பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 16, 2009

அவதூறு என்றால் என்ன ?

அவதூறு என்றால் என்ன ? இரண்டு செய்திகள் கீழே ( அனானிக்கு நன்றி )


பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் கலைஞர் நவம்பர் 17 2008 அன்று கோவைக்கு வந்தார். பேட்டியிலிருந்து

செய்தியாளர்:சென்னை சட்டக்கல்லூரி விவகாரத்தில் ஜெய லலிதா உங்களைக் குற்றஞ்சாட்டி, தார்மீகப் பொறுப்பேற்று நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டுமென்று சொல்கிறாரே? அவரைப் போலவே வைகோவும் அதே கருத்தைச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: இதிலேயிருந்து என்ன தெரிகிறது என்றால், என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வதற்காக மாணவர்களின் இரு சாராரையும் இவர்களே தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

சட்டக் கல்லூரி மோதலை தூண்டி விட்டதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இன்று வந்த செய்தி

"அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயாவுக்கு எதிராக அவதூறு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது'' -செய்தி.


23.1.09 தேதிய நாளேடுகளில் ஜெயாவின் அறிக்கை வெளிவந்திருந்தது. அந்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்காக அரசு சார்பில் வசூலிக்கப்பட்ட நிவாரண நிதி இலங்கைத் தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்ற தகவல் எதுவும் வரவில்லை என்றும், அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றும் வக்கிர எண்ணத்துடன் கூறியிருந்தார்.

உடனடியாக அதற்குப் பதில் கூறியதோடு நிற்காமல் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பி மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அதைக் கூறிய ஜெயா மீது வழக்கு தொடருவேன் என்றும் தெரிவித்தேன்.

அதற்குப் பதில் கூறிய ஜெயா மக்கள் சொல்கிறார்கள் என்றுதான் தெரிவித்ததாக பதில் கூறினார். எனவேதான் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு குற்றச்சாட்டினைக் கூறும்போது ஆதாரத்தோடு கூற வேண்டும். சொல்வதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும். சொல்லிவிட்டு பிறகு மக்கள் கூறியதை சொன்னேன், அவன் சொன்னதை சொன்னேன், இவன் சொன்னதைச் சொன்னேன், என்று பின்வாங்கினால் வழக்கைச் சந்தித்துத்தானே ஆக வேண்டும்!


இதில் எது அவதூறு ?

9 Comments:

R.Gopi said...

மஞ்சள் துண்டு மைனர்
விரசகவி
முத்தமிழ் வித்தகர்
தமிழ்நாட்டை வித்தவர்

விரச பேனா எடுத்து
அதில் விரச மை ஊற்றி
தூற்றும் கவி பாடுவதில் கில்லாடி
தற்போது நாடி நரம்பு தளர்ந்தாலும்
மற்றவர்களை ஏசுவது குறையவில்லை.

உல்டா பேச்சில் வல்லவர்
அடுத்தவரை தாறுமாறாக திட்டுபவர்
இந்துக்களை திருடன் என்றவர்
முறைத்து திருப்பி கேட்டால் - லுல்லுல்லாயிக்கு என்று ஜகா வாங்கியவர்

எனக்கு ஏகாதசி விரதத்தில் நம்பிக்கை இல்லை
ஆனால், ரம்ஜான் நோன்பில் நம்பிக்கை உண்டு என்றவர்

பாவம் செய்யும் அனைவருக்கும், நரகத்தில் ஓரிடமுண்டு என்றால், இவருக்கு நரகத்தில் ஒரு தொகுதி உண்டு (அங்கேயுமா??) ஐயோ ஐயோ.............

R.Gopi said...

"தல"

முரண்பாட்டின் மூட்டை
தமிழ்நாட்டை போட்டார் "ஆட்டை"

sundaikai said...

R.Gopi-ai KK rombave verupu ethirikar pole - comments summa athruthele.

Konjam Mic pidicha tamil koorum nalluragirku nalla irukum. Briyani potalam kodukarathuku munnadi pesidunga - pinnale thani-adichuputu thoongipuduvanunga - vellenthi tamizhanunga.

மானஸ்தன் said...

//எனக்கு ஏகாதசி விரதத்தில் நம்பிக்கை இல்லை
ஆனால், ரம்ஜான் நோன்பில் நம்பிக்கை உண்டு என்றவர்//


அவர் வீட்டுல சமத்துவம்பா!
அவர் மனைவி திருக்கடையூர், துணைவி மாங்காடு என்று போவார்கள். அதுனால "தல" பேருல அந்தக் கோவில்ல எல்லாம் அர்ச்சனை நடக்கும். ஆனா "தல" ஊருல உள்ள இந்துக்களை எல்லாம் "அர்ச்சனை" செய்வார்!

அம்மா சொல்லற மாதிரி, அவர் "மைனாரிட்டி" ஆட்சி நடத்துகிறார் என்ற சொல்லை நிரூபிக்க கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு குடுப்பார்! (அவர்கள் வேண்டவே வேண்டாம் என்று சொன்னாலும்), இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் விருந்து குடுப்பார்!!

ஆக மொத்தத்துல "தல" சமத்துவத்த "நில" நாட்டுராறு!! அதனால அவரைப்பத்தி சும்மா தப்பவே பேசாதீங்கப்பா!

மானஸ்தன் said...

திரு முத்துவேல் கருணாநிதியின் கருத்து
+++++++++++++++++++++++++++++++++++
//ஒரு குற்றச்சாட்டினைக் கூறும்போது ஆதாரத்தோடு கூற வேண்டும். சொல்வதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும். சொல்லிவிட்டு பிறகு மக்கள் கூறியதை சொன்னேன், அவன் சொன்னதை சொன்னேன், இவன் சொன்னதைச் சொன்னேன், என்று பின்வாங்கினால் வழக்கைச் சந்தித்துத்தானே ஆக வேண்டும்!//



திரு மு.க.வின். மேல் கூறிய கருத்து சரி என்று சொல்லும் பட்சத்தில் ஜெ. அவர் மீது இவ்வாறு கூறலாம்.
+++++++++++++++++++++++++++++++++++

ஒரு குற்றச்சாட்டினைக் கூறும்போது ஆதாரத்தோடு கூற வேண்டும். சொல்வதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும். சொல்லிவிட்டு "கிண்டலாக சொன்னேன், சுண்டலாக சொன்னேன்" என்று பின்வாங்கினால் என்ன அர்த்தம் ? வழக்கைச் சந்தித்துத்தானே ஆக வேண்டும்!

Anonymous said...

"கிண்டலாக சொன்னேன், சுண்டலாக சொன்னேன்"

Good one..

Prabhu Swaminathan said...

பாவம் செய்யும் அனைவருக்கும், நரகத்தில் ஓரிடமுண்டு என்றால், இவருக்கு நரகத்தில் ஒரு தொகுதி உண்டு (அங்கேயுமா??) ஐயோ ஐயோ.............
Nice comments...

I am planning to build a statue for MK as a symbol of perfect psedo-secularism. Hope many people will support this!

ஈ ரா said...

// பாவம் செய்யும் அனைவருக்கும், நரகத்தில் ஓரிடமுண்டு என்றால், இவருக்கு நரகத்தில் ஒரு தொகுதி உண்டு (அங்கேயுமா??) ஐயோ ஐயோ.............//

கோபி சார்

கலக்குறீங்க

லவ்டேல் மேடி said...

அட ...... ஏனுங்கோ தம்பி அனானி........!! ஒரு தெளிவாணி விஷயம் சொல்லும்போது ...... எதுக்கு இந்த ஒளிவு மறைவு........!!! ஓப்பன் ஸ்டேட்மன்ட் உட்டுபோட்டு போங்கோ...... இதுல என்ன இருக்கு ........!!!

அதுதான ...... இதுல என்ன அவதூரு இருக்குது.......!! ரெண்டு பேருமே மாத்தி... மாத்தி..... அவதூரு..... அவதூரு.... ன்னு சொல்லிகிட்டே மக்களை கோமாளி ஆக்காதீங்கோ....!!!