பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 21, 2009

எது சுகம் ?

இன்றைய கேள்வி பதில் அறிக்கையில் ஒரே ஒரு கேள்வி பதில்

கேள்வி: இலங்கையுடனான உறவை துண்டிக்கா விட்டால், காங்கிரஸ் உறவை துண்டிக்க தயாரா என்று டாக்டர் ராமதாஸ் அறைகூவல் விட்டிருக்கிறாரே?

பதில்: காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதில் டாக்டர் ராமதாசுக்குத்தான் எவ்வளவு ஆர்வம்? ஐந்தாண்டு காலம், அந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே உள்ள ஆட்சியிலே, அமைச்சர் பதவிகளை ஏற்று அதன் சுகங்களையெல்லாம் கடைசி நிமிடம் வரை அனுபவித்துவிட்டு, பின்னர் அவர்களுக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே வந்துள்ள டாக்டர் ராமதாஸ் நம்மையும் துரோகம் செய்ய தூண்டுகிறார், துடியாய்த்துடிக்கிறார்.

மத்திய அரசை தி.மு.க. அரசு வலியுறுத்தவில்லை என்று தொடர்ந்து கூறிக் கொண்டு வந்தார். இப்போது தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகு, அவர்கள் நிறைவேற்றாவிட்டால் அவர்களோடு உறவை துண்டித்து கொள்ள தயாரா என்று சவால் விடுகிறார். இவரது சவாலின் நோக்கம் எல்லாம் நமக்கு தெரியாதா என்ன? இப்போது கூட, அவரின் மகன் மந்திரி பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார், "எம்.பி.'' பதவியை அல்ல என்பது; நாடறிந்த உண்மை!


சுத்தம் சுகம் தரும் என்று படித்திருக்கிறேன். இன்று தான் தெரிந்தது அமைச்சர் பதவியும் சுகம் தரும் என்று!

16 Comments:

மானஸ்தன் said...

அது "சுத்தத்தைப்" பற்றி கவனிக்கும் "சுகாதாரத்துறை" அய்யா! அதனால்தான் அப்டி!

R.Gopi said...

ஐயோ

இது என்ன திடீர் கூத்து.

இட்லிவடை, ரெண்டு "இரட்டை இல்லை" மட்டும் தான் இருக்கு, ரெண்டு "சூரியன்" காணுமே?? உங்க, தொகுதி அறிவிப்பில் இருந்த படங்களை சொல்கிறேன்........

R.Gopi said...

ஆஹா,

இப்போ வந்துடுச்சுய்யா, இது பெரிய "உள்குத்தா" இருக்கே இட்லிவடை.

mazhai said...

//இவரது சவாலின் நோக்கம் எல்லாம் நமக்கு தெரியாதா என்ன? //
அதானே .... இவர் என்ன சொல்றது நாம என்ன கேக்குறது ?
முக வின் முத்திரை கேள்வி பதில்களில் இதுவும் ஒன்று

mazhai said...

//இவரது சவாலின் நோக்கம் எல்லாம் நமக்கு தெரியாதா என்ன? //
அதானே .... இவர் என்ன சொல்றது நாம என்ன கேக்குறது ?
முக வின் முத்திரை கேள்வி பதில்களில் இதுவும் ஒன்று

Anonymous said...

பா.ஜ.க.கட்சியின் தலைமையிலே உள்ள ஆட்சியிலே, அமைச்சர் பதவியை ஏற்று அதன் சுகங்களையெல்லாம் கடைசி மூச்சுள்ள வரை - கோடி கணக்கில் மருத்துவ செலவுக்காக ஒட்டிக் கொண்டு இருந்தது யார்? திரு மாறன் கூட ராமதாசின் மகன் தானா? பின்னர் அவர்களை மதவாதிகள் என்று கரி பூசிவிட்டு பண்டாரம், பரதேசி என்று ‘பண்புடன்’ சொன்னதும் ராமதாசா?

kasaikannan said...

மாறன் மந்திரியாய் இருந்தபோது BJP மதவாத கட்சி அல்ல. அவருக்கு மருத்த்துவம் பார்த்த பொழுதெல்லாம் மதவாத க்கட்சி அல்ல.அவர் போன பிறகு அந்த மந்திரி பதவியை தான் கேட்டவருக்கு தரவில்லை என்ற போதுதான் வெளியே வரத்தெரிந்தது.

kasaikannan said...

மாறன் மந்திரியாய் இருந்தபோது BJP மதவாத கட்சி அல்ல. அவருக்கு மருத்த்துவம் பார்த்த பொழுதெல்லாம் மதவாத க்கட்சி அல்ல.அவர் போன பிறகு அந்த மந்திரி பதவியை தான் கேட்டவருக்கு தரவில்லை என்ற போதுதான் வெளியே வரத்தெரிந்தது.

சித்து said...

சுகம் தராமலா ஏழை குடும்பத்தில் பிறந்து இன்று ஆசியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இவரால் இருக்க முடிகிறது?? தள்ளாத வயதிலும் பதவி சுகத்தை விட முடியாத இவர் எதற்கு மற்றவர்களைப் பற்றி கூறுகிறார்?? தன் குடும்பத்துக்கே அனைத்து சுகங்களையும் பங்கிட்டு குடுப்பவராயிற்றே.

Anonymous said...

அமைச்சர் பதவி சுகம் தருமானால் முதலமைச்சர் பதவி என்ன தரும் ?

Anonymous said...

When Murasoli Maran was undergoing treatment while he was a minister, MK didnot withdraw the support to NDA inspite of compulsions but with drew it after Maran's death.
Thyagu

M Arunachalam said...

IV,

I have just changed three words only in this. See, how nicely the same can be used to accuse this opportunist-to-the-core Karunanidhi.

//ஐந்தாண்டு காலம், அந்த BJP கட்சியின் தலைமையிலே உள்ள NDA ஆட்சியிலே, அமைச்சர் பதவிகளை ஏற்று அதன் சுகங்களையெல்லாம் கடைசி நிமிடம் வரை அனுபவித்துவிட்டு, பின்னர் அவர்களுக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே வந்துள்ள டாக்டர் Kaunanidhi நம்மையும் துரோகம் செய்ய தூண்டுகிறார், துடியாய்த்துடிக்கிறார்.//

Karunanidhi's DMK workers & supporters may be fools to believe whatever he blabbers but anybody with a little bit of memory & common-sense won't be fooled by this Cheap Maniac (CM) of TN & his shenanigans. He has no shame and has become so thick-skinned that even his doctors may be finding it difficult to prick him while treating him.

God Save TN people from this wretched CM.

Anonymous said...

இந்த ராமதாசுக்கு வேற வேலையே கிடையாதா?? இவங்களெல்லாம் சோறு தான் திங்கிறார்களா??? அவருக்கெல்லாம் ஏதாவது வித்தியாசமான வியாதி வந்து செத்து தொலைந்தால் என்ன? ஆளையும் அவர் முகத்தையும் பாருங்க நல்லா பிணம் தின்னும் ஓநாய் போல ஓட்டுக்காக வாயை பிளந்து காத்து கொண்டிருப்பதை......

Anonymous said...

சிரஞ்சீவிக்கு ஓட்டு போடாததால் தந்தையை கொன்ற மகன்


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தொழிலாளி கொசுரு ராஜுபாபு(23). நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகராக சிறுவயது முதல் இருந்துள்ளார். எனவே, பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இவரது தந்தை புல்லாபாய்(55). இவர் என்.டி.ராமராவின் தீவிர ரசிகர் என்பதால் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டராக இருந்துள்ளார். இதனால் எந்த கட்சி சிறந்தது என தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி தந்தையிடம் அடிக்கடி கூறியுள்ளார் ராஜுபாபு. தெலுங்கு தேசத்துக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என கூறிவந்துள்ளார் புல்லாபாய். மகன் தொடர்ந்து வற்புறுத்தவே பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு ஓட்டுப்போடுகிறேன் என மகனிடம் கூறியுள்ளார் தந்தை.


ஆந்திராவில் கடந்த 16ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அன்று இரவு தந்தையிடம் பேசிய ராஜுபாபு, யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்? என கேட்டான். தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டேன் என்று கூறினார் புல்லாபாய்.


இதனால் ஆத்திரம் அடைந்த ராஜுபாபு கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக குத்தினான். இதில் புல்லாபாய் இறந்தார்.


வீட்டை சுத்தம் செய்தபின், தந்தையின் உடலை படுக்கையில் வைத்துவிட்டு, அக்கம்பக்கத்தினரிடம் அப்பா திடீரென்று இறந்துவிட்டார் என கூறினான் ராஜுபாபு. நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து தந்தையின் உடலை மறுநாள் அடக்கம் செய்துவிட்டான்.


புல்லாபாய் இறந்ததில் சந்தேகம் அடைந்த உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ராஜுபாபுவிடம் தீவிரமாக விசாரித்தனர் போலீசார்.


அப்போது தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான் ராஜுபாபு. அவனை போலீசார் தற்போது கைது

UMA said...

Ramadoss getting one Rajayasaba seat for what purpose? Only to get Anbumani to become permanent ministor.
Why they are contesting in the election and spending lahks of rupees?
Only to get the benefits of MP,MLA or Minister post.
Anbumani enjoyed Minister post with out facing any election. He was minister till the last day and enjoyed the benifits.
If you still require any clarifications , see the privileges enjoyed by the MP and ministers in Govt India web site.They enjoy the benifits equal to TATA and BIRLA on our public money.

Siraj-Kuwait said...

அரசியல்ல இதல்லாம் சாதாரனமப்பா....இட்லி உனக்கு தெரியாதா இது?