focus on

1. Combating corruption in public life, curb economic and violent crimes through meticulous investigation and prosecution.
2. Evolve effective systems and procedures for successful investigation and prosecution of cases in various law courts.
3. Help fight cyber and high technology crime.
4. Create a healthy work environment that encourages team-building, free communication and mutual trust.
5. Support state police organizations and law enforcement agencies in national and international cooperation particularly relating to enquiries and investigation of cases.
6. Play a lead role in the war against national and transnational organized crime.
7. Uphold Human Rights, protect the environment, arts, antiques and heritage of our civilization.
8. Develop a scientific temper, humanism and the spirit of inquiry and reform.
9. Strive for excellence and professionalism in all spheres of functioning so that the organization rises to high levels of endeavor and achievement.


இது மாதிரி நிறைய டைரி குறிப்பு இருக்கிறது. ஆனால் ஒன்று சி.பி.ஐ ஒரு சுதந்திரமான அமைப்பு தான்.

5 Comments:

மானஸ்தன் said...

CBI = Controlled By Ital(ad)y

அப்டீங்களா அண்ணா?

Anonymous said...

IV, Do one more Compilation of KKKongis taking over all other Constitutional pillars like EC, SC.

After CBI the Congis have also polluted the Media, EC, SC, IITs and Rashtrapathi Bhavan. And above all they would be the first political formation everytime to create new precedences on every bad trend or culture in Indian politics right from '47.

சீரா said...

பாஜகவுக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுத்த வருடங்கள் முழுமைக்கும் டான்ஸி வழக்கு அப்படியே நின்றதையும் எழுதியிருக்கலாமே?

R.Gopi said...

//மானஸ்தன் said...
CBI = Controlled By Ital(ad)y

அப்டீங்களா அண்ணா?//

*************

Well said Maanasthan.

This is perfect.

லவ்டேல் மேடி said...

அய்யய்யோ ..... அப்புடியா......??????!!!!?????