பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 28, 2009

வார்த்தை பற்றி - ரா.கிரிதரன்

வார்த்தையில் அவ்வப்போது எழுதுவதால் இந்த பின்னூட்டத்தை இடவில்லை.
உயிர்மையிலிருந்து நேற்று வெளியாகத்தொடங்கிய 'மந்திர வாசல்' என்ற ambient நாளிதழ் முதல் மாதாமாதம் படிப்பதால் , ஒரு வாசகனாக இதை எழுதுகிறேன்.

மற்ற இதழ்கள் ஆரம்பித்த ஒருசில மாதங்களுக்குள்ளே அதிகார கோட்டையாகிவிடும்.அந்த அதிகார வட்டத்திற்குள் ஸ்டார் எழுத்தாளர்கள் புகுந்துவிட்டால், அதன் வாசல் சீல் வைக்கப்படும்.அதற்குப் பிறகு அதில் நுழையவோ,அந்த எழுத்தாளர்கள் ஆக்கங்களுக்கு விமர்சனமோ எழுத முடியாது.மற்றவர்கள் இருப்பதைக் கூட கண்டுகொள்ள மாட்டார்கள்.
இதை நான் எழுதிய 'ராஸ லீலா' விமர்சனத்தில் அனுபவித்திருக்கிறேன்.இந்த் நீண்ட விமர்சனம் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தும், அதை உயிர்மையிலிருந்து எந்தப் பத்திரிக்கையும் வெளியிட மறுத்தது. இல்லை,மறுக்கவில்லை, ஆனால் எந்த பதிலும் கிடைக்காமல் பல மாதங்கள் கழிந்தது.

அதற்கு பிறகு வார்த்தைக்கு அனுப்பியபோது - புத்தக விமர்சனங்கள் வெளியிடும் விதியைப்பற்றி அவர்கள் கூறி , வெளியிட மறுத்தார்கள்.குறைந்தபட்சம் இரு நாட்களுக்குள் பதில் கிடைத்தது.வெளியிட மறுத்தது அவர்கள் உரிமை.இந்த எழுத்து சுதந்திரத்தை வேறு இதழ்களில் அனுபவித்து விட்டு இதற்கு பதில் எழுதலாம்.litmus testஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
தொடர்ந்து நான் அந்த இதழில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.கடைசியில் என்னுடைய வலைப்பதிவில் போட்டு அந்தக் கட்டுரைக்கான திட்டுகளை வாங்கிக்கொண்டிருக்கிறேன்!!

சட்டம், ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்பு, இவற்றைத்தவிர வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் (மார்ச் 2009 வந்ததுதான் அவரின் பெஸ்ட்),கோபால் ராஜாராமின் அரசியல் கட்டுரைகள் - இவற்றையும் படித்துப் பாருங்கள்.

'அரசியல் கட்டுரையை' அரசியல் மீறி எப்படி வாசிப்பது

காந்தியை அரசியல்வாதியாய் பார்க்கும் நம் நாட்டில்(மால்கம் Xஐ கூட அப்படி பார்த்திருக்க மாட்டார்கள்), அப்படியே இந்த கட்டுரையை படித்தால் புரிதல் இப்படித்தான் இருக்கும்.

மற்றபடி தமிழச்சி,ஜெயகாந்தன் கேள்வி-பதில் - இப்படிப்பட தவறுகளை மன்னிக்கலாம்.

இன்று இருக்கும் தமிழ் பிரசுர சூழ்நிலையில் ஆளுமைகளின் பரிமளிப்பு அவசியம் தேவைப்படுகிறது.அவர் பங்களிப்பால் பத்திரிகையின் வளர்ச்சி பாதை புரியும்.ஆனால் ஜெயகாந்தனின் one linersஐ யாருமே ரசிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அப்படி ஒன்றும் எழுத்தாளர்கள் குழு ஒன்று வார்த்தையில் உருவாகவில்லை. கடந்த 12 இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர்கள் 8 பேர்கள் மட்டுமே. 20 கட்டுரை,கதைகள்,விமர்சனங்கள் வெளியாகும் ஒரு இதழில் 8 ஒன்றும் பெரிய அளவு அல்ல. அதைத் தவிர இந்த 8இல் குறைந்தது ஐந்தாவது sensible ஆக உள்ளது.

5 Comments:

Suresh said...

அன்புள்ள இட்லிவடை நான் உங்க விசிறி

Dear Friends,

An Exclusive Interview with South Chennai MP Candidate Mr. E. Sarathbabu Founder & CEO, FOODKING, Alumni IIM Ahmedabad & BITS, Pilani , Pepsi MTV Youth Icon 2008, Honorary Rotarian Dist. 3201


To Read in Tamil Click Below

50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்

To Read in English Click Below

50th Special Post - Exclusive Interview with Sarathbabu in English - Sakkarai's Special

Forward to All your Friends, Ask them to Vote for Sarath Babu in South Chennai on " SLATE" on May 13th for more info visit www.sarathbabu.co.in

Thanks - Suresh
LET’S CHANGE NOW!

ரா.கிரிதரன் said...

நன்றி இட்லிவடை.சிற்றிதழ்கள் இன்னும் பல வெளிவரவேண்டும் - குறிப்பாக special editions பிரத்யேகமாக விஞ்ஞானம்,IT,சட்டம்,கலை என தனித்தனியாக வெளிவரவேண்டும்.

முக்கியமாக அதன் குறைகளை நம் போன்ற இணைய வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும். இல்லையெனில் இதைப்போன்ற இதழ்கள் வரவே வராது.

R.Gopi said...

// ரா.கிரிதரன் said...
நன்றி இட்லிவடை.சிற்றிதழ்கள் இன்னும் பல வெளிவரவேண்டும் - குறிப்பாக special editions பிரத்யேகமாக விஞ்ஞானம்,IT,சட்டம்,கலை என தனித்தனியாக வெளிவரவேண்டும்.//

*************

ரா.கிரிதரன்

வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது போல், ஸ்பெஷல் எடிஷன்ஸ் வரவேண்டும்..... ஆனால், இங்கு என்ன நடக்கிறது,. சினிமா அன்றி வேறு ஸ்பெஷல் எடிஷன்ஸ்??!! இதுதான் நம்ம ஊர், பத்திரிகை தொழில்...........

லவ்டேல் மேடி said...

அட ... நெம்ப அருமையா இருக்குமே...!!! வாழ்த்துக்கள்...!! ம்ம்ம்... கிளப்புங்கள் வண்டியை.......

எஸ்.கே said...

//சிற்றிதழ்கள் இன்னும் பல வெளிவரவேண்டும் - குறிப்பாக special editions பிரத்யேகமாக விஞ்ஞானம்,IT,சட்டம்,கலை என தனித்தனியாக வெளிவரவேண்டும்.//

நல்ல எதிர்பார்ப்புதான். ஆனால் போதுமான விளம்பரங்கள் இன்றி எந்த இதழையும் நடத்தமுடியாது. இதுபோன்ற செவ்வியல் மற்றும் அறிவியல் துறைகளை கருப்பொருளாகக் கொண்டு வெளிக் கொணரப்பட்ட பல முயற்சிகள் வணிக ரீதியில் வெற்றிபெற முடியாமல் மூடப்பட்டன. வார்த்தை போன்ற தரமான இதழ்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் எதிர்வரும் நாட்களில் நீங்கள் குறிப்பிடும் துறை சார்ந்த பத்திரிக்கைகளுக்கும் விளம்பரங்கள் கிட்டும் நிலை ஏற்பட்டு, அவ்வாறான சிற்றிதழ்கள் பரவலாகத் தோன்றும் காலம் வரும் என நம்புகிறேன்.

எஸ்.கே