பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 19, 2009

இயற்கை கூட்டணி என்றால் என்ன ?

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா ? என்பது பழைய கேள்வி.
இயற்கை கூட்டணி எது என்பது புது கேள்வி.

நேற்று தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திருமாவளவன்

வானில் சூரியன் உண்டு. நட்சத்திரம் உண்டு. நிலவும் உண்டு. அதேபோலத்தான் இந்தக் கூட்டணியில் திமுக என்ற உதயசூரியன் இருக்கிறது. நட்சத்திரக் கொடி கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறது. பிறையைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இருக்கிறது.

இவை எல்லாம் இணைந்த கூட்டணியான இதில் இயற் 'கை' இருக்கிறது. எனவேதான் இது இயற்கைக் கூட்டணி.


கல்கியில் ராமதாஸ் பேட்டி (26.4.2009 )
"திமுக, அதிமுக என இரு கட்சியுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம். எங்கள் தொண்டர்கள் கணிப்பில் பார்த்தால் அதிமுக கூட்டணி இயற்கை கூட்டணி. திமுக கூட்டணி செயற்கை கூட்டணி. திமுக வோடு இருந்த காலங்களில் திமுக பிரமுகர்கள் எங்களுக்கு சரிவை ஏற்ப்படுத்தும் வகையில் நடத்திய 'உள்ளடி' நடவடிக்கைகள் பற்றி பெரிய புத்தகம் போடலாம்"

சென்னையில் நேற்றைய வெப்பநிலை 36°C என்று நியூஸில் சொன்னார்கள். எனக்கு என்னவோ 40°C இருக்கும் என்று தோன்றுகிறது.

5 Comments:

R.Gopi said...

"தல"யின் விஞ்ஞான பூர்வ ஊழல் என்ன என்று தெரிந்தால், இந்த இயற்கை / செயற்கை கூட்டணி என்றால் என்ன என்றும் தெரியும்.

கம்யூனிசம் பிடிக்கும், கம்யூனிஸ்ட்டுக்களை பிடிக்காது - "தல" (கூட்டணியில் இருக்கும்வரை கம்யூனிஸ்டுகளையும் பிடிக்கும்).

இதையும் தவிர, இவனுங்க பேசுறதுக்கு எல்லாம் அர்த்தம் கேட்டால், நமக்கு :

"தல" சுத்தும்
"காது" அடைக்கும்
"கண்கள்" பனிக்கும்
"இதயம்" கனக்கும்

இதற்கு மேலும் விளக்கம் கேட்டால், உங்களுக்கு "மஞ்சள் கவிதை" ரெடி.

Siraj said...

Better throw the TV sets in the store room until Election over. Also, not to read the newspapers.

நம்ம தப்பிகனும்னா இது தான் வழி.

Anonymous said...

/கூந்தலுக்கு இயற்கை// .......//இயற்கை கூட்டணி//

இது ரெண்டுலயும் "common" வார்த்தை "இயற்கை".

அப்போ.........................?


என்னைப் பொறுத்தவரை இந்தத் திருட்டுக் கூட்டணிகளின் மதிப்பு அவ்வளவுதான்.


இட்லி வடை தவறாக எண்ண வேண்டாம்! இந்த அரசியல் "வியாதிகளின்" மேல் உள்ள கோவம் காரணமாக இது ஒரு "flash"-ல தோணியது. அப்டியே டைப் செய்து விட்டேன்.

சித்து said...

இயற்கையாகவே வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர்கள் மற்றும் இயற்கையாகவே லஞ்சம், திருட்டு, கொலை மற்றும் இன்ன பிற அயோக்கியத்தனங்கள் இருப்பதால் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளது இயற்கை கூட்டணியோ????

Anonymous said...

நாட்டுல எவ்வளவோ இயற்கை சீற்றம் நடக்குது, இவங்க மேடைக்கு பக்கத்தில வரக் கூடாதா கடவுளே!!!