பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 17, 2009

நமக்கும் உதாரணமான அமெரிக்கக் குடும்பம் ! – எஸ். குருமூர்த்தி

போன வாரம் துக்ளக் பத்திரிக்கையில் வந்த குருமூர்த்தி கட்டுரை. இதை இங்கே போட சொன்ன வெங்கட்ரமணனுக்குநன்றிநமக்கும் உதாரணமான அமெரிக்கக் குடும்பம் ! – எஸ். குருமூர்த்தி
அமெரிக்காவிலிருந்து வெளி வரும் பிரபல "நியூஸ் வீக்' என்கிற ஆங்கில வாரப் பத்திரிகையின் மார்ச் 16 இதழில், ஒரு வித்தியாசமான கட்டுரை வெளிவந்துள்ளது.
"சிக்கனமான குடும்ப வழிகாட்டி' என்பது அந்த கட்டுரையின் தலைப்பு. அந்தக் கட்டுரையை எழுதியவர் ஸ்டீவ் டட்டில். அவர் நியூஸ் வீக் பத்திரிகையின் பொது ஆசிரியர்.
அவர் அந்தக் கட்டுரையில், தன்னுடைய அப்பாவும், அம்மாவும் வெர்ஜினியா என்கிற மாநிலத்தில் நகர்ப்புறத்துக்கு வெளியே எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள், அவர்கள் சிக்கனமாகவும் கரிசனமாகவும் வாழ்வதால், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி அவர்களை எப்படி பாதிக்கவில்லை என்பதை சுவாரஸ்யமாக
எழுதியிருக்கிறார்.

அவருடைய தந்தையின் பெயர் பில்டட்டில், அம்மா பெயர் ஜாய்ஸ் டட்டில். அந்தக் கட்டுரை அமெரிக்காவிலும் சிக்கனமாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது. "சிறுகக் கட்டி பெருக வாழ்', "சிக்கனம் சோறு போடும்' என்றெல்லாம் கூறி, நம் நாட்டில் அனுபவபூர்வமாக கட்டுப்பாடான வாழ்க்கை தொன்று தொட்டே இருந்து வருவதுபோல, அங்கும் பல குடும்பங்கள் அதுபோன்று கட்டுப்பாட்டுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை அக்கட்டுரை விளக்குகிறது.

கடந்த ஆண்டு கோடைகாலத்தில், தன்னுடைய தாய் தந்தையைக் காண அவர்கள்
வசிக்கும் இடத்துக்குச் சென்றார் ஸ்டீவ் டட்டில் (நியூஸ் வீக் ஆசிரியர்). வீட்டுக்குச் சென்ற அவர் முதலில் கண்டது, பழைய எலிப் பொறியில் மாட்டிக்கொண்டு இறந்து விட்டிருந்த எலியைத்தான். காயலான் கடையில் போட வேண்டிய இந்த எலிப் பொறி ஏன் இங்கு இருக்கிறது என்று நினைத்து, அதை எலியுடன் வீட்டுக்கு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.

பிறகு, அவர் தன்னுடைய தந்தையிடம் எலியைத் தூக்கி எறிந்து விட்டதைக் கூறினார். அவருடைய தகப்பனார், "சரி எலிப்பொறி எங்கே?' என்று கேட்டார். நியூஸ் வீக் ஆசிரியர் ""லொட லொட என்று இருந்த அதைத் தூக்கி எறிந்து விட்டேன்'' என்று கூறினார். இந்தப் பதிலை, அவருடைய முகத்தில் அடித்தது போல் என்னுடைய அப்பா உணர்ந்தார். உடனே அம்மா, ""நாங்கள் திருமணம் ஆனதிலிருந்து அதை வைத்திருக்கிறோம்'' என்று அங்கலாய்த்தார்.

அப்போதுதான் ஆசிரியருக்குப் புரிந்தது; அவர்களுக்குத் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று. ஆக எலிப் பொறியின் வயதும் 50.

இதையெல்லாம் கேட்ட பிறகு, நியூஸ் வீக் ஆசிரியர் சலனமில்லாமல் வெளியே சென்று, குப்பைத் தொட்டியைக் கிளறி, எலிப் பொறியை எடுத்துக்கொண்டு வந்து, இருந்த இடத்திலேயே வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அந்நிகழ்ச்சியை அடிக்கடி நினைவூட்டி, "செத்த எலியுடன் உயிருள்ள எலிப் பொறியையும் தூக்கி
எறிந்தது' பற்றிப் பேசாமல் விட மாட்டார்கள், அவருடைய அப்பாவும் அம்மாவும். "எப்படிப்பட்ட பழமைவாதிகள் நம்முடைய அப்பாவும் அம்மாவும்' என்று மனதுக்குள் அங்கலாய்ப்பார் ஆசிரியர்.

ஆனால், அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, நியூஸ் வீக் ஆசிரியருக்கு தன்னுடைய தாய், தந்தை பற்றி இருந்த கணிப்பு முழுவதுமாக மாறியது. "இன்றைய கடும் பொருளாதார நிலையில் என்னுடைய தாயும் தந்தையும் மிகவும் சாதுர்யமானவர்களாகத் தெரிகிறார்கள்' என்கிறார் அவர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, சிக்கனம் பற்றியும், சுயநலத்தை விட்டுக் கொடுப்பது பற்றியும் பேசுகிற போது, சிக்கனம் என்றால் கருமித்தனம் என்கிற அளவுக்குத் தீவிரமாக அனுசரிக்கும் தன்னுடைய தாய் தந்தையை, "அமெரிக்க நாட்டில்
சிக்கனத்துக்குப் பெயர் போனவர்கள் என்று ஒபாமா அறிவிக்கலாம்' என்று எழுதுகிறார் ஆசிரியர்.

தன்னுடைய தாய், தந்தையின் வாழ்க்கை முறை பற்றி அவர் கூறுகின்ற விவரம் இது: அவர்கள் துணியை உலர்த்த வெயிலைப் பயன்படுத்துகிறார்கள். மிஷினைப் பயன்படுத்துவதில்லை. அவர்களிடம் கிரெடிட் கார்டுகள் கிடையாது. புதிய கார்
வாங்கும் அளவுக்கு சேமித்த பிறகுதான், பழைய காரை மாற்றுவார்கள். அதற்காக 10 ஆண்டுகள் காத்திருக்கவும் செய்வார்கள். அவர்களிடம் கேபிள் டி.வி. கிடையாது; இலவசமாக வருகிற ஓரிரு சேனல்களை மட்டும் பார்த்துக்கொள்வார்கள். குளிர்காலத்தில் அங்கெல்லாம் வெப்பம் தேவை. அதற்காக அவர்கள் அதிகச் செலவில் வெப்பமூட்டும் ஹீட்டர்களை பயன்படுத்துவதில்லை. வீட்டுக்கு
வெளியிலிருந்து மரக் கிளைகளை வெட்டி எடுத்து வந்து, தீ மூட்டி படுக்கை அறையைச் சூடு செய்வார்கள்.

துணி வாங்கும்போது (விலைக் குறைப்பு தள்ளுபடி காலத்தில்) சிக்கனமான கடைகளில்தான் வாங்குவார்கள்; பெரிய வியாபார மால்களில் வாங்க மாட்டார்கள். அவர்களிடம் இன்டர்நெட் கிடையாது. கம்ப்யூட்டர் கிடையாது. இப்போதுதான் ஒரு செல்ஃபோன்; அதுவும் ப்ரீ-பெய்ட் மட்டுமே. அந்த ஃபோனில் அம்மா பேசும்போது, "அதிகம் பேசாதே' என்று அப்பா, சத்தம் போடுவாராம்.

தான் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதற்காக, கார் வாங்கித் தருவார் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் நியூஸ் வீக் ஆசிரியர். ஆனால், ஒரு நல்ல சைக்கிளைப் பரிசாகக் கொடுத்தாராம் அவர் அப்பா. இதையும் ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறார் அவர்.

அதே போல், ஆசிரியருடைய சகோதரன் டி.வி. வாங்கக் கடைக்கு அப்பாவுடனும், ஆசிரியருடனும் போனபோது, "கலர் டி.வி. வேண்டாம். சாதாரணமான கருப்பு
– வெள்ளை டி.வி. போதும்' என்று கூறி, "காசைக் கரியாக்காதே' என்றாராம். சகோதரர்கள் இருவரும் இனிமேல் இவரைக் கடைக்கே அழைத்துப் போகக் கூடாது என்று முடிவு செய்ததையும் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார் நியூஸ் வீக் ஆசிரியர்.

""இவற்றையெல்லாம் கேட்டால் அவர்கள் கருமிகள் போலத் தோன்றும். ஆனால், அவர்கள் சிக்கனமானவர்கள். கருமிகள் அல்ல' என்று கூறும் ஆசிரியர், எப்படி தன்னுடைய அப்பாவும் அம்மாவும், தாங்கள் சேர்த்து வைத்த பணத்தைச் செலவழித்து, குடும்பத்தில் உள்ள எல்லோரையும் ஒரு வாரம் டிஸ்னி வேர்ல்டுக்கு உல்லாசப் பயணமாக அழைத்துச் சென்றார்கள் என்பதையும் எழுதுகிறார் ஆசிரியர்.

குடும்பத்தினருக்குப் பரிசளிக்கும் போது தாராளமாகவே செய்வார்கள். ஆனால் அதே சமயம் அதிகச் செலவாகும் ஹோட்டல்களில் சாப்பிடுவதை அறவே விரும்பாதவர்கள் அம்மாவும், அப்பாவும் என்கிறார் அவர்.

சிறுகச் சிறுகச் சேமித்து, கடன் வாங்காமல், படிப்படியாகத்தான் தன்னுடைய குடும்பத்தால் இப்போது இருக்கும் வீடு கட்டப்பட்டது என்பதையும் விவரிக்கிறார் ஆசிரியர். (இப்போது அமெரிக்காவின் முக்கியப் பிரச்சனையே, அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கி, தேவையில்லாத வசதிகளுடன் வீடுகள் கட்டியதுதான்) நியூஸ் வீக் ஆசிரியருக்கு 10 வயதானபோது, 5 ஏக்கர் நிலம் வாங்கி, வீட்டைக் கட்ட ஆரம்பித்தார் அவர் அப்பா. "பள்ளியிலிருந்து வந்தபிறகு எல்லோருடனும், குப்பைகளைத் திரட்டி எரிய விடுவேன். இருட்டிய பிறகு அந்தத் தீயில் குளிர் காய்ந்து கொண்டு குடும்பமாகச் சாப்பிடுவோம்' என்று குறிப்பிடுகிறார்.

இப்போது அவருடைய அம்மாவுக்கு வயது 60, அப்பாவுக்கு வயது 72. அம்மா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் முடிதிருத்தும் வேலை செய்தவர். அப்பா விளையாட்டு மைதான வார்டனாக 38 ஆண்டுகள் வேலை செய்தார். இருவரும் சம்பளம் அதிகம் பெறவில்லை. ஆனாலும் நிறையச் சேமித்தார்கள். "எவ்வளவு அப்பா சேமித்துள்ளீர்கள்?' என்று கேட்டால், அப்பா மழுப்புவார்.

தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கல்லூரியில் படிக்க வைத்தார். (கல்லூரியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது அமெரிக்கக் குடும்பங்களில் மிகவும் பெரிய விஷயம்.) இப்போதோ அதிகம் வீட்டுச் செலவு கிடையாது. கறிகாய் கூட வீட்டுத் தோட்டத்திலேயே விளைகிறது.

இப்படியெல்லாம் தன்னுடைய தாய் – தந்தையின் கட்டுப்பாடான, சிக்கனமான வாழ்க்கையை விவரிக்கும் ஆசிரியர் மேலும் எழுதுகிறார்: "கடினமான உழைப்பு இல்லாமல், உழைப்பை விரும்பாமல், இதுபோல் வாழ்க்கை நடத்துவது கடினம்' (அவர் இப்படிக் குறிப்பிடுவது இந்தக் காலத்துக்கு இது சரிப்பட்டு வராது என்ற தோரணையில்). ஆனாலும், அதுபோன்ற வாழ்க்கைமுறைதான் நல்லது என்பதை மறுக்கவில்லை அவர். அந்த உதாரணமான வாழ்க்கை முறையிலிருந்து கிடைக்கும் படிப்பினை இதுதான் :

யார் யார் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தி வந்தார்களோ – கடன் வாங்கி வீடுகளை வாங்காமல், ஆடம்பரமாக வாழாமல், சேமித்த பணத்தில் வேண்டிய பொருள்களை மட்டும் வாங்கி வந்தார்களோ – அவர்கள்தான் இப்போது சாமர்த்தியசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் பைத்தியக்காரர்கள்; கடனில் அல்லல்படுகிறவர்கள்.

அதுபோல் சிக்கனமாக வாழ்ந்தவர்கள் இப்போது பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படவில்லை. (கடனில் வீடு கட்டி, கடனில் கார் வாங்கி) இப்போதைய பொருளாதார நிலையில் சங்கடத்துடன் வாழ்க்கை நடத்தும் தன் போன்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், எப்படி கடன் இல்லாமல் வீடு கட்டி எளிமையாக வாழ முடியும் என்பதை புரிந்துகொள்ள இயலும் என்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய (காயலான் கடைக்கு லாயக்கான) எலிப் பொறியை இன்னும் உபயோகப்படுத்தி வரும் வாழ்க்கை எளிமையாகவும், இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கிறது என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.

"மிகக் கட்டுப்பாடாக, கடினமாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு, கடினமான காலம் புதிதாக வருவதில்லை. அவர்களுடனேயே இருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? வாழ்க்கையை மிகவும் வசதிப்படுத்தி விட்டால், கடினமான நேரம் வருகையில் அதைத் தாங்க இயலாது. ஆனால், எளிமையான வாழ்க்கை நடத்துபவர்களுக்கு அது பாதிப்பைத் தராது. ஆக, பொருளாதார நெருக்கடி என்பது கடின வாழ்க்கை வாழ்பவர்களுக்குச் சிரமம் தராது' என்று கட்டுரையை முடித்துள்ளார் நியூஸ் வீக் ஆசிரியர்.

அமெரிக்காவில் அந்தக் குடும்பத்தைப் போல் எத்தனை ஆயிரம், அல்லது லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன என்பது தெரியாது. ஆனால், இதுபோன்ற குடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பங்களை, காலத்துக்கு ஒவ்வாதவை என்று ஒதுக்கி வைத்த காலம் மறைந்து, நவீனமான நியூஸ் வீக் பத்திரிகையின் ஆசிரியர் வாழ்க்கை உதாரணமாகிறது.

அமெரிக்காவுக்குப் பாடமோ, இல்லையோ? அமெரிக்கா போல் நம் நாட்டிலும் எல்லா வசதிகளுடனும் சுலபமாக வாழ்க்கை அமைய வேண்டும், அதுதான் பொருளாதார வளர்ச்சி என்று நினைக்கும் நம்மவர்களுக்கு – நியூஸ் வீக் ஆசிரியரின் குடும்பம், ஒரு அர்த்தமுள்ள பாடம். அதாவது, அமெரிக்கக் குடும்பம் நமக்கு உதாரணமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

ஆங்கில கட்டுரை இங்கே

அடுத்த முறை சோப்பு வாங்க 'ஃபுட் வேர்ல்ட்' போன்ற கடைகளுக்கு போகாமல் வீட்டில் பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு போனாலே நிறைய சேமிக்கலாம்.

16 Comments:

Another Indian said...

Nice article. It is proven fact that we Indians save more than 30% of our hard earned money compared to westerns who save less than 10%. It is in our blood that we should save and safeguard our future.

Anonymous said...

நம்ம ஊருல heart of the city-ல இருக்கற கடைல MRP rate-ல விக்கறான்! அதுவும் இந்த மாதிரி "சூப்பர்" மார்க்கெட் எல்லாம் wholesale கடை வேற!

நெறைய ஊருல (மதுரைப்பக்கம், விருது நகர்ப் பக்கம் எல்லாம்) மளிகைக் கடைகளில் பேஸ்ட், சோப்பு, இன்னும் பல சமாச்சாரம் சூப்பர் மார்க்கெட் விலையை விட 10-20% கம்மியாதான் விக்கறாங்க!

இந்தப் பகட்டு உலகத்துல "சூப்பர்" மார்கெட்ல ஷாப்பிங் பண்ணிட்டு மாசக் கடைசில "விரல் சூப்பர" நிலைமை வராம இருக்கனும்னா மக்கள் சிந்திக்கணும். சிக்கனமா இருந்தா கருமின்னு சொல்லுவான் நாலு பேர். அத இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடணும்.

அப்பொறம், இட்லிவடை உங்களுக்கு ஒரு விண்ணப்பம்.

இந்த "பண வீக்க விகிதம்" கொறஞ்சு 0.18% அளவுக்கு வந்துடுது அப்டின்னு சொல்லறாங்களே. எல்லாப் பொருள்களின் விலையும் இன்னும் எட்டாத உயரத்தில் இருக்கும் பொது, இது எப்படி கணிக்கப்படுகிறது? என்ன மாதிரி "பாமரனுக்கு" இந்த
இதப் பத்தி கொஞ்சம் "awareness" வர ஒரு பதிவைப் போடுங்கள். நம் வாசகர்களில் பொருளாதாரம் அறிந்த நண்பர்கள் பின்னோட்டம் வெளியிட்டு கொஞ்சம் அலசட்டும்.

Anonymous said...

ஏன் சார் தமிழ் நாட்டிலே தான் இலவச கலர் டிவி, இலவச சாப்பாடு, இலவச துணிமணி, கிட்டத்தட்ட இலவச அரிசி மற்றும் சமைக்கும் சாமான்கள், இதற்கும் மேலே மதம் மாறினால் காசு தருகிறார்களே இதையும் மிஞ்சியா சேமிகனும் ?

Anonymous said...

Soap Etharku ? Payatham Maavu pottu kulicha ,Good for health, and lot of savings.

Senthil

Anonymous said...

>> இதற்கும் மேலே மதம் மாறினால் காசு தருகிறார்களே

நெத்தியடி.
அமெரிக்காவில் எவாஞ்சலிக்கல் சர்ச்சுகளுக்கும் கடன் தொல்லை. நம்ம மிசநரிகளுக்கும் பணப்புழக்கம் குறையலாம்.
http://www.usatoday.com/news/religion/2009-03-15-churchborrowing_N.htm

Anonymous said...

எலிபொறியும் அவர்களது திருமணமும் ஒரே வயது ...அதாவது 50 வருடங்கள். அந்த அம்மாக்கு வயது இப்போது 60 அப்படியானால் அவர் திருமணம் நடந்தது 10 வயதிலா?

பா. ரெங்கதுரை said...

பொதுவாக, அமெரிக்காவைப் பற்றி எழுதும்போதெல்லாம் சற்றும் கூச்சமின்றி உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்து உளறிக் கொட்டுவது எஸ். குருமூர்த்தியின் இயல்பு. இம்முறை கொஞ்சம் தேவலாம்.

குருஜி கோல்வல்கரின் ‘ஞான கங்கை’மற்றும் காஞ்சி பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ ஆகிய இரு புத்தகங்களை மட்டும் படித்தாலே போதும்; உலக ஞானம் அனைத்தையும் பெற்றுவிடலாம் என்ற எண்ணமுடைய குருமூர்த்தி போன்றவர்களிடம் எதையும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

ஞாநி போன்ற இடதுசாரி / பெரியாரிய விதூஷகர்களுக்கு இணையான இந்துத்துவ எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதை குருமூர்த்தி போன்றவர்கள் அவ்வப்போது நீருபிக்கிறார்கள். இவர்களுக்கு வாய்ப்புத் தரத்தான் குமுதம், விகடன் வகையறாக்கள் இதுவரை தயாராக இல்லை.

Anonymous said...

அடுத்த முறை சோப்பு வாங்க 'ஃபுட் வேர்ல்ட்' போன்ற கடைகளுக்கு போகாமல் வீட்டில் பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு போனாலே நிறைய சேமிக்கலாம்.

My dad said he saved more than Rs.100 - 200 Rs. every month when subiksha was alive. now even small stores in Kumbakonam has got back to selling in MRP after subiksha was closed.

so you have to analyze b4 choosing a super market. and your generic comment will not be correct in all terms and at all times .

Anonymous said...

MRP என்பது ஒரு ஏமாற்று வேலை. பல ஏ சி கடைகளில் லிப்ஸ்டிக் போட்ட பெண்கள் MRP க்கு மேல் வரி வேறு போடுகிறார்கள்.
கட் பனியனும், முண்டாசுமாக உள்ள கடைக்காரர் MRP யைவிட 1 அல்லது 2 ரூபாய் தள்ளி கொடுக்கிறார். அன்று ஒரு சாமான் வாங்கினேன். MRP விலை 62 ரூபாய். இவ்ர் 54 ரூபாய் விலையில் கொடுத்தார்!

Anonymous said...

Do you know that in many US cities, by and large, drying clothes in clothesline outside the house is not allowed! The neighbours also object!!!

Anonymous said...

எங்கள் வீட்டு மேஜை, நாற்காலி, சுவர் கடிகாரம், கட்டில் எல்லாம் 70 வருஷ பழசு. ஆனாலும் நன்றாக உள்ளன. என் நண்பர் மலேசியாவிலிருந்து வந்த டைனிங் டேபிள் வாங்கினார். மூன்று மாதம் கூட ஆகவில்லை. 3 நாற்காலிகள் உடைந்து விட்டன. உட்கார்ந்த போது உடைந்து விழுந்து விட்டதில் லேசான அடி கூட பட்டதாம். மற்ற நாற்காலிகளுக்கு இரும்புப் பட்டை அடித்திருக்கிறார். வாங்கிய சமயம் 15000 ரூபாய் விலை என்று பெறுமை அடித்து கொண்டவர் இவர்!

Anonymous said...

Things were cheaper in Subiskha. In USA often Wal-Mart sells at very cheap rates. In fact clothes are cheaper at wal-mart when there is a sale. So you cannot generalise like that. Not all can afford to be without computers or internet. Gurumurthy like Jeyamohan simply exaggerates.

R.Gopi said...

"தல"தான் எல்லாத்தையுமே இலவசமா தராரே .... அப்புறம் நமக்கு சேமிப்புன்னு ஒண்ணு தனியா வேணுமான்னு சீட்டு குலுக்கி போட்டு பாத்தேன்.

அந்த சீட்ட பிரிச்சு படிக்கறப்போ, சீட்டோட பின் பக்கத்துல "தல" படம் இருந்தது. படத்துக்கு கீழே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் இலவசம்னு வேற போட்டு இருந்தது.

இது சொல்ல வரும் செய்தி என்ன??

ஆதவன் said...

nallak kattrai..

Inba said...

ஆடம்பரத்தை பெரியதாக நினைக்கும் நமது மக்களுக்கு
அமெரிக்க வள்ளுவர் ஸ்டீவ் டட்டில் ஒரு பாடம்

கெக்கே பிக்குணி said...

அனானிகளில் ஒருவருக்கு, அந்த அம்மாக்கு வயது இப்போது 60-களில். "My mom, who is in her 60s, has been a hairdresser most of her life, and my dad, 72...."