பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 28, 2009

ஜெயலலிதாவின் தனி ஈழம்

தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதாவின் பேச்சுக்கள் வேடிக்கையாக இருக்கிறது ...


சனிக்கிழமை சேலத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ் ஈழம் என்ற தனி நாடே தீர்வாக இருக்க முடியும் என்று பிதற்ற ஆரம்பித்துள்ளார்.

அதற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில் ஜெயலலிதா வற்புறுத்தும் தமிழ் ஈழ கோரிக்கை தேசவிரோதமானது என்று சொல்ல

அதற்கு ஜெயலலிதா

இந்தியாவில் எந்தப் பகுதியையும் பிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இலங்கையில் இருந்துதான் தமிழ்ஈழத்தை பிரிக்க வேண்டும் என்று சொன்னேன். நாட்டுப்பற்று பற்றி கபில்சிபல் எனக்கு பாடம் நடத்த வேண்டியது இல்லை


ஆனால் இதே ஜெயலலிதா ஜனவரி மாதம் கருணாநிதிக்கு அளித்த பதிலில் இப்படி கேள்வி கேட்கிறார்

காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து- அதாவது தனிநாடு கோரிக்கை குறித்து கருணாநிதி மற்றும் தி.மு.க. வின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் உள்ள தனித்தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரோ, அதே நிலையை இந்தியாவின் பிரச்னைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா?


ஜெயலலிதா மார்ச் மாதம் உண்ணாவிரதம் இருந்த போது பேசியது

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம்.


ஆனால் இன்று தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்

தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களைப் பிரித்து, இலங்கையில் அரசியல் அமைப்புக்கு உள்பட்டு தனி அதிகாரம் கொண்ட பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன். இலங்கை அரசு இது போன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராக இல்லாததால், ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் (சீனாவை தவிர்த்து) அறைகூவலை ஏற்காமல் புறம் தள்ளியது. எனவே, தமிழ் ஈழம் அமைப்பதே இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு.


இதற்கு இவருக்கு கிடைத்த நல்ல பதில்

தமிழ் ஈழத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா வேறு ஓர் நாட்டை அதற்காக தெரிவு செய்வதே புத்திசாலித்தமானது - இலங்கை பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்சே.


இந்த மாதிரி பதில்களை பார்த்தால் இலங்கை அரசு குண்டுவீச்சு நிறுத்திவிட்டது என்று எப்படி நம்புவது ?

39 Comments:

சித்து said...

வெயில் ஏற ஏற இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். எல்லாம் இன்னும் 15 நாட்களுக்கு மட்டும் தான். அப்புறம் இருக்கவே இருக்கு கொடநாடு அல்லது திராட்சை தோட்டம். மு.கா. வும் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை.

IdlyVadai said...

சித்து - ஆமாம் ஹெலிக்காப்டரில் போனால் வெயில் தலைக்கு மேலே தான் அடிக்கும். அதன் எஃபெக்டாக கூட இருக்கலாம்.

R.Gopi said...

//இந்த மாதிரி பதில்களை பார்த்தால் இலங்கை அரசு குண்டுவீச்சு நிறுத்திவிட்டது என்று எப்படி நம்புவது ? //

மாற்றி பேசுவது என்பது அரசியல்வியாதிகளின் கூடப்பிறந்த குணம் தானே, இதில் ஜெயலலிதா என்ன விதிவிலக்கா??

மக்கள் சுட்டி காட்டியவுடன், இப்போது இந்த திடீர் "ஜெ.ஜெ" பதிவு..... இட்லிவடை, இந்த "உள்குத்து நுண்ணரசியல்" எவ்ளோ நாளா நடக்குது??

Anonymous said...

கோபி முந்தி விட்டீர்களே!!! (மக்கள் சுட்டி காட்டியவுடன், இப்போது இந்த திடீர் "ஜெ.ஜெ" பதிவு..... ) என்பதற்காக. உண்மையில் ஜெயலலிதா மட்டுமே போதும், பெண் புத்தி பின் புத்தி என்று பெண்களுக்கு ஒரு அவப்பெயரை பெற்றுததர!

என்னுடைய Advice To ஜெயலலிதா : ஏதாவது படத்தில் அம்மா ஆயா வேடங்களில் நடிக்க முயற்சி செய்யலாம், அதுதான் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

SathyaRam said...

actually in the past fortnight jayalalitha has proven to be a worse 'pacchondhi' than CM. No one thought she can go this down.... she is having bad company and that is the reason as simple as it is.

jaya may even say that POTA is a worst act in few days and may even say she never knew Vaiko was arrested under her rule

வாழவந்தான் said...

//
இந்த மாதிரி பதில்களை பார்த்தால் இலங்கை அரசு குண்டுவீச்சு நிறுத்திவிட்டது என்று எப்படி நம்புவது ?
//
இந்த நடவடிக்கையை போர் நிறுத்தமாக தவறாக கருதவேண்டாம்
தொடர்புடைய இலங்கை ராணுவ தளத்தின் சுட்டிஆனால் நம்மூரு டிவி பொட்டில இப்படி சொல்லிட்டாங்கப்பா

மானஸ்தன் said...

அண்ணே SathyRam! நீங்க எந்த ஊரு?
"No one thought she can go this down" அப்டின்னு போட்டுருக்கீங்க!!!


"பச்சையம்மா" "மஞ்ச துண்டு தாத்தாவுக்கு" கொஞ்சமும் சளைத்தவர் இல்ல.....ரெண்டு பேருக்கும் கடவுள் "நெறைய" நாக்கு குடுத்துருக்கான்!

இப்டி பேசிப் பேசியே தமிழ் நாட்டை சுடுகாடா மாத்திட்டு இருக்காங்க.....இதுக்கெல்லாம் என்னிக்குதான் விடிவுகாலமோ!!!

Suresh said...

அன்புள்ள இட்லிவடை நான் உங்க விசிறி

Dear Friends,

An Exclusive Interview with South Chennai MP Candidate Mr. E. Sarathbabu Founder & CEO, FOODKING, Alumni IIM Ahmedabad & BITS, Pilani , Pepsi MTV Youth Icon 2008, Honorary Rotarian Dist. 3201


To Read in Tamil Click Below

50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்

To Read in English Click Below

50th Special Post - Exclusive Interview with Sarathbabu in English - Sakkarai's Special

Forward to All your Friends, Ask them to Vote for Sarath Babu in South Chennai on " SLATE" on May 13th for more info visit www.sarathbabu.co.in

Thanks - Suresh
LET’S CHANGE NOW!

Anonymous said...

How come these people say such a lie. she claimed that after seeing the DVD given by Sri Sri Ravi shankar, she has changed the stand. Ivangalukkaaa poi solla theriyathu.

Till now she hasn't realized about the entire issue and all of a sudden after the DVD, her idea has completely changed.

Tamizh nattai andha andavanalum kappatha mudiyadhu !!!

Anonymous said...

//தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதாவின் பேச்சுக்கள் வேடிக்கையாக இருக்கிறது..

இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ் ஈழம் என்ற தனி நாடே தீர்வாக இருக்க முடியும் என்று பிதற்ற ஆரம்பித்துள்ளார்.//

இட்லிவடை, உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.

Anonymous said...

Compare to K,J is better.

காப்போம் காப்போனு குழி பரிப்பாதை விட இது 1000 times better.

ஏமாத்த அரசியல் போதும் ... 1000's of Life is not a joke to play with.

Be in SriLankan tamils position and see the matter.If you and your family(brother,sister,father and mother) affected by this cunning drama's from TN and India,what you will feel....?

Be true to yourself and ask the above question.

J may do or dosn't , but i am sure her speech will give new courage/hope to suffering people in that island.

Don't criticize all things @ all time.

I am sure one day J speech will come true.(Note it in your diary my friend).

IdlyVadai said...

//மக்கள் சுட்டி காட்டியவுடன், இப்போது இந்த திடீர் "ஜெ.ஜெ" பதிவு..... //

இட்லிவடை பச்சை கலராக இருக்கலாம் ஆனால் எனக்கு மஞ்சள் காமாலை கிடையாது :-)

இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை ஜெயலலிதா பின்பற்றவில்லை.

மானஸ்தன் said...

///இட்லிவடை பச்சை கலராக இருக்கலாம் ஆனால் எனக்கு மஞ்சள் காமாலை கிடையாது :-)///

இட்லி வெள்ளை, வடை மஞ்சள், அத போட்டு சாப்டற இலைதான் பச்சை.
ஆகவே, இட்லிவடை பச்சை என்பது "பச்சைப்"பொய்.



///இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை ஜெயலலிதா பின்பற்றவில்லை.///

நேத்திக்கு "தல" தலையிட்டுதான் போர் நிறுத்தம், உண்ணாவிரதம் வாபஸ் அப்டின்னு குடும்பத் தொல்லைக்காட்சியில் சொல்றாங்க!
"தல" அடிப்படை நெறிமுறையைப் பின்பற்றினாரா? இல்லே அவர்கிட்டே பாஸ்போர்ட் (விதி முறைகள்) இல்லையா?

மணிகண்டன் said...

***
இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை ஜெயலலிதா பின்பற்றவில்லை.
***

:)- இது என்ன சட்டம் ! தலையிடுதல் என்ற பதத்திற்கான உங்கள் புரிதல் இவ்வளவு தானா ? அருணாச்சல பிரதேசத்தை பற்றி இந்தியா பேசுவது தலையிடுதல் ஆகுமா ? இல்லை சீனா பேசுவது தலையிடுதல் ஆகுமா ? இவ்வாறான மாநிலத்தை பற்றி பேசி தலையிட்டவர்களுக்கு என்ன தண்டனை என்பதையும் தாங்கள் கூறலாமே !

அருண் சோரி வீதிக்கு வீதி சென்று பாகிஸ்தானை மூன்றாக பிரிக்கவேண்டும் / எட்டாக பிரிக்கவேண்டும் என்று கூறி வருகிறாரே. அதே போன்ற கருத்தை பலர் வலையில் எழுதி வருகிறார்களே. இவர்களும் அடிப்படை நெறிமுறை தெரியாதவர்களா ? இவர்கள் அனைவரிடத்திலும் உள்ள பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட வேண்டியதா ?

உங்களுக்கு தனிஈழம் என்ற கோரிக்கை பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாக கூறுங்கள். அதற்கு அடிப்படைசாசன சட்டம், சர்வேதச நெறிமுறை போன்ற தகிடுதத்தங்கள் எதற்கு ?

saikrishnamurari said...

//இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை ஜெயலலிதா பின்பற்றவில்லை.// SUPER COMEDY FIRST SEE YOUR MISTAKES / WHY INDIA SENT IPKF AND RAW GAVE TRAINING TO SRILANKAN REBEL/WAT INDIRA DID IN EAST PAKISTAN//

SAIKRISHNAMURARI said...

சும்மா எழுத வேண்டும் என்று வரலாற்றை மறைக்க வேண்டாம்.ஸ்ரீலங்கன் அரசு தமிழர் உரிமைகளை மறுத்ததால் தான் தனி நாடு கோரிக்கை எழுந்தது.மலசிய பிரச்சினையில் ஏன் இந்திய அரசு தலையிட்டது ????????

Raj said...

this is a feeble attempt to be 'fair and balanced' ;-)
in any case J is clearly the lesser of the 2 evils ! atleast, in a meeting she said that she has no family to amass wealth for and there is some truth to it ! Can manja thundu say the same thing ?!
public memory is short and everyone has conveniently forgotten about the law student beating, rowdies battle in high court (aka lawayers), a complete abdication of responsibility and duty to the CM post, running the state like it is his personal fiefdom, etc etc... Madras is lucky it is not Bombay as otherwise the gullible people have to withstand terrorist attacks too ! and what abt industrial growth since he took office! right... you need power to run your factories...some idiots the factory owners are asking for electricity to run their factories !! go to guindy indl estate and see all the locked out factories. in short, everything as far as TN is down down down in the last 3 yrs.

UMA said...

Sindhu is correct: வெயில் ஏற ஏற இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். எல்லாம் இன்னும் 15 நாட்களுக்கு மட்டும் தான். அப்புறம் இருக்கவே இருக்கு கொடநாடு அல்லது திராட்சை தோட்டம். மு.கா. வும் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை.

மானஸ்தன் said...

///in short, everything as far as TN is down down down in the last 3 yrs.///

என்னங்க இவர் புரியாம பேசறார்? "தல"யும் தமிழ் நாட்டுலதாங்க இருக்காரு!

கவிதாயினிக்கு ஒரு பதவி.
அஞ்சா நெஞ்சனுக்கு ஒரு சீட்.
"spectrum" வழியா கொஞ்சம் ஆயிரம் கோடி.
பேரப் புள்ளைங்க படம் எடுக்க கம்பனிகள் - ரெண்டு மூணு.
உண்ணாவிரதம் "live" காட்ட ரெண்டு-மூணு சேனல்.
பிரச்சினை பண்ண மாறன் பசங்களோட சமாதானம்.

இந்த மூணு வருஷத்துல இவ்வளவு "up" இருக்கும் போது ஏங்க "down-down" ன்னு பொலம்பறீங்க!

வலைஞன் said...

ஸ்ரீலங்கா பிரச்சினை தீர இரண்டு வழிகள்தான் உள.

1. அங்கு ஜனத்தொகை விகிதம்
Sinhalese (74%), Tamils (18%), Muslims (7%), others (1%).
எப்படியாவது அங்கு UPA அரசை அமைத்துவிட்டால் அவர்கள் (காங்கிரஸ்) மைனாரிட்டி பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்கள் எனவே தமிழர்கள் கேட்டது கிடைககும்

அல்லது

2. எப்படியாவது ஒரு லக்ஷம் சிங்களவர்களை இந்திய குடியுரிமையுடன் தமிழ்நாட்டில் இடம்பெயர்த்திவிட்டால் இந்த ஒட்டு வங்கிக்கு பயந்து ஈழப்பிரச்சினையை காற்றில் விட்டு விடுவர்

மானஸ்தன் said...

ராஜபக்சேவும், பிரபாகரனும் நல்லவங்கப்பா!
atleast, அவங்க ரெண்டு பேரும் எதிரிங்க என்கிற கொள்கையில் உறுதியா இருக்காங்க!


நம்ம ஊருல நெலமையப் பாருங்க!!
நெனச்சு நெனச்சு ஒரு பேச்சு, ஒருத்தனை ஒருத்தன் முதுகுல குத்திகறதுக்கு, இன்னிக்கு எதிரி-நாளைக்கு உயிர்த் தோழன்/தோழி.......

இதை எல்லாம் பாத்தா, மேல சொன்ன ரெண்டு பேரும் எவ்வளவோ மேல்...

Raj said...

////இந்த மூணு வருஷத்துல இவ்வளவு "up" இருக்கும் போது ஏங்க "down-down" ன்னு பொலம்பறீங்க!////

அது "up" இல்லீங்கோ !! தமிழ்நாட்டுக்கு இவர் வைக்குற ஆப்பூ !!

Krish said...

Don't stop with Karunanithi and Jaya...continue with RamDos, Kuruma etc

Baski said...

இப்போ வரும் செய்திகள் எல்லாம் பக்கா "திரிப்புகள்".

திரித்து, மசாலா போட்டு, கலர் பொடி போட்டு "இட்லி"யை கார"வடை" என சொல்லுகிறார்கள்.

இன்னொரு கேவலமான விசயம், செய்திகளை தேவைகேற்ப சொல்லுவது / மறைப்பது.

தனியார் தொலைகாட்சினா என்ன வேணுனாலும் ஒளிபரபலாமா.?
செய்திகள் என்பது நடுநிலையாய் இருக்க வேண்டாமா ??


கேக்குறவன் கேனையனா இருந்தால், ****************** !!

வர வர செய்திகளுக்கும், தொடர் நாடகங்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது.

IV, இதை போல ஒவ்வொரு தனியார் சேனலும் அடிக்கும் கூத்து பற்றி ஒரு புது ப்லோக் எழுதலாமே!

Anonymous said...

Ange erukkara appavi makkalai pathi enga oru ambillaikkum kavalai kidaiyathu... Puli kku prachanai Elikku prachanai..Ethu than avanga kavalai.

Endha sri sri madhiri alungalai enna panrathu...

The logic is if you are a celebrity(sri sri) you can create or augment chaos...

if you are a poor inncocent person you get bang in you a** by puli eli and srilankan army...and end in a camp...Pavam avanga...

UMA said...

கருணாநிதி தான் காரணம்-ஜெயாவின் அறிக்கை எதிர்பார்க்கலாம்
சிங்கப்பூர் : கடந்த சில நாட்களாக உலக நாடுகளை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பன்றி காய்ச்சல் ( ஸ்வைன் ஃபுளு ) நோய் பீதியால், ஆசிய கம்பெனிகள் வெளிநாடுகளுக்கு அவர்களது அதிகாரிகளை அனுப்புவதை குறைத்துக் கொண்டிருக்கின்றன.மேலும் வேகமாக பரவும் அந்த கிருமிகளில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு அவர்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.பன்றி காய்ச்சல் நோயால் மெக்ஸிகோவில் இதுவரை 149 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் இந்த நோய் கிருமி அமெரிக்கா துவங்கி ஸ்பெயின் வரை பரவியிருப்பதாகவும், கடந்த 40 ஆண்டுகளில், வேகமாக பரவும் ஒரு நோய் கிருமி இது என்று உலக சுகாதார அமைப்பு அறிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி அதன் ஊழியர்களுக்கு சொல்லியிருக்கும் தைவான் எலக்ட்ரானிக் நிறுவனமான ஹோன் ஹை, வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் அவர்களது ஊழியர்கள் உடம்பில் அந்த நோய் கிருமி இல்லை என்பதை நன்கு தெரிந்து கொண்டபின் தான் அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா,அதன் ஊழியர்கள் குறைந்த பட்சம் மே 6 ம் தேதி வரையாவது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது

R.Gopi said...

//மானஸ்தன் said...
///in short, everything as far as TN is down down down in the last 3 yrs.///

என்னங்க இவர் புரியாம பேசறார்? "தல"யும் தமிழ் நாட்டுலதாங்க இருக்காரு!

கவிதாயினிக்கு ஒரு பதவி.
அஞ்சா நெஞ்சனுக்கு ஒரு சீட்.
"spectrum" வழியா கொஞ்சம் ஆயிரம் கோடி.
பேரப் புள்ளைங்க படம் எடுக்க கம்பனிகள் - ரெண்டு மூணு.
உண்ணாவிரதம் "live" காட்ட ரெண்டு-மூணு சேனல்.
பிரச்சினை பண்ண மாறன் பசங்களோட சமாதானம்.

இந்த மூணு வருஷத்துல இவ்வளவு "up" இருக்கும் போது ஏங்க "down-down" ன்னு பொலம்பறீங்க!//

**************

மானஸ்தன்....... நான் ஒரே ஒரு வார்த்தை சொல்லிக்கறேன்

யப்பா..........

Naren's said...

Dear Raj..all ur facts are wrong...u can pull and compare the industrial growth statistics of tamilnadu in the last 17 years and u can come to an conclusion for urself..and yes public memory is short to have forgotten the wealth amassed by the idonthaveafamily woman.....

SAIKRISHNAMURARI said...

அப்போ சோனியா காந்தி யாரு? சோனியா பிறந்த நாடு எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க????

SAIKRISHNAMURARI said...

பிரபாகரன் சரண் அடைய சிதம்பரம் வேண்டுகோள் இதுவும் உள்நாட்டு அரசியலில் தலை இடும் செயல்தானே

Anonymous said...

விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா///SEE THIS ARTICLE ///http://thatstamil.oneindia.in/news/2009/04/29/lanka-india-pak-trained-helped-us-to-wipe-out-ltte.html///

லவ்டேல் மேடி said...

இந்தம்மாவுக்கு சரியா டையலாக் ப்ரிபேர் பண்ணி பேசதேரியல....!! அவ்வளவுதாங்கோவ்...!!!

அரசியல் வாதிகளின் பிரதிநிதி... said...

சொல் ஒன்னு செயல் பதினொன்னு
உள்ளே வெளியே விளையாட்டில்
நாங்கதான் வின்னு
நீங்க தின்னுங்க பன்னு
அரசியல் எங்கள் மைதானம்
நீங்கதான் அங்க பந்து
எங்க கிட்ட பண்ணாதீங்க லந்து
நாங்க அடிச்சுப்போம் புடிச்சுப்போம்
ஓட்டை மட்டும் நாங்க பிரிச்சுப்போம்
பணமும் பிரியாணியும் எங்க
புது ஃபார்முலா
ஓடிடு நீ பாருக்கு
கேள்வி கேட்ட ஆயிக்கிடுவோம் பார்சலா..

UMA said...

பஸ் கட்டண குறைப்பு.

முன்பு பஸ் கட்டணத்தை ஏற்றியபோது குடும்பத்துடன் கால்நடையாக சென்றதாக கார்டூன் படம் போஸ்டர் போட்ட ராமதாஸ் இப்போது என்ன சொல்ல போகிறார். அம்மாவுக்கு பயந்து பஸ் கட்டண குறைப்பை ரத்து செய்ய சொல்லுவாரா ? என்ன சொன்னாலும் பஸ் கட்டணத்தை குறைத்ததற்கான ஓட்டு கலைஞருக்கே.

UMA said...

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதி மீறல் ஆகும்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்
குப்தா தெரிவித்தார்.

குப்தாவை தூக்கி குப்பையில் போடு- மக்கள்.

UMA said...

தேர்தல் பொன் மொழிகள்.
ஜெயா: தனி ஈழம் வாங்கித்தருவேன்- நான் மந்திரியாய் இருந்தபோது அதை யாரும் கேட்க வில்லை.கேட்டிருந்தால் வாங்கி கொடுத்திருந்திருப்பேன்.

வைகோ: அம்மா மாறிவிட்டார்- இன்னமும் வைகோவிற்கு படிப்பு வரவில்லை

ராமதாஸ் : ஈழ தமிழருக்காக கலைஞர் போராட வெண்டும். தமிழகமே ஸ்தம்பிக்கும் படி செய்யவேண்டும் என்று முன்பு சொன்னது சரிதான். ஆனால் இப்போது கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது எனக்கு தெரியாது. நான் அப்போது மக்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் . அதில் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது பற்றி சொல்லவில்லை.
கருணாநிதி: என்னையே ஈழ தமிழருக்காக பலியாக தருகிறேன்.- எத்தனை முறை தருவீர்கள்?. ஆனாலும் தேர்தலுக்கு பிரச்சாரம் போகாமலேயே பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் இடம் பிடித்து தேர்தல் பிரச்சார எபக்ட் கொடுத்து ஜெயாவை மிஞ்சி விட்டீர்கள். ஜெயா பேச்சு ஒரு மூலையில் தான் வருகிறது. விமானத்தை வாடகை எடுத்தது தப்பு என்று ஜெயா எண்ணலாம்.

நரேஷ் குப்தா: பஸ் கட்டண குறைப்பு தவறு. எதை செய்தாலும் என்னை கேட்டு செய்ய வேண்டும். மின்சார கட் அப்படியே தான் இருக்க வேண்டும். மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்தாலும் மின்சாரம் தரக்கூடாது. ஏன் மழை கூட என்னை கேட்டுத்தான் பெய்ய வேண்டும். ஆனால் ஈழ CD, ரத்த ஆறு இதில் வராது.

தினமணி: நாங்கள் இத்தனை நாட்கள் தமிழகத்தில் புத்தம் புது பஸ் அதிகம் விட்டு கட்டணத்தை ஏற்றியதால் மக்களுக்கு அதிக சிரமம் என்று இதுவரை சொன்னதெல்லாம் சும்மாதான். அதற்காக திடீரென்று குறைத்து தப்பு. நாங்கள் பழைய கட்டணம் தான் கொடுப்போம் என்று மக்கள் போராடவேண்டும்.

UMA said...

இலங்கை பிரச்சனை போய் பாஸ் டிக்கட் குறைப்பு வந்தது. டும் டும் டும் .

Baski said...

கட்டண குறைப்பை யாரும் கண்டிக்கவில்லை.
தேர்தல் சமயத்தில் இதை செய்வது லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதற்கு சமானம்.

எல்லாம் நம்ம மு.க.வின் ராஜதந்திரம்!

Anonymous said...

//Anonymous - விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா//

இந்த நல்ல விடயத்தை செய்த இரு நாடுகளையும் பாராட்ட வேண்டும்.