பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 20, 2009

சொல்வதை மறுப்போம்; மறுத்ததை சொல்வோம்

முதலில் ”அடிடா ராமா அடிடா” என்று தான் டைட்டில் வைத்திருந்தேன். குரங்குகள் கோவித்துக் கொள்ள கூடாது என்று மாற்றிவிட்டேன்.

"விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். நான் தீவிரவாதி அல்ல; எனவே, அவர் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்? அவரை அப்படி நான் பார்க்கவில்லை. அந்த இயக்கத்தில் இருப்பவர்களில் சிலர் மட்டுமே பயங்கரவாதிகளாகச் செயல்படுகின்றனர்; அது பிரபாகரனின் குற்றமல்ல. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதச் செயல்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல. அவர்களது லட்சியங்கள் உன்னதமானவை. தமிழ் ஈழம் உருவாக வேண்டுமென்ற அற்புதமான கொள்கையைக் கொண்ட இயக்கம். ஆனால், அவர்களை அறியாமல் தீவிரவாதம் புகுந்து கொண்டுவிட்டது" என்று தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் நேற்று என்.டி.டி.வி.க்கு பேட்டி அளித்தார். ஒவ்வொரு தமிழ்நாட்டு பிரஜையும் இவரை முதலமைச்சராக தேர்ந்தெடுததற்கு தமிழர்களும் வெட்கி தலை குனிந்து நிறக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். நான் தீவிரவாதி அல்ல; எனவே, அவர் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்? என்று தனக்கே உரிய ஸ்டைலில் நேற்று கேட்டுள்ளார்.

உலகின் பயங்கரவாத அமைப்புகளிலேயே மிகப் பயங்கரமா னது எல்.டி.டி.ஈ’ - இப்படிச் ‘சான்றிதழ்’ வழங்கியிருக்கிறது அமெரிக்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ. அல்கைதா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு உந்துசக்தியாக இருந்து உதவியும் வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்பதையும் எ·ப்.பி.ஐ. எடுத்துக் காட்டியிருக்கிறது. ‘மனித வெடிகுண்டுகளைக் ‘கச்சிதப் படுத்தி’, பெண்களைத் தற்கொலைப் படையினராக்குவதில் முன்னணி வகித்து, தற்கொலைக்கான ‘பெல்ட்’டை உருவாக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நான்காயிரம் பேரைக் கொன்று, இரண்டு சர்வதேச தலைவர்களையும் படுகொலை செய்திருக்கிறது எல்.டி.டி.ஈ. வேறெந்த பயங்கரவாத அமைப்பும் எட்டிப் பிடிக்காத சாதனை இது’ என்று எ·ப்.பி.ஐ.யின் இணைய தளம் அறிவிக்கிறது.

ஆனால், நம் நாட்டிலோ, தமிழர் நலன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அனுதாபம் பெருகி, வெளிப் படையான ஆதரவாகவே மாறியிருக்கிறது. பா.ம.க. நடத்தும் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் பிரசார சி.டி.க்களும் வி.சி.டி.க் களும் பகிரங்கமாக விற்கப்படுகின்றன.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்ற அரசியல் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். பிரபாகரன் உடம்பில் சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று வைகோவும் “விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன்” என்று வீரமாக பேசும் திருமாவளவனின் பேச்சுக்கள் கண்டனத்துக்குரியது , தேசவிரோதமானது , இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் முதல் குற்றவாளி, அக்கியூஸ்ட்.


”அந்த சம்பவத்தைப்(ராஜிவ் காந்தி கொலை) பொறுத்தவரையில்... அது ஒரு பெரும் சோகம்... மாபெரும் வரலாற்று சோகம்... அதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். என்று ஆன்டன் பாலசிங்கம், என்டிடிவி தொலைக்காட்சி பேட்டியில் முன்பு கூறியிருக்கிறார். அப்படி இருக்க பிரபாகரன் என் நண்பர், விடுதலைப் புலிகளின் லட்சியங்கள் உன்னதமானவை என்று முதலமைச்சர் பேசியிருப்பது - ஓட்டுக்களுக்காக தேசியத்தை அடமானம் வைக்கிறார் என்றே கருத வேண்டும்.

இந்த மாதிரி ஒரு முதலமைச்சர் இருக்கும் போது நம் மக்கள் உயர் நீதி மன்ற வளாகத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவதில் என்ன வியப்பு ?

தேசத்தின் முன்னாள் பிரதமரைக் கொன்ற ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு இரங்கல் கவிதை தமிழ் பக்தியை காட்டிலும், தேச பக்தி பெரிது இல்லையா ?

இந்த மாதிரி புலி ஆதரவு எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடக்கும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் திமுகவிற்கு ஆட்சிக்கு ஆதரவு தந்துவிட்டு வாயில் கட்டை விரலை வைத்து சூப்ப வேண்டியது தான்.

சந்தன கடத்தல் வீரப்பனையே விரப்பர் என்று தமிழ் ரத்தம் தெறிக்க, சப்போர்ட் செய்தவர். கொஞ்சமாவது பகுத்தறிவு உள்ளவர்கள், முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டு இப்படி எல்லாம் சப்போர்ட் செய்யமாட்டார்கள். தீவிரவாதம் எந்த வகையிலும் தீவிரவாதம் தான். காரணம் தேடி, நியாயத்தை ஆராய்ந்து கொண்டு, தன் பொழுதையும் அடுத்தவர் பழியையும் தட்டிக் கழிப்பது வடிகட்டின முட்டாள்தனம். தற்கொலை படை தாக்குதலை இன்றும் நடத்தும் இயக்கத்தை எப்படி நாம் எப்படி அழைக்கமுடியும். தமிழகத்தில் சில தமிழ் தலைவர்கள் இறந்த போது, கலைஞர் என்ன செய்துக்கொண்டிருந்தார் ?

இதே மாதிரி பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்திலும் அதையொட்டிய மாநிலங்களிலும் பயங்கரவாதம் பரவிப் பெருகுவது, விரைவிலேயே நாம் காணக்கூடிய கொடுமையாகிவிடும்.


நாளைக்கே கலைஞர் விடுதலை புலி இயக்கத்தில் யாராவது மரணம் அடைந்தால் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்று மன் மோகன் சிங்கிற்கும் சோனியா காந்திக்கும் கடிதம் கூட எழுதினாலும் எழுதுவார்.

நாம் அதை இலவச டிவியில் பார்த்து கைத்தட்டி கொண்டாடுவோம்.


காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களுக்கும் கோஷ்டிகளுக்கும் இந்த படம்:
சம்பவம் நடந்த சிறுதி நேரத்தில் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே.ராகவன் இறந்து போன போட்டோ கிராபர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த சினான் கேமராவை கைப்பற்றினார். அதை 23ஆம் தேதி தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் டெவலப் செய்தார்கள். அதில் மொத்தம் பத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. பத்தாவது புகைப்படத்தில் குண்டு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட பெருந்தீயும், புகையும் சூழ்ந்த தருணம் பதிவாகி இருந்தது. ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு மற்றும் அப்பாவிகள் பலர் பலியான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விநாடி புகைப்படமாக உறைந்து போயிருந்தது. அந்த புகைப்படம் தான் இது!.

கடைசி செய்தி:
விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பயங்கரவாத இயக்கமாக துவக்கப்படவில்லை என்று தான் கூறினேனே தவிர தற்போது அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை என கூறவில்லை. ஸ்ரீபெரும்பதூர் நிகழ்ச்சியை மறந்து விட முடியாது. எனது அக்கறை எல்லாம் இலங்கையில் உள்ள தமிழர்கள் பற்றி மட்டும் தான். ஆங்கில தொலைக்காட்சிகளில் திரித்து கூறிவிட்டது என்று கூறியுள்ளார்.


“எல்.டி.டி.ஈ ராஜீவை கொன்றதை மன்னிக்க முடியாது. பிரபாகரன் எனது நண்பர். அவர் கொலையாளி. அதனால் நானும்.. ?

30 Comments:

mazhai said...

கடசில போட்ட மஞ்சள் (துண்டு) லைன் உண்மை .....

mazhai said...

கடசில போட்ட மஞ்சள் (துண்டு) லைன் உண்மை .....

தூத்துக்குடி தமிழன் said...

எப்ப இவிங்கெல்லாம் தேர்தலுக்காக தமிழ் புத்தாண்டையே அப்பப்ப மாத்த்ராய்ங்க..... Statement தானப்பா....... அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா............

SathyaRam said...

Excellent Post. TamilNadu is going through dangerous period. Tamil chavunism is being promoted for the sake of elections and it will take a long time to heal this. These politicians are short sighted and dont even understand that creating these kind of problems is very easy but healing or making people normal will take lot of time. For the sake of 40 seats TN is being put 40 years back.... The real culprits are Chidambaram and his co. who for the sake of 10 seats are keeping quiet for these issues. If he is a honest politician he would have raked this up more so him being Home minister now... Looks like God even cannot save TN

Anonymous said...

திரு பிரபாகரன் நல்லவரோ - கெட்டவரோ. எனக்குத் தெரியாது.


ஆனால், ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் "கொல்லப்பட்டால்" நான் "உள்ளபடியே" வருத்தப்படுவேன் என்று கூறும் இந்த 85 வயது "முதிர்ந்த" (?) - பண்பட்ட - அன்னை சோனியா போற்றும் திரு முத்துவேல் கருணாநிதி இன்னும் ஒரு "நூற்றாண்டு" வாழ்க.

R.Gopi said...

"மாற்றி பேசுவது என் கடமை
அதை தட்டி கேட்பது மடமை"

யக்கக்க ஜக்க ஜகக்க
மக்கக்க டக்கா நண்டு
இதற்கு யாராவது சரியான அர்த்தம் சொன்னால், நான் இனி மாற்றி பேசுவதில்லை என்று அந்த பெ .........ர் சிலையின் மேல் சத்தியம் செய்கிறேன்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
என் வீட்டாருக்கு இருந்தால் எனக்கு தடையில்லை

நீ பூணல் போடாதே, மதத்தை பறைசாற்றும் சின்னம் எதையும் அணியாதே, நாமம் இட்டு கொள்ளாதே (அதான் நானே உனக்கு போடுகிறேனே, நீ வேறு ஏன் தனியாக போட்டு கொள்கிறாய்?), நான் இதை சொல்லிவிட்டு அப்படியே போய், குல்லா போட்டு, நோன்பு கஞ்சி குடிக்கிறேன். அவர் உண்டு, இவர் இல்லை.

மதியிலி அறிவிலி
என்றினி அழைப்பவர்
அவர்தம் பிறியிலி
என்போர் பிணக்கு

இது இந்த வாழும் வள்ளுவன் வாக்கு ..... (இதுக்கு என்ன அர்த்தம்??)

(மொத்தத்தில் "தல" ஒரு வாழும் விஷ விருட்சம், அது வளர்ந்து கொண்டே தான் போகிறது, வெட்டுவதற்கு ஒருவருக்கும் தைரியம் இல்லை, வரவும் இல்லை).

Anonymous said...

இட்லிவடை தினமலர் பாருங்க!
இந்த செய்தி "ஆங்கில தொலைக்காட்சி திரித்துவிட்டது" என்று மீண்டும் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார்!

வெக்கக்கேடு. இதற்கு பதில் "நாக்க" புடிங்கிக்கலாம். அது சரி, அவருக்குதான் "n" number of "நாக்குகள்" இருக்கே!!!! கவலையே இல்ல!

Anonymous said...

ஏ பயம் பொறுத்தாதீங்கப்பா............
இட்லிவடை எனக்கு ஒன்னும் புரியளைய்.......
கொஞ்சம் தெளிவா சொல்லுப்பா.......
அப்ப உண்மையிலேயே புலிகள் மோசமானவங்க தானா......??????????????/

கலைக்கோவன் said...

NDTV-யில் தமிழில் தான் பேட்டியளித்தார்,
நீங்கள் எழுதியிருப்பதை தான்
கலைஞர் தன் பேட்டியில் கூறினார்.

தலைவனுக்கு நிதானம் அவசியம்..,
எப்போதுமே எதையாவது பேசிவிட்டு
அதற்கு மறுப்பு தெரிவிப்பது..,
இதே வேளையா போச்சு.

rajan RADHAMANALAN said...

FBI ondrum arichandraagalaum gaandhigalalum vazhi nadathap padum amaippu alla....

ivai anaithum ungalathu thanippatta karuthukkal enil thalaiyida yedhumillai.... aanaal ithu kurithu america'vai merkkoll kaattuvathu erppudayathaaga thondravillai...
oru manitha inathin perumbaanmai makkalin abimaanam petra prabakaran pondrorin seyalgalaiyum, sithaandhangalaiyum sariyendro allathu pizhaiyendro vimarsippathu poruthamatrathu....

anbudan rajan radhamanalan

Sethu Raman said...

வழக்கம் போல பல்டி அடித்து, நான் அது மாதிரி சொல்லவே இல்லை, ஆங்கில டி.வி.தான் தவறு செய்து விட்டது என்று சொல்லி விட்டாரே -- இருபத்து நான்கு மணி நேரம் கெடு வச்சவுடனே பேச்சு எப்படி எல்லாம் மாறுது பார்த்தியளா?
அடுத்த சில நாட்கள் எல்லா நாடகங்களும் நடக்கும் பாருங்கள் -- நளினியை விட்டு விடலாம் என்று கூட சொல்லியாயிற்று அதற்கு என்ன சொல்லப்போகிறாரோ?

தண்டோரா said...

பதியை மறந்து பதவியை பிடித்து அந்தம்மா(சாணி"யா)தொங்கும் போது யார் கூடவும் சேரலாம்...என்ன வேணுமாலும் பேசலாம்..

Anonymous said...

ராஜீவ்காந்தி மறைந்த இடத்தை எப்படி மறக்க முடியும்:கலைஞர் பேட்டி
ஸ்ரீபெரும்புதூரை நீங்கள் மறந்துவிட்டதாக சொல்லப்படுகிறதே?


முன்னாள முதல்வர் ராஜீவ்காந்தி மறைந்த இடத்தை எப்படி மறக்க முடியும். சென்னை மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தியின் பெயரைத்தான் வைத்திருக்கிறோம்

Anonymous said...

இவர் முத்தமிழ் அறிஞரும் அல்ல மூத்த தமிழ் அறிஞரும் அல்ல, சரியான மூத்திரக் கிழவர்...... அதுதான் வாய்க்கு வந்த படி உளறுது பெருசு!!! சாவ சுடுகாடு தெரியாமல்..........

IdlyVadai said...

“He has to match up to Jayalalitha. Jaya said she would strife for a separate country if there is no devolution of power. Karuna had to match, so suddenly he has hailed Prabhakaran. Of course, he is going back to his original stance - a decade ago he called Prabhakarn Bhagat Singh, Neta ji etc. He conferred every title on him except Gandhi,” - Cho Ramaswamy

சித்து said...

அட தல சும்மா உல்லுளாயிக்கு சொன்னத போய் நம்பிட்டீங்களே??? இதெல்லாம் ஒரு அந்தர் பல்டியா? இந்த நாட்டில் எதுவும் நடக்கும். நீங்க வேணும்னா பாருங்க தேர்தல் ஜுரம் முத்திப்போய் தல மும்பை தீவிரவாதி கஸாப் நல்லவர் சிறுபான்மையினத்தை சேர்ந்த சிங்கம் என்று கூட பேட்டி அளிப்பார். எல்லாம் நம் தலையெழுத்து.

Anonymous said...

அமெரிக்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ வழங்கிய உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் முதலில் நம்ம கருணாநிதிக்கு எந்த இடம்? அப்புறம் L.T.T.E பற்றி யோசிக்கலாம்.....

R.Gopi said...

//Anonymous said...

அமெரிக்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ வழங்கிய உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் முதலில் நம்ம கருணாநிதிக்கு எந்த இடம்? அப்புறம் L.T.T.E பற்றி யோசிக்கலாம்.....//

*****************

"தல"க்கு முதலிடமன்றி வேறு இடம் பற்றி வேறு எதுவும் யோசிக்கவில்லை பராபரமே.....

Anonymous said...

அமெரிக்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ - What the hell this guys are doing in Israel and arab countries issue. Even though our politicians are stupid, Americans are the real உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு. Don't use their information for any reference.

-வழிப்போக்கன்

Anonymous said...

அமெரிக்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ - What the hell this guys are doing in Israel and arab countries issue. Even though our politicians are stupid, Americans are the real உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு. Don't use their information for any reference.

-வழிப்போக்கன்

Anonymous said...

//*//Anonymous said...

அமெரிக்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ வழங்கிய உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் முதலில் நம்ம கருணாநிதிக்கு எந்த இடம்? அப்புறம் L.T.T.E பற்றி யோசிக்கலாம்.....//

*****************

"தல"க்கு முதலிடமன்றி வேறு இடம் பற்றி வேறு எதுவும் யோசிக்கவில்லை பராபரமே.....

**/////Soda Bottle, Cycle chain, அருவா, குண்டு (நாட்டு மற்றும் T.N.T, Dynamite, Nuclear) எதுவா இருந்தாலும் 'தலை' தான் கில்லி.....
Silent ஆ நாலு குண்டை வெடிக்க செய்து விட்டு, தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் சாக மாட்டேன் என்று அடம் பிடிப்பார்..........

Anonymous said...

if ltte takes the life of azhagiri or stalin, then wud the shameless karunanidhi term it as 'unfortunate event' and forget it.

if rajathi ammal's photo appears with her skull missing in the newspaper, will this stupid karunanidhi forget it.

worst hypocrite the nation has ever seen.

Inba said...

அட போங்கப்பா
தல பிரபாகரன்னு சொன்னது
கேப்டன் பிரபாகரன்ல நடிச்ச விஜயகாந்தை..

என்டிடிவியை சன் நெட்வொர்க்கில் கொண்டுவரனும்

ரிஷி (கடைசி பக்கம்) said...

இட்லி வடை,

நீங்கள் எழுதிய விஷயங்களில் எனக்கு முழுவதுமாக தெரியாது. நீங்கள் எழுதியதை ஒத்துபோகவும் இல்லை அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை.

ஆனால் ஒரு விஷயம்

நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்
FBI சொல்வது அத்தனையும் உண்மை அப்படித்தானே?

வாழ்க உங்கள் நம்பிக்கை.

நன்று.....

கொழுவி said...

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நான்காயிரம் பேரைக் கொன்று//

கடந்த மூன்று மாதத்தில் 3000 பேரை கொன்ற இன்று மட்டும் 1400 பேரைக் கொன்ற சிங்கள அரசு அப்போ எவ்வளவு பெரிய உலக பயங்கரவாதி..? இதைப் பற்றியெல்லாம் அந்த எப் பி ஐ யில சொல்ல மாட்டாய்ங்களா..

அப்புறம் அந்த பெரிய பயங்கரத்திலும் பயங்கர வாதியான சிங்கள அரசுடன் தொடர்புகளை பேணும் இந்து ராம் முதல் இந்திய அரசு வரை...

எவ்ளோ பெரிய பயங்கரவாதிகள்..

கலங்குங்க..

பாவேந்தன் said...

//கடந்த மூன்று மாதத்தில் 3000 பேரை கொன்ற இன்று மட்டும் 1400 பேரைக் கொன்ற சிங்கள அரசு அப்போ எவ்வளவு பெரிய உலக பயங்கரவாதி..? இதைப் பற்றியெல்லாம் அந்த எப் பி ஐ யில சொல்ல மாட்டாய்ங்களா..//

கொழுவி நல்லா சொன்னீங்க..... இட்லி வடை... உங்கள மாதிரி அறிவாளிங்க FBI மாதிரி உலக மகா தீவிரவாதி கொடுக்கற report வச்சி எல்லாம் பேச கூடாது..... இப்படி தமிழனே அடிச்சிக்கறாதல தான் 'சொட்ட தல' மாதிரி ஆளுங்க நல்லா ஏமாத்துறாங்க..... அங்கே தமிழ் பெண்கள கெடுத்தாலும் நீங்க இஙக terrorism பத்தி பேசிக்கிட்டு இருப்பிங்க.... Rajiv செத்த அப்ப Congress காரங்க யாருமே சாகலயே.... அத எல்லாம் யோசிக்காம.... USல இருக்கற FBI report பத்தி நல்லாவே பேசுறிங்க..... இதனால தான் உலகத்துல ஒருத்தனும் தமிழன மதிக்கறது இல்ல... சீக்கியருக்கு இருக்கற இன உணர்வு நமக்கு இல்லயே.... At least மனிதாபிமானம் இருக்கனுமே......


---- பாவேந்தன் ----

Anonymous said...

//கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நான்காயிரம் பேரைக் கொன்று//

கடந்த மூன்று மாதத்தில் 3000 பேரை கொன்ற இன்று மட்டும் 1400 பேரைக் கொன்ற சிங்கள அரசு அப்போ எவ்வளவு பெரிய உலக பயங்கரவாதி..? இதைப் பற்றியெல்லாம் அந்த எப் பி ஐ யில சொல்ல மாட்டாய்ங்களா..இல்ல உங்க இட்லி வடைல கூட சொல்லமாட்டீங்க ???

அப்புறம் அந்த பெரிய பயங்கரத்திலும் பயங்கர வாதியான சிங்கள அரசுடன் தொடர்புகளை பேணும் இந்து ராம் முதல் இந்திய அரசு வரை...

எவ்ளோ பெரிய பயங்கரவாதிகள்..

போயா. போ.. நல்லா வரலாற படி.. பின்னாடி எழுது!!!

paarvai said...

இட்லிவடை,
யார் மோசமான பயங்கரவாதி? தினந்தோறும் ஆயிரக்கணக்கில் கொன்றும் குவிக்கும் உமது நண்பரான ராஜபக்சேவா அல்லது அவரின் அல்லக்கைகளான நமது இந்திய அரசாங்கமா?
விரசகவியின் உளரல்கள் உலகப் பிரசித்தம்....என்னதான் நீங்கள் கத்தினாலும் , தமிழக மீடியா அவர் குடும்பத்தின் கையில்....ஒன்னும் பண்ணமுடியாது.

கிரி said...

//கொழுவி said...
கடந்த மூன்று மாதத்தில் 3000 பேரை கொன்ற இன்று மட்டும் 1400 பேரைக் கொன்ற சிங்கள அரசு அப்போ எவ்வளவு பெரிய உலக பயங்கரவாதி..? இதைப் பற்றியெல்லாம் அந்த எப் பி ஐ யில சொல்ல மாட்டாய்ங்களா.. //

சரியான கேள்வி ..

Brami said...

I do not agree what you have written. There are only few LTTE's left over in the island. Just to capture those few people. Why Sri Lanka is using rocket launchers? It is well known that it is trying to kill highest number of tamilians for the sake of capturing Prahagaran. What happened to your love towards Tamil? When did you start support Rajapakshe?