பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 22, 2009

மீனவ நண்பன்

மீனவ நண்பன் படம் யார் நடித்தது ?

எம்.ஜி.ஆர் என்று சொல்பவர்களுக்கு அடுத்த கேள்வி

தற்போது அந்த படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் ?

விடை கீழே...


ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளது. மீனவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? - விஜயகாந்த்

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் முதலில் எச்சரிக்கையை அளிக்க வேண்டும் என்று இருநாட்டு கடற்படையினரிடமும் வற்புறுத்தியதாக கூறினார். அதையும் மீறி இலங்கை கடற்படையினர் அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. - பிரணாப் முகர்ஜி

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையுடன் தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்" - வைகோ

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடருமேயானால், பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில், தமிழக மீனவர்களின் உரிமைகளை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பதற்கான முயற்சிகளில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் - ஜெயலலிதா


"எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு அரணாக காங்கிரஸ் பேரியக்கம் இருந்து செயல்படும். அக்கொள்கை வழியில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களை விடுவிக்கவும், தாக்குதல் நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடவும் உரிய நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ளும்" - தங்கபாலு

கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வரும் இலங்கைக் கடற்படையின் அத்துமீறலைத் தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்காதது வேதனைக்குரியது - திருமாவளவன்

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழக மீனவர்கள் நலன் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்து கடிதம் - முதல்வர் கருணாநிதி

இதெல்லாம் தமிழ் நியூஸ். கீழே நேற்று வந்த இந்த ஆங்கில நியூஸையும் பாருங்க. அப்பறம் யார் நடித்தால் நல்லா இருக்கும் என்று நீங்களே முடிவு செய்யுங்க.மீனவ நண்பன் மாதிரி கைவசம் விவசாயி,ரிக்சாக்காரன், நானும் ஒரு தொழிலாளி என்று நிறைய படங்கள் இருக்கிறது.


23 Comments:

Anonymous said...

தமிழ்நாடு மீன் வளத் துறை ரூ. 7,706 கேட்டு அனுப்பிருக்கும் நோட்டீஸ் பார்த்து அந்த "மீனவ நண்பர்களுக்கு" ஹார்ட் அட்டாக் வராமல் இருந்தால் சரி.

"தமிழின துரோகி" மு.கருணாநிதியின் அரசு போட்டிருக்கும் இந்த "குண்டுக்கு" பதிலாக,

முன்பே, "சிங்கள பேரினவாதி" ராஜபக்சவின் "பாஸ்பரஸ் குண்டுக்கு" இலங்கை கடல்பகுதியிலேயே செத்தொழிந்திருப்பானே இந்த மீனவத் தமிழ் நண்பன்.

"வாத்தியாரே நீ இல்லாமல் போய் விட்டாயே ! "

என்ன இ.வ அவர்களே !

இலங்கை செய்திகள் அப்படியே ஒதுக்கி விட்டீர்களே .

- சுறா

தூத்துக்குடி தமிழன் said...

"தல" தான் பெஸ்ட் சாய்ஸ்.......
ஆனா, ஒண்ணு இட்லிவடை, தல நடிக்கிறதா இருந்தா, ஒங்களோட பட முடிவ, நெடுன்தொடரா மாத்த வேண்டி வரும்............

Anonymous said...

ஹீரோ, ஹீரோயின், குணச்சித்ரவேஷம், காமடியன், வில்லன் என்று எல்லாப் பாத்திரத்துக்கும் ஆள் இருக்காங்க இந்த லிஸ்ட்ல.

"script"-உம் கலர்ல நல்லா இருக்கு!

"என் இனிய தமிழ் மக்களே" இல்லேன்னா "ஹேர்-புகழ்" "see-மான்" இவரில் ஒருவரைவைத்து படத்த எடுத்து "தேர்தல்" ஸ்பெஷல் அப்டின்னு மே 13 அன்னிக்கு ரிலீஸ் பண்ண சொல்லுங்க.

முடிஞ்சா மு.க. கிட்ட சொல்லி மக்கள் வரிப்பணத்தை அரசு கஜானாலேந்து எடுத்துக் குடுக்க சொல்லி, மொத்த வரிவிலக்கும் அளிக்க சொல்லுங்க. மறக்காம இந்த படம் பாக்க வரவுங்களுக்கு ஒரு DVD பிளேயர் இலவசம்னு மு.க.வை விட்டு சொல்ல சொல்லிடுங்க.

M Arunachalam said...

IV,

Karunanidhi will never ever use a MGR film title in his lifetime. He had a bitter experience in 1980 when they used a famous MGR movie title after DMK won the Lok Sabha election in alliance with Indira Cong against MGR's AIADMK & Janata party alliance.

During the Lok Sabha polls, DMK-Cong-I people were using the "Idhu Naattai Kaakkum KAI" song from MGR's film "Indru Pol Endrum Vazhgha" & won more MP seats too. Subsequently,Indira became PM & with her help, MK dismissed AIADMK Govt in TN & the state went to Assembly polls soon after.

At that time, MK's birth day came & the DMK cadre plastered Madras & TN with posters of Karunanidhi with the words "Indru Pol Endrum Vazhgha" thinking that he is "going to be a CM". But, in that election, MGR's AIADMK trounced the DMK-Cong-I combine convincingly & reagined the Govt with increased majority.

Commenting on the results, many magazines at that time, ridiculed MK & DMK that people have decided to grant DMK's wish & keep MK as it is - "to be CM" and never "as CM".

Our man has, since then, scrupulously avoids using MGR's film titles or songs. Once bitten twice shy(?), possibly.

R.Gopi said...

//மீனவ நண்பன் மாதிரி கைவசம் விவசாயி,ரிக்சாக்காரன், நானும் ஒரு தொழிலாளி என்று நிறைய படங்கள் இருக்கிறது.//

*********

நீ எவ்ளோ இருந்தாலும் லிஸ்ட் போட்டு எடுத்து வைப்பா..... நம்ம "தல" அதுக்கு எல்லாம் அசர மாட்டாரு.........

இப்போ இருக்கற டிரென்ட்-ல "தல"தான் ஆல் இன் ஆல் அழகுராசா....

கதை
திரைக்கதை
வசனம்
பாடல்கள்
இசை
காமெடி வசனம்
கிளிசரின் சப்ளை
ஒளிப்பதிவு
மேக்கப் (மைக்கேல் வெஸ்மொர், இப்போ இங்கதான் இருக்காராம்)
ஆர்ட் டைரக்ஷன் (கடல், கட்டுமரம், கள்ளத்தோணி)
டைரக்ஷன்
தயாரிப்பு (இது மட்டும் ராம நாராயணன், ஏன் இவரு பேர் இன்னும் மாத்த சொல்லலியா??)

Captain's Murasu said...

இது எல்லாம் ஒரு பிழைப்பு

Siraj-Kuwait said...

மீன் வாயில் இருந்து தப்பிச்சிட்டு, முதலை வாயில் மாட்டிகிட்டாங்க..இந்த பாவபட்ட மீனவர்கள்.

வால்பையன் said...

கோடிகளிலேயே பொரண்டதால மதிப்பு தெரியல போல!

Anonymous said...

Ethai parkum bothu arasanga velai la evalavu athi buthisalinga erukkanga nnu theriuthu....

Avanungalukku mulai ye erukkatha...

Ethu onnai ninaichale enakku paithiyam pudichidum pola erukku...Kadavule..enna solli pulambarathunnu kuda theriyalai..

லவ்டேல் மேடி said...

அடங்கொக்கமக்கா ....... !! என்னுங்கடா இது .......... ????? வந்ததுக்கு இவுனுங்க டிக்கட் காசு கேக்குறானுங்க..... ???? அப்போ கூட்டிட்டுபோனதுக்கு அவுனுங்க காசு கேப்பானுங்களா.........??? என்னுங்கடா இது ...... உலக மகா கேப்மாரிதனமா இருக்குது ......

அடேய் ரிப்பன் பில்டிங் மண்டயனுங்களா .... மனுசனுங்கள நிம்மதியா வாழவுடுங்கடா .........!!!!

Anonymous said...

மகா கேவலம்... ஜெயலலிதாவுக்கு ஒரு சான்ஸ்.. விமான கட்ட்ணத்தை A D M K கொடுத்துட்டா பேரும் கிடைக்கும்; ஓட்டும் கிடைக்கும்

UMA said...

இலங்கை : நம்ம தலைவர்கள் சொன்னதும் சொல்லாததும்:

The ruling DMK appealed for wide public support to its call for a 12-hour general strike on Thursday in Tamil Nadu to press the Centre to ensure an immediate ceasefire in Sri Lanka:

நாங்களும் தான் எத்தனை தடவை சொன்னாலும் , எச்சரித்தாலும், கெஞ்சினாலும், பயமுறுத்தினாலும் சோனியா அசங்க மாட்டேன்கிறங்க . நாங்கள் பதவி விலகினால் அப்புறம் யாரு அழுவறது?. அழுவரதுக்கு கூட ஆளு வேண்டாமா?

Jayalalithaa said in a statement that Karunanidhi’s strike call was bogus, and that a general strike would only worsen the problems of the people.
ஸ்டாண்ட் எல்லாம் நாங்க அடித்தால் நிஜம் .நாங்கள் திடீரென்று உண்ணாவிரதம் இருப்போம் . NDTV ல காட்டுவாங்கள். நீங்கள் செய்தால் நாடகம்.
நாங்கள் பண்ணினால் மக்களுக்கு தொந்தரவு கிடையாது. எனென்றால் எங்கள் சட்டம் ஒழுங்கய் பார்த்து யாரும் வீட்டை விட்டே வரமாட்டார்கள்.


PMK founder S Ramadoss criticised the DMK chief for calling for a strike only to counter a protest announced by the Sri Lankan Tamils’ Protection Forum, comprising pro-LTTE parties. The chief minister should take concrete steps instead of engaging in competitive politics on this issue, he said. “Act today. Go to New Delhi and meet UPA chairperson Sonia Gandhi in the company of home minister P Chidambaram and get them to send out a warning to Sri Lanka to halt its operations. Only such an action will save Tamils of the island,” Ramadoss said.

எங்களுக்கு பிளேன் டிக்கட் கிடைக்கலே. நீங்கள் டில்லி போய் சோனியாவை பார்த்து சொல்லுங்கள்.இனிமேல் நாங்கள் சொன்னால் யாரும் நம்பமாட்ட்டர்கள்.எங்களுக்கு இது தெரிய நாலு வருடம் பதினொன்று மாதம் இருபத்தொன்பது நாட்கள் ஆகிவிட்டது.


MDMK general secretary Vaiko and DMDK president Vijayakanth made it clear that they would not participate in the strike. “It is a drama to hoodwink the people,” Vaiko said in a statement.

நாங்கள் தான் ஒரிஜினல் மத்ததெல்லாம் . நாங்கள் தான் நிறைய தமிழர்களை அடக்கம் செயதோம். ( தற்கொலை செய்துகொண்ட) .
CPM state secretary N Varadarajan said farcical strikes would not save Sri Lanka’s Tamils. “It is a wonder of wonders that a party which is a partner in the Union government should call for a strike.”

நாங்கள் இந்த 5 வருடத்தில காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தபோது ஒரு தடவை கூட போராடவில்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட சும்மா தான் குரல் கொடுத்தோம். உள்ளபடி எங்களுக்கு போராடவே புடிக்காது. அம்மா எங்களுக்கு ஜெயிக்கிற சீட் கொடுக்க மாட்டேன் என்றபோது போராடலே . இதுவே கருணாநிதி பண்ணியிருந்தா நடக்கற கதையே வேற. பிளீஸ் நம்புங்க.

Anonymous said...

How come 'UMA' writes so good....lilke commenting everybody. But DMK is NOT commented as the others would be?!! Soft corner? I would like to learn the 'Art' of doing so!

Anonymous said...

I m not finding fault with the dead.Pray for their peace.
When the Professor from Gobi died in US(virginia tech), TN govt paid for the round trip for their family and took care of red tape.
when the poor fishermen got caught, our MuKa finds a way to bill them.

Amma uma, ethuku ivalavu vakkalathu

சித்து said...

கவிஞர் கனிமொழி தான் இந்த உமாவோ??

சித்து said...

இந்த இடுகைக்கும் அவர் கூறியதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டோ?? அதனால் இந்த சந்தேகம் எழுகிறது.

UMA said...

ஒரு சின்ன விளக்கம்:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து என்று அடிக்கடி செய்தி வருவதை நாம் சிந்திக்க வேண்டும். ஏன் அவர்களை இலங்கை கடற் படை பிடிக்கிறது?
நமது கடற் படை என்ன செய்கிறது?

காரணம் என்னவென்றால் நமது மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன் பிடிக்க செல்கின்றனர். எனவே அவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. எவ்வளவு தான் அறிவுறித்தலும், நமது மீனவர்கள் கேட்பதில்லை . அது தான் முதல் காரணம். நமது எல்லை தாண்டி சென்றால் தான் நல்ல மீன்கள் , நிறைய கிடைக்கின்றன என்பது மற்றொரு காரணம்.

UMA said...

பக்கத்து வீட்டு பையனும் உங்கள் பையனும் படிக்காமல் எப்போதும் அல்லது பரீட்சை சமயத்தில் விளையாடிகொண்டிருந்தால் , யாரை முதலில் கண்டிப்பீர்கள்? உங்கள் பையனையா அல்லது அடுத்த வீட்டு பையனையா ?

UMA said...

The professor was brutally killed in USA. There is no violation in any giving benefits. Only quick processing of travel arrangements were made including issue of PASSPORT,VISA on humanitarian grounds.Both Indian Govt and USA embassy helped them.

Anonymous said...

//The professor was brutally killed in USA. There is no violation in any giving benefits. Only quick processing of travel arrangements were made including issue of PASSPORT,VISA on humanitarian grounds.Both Indian Govt and USA embassy helped them.//

அத யாரும் violation அப்டின்னு சொல்லலை. அவங்களுக்கு குடுக்கட்டும். அதே மனிதாபிமானம் இந்த "ஏழை" மீனவர்களுக்கும் காட்டி இருக்கப்படவேண்டும் என்பதே கருத்து.

தயவு செய்து இந்த அரசியல் வியாதிகளையும், அவர்களின் தவறான வழிகாட்டலால் ஏழை மீனவர்களுக்கு "பில்" அனுப்பும் வீணாப் போன இந்த மாதிரி தவறான அதிகாரிகளையும் கண்டிக்காவிட்டாலும், அவர்களுக்காக வக்காலத்து வாங்காமல் இருந்தாலே போறும்.

Anonymous said...

//பக்கத்து வீட்டு பையனும் உங்கள் பையனும் படிக்காமல் எப்போதும் அல்லது பரீட்சை சமயத்தில் விளையாடிகொண்டிருந்தால் , யாரை முதலில் கண்டிப்பீர்கள்? உங்கள் பையனையா அல்லது அடுத்த வீட்டு பையனையா ?//

கண்டிப்பாக பக்கத்துக்கு வீட்டுப் பையனைத்தான். என்னோட புள்ளைய கெடுக்காம "ஓடிப்" போய்டு அப்டின்னு அவனுக்குதான் மொதல்ல அட்வைஸ்/கண்டிப்பு எல்லாம்.
(ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா, தன் புள்ள தானா வளரும்).


பின் குறிப்பு:
எனக்கு மொக்கையா" பதில் எழுதறதுல உடன்பாடு இல்லை. அனால் இந்த மாதிரி "சம்பந்தா-சம்பந்தம்" இல்லாத கேள்விக்கு இப்படிதான் பதில் அளிக்க வேண்டும்.

Anonymous said...

//**கண்டிப்பாக பக்கத்துக்கு வீட்டுப் பையனைத்தான். என்னோட புள்ளைய கெடுக்காம "ஓடிப்" போய்டு அப்டின்னு அவனுக்குதான் மொதல்ல அட்வைஸ்/கண்டிப்பு எல்லாம்.
(ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா, தன் புள்ள தானா வளரும்).

**///
மானஸ்தன் முதலில் இட்லி வடைக்கு எப்போதும் சொம்பு தூக்குவதை எப்போது நிறுத்துவீர்கள்? ரொம்ப மொக்க போடுகிறீர்கள்...இந்த கடைசி பின் குறிப்பு மட்டும் அல்ல, எல்லா பின் குறிப்பையும் சேர்த்து தான் சொல்லுகிறேன். சும்மா கண்ணை மூடிக்கிட்டு லூசு மாதிரி பேசக் கூடாது, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிக்க கூடாது...

இப்படிக்கு,

Anonymous said...

அண்ணே, அனானி!
நீங்க சொல்லிடீங்க. கேட்டுக்கறேன். இன்னிமே "கண்ண மூடாம" பேச ட்ரை பண்ணறேன்.

btw, இந்த கமெண்டுக்கும் இட்லிவடைக்கு சொம்பு தூக்கரதுக்கும் என்ன அண்ணே சம்பந்தம்?
இட்லி வடை மேல ஒங்களுக்கு என் இத்தனை கோவம்?