பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 21, 2009

யோகாவின் மகிமை

யோகா பற்றி பலர் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இந்தியாவில் தோன்றிய யோகா, இன்று வெளிநாட்டில் மிக பிரபலம்.

நான் அதிகாலையில் யோகா கற்றுக் கொள்கிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கும் தேசிக்காச்சாரியின் தகப்பனார், யோகா கற்றுக் கொண்டதால் 102 வயது வரை வாழ்ந்தார். அந்த வயது வரை வாழ நான் யோகா கற்கவில்லை. உங்களுக்கு உழைக்கவே யோகா கற்றுக் கொள்ளுகிறேன்.

என்று சொன்னவர் கலைஞர்.

சற்று முன் கிடைத்த செய்தி: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 23ஆம் தேதி தமிழகத்தில் வேலைநிறுத்தம். அனைத்து கட்சிகளும் அமைதியான முறையில் ஈடுபட கலைஞர் வேண்டுகோள்.

மேலும் யோகா பற்றி கீழே...தனி ஈழம்தான் தீர்வு

பேச்சு வார்த்தை பயனில்லை

பேச்சு வார்த்தை தான் வழி

பகத்சிங்க் மாதிரி தான் பிரபாகரன்

விடுதலைப்புலிகளை நான் ஆதரிக்கவில்லை

விடுதலைப்புலிகளை நான் எதிர்க்கவும் இல்லை.

இலங்கை தமிழர்தான் தீர்மானிக்க வேண்டும்

மத்திய அரசின் நிலையே எங்கள் நிலை

மத்திய அரசு தலையிடாவிட்டால் எம்.பி.க்கள் ராஜினாமா

அமைதிக்கு வழி செய்ய மத்திய அரசுக்கு தெரியும்

எல்லோரும் பிரதமர்,சோனியாவிற்கு தந்தி அனுப்ப வேண்டும்

இலங்கை தமிழர்களுக்காக பந்த்

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் - அறிக்கை

அனைத்து கட்சி கூட்டம், பேரணி

இலங்கை தூதரத்துக்கு முன்னாலே போராட்டம்

பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் மற்றும்
சட்டசபையில் கடைசி தீர்மானம்.

இறங்கல் கவிதை - கருணாநிதி உருக்கம்
இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தேன் ? கலைஞர் பட்டியல்

பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்

பிரபாகரன் என் நல்ல நண்பர், அவர் தீவிரவாதி கிடையாது

பிரபாகரன் தீவிரவாதி, அவரை மன்னிக்க முடியாது


யோகாவில் பட நிலைகள் - Positions இருப்பது போல் கலைஞரும் இலங்கை தமிழர் பிரச்சனையில் பல நிலைகள் எடுத்துள்ளார். யோகா என்ன கற்று கொடுத்ததோ தெரியது ஆனால் பல நிலைகள் எப்படி எடுப்பது என்று அவருக்கு நன்றாக கற்றுக்கொடுத்துள்ளது.


34 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

தேர்தல் வரும் சமயத்தில் இப்படி பந்த் நடத்தலாமா?
மக்களின் வரிப் பணம் ‘இலவசங்களாக' சென்றது மட்டும் அல்லாது மக்களின் பொது வாழ்கையையும் ஸ்தம்பிக்க வைக்க போகிறார். காலக் கொடுமை.!
நண்பர் பிரபாகரனை ஒரு எட்டு சென்று இலங்கையில் பார்த்து விட்டு வரலாமே.!
விடுதலை புலி மற்றும் சிங்கள அரசிடமும் பேச்சு வார்த்தைக்கு உடன்பட வைத்து அமைதி கொணரலாமே..!
அப்படி செய்தார் என்றால் உலகம் இருக்கும் வரை பெயர் நிலைக்கும்.
தன் பயம் வேறு இருக்கும்.. ராஜீவ் காந்தி எப்படியோ தப்பிச்சிட்டார் சிங்கள சிப்பாயிடமிருந்து. இவரால் அது முடியாமல் போகலாம். அதனால் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே ‘மனித சங்கிலி', 'உண்ணாவிரதம்', ‘பந்த்' என்று ஏதையாவது சொல்லி நானும் இதெல்லாம் செஞ்சேன் என்று விரல் மடக்க பார்க்கிறார்.
சமுதாய விழிப்புணர்ச்சி மிகுந்த தமிழகத்தில் இந்த கூத்தெல்லாம் நடக்குது. மக்களின் சகிப்புத்தன்மைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

Anonymous said...

"possibly!" the best post in the last few weeks!
சும்மா, அதிருதுல்ல!!

எத்தனை செய்திகள் இந்த ஒரு போஸ்ட்ல !!!!(இத்தனைக்கும் பூராவும் படமாத்தான் இருக்கு)!!! எனக்கு நெஜமாவே கண்ணக்கட்டுது!

(1) 102-க்கு பிளான் பண்ணறதுக்கு மட்டும் "தேசிகாச்சாரி" வேணும்!!!

(2) Only (தன் குடும்பத்து) மக்களுக்கான "உழைப்பு".

(3) ராஜாவும் (சென்டர்) நானே, மந்திரியும் (ஸ்டேட்) நானே, தொண்டனும் (பந்த் நடத்தற அள்ளக்கையும்) நானே.

(4) ஆதியும் (மொதல் போட்டோ)- அந்தமும் (கடைசி போட்டோ) ஒன்றே!இட்லி வடை, ஒங்க அட்ரஸ் குடுங்க. உங்ககிட்டே கொஞ்சம் training எடுத்துக்கணும். நாளைக்கே வரலாமா?


பின் குறிப்பு:
ஒரு சின்ன "suggestion". மு,க. அறிக்கை விட்ட தேதியையும் பக்கத்துல குறிப்பிட்டா, இவ்வளவு "ஆசனங்களையும்" எத்தனை நாட்களில் கத்துண்டாருன்னு வரப் போற சந்ததியினர் நல்லாப் புரிஞ்சுப்பாங்க!

Anonymous said...

I should tell you...

This is your best post till date...

and I see strong influences of cho and thuglaq sathya in your posts.

Yaar nee..Yaaraerundalum...keep rocking..

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா......!!!! ஏனுங்கோ இட்லி வடை........ இதெல்லாம் நெம்ப டூ-மச்சா தெரியில....... !!!! யோகாவுளையும் அரசியல கொண்டுவந்த மொதோ ஆளு நீதான்......!!!!

மாயவரத்தான்.... said...

Superu!

UMA said...

கருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர். பிரபாகரனின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. இனி இலங்கை புனரமைப்புக்கு இந்திய நாட்டுக்கு உள்ள கடமையை கருணாநிதி முன்னின்று செயல் படுத்த வழிவகை செய்யவேண்டும். இனிமேல் தான் நமது உண்மையான தமிழர் பாசத்தை காட்ட வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும். வாய்ச்சொல் வீரர்களும் கடு வெட்டி, மரம் வெட்டி, கள்ளதோணி , கருப்பு MGR மற்றும் இடது சாரி களும் கலைஞருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

Anonymous said...

//// இதுவரை நான் ஓட்டுப் போட்டதில்லை. இனிமேலும் போடுவதாக இல்லை. இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் யாவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) திருடர்கள்; கொள்ளைக்காரர்கள்; பயங்கரவாதிகள்; கொலைகாரர்கள்; போலீஸை வேலைக்காரர்களாக வைத்திருக்கும் சமூக விரோதிகள். இவர்கள் செய்யாத அயோக்கியத்தனமே இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, ஃபோர்ஜரி, தேசத்தையே காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களே இவர்களின் மூலதனம். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதையும் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) தூக்கில் போடப்பட வேண்டியவர்கள்; அல்லது, நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள்.

இந்திய தேசத்தில் 75 விழுக்காடு மக்கள் தெருநாய்களைப் போல் வாழ்வதற்கு இந்திய அரசியல்வாதிகள் என்று அறியப்படும் இந்தக் கிரிமினல்களே காரணம். இந்த வகையில் நான் ஒரு நக்ஸலைட். அனார்க்கிஸ்ட்./////////

யோவ் இட்லி. ஒரு உண்மையான, சமூக அக்கறை இருக்கற எழுத்தாளர கண்டுக்க மாட்டிங்களே!

கிரி said...

அசத்தல் பதிவு

//UMA said...
அவர்தான் உண்மையான தமிழர் தலைவர்//

உமா இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க!

Prem said...

Great post..

Though you are influenced by Cho and Thuglak you are not from Thuglak family since you said you were sitting outside to hear Cho's speech during the Thuglak's annual function. If you are associated wit Thugklak you would have got a seat to sit.

By the way you told that you will displaying your photo (I think in the new year). Did you miss it or its me..

Anyways nowadays I am looking at IV than any other magazines now a days..but only few posts to read..

Keep up the good job...

nara said...

கருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர். பிரபாகரனின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. இனி இலங்கை புனரமைப்புக்கு இந்திய நாட்டுக்கு உள்ள கடமையை கருணாநிதி முன்னின்று செயல் படுத்த வழிவகை செய்யவேண்டும். இனிமேல் தான் நமது உண்மையான தமிழர் பாசத்தை காட்ட வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும். வாய்ச்சொல் வீரர்களும் கடு வெட்டி, மரம் வெட்டி, கள்ளதோணி , கருப்பு MGR மற்றும் இடது சாரி களும் கலைஞருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்

சூப்பர் அப்பு நீங்க கொடுக்க்கிற தமிழர் லிஸ்டைப் பார்த்த்தாலே தமிழன் தரம் தெரியுது பொறுக்கி, மொள்ளமரி, ரௌடி....
தமிழன் தமிழன் என்று ஊரை எமாற்றுகிர்ற எவனுக்கும் ஒரு திருப்புகழை பார்த்து படிக்ககூட தெரியாது...அனே கமாக உங்களையும் சேர்த்த்தே ����

nara said...

சூப்பர் அப்பு நீங்க கொடுக்க்கிற தமிழர் லிஸ்டைப் பார்த்த்தாலே தமிழன் தரம் தெரியுது பொறுக்கி, மொள்ளமரி, ரௌடி....
தமிழன் தமிழன் என்று ஊரை எமாற்றுகிர்ற எவனுக்கும் ஒரு திருப்புகழை பார்த்து படிக்ககூட தெரியாது...அனே கமாக உங்களையும் சேர்த்த்தே ����


ருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர். பிரபாகரனின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. இனி இலங்கை புனரமைப்புக்கு இந்திய நாட்டுக்கு உள்ள கடமையை கருணாநிதி முன்னின்று செயல் படுத்த வழிவகை செய்யவேண்டும். இனிமேல் தான் நமது உண்மையான தமிழர் பாசத்தை காட்ட வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும். வாய்ச்சொல் வீரர்களும் கடு வெட்டி, மரம் வெட்டி, கள்ளதோணி , கருப்பு MGR மற்றும் இடது சாரி களும் கலைஞருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

April 22, 2009 7:15 AM

R.Gopi said...

இட்லிவடை

இப்படி நம்ம யோகா ரகசியத்தை படம் வரைந்து பாகம் குறிச்சிட்டியே??

//(1) 102-க்கு பிளான் பண்ணறதுக்கு மட்டும் "தேசிகாச்சாரி" வேணும்!!!//

அண்ணன் சாக மாட்டான், திண்ணை காலி ஆகாது, இந்த வசனம் பேச வேண்டாமா??

//4) ஆதியும் (மொதல் போட்டோ)- அந்தமும் (கடைசி போட்டோ) ஒன்றே!//

ஆடி அடங்கும் வாழ்க்கையடா............

//பின் குறிப்பு:
ஒரு சின்ன "suggestion". மு,க. அறிக்கை விட்ட தேதியையும் பக்கத்துல குறிப்பிட்டா, இவ்வளவு "ஆசனங்களையும்" எத்தனை நாட்களில் கத்துண்டாருன்னு வரப் போற சந்ததியினர் நல்லாப் புரிஞ்சுப்பாங்க!//

கேட்டா, ஒவ்வொருத்தர் கிட்ட, ஒவ்வொரு கணக்கு சொல்வாரு. கண்டுபிடிச்சு கேட்டா, லுல்லுல்லாயிக்கு சொன்னேன்னு சொல்லுவாரு. நாம, ஏதாவது கண்டுபிடிச்சு கேட்டாக்க, மஞ்சள் கவிதை எழுதுவாரு. இதெல்லாம் தேவையா??

//UMA said...
அவர்தான் உண்மையான தமிழர் தலைவர்//

உமா, நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனாலும், இவ்ளோ நம்பிக்கை கூடாதுங்க.

//கொடும்பாவி-Kodumpavi said...

சமுதாய விழிப்புணர்ச்சி மிகுந்த தமிழகத்தில் இந்த கூத்தெல்லாம் நடக்குது. மக்களின் சகிப்புத்தன்மைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.//

என்ன பண்ண முடியும். கையில இருக்கற அந்த வாக்கையாவது ஒழுங்காக யாராவது நல்லது பண்ணுவார்கள் என்று நினைக்கும் நபருக்கு போட்டால், இவர்களுக்கு இந்த தேர்தலில் மணி கட்டிய புண்ணியமாவது கிடைக்கும்.

UMA said...

இரட்டை வேட பத்திரிகைகள:

ஜெயாவுடன் இருக்கும் வைகோ,ராமதாஸ்,நெடுமாறன் மற்றும் இடதுசாரிகள் இலங்கை , சேது சமுத்திர திட்டம் பற்றி கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் பற்றி பத்திரிகைகள் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் கருணாநிதி கருத்து சொன்னால் சோனியா , பிரியங்கா, கபில்சிபல் முதலானோரை தேடிபிடித்து அவர்கள் கருத்தை கேட்டு சிண்டு முடியும் பத்திரிகை மற்றும் மீடியாக்களே இலங்கை தமிழரின் எதிரிகள்.

அவர்களின் இரட்டை வேட பத்திரிகைகள் முகங்களை மக்கள் கண்டு உணர வேண்டும்.

அதே போல் ஜெயா நடத்திய உண்ணாவிரத நாடகத்தை கண்டுகொள்ளாத நீதிமன்றமும் , கருணாநிதி போராட்டம் நடத்தினால் குய்யோமுறையோ என்று புலம்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

UMA said...

நண்பர் 'nara' அவர்களே:

காடு வெட்டி : காடு வெட்டி என்பது ஒரு ஊரின் பெயர். அந்த ஊரின் பெயரைக்கொண்ட தலைவர் அந்த கட்சியில் மிகவும் பிரபலம்.

மரம் வெட்டி: இந்த பட்டப்பெயரை தெரியாதவேரே கடலூர் மாவட்டத்தில் இருக்க முடியாது. அவர்கள் கட்சி ஆரம்பித்த போது ஏதேனும் போராட்டம் என்றால் போக்குவரத்தை நிறுத்த சாலை ஓரத்து மரங்களை வெட்டி ரோடில் குறுக்கே போட்டு வைத்து விடுவார்கள். அது அவர்களின் ஸ்பெஷாளிட்டி .

கள்ளத்தோணி : பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் , முறையான விமான டிக்கெட் இல்லாமல் கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை காட்டில் சந்தித்து வந்தவர்.

Anonymous said...

சோனியா நமஸ்காரம் செய்வதை விட்டுவிட்டீர்களே?. ஈழத்தமிழருக்கு
அடுத்து சவாசனமா?.

யோகா செய்தால் முதுகு நன்றாக வளையும்,உடலின் பாகங்களில் உள்ள
இறுக்கங்கள் குறையும்.கருணாநிதிக்கு மனதில் இறுக்கம் கூடி, நாக்கு நன்றாக வளைகிறது. கூழைக் கும்பிடு போட கைகளும் நன்றாக
வளைகின்றன.

டன்மானடமிழன் said...

/// UMA said...

கருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர்.///

உண்மைதான்
அதிகமா வெயில்லா
நின்னா மண்டை கலங்கிடும்னு
எங்க பாட்டி சொல்லுவாங்க
அப்ப நம்பளை
உன் எழுத்தை பார்த்தப்ப நம்பறேன்

லுசாப்பா நீ....

........................
காமராஜர்க்கு அப்புறம்
எந்த
தமிழக அரசியல்வாதியாலும்
அது
இந்தியா தமிழனாக இருந்தாலும் சரி
ஈழ தமிழனாக இருந்தாலும் சரி
யாருக்கும் இவர்கள்
எந்த சேவையும் செய்யவுமில்லை
இனி செய்யவும் மாட்டார்கள்...

மக்களுக்கு சேவை செய்ய
காமராஜரே மறுபிறவி எடுத்தாதான்.

தயவு செய்து
வெளியே செல்லும் போது
குடை எடுத்துகிட்டு போங்க உமா

Amuthapriyan said...

only you possible like this....
Amuthapriyan.

கலைக்கோவன் said...

எவ்வளவு சொன்னாலும்
இன்னும் தந்தி,கடிதம் விடமாட்டேங்கிறாரெ..,

நாமலும் எவ்வளவு நாளைக்கு
தான் நம்பற மாதிரி
நடிக்கிறது...,

ஆனா..,
மு.க.
ரொம்ப்ப நல்லவன்யா

Anonymous said...

இதுவரை யாரும் இந்த வேலை நிறுத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகவில்லையா?

M Arunachalam said...

//ஈழத்தமிழருக்கு அடுத்து சவாசனமா?//

Though anony has commented in a sarcastic tone, if the SL Tamils can really do Shavasan at the present juncture, it will definitely help them relax all their body muscles from head to toe & relieve them of their terminal tensions caused by LTTE cowards keeping them as human shields to escape from SL Army's assault.

Better to do Shavasan than to become a corpse themselves for the sake of cowardly LTTE.

கலைக்கோவன் said...

இவ்வளவு தந்தி,கடிதம் அனுப்பறாரு,
ஒண்ணும் பதிலே இல்ல.

எம்.பி ராஜினாமா கடிதம் மாதிரி
To-ல அவர் பேரே போட்டு
அனுப்பிட்டாரோ..?

இட்லிவடை கொஞ்சம்
கேட்டு சொல்லுங்களேன்

மெனக்கெட்டு said...

இதெல்லாம் " " என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.

Anonymous said...

YOU ARE ROCKING MAN!!! AMAZING IDLYVADAI. I'VE BECOME ADDICTED TO YOUR POSTS.

Mu.Ka. HAS STARTED HIS DRAMAS AGAIN FOR THE VOTES. IF HE CAN CALL PM & SONIA FOR THE MINISTERIAL POSTS WHY CAN'T HE CALL THEM & MEET THEM FOR THIS CAUSE. THIS 'KULLA NARI' EPPO SAVUMO THERIALIYE... GOD SAVE THE TAMIL NADU FROM THIS THIEF..

KEEP UP THE GOOD WORK..

Anonymous said...

"இவ்வளவு தந்தி,கடிதம் அனுப்பறாரு,
ஒண்ணும் பதிலே இல்ல.

எம்.பி ராஜினாமா கடிதம் மாதிரி
To-ல அவர் பேரே போட்டு
அனுப்பிட்டாரோ..?"

Good one...

SANKAR said...

இன்று பந்த் என்றால் சன் டிவியும் கலைஞர் டிவியும் ஒளீபரப்பை நிறுத்துமா

சங்கர்

R.Gopi said...

//SANKAR said...
இன்று பந்த் என்றால் சன் டிவியும் கலைஞர் டிவியும் ஒளீபரப்பை நிறுத்துமா

சங்கர்//

*************

நல்ல கேள்விதான்.......

நெக்ஸ்ட் மீட் பண்றேன்............

உங்க அட்ரஸ் சொல்லுங்க.............

Anonymous said...

There needs to be a separate pose for Nakka Mukaa. No one can do that.

There also needs to have style for UMA (Naaka Mukaa vai ellam pidikanumna athu..)

Anonymous said...

peran thaan 1 re india fulla pesa sonnar. Oru phone pannalam alla.. delhiku..

UMA said...

செய்தி:

வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை--வழக்கறிகர்கள்:

ஒரே ஆச்சரியாக இருக்கு. எப்போதிலிருந்து அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள்.? புது ஜட்ஜ் வந்ததிலிருந்தா?

R.Gopi said...

//Anonymous said...

peran thaan 1 re india fulla pesa sonnar. Oru phone pannalam alla.. delhiku..//

********

நல்ல கேள்விதான்........

அப்படியே ரூ.1/- குடுக்கறது....... நீங்க மட்டும் இல்ல ..... உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ........ அப்புறம் போன் பண்ணுவோம்ல - "தல"

Anonymous said...

IV, There was a celebrated Hollywood star, Marlene Dietrich,
whose legs were alleged to have been insured for their attractive and matchless beauty. Similarly
I think your brain should be
insured for a huge money (dollars will be better) for your originality in presenting this
graphic illustration of the efficacies of Yoga. Oh my God,
I enjoyed every one bit of this
piece. It is something that will
remain long in my memory. May
a thousand flowers bloom in your
brain--with apologies to Mao Tse
Tung (now corrected as Mao Zedong)
for using his famous phrase "Let
a thousand flowers bloom".

Inba said...

பந்த் நேரத்துலே குடும்ப தொலைக்காட்சிகளை
நிறுத்துவாரா கருணாநிதி?

எப்படி நிறுத்துவார்?
பந்த் நடத்துவதே அதில் வருமானம் பாக்கத்தான்..

என்ன பிராண்டு அடிக்கிறார்?
இப்படி மாற்றி மாற்றி பேசுகிறாரே?

Anonymous said...

அருமை! அருமை!! அருமையோ அருமை

Anonymous said...

correct.......