பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 18, 2009

எங்க ஊரில் வைகோ - சோம்பேரி

சோபேரி ரிப்போர்ட் :-)

நேற்றைக்கு முன் தினம்(15.04.09) வை.கோ அவர் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தொடங்கிய சூறாவளி பிரச்சாரம் எங்கள் ஊர் வரையிலும் தொடர்ந்தது. ஏழெட்டு டாட்டா சுமோ, நான்கைந்து வேன், நான்கைந்து கார்கள், ஒரு போலிஸ் வேன் சகிதம் வந்த வை.கோ வேனிலிருந்த படியே பதினைந்து நிமிடங்கள் உரையாற்றினார்.

நேற்று முன் தினம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது போலவே இலங்கை தமிழர் பிரச்சனை பற்றியும், மணல் கொள்ளை பற்றியும் அதிகம் பேசினார். காங்கிரசை கொஞ்சம் காட்டமாகத் தாக்கிப் பேசினார்.

திருமங்கலத்தில் ஒரு வோட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தது போல இங்கேயும் அள்ளி வீசுவார்கள். நீங்கள் நீண்ட அரசியல் பார்வை உள்ளவர்கள். யார் நல்லவர்கள் என்று பார்த்து ஓட்டு போடுங்கள் என்றார். இது எல்லா ஊரிலும் சொல்லும் வசனம் போல.

ஏனென்றால், எங்கள் ஊரைப் பொருத்த வரை, கட்சிக்காரர்கள் ஓட்டு மட்டுமே நிரந்தரம். மற்றபடி மனசாட்சிக்கும், பணத்துக்கும் கட்டுப் பட்டவர்கள் எங்கள் ஊர் மக்கள். கடைசி நேரத்தில் யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும்.

அவர் பயணம் ஏழாயிரம்பண்ணை, ராமுத்தேவன்பட்டி, வெம்பக்கோட்டை என்று தொடரும் என்று சொன்னார்கள். அத்தனையையும் முடித்து விட்டே அவர் சென்னை வந்திருந்தால், சந்தேகமில்லாமல் அவருடையது சூறாவளி பிரச்சாரம் தான்.
- சோம்பேரி

7 Comments:

அஞ்சா நஞ்சன் said...

கட்டுரை எழுதியவரின் பெயரை தலைப்போடு சேர்த்து எழுதிய உமது குசும்பை என்னவென்று சொல்ல?

Anonymous said...

///அத்தனையையும் முடித்து விட்டே அவர் சென்னை வந்திருந்தால், ///

மேலே உள்ள வரியால் சில சந்தேகங்கள். இந்த வரி "சென்னை சென்று இருந்தால்" என்று இருந்தால் பின் வரும் கேள்விகளே வந்திருக்காது!


(1) இந்த திரு. "சோம்பேறி" எந்த ஊரு?

(2) வைகோ கலிங்கப்பட்டியில் தொடங்கி "சோம்பேறியின்" ஊரில் பிரச்சாரம் செய்த பொது "சோம்பேறி" எந்த ஊரில் இருந்தார்??


(3)மனசாட்சிக்கும் பணத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் எனும்பொது, அந்த மனசாட்சி பணம் வாங்கிய பிறகு என்று அர்த்தமா?கடைசியாக, வைகோ அடிக்கடி "உள்ளே" போய் உட்கார்ந்து கொள்கிறார் என்பதற்காக அவரை "தல ஸ்டைலில்" சோம்பேறி என்று வசை பாடி இருக்க வேண்டாம்! :-D :-)

Krish said...

சோபேரி...

:-0 :-D

Anonymous said...

சோம்பேறி என்பது சரி. கொஞ்சம் பிழை இல்லாமல் எழுதவும். நீங்கள் என்ன கலைஞர் டி வி யா?

சோம்பேறி said...

/*(1) இந்த திரு. "சோம்பேறி" எந்த ஊரு?*/
(2) வைகோ கலிங்கப்பட்டியில் தொடங்கி "சோம்பேறியின்" ஊரில் பிரச்சாரம் செய்த பொது "சோம்பேறி" எந்த ஊரில் இருந்தார்??*/

வை.கோ போட்டியிடும் விருது நகர் தொகுதி. 'சென்றிருந்தால்' என்று குறிப்பிடாதது என் தவறு தான்.

/*(3)மனசாட்சிக்கும் பணத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் எனும்பொது, அந்த மனசாட்சி பணம் வாங்கிய பிறகு என்று அர்த்தமா?*/

பணம் கொடுத்தவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எனப் பொருள் கொள்க.

R.Gopi said...

இட்லிவடை

இந்த ரிபோர்ட் ஆரம்பிக்கும் போதே, சொபேரி ரிப்போர்ட் என்றுதானே ஆரம்பித்து இருக்கிறார்.

வர வர இவரோட (இட்லிவடையோட) உள்குத்து ஜாஸ்தியாயிடுச்சு.

******************

அப்புறம் மானச்தனோட இந்த கேள்வி சூப்பர்.

//(2) வைகோ கலிங்கப்பட்டியில் தொடங்கி "சோம்பேறியின்" ஊரில் பிரச்சாரம் செய்த பொது "சோம்பேறி" எந்த ஊரில் இருந்தார்?? //

விஷ்ணு. said...

சும்மா சொல்லகூடாது ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் வை.கோ சிவகாசில பேசினார்னா ஓடி ஓடி கேட்பேன், ஏன்ன நம்மலையும் அரியாம அவர் பேச்சுக்கு கை தட்ட வச்சுருவாரு ஆனா இப்ப மனுசன் என்ன தான் நினைக்கிறாரு தான் தெரியல, ஒரு வேளை அரசியல் காமெடியன் ஆகிட்டாரோ(ஆகிவிடுவாரோ) தெரியல.