பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 13, 2009

சித்திரைத் திங்கள் முதல் நாள் வாழ்த்துகள்

தலைப்பு உதவி : கலைஞர் டிவி :-)

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் - ஜெயலலிதா அறிக்கை கீழே..

ஜெயலலிதா அறிக்கை

பூக்கள் பூத்துக்குலுங்கும் தமிழ்ப்புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சர்வதாரி ஆண்டு, தீவிரவாத ஆண்டாய், பொருளாதார சீரழிவு ஆண்டாய், தமிழினத்தை அழிக்கும் ஆண்டாய் வந்து சென்றது. இன்று பிறக்கும் விரோதி ஆண்டு வளமிக்க ஆண்டாய் மலர்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் அமைதி தழைக்கவும், செல்வம் செழிக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் புத்தாண்டில் ஊக்கமுடன் உழைப்போம், தடைகளை தகர்த்தெறிவோம். சுயநலத் துரோகிகளை தூக்கி எறிவோம். உரிமைகளை மீட்போம். தமிழினம் வாழ வழி வகுப்போம் என்று சூளுரைத்து தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதில் உவகை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.


கலைஞர் டிவியில் நாளை “சித்திரைத் திங்கள் முதல் நாளை முன்னிட்டு - அஞ்சாதே ( அஞ்சாநெஞ்சன் இல்லை ) புதிய தமிழ் திரைப்படம். காப்பி வித் அனுவில் தயாநிதி மாறன் வருகிறார்.

பகுத்தறிவு சந்தேகம்:
இனிமேல் எல்லா மாத முதல் நாளும் கலைஞர் டிவியில் இந்த மாதிரி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி இருக்குமா ?

இட்லிவடை வாசகர்களுக்கு சித்திரைத் திருநாள் நல்வாழ்துகள்.

39 Comments:

Anonymous said...

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

lalitha krishnan

Ravi said...

IV, neengalum puthaandu vaazhthukkal-nu solla maattengireengalae!

மானஸ்தன் said...

தமிழைச் செம்மொழி ஆக்கிய பகுத்தறிவுப் பகலவனின் பெயரில் உள்ள தொலைக்காட்சியைப் பற்றி எழுதும் போது, "பிழைகள்" வரப்படாது! (இத நான் சொல்லல, வைகைப் புயல் சொல்ல சொல்லி எனக்கு "sms" அனுப்பிச்சார்)...

அவர் சுட்டிக்காட்டிய பிழைகள்!
+++++++++++++++++++++++++++
சித்திரை திங்கள் முதல் நாள் -> அது "சித்திரைத் திங்கள்"

காப்பி வித் அணுவில் -> காபி வித் அனு!

நீங்க எழுதின பகுத்தறிவு சந்தேகத்திலும் ஒரு பிழை உள்ளது. நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்!
+++++++++++++++++++++++++++

இரண்டு சந்தேகங்கள்!(எனக்கு)!
(1) ஏன் உங்கள் பகுத்தறிவு சந்தேகத்தை மஞ்சளில் போடவில்லை?

(2) உங்கள் "diplomatic" last statement. அந்த வாழ்த்துக்கள் "விரோதி" வருஷப் பிறப்பிற்காகவா (ஜெ.) இல்லை, சித்திரை மாசம் முதல் நாளுக்காகவா (மு.க)!!

கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்!
:-) :-D

பா. ரெங்கதுரை said...

இந்து விரோதி கருணாநிதியின் கைக்கூலியாகச் செயல்பட்டு, கருணாநிதிக்கு எதிரான தமிழக இந்துக்களின் ஓட்டுகளைப் பிளவுபடுத்தச் சதி செய்யும் எட்டப்பனான இல.கணேசனுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கத் துப்பில்லை. இந்த நபரை டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் ஆவிகூட மன்னிக்காது!

டன்மானடமிழன் said...

தமிழ்....தமிழ்... என்று கூறி
தமிழை தமிழனை தமிழ்நாட்டை சீரழித்த
விரோதிகளை ஒழிக்க வரும்
விரோதியை வருக வருக என்று
வரவேற்கிறோம்...

பகுத்தறிவுன்னானு இன்னாப்பா...
லக்கி
அதாவது அதிஸ்டம்
அதாவது பணம்
எங்க நோவாமா கிடைக்குமோ
அந்த இடத்துக்கு
ஏத்த மாதிரி
தனது தலைவனை
கொள்கையை
(கோவணத்துக்கு பதிலா பிங்க் ஜட்டி) மாற்றுவது
பகுத்தறிவுனு.....
தமிழனை பகுத்தறிந்தவர்களின் (லுக்) விட்டவங்களின்
கருத்து இது.

IdlyVadai said...

//(1) ஏன் உங்கள் பகுத்தறிவு சந்தேகத்தை மஞ்சளில் போடவில்லை?//

பகுதறிவு என்றாலே மஞ்சள் கலர் அப்பறம் அதுக்கு எதுக்கு தனியா மஞ்சள் கலர் ?

மானஸ்தன் said...

அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!!


ஒரு கேள்விக்கு பதில் குடுத்தீங்க சரி! அந்த "முக்கியமான" ரெண்டாவது கேள்விக்கு பதில் எங்கண்ணே!?
:-D :-)

Krish said...

இனிய 'தமிழ்' புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Vedantha Desika Dasan said...

அதெல்லாம் சரி, கொஞ்ச நாள் முன்னாடி வருட பிறப்பு சித்திரை முதல் நாளிலேயே கொண்டாடப் படும் என்று கருணாநிதி அறிவித்ததாக உங்கள் இட்லி வடையில் படித்தேன். ஆனால் அது பற்றி வேறு எந்த ஊடகத்திலும் காண முடிய வில்லையே? அது ஏன்?

வலைஞன் said...

ஆமா ,நீங்க, கொஞ்ச நாளைக்கு முன் தல, தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் தேதி கொண்டாடிக்கலாம் நு சொல்லிட்டார் நு பதிவு போட்டிருந்தீர்களே!ஏன் எல்லோரும் (ஹிந்து தினசரி உட்பட) மாறவில்லை?ஏன் ஜெயா டிவி யும் சித்திரை திருநாள் என்றே சொல்கிறர்கள்?ஒண்ணுமே புரியலையேபா !!!

அனைத்து நண்பர்களுக்கும் என் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

மே மாசம்(மும்) விரோதி வராம பார்த்துக்கங்க!

பாஸ்கி said...தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள ! ! !


இந்த வருடத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுகும் நல்ல "பாடம்" கிடைத்து திருந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாஸ்கி

மானஸ்தன் said...

இட்லி வடையாரே!
என்னையா இப்டி நமுட்டு சிரிப்பு சிரிச்சுண்டு இருக்கீர்!??

ரொம்ப "ரவுசு" பண்ணீங்க, அப்பொறம் அவர் சொன்ன மாதிரி "மே" மாசம் உங்களுக்கு நெறைய "விரோதி"கள் வந்துருவாங்க!
பாத்து!! உஷாரா இருங்க!
:-D

பாவம் அய்யா நம்ம "வேதாந்த தேசிக தாசனும்" , "வலைஞனும்". உண்மைய போட்டு உடைத்துவிடுங்கள்! .-)

கொடும்பாவி-Kodumpavi said...

இட்லி வடை காமெடி பண்ண ஒரு அளவே இல்ல..
சித்திரை திருநாள்ன்னு சொல்றவருக்கு சித்திரை தமிழ் புத்தாண்டுன்னு சொல்ல வரலை. அரசின் அயோக்கியத்தனத்திற்கு துணைபோவது எதனாலே..? ஆட்டோவிற்கு பயந்தா?
அரசு சித்திரை முதல் நாளை ‘தமிழ் புத்தாண்டாக' அறிவித்தது என்று இட்லி வடை பதிவில் வந்தது ஏப்ரல் ஒன்னுக்கு .. மன்னிக்கணும் ஏப்ரல் 1க்கு வந்த பதிவு. இதை இட்லி வடை தெளிவு பண்ணவேண்டும்.
மக்களை குழப்புபவர்களை பற்றியே அதிக செய்திகளை வெளியிட்டு வருவதால் இட்லி வடையாரும் குழம்பி போயிருப்பது பற்றி யாரும் குழம்பவேண்டாம்.
விரோதி ஆண்டுல மக்கள் மக்களை விரோதியாக பார்க்காமல் அவர்களின் கெட்ட (கேடு கெட்ட) எண்ணங்களை விரோதியாக பாவித்து அதிலிருந்து மீட்டு, மீண்டு வருவேண்டும் என சொல்லி விடை பெறுகிறேன்.
அனைவருக்கும் என் இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Kumaran said...

ஆஹா.. நானும் இப்போ தான் ‘அந்த’ செய்திய ’முழு’சா (comments oda) படிச்சேன்.. 13 நாள் ’அதை’ கொண்டாடிகிட்டு இருந்திருக்கேன்...ச்சே.. ;-)

ஹரன்பிரசன்னா said...

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்ப்புத்தாண்டை மாற்றி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும், ஹிந்து மத துவேஷத்தோடு செயல்படும், தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்து, மற்ற மத பண்டிகைகளுக்கு வேண்டுமென்றே வாழ்த்துச் சொல்லும் கருணாநிதி போன்ற ஒருவரின் ஆட்சியிலிருந்து இத்தமிழகத்திற்கு இப்புத்தாண்டிலாவது சுதந்திரம் கிடைக்கட்டும்.

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

கிரி said...

//அஞ்சாதே ( அஞ்சாநெஞ்சன் இல்லை ) //

ஹா ஹா ஹா

//இனிமேல் எல்லா மாத முதல் நாளும் கலைஞர் டிவியில் இந்த மாதிரி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி இருக்குமா ?//

எப்படிங்க இப்படி சரியா விஷயத்தை பிடிக்கறீங்க? கலக்கல்

உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுந்தரராஜன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இட்லிவடையாவது புத்தாண்டு வாழ்த்து சொல்லுமென்று எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானுமொருவன்.

Baski said...

பகுதறிவு இல்லாதோருக்கு
முன்னால் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

பகுதறிவு அதிகமா உள்லோர்ருகு
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

R.Gopi said...

இட்லிவடை, நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என் விரிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்து இதோ இங்கே :

http://edakumadaku.blogspot.com/2009/04/2009.html

ஸ்ரீனி said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-ஸ்ரீனி

வலைஞன் said...

தமிழ் நாட்டின் தலை சிறந்த அப்பாவிகள்:
தேசிக தாசன்
குமரன்
மற்றும்
அடியேன்
இதற்கு எதாவது பரிசு கிடையாதா இட்லிவடையாரே?

மணியன் said...

அனைவருக்கும்
விரோதி வருட புத்தாண்டு வாழ்த்துகள் !
பங்களா நவபர்சோ, பஞ்சாபி பைசாகி,அசாமிய பிஹு மற்றும் மலையாள விஷு வாழ்த்துகள் !!

சித்திரைத் திருநாள் சிறப்பு வாழ்த்துகள் !

நாளும் கோளும் நலமாய் அமைந்து
நாடும் வீடும் வளம் பெற வாழ்த்துகள்!!

M Arunachalam said...

Happy Tamil New Year To All (Karunanidhi included).

ரஜினி ரசிகன் said...

இனிமேல் என்ன நடக்குமோ என்று பயமாக உள்ளது. எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!!

R.Gopi said...

//வலைஞன் said...

தமிழ் நாட்டின் தலை சிறந்த அப்பாவிகள்:
தேசிக தாசன்
குமரன்
மற்றும்
அடியேன்
இதற்கு எதாவது பரிசு கிடையாதா இட்லிவடையாரே?//

************

வலைஞன்

அப்படியே என்ன பரிசு வேணும்னு லேசா கோடி காட்ட வேண்டியதுதானே??

4 தொகுதி

40 கோடி, ஒகேவா??

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா.....!!! கலைஞர் டி.வி க்கு தை மாசமே புத்தாண்டு முடுஞ்சு போச்சுல்ல ..... அப்பறம் எதுக்கு இப்போ கொண்டாடுறாங்க....!!!


௦௦௦௦ஓஓஓஒ....!! அவின்ன்களுக்கு இது தமிழர் புத்தாண்டுன்னு தெரியில போல......???!!??

யோசிப்பவர் said...

//சித்திரைத் திருநாள் நல்வாழ்துகள்//
”வாழ்து”கள் இல்லை சாமி! வாழ்த்துக்கள்!! புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!;-)

நாகை சிவா said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

saamakodanki.madurai said...

இட்லிக்குள் ஒளிந்து கிடக்கும் உளுந்து யாருக்கு தெரியும்? அதே போல, கலைஞரின் வாழ்த்தில் ஒளிந்து கிடக்கும் அசல்

அர்த்தத்தை இங்கே படியுங்கள்.
எனது உயிரினும் உயிரான தமிழ் மாக்கான்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும், எனக்கு எந்த தொடர்பும் இல்லாத

தமிழ்புத்தாண்டில் வாழ்த்துகளை வேறு வழியில்லாமல் சொல்லிக் கொள்வதில் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து பேருவகை

கொள்கிறேன். இந்த புத்தாண்டிலும் தமிழர்களாகிய ( நான் சத்தியமாக இல்லை) நீங்கள் இலக்கண, இலக்கிய, கவிதை

உதாரணங்களை எல்லாம் படித்து விட்டு வழக்கமாக உச் கொட்டி விட்டு, நான் இலசவ டிவி முதல் ஈழப்பிரச்சனை வரை

ஏமாற்றி விட்டதாக கண்டு பிடித்து விட்டாலும் கூட, அதை எல்லாம் மறந்து விட்டு மறக்காமல் எங்கள் கூட்டணிக்கு ( நடிகர்

திலகம் ரித்திஷ், அஞ்சாநெஞ்சன் அழகிரி, தூத்துக்குடி சிட்டுக்குருவி லேகிய டாக்டர் ஜெயதுரை ) என்று நான் கண்டெடுத்த

கழக முத்துக்களுக்கு உங்கள் வாக்குகளை பதித்து விடுங்கள்.
இவர்கள் நாடானளுமன்றத்திற்கு போய் குரல் கொடுத்து, காங்கிரஸ் உடன் கைகோர்த்து, உலகம் முழுவதும் உள்ள

தமிழர்களை மானத்துடனும், மரியாதையுடனும் வாழ வைக்க வழிகாட்டுவோம் என்று இந்த தமிழ் மகள் பிறந்த வேளையில்

(சத்தியமாக தை தான்) தமிழ் ஆண்டு பிறப்பு) இருந்தாலும் இப்போது வேறு வழியில்லாமல் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து

கொள்கிறேன். அடுத்த தமிழ் புத்தாண்டிற்குள் தமிழ்நாடு மின்சாரம் இல்லாவிட்டாலும் ஜொலிக்கும் என்று இந்த வேளையில்

தெரிவித்து கொள்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அண்டவெளியில்

சூரியனின் கதிர் வீச்சை உள்வாங்கும் சேடிலைட்டை வைக்க போகிறார்களாம். இந்த சேடிலைட் இரவு என்ற ஒன்றை

ஏற்படுத்ததாம். இரவு ஏற்படும் நேரத்தில் தானாகவே இயங்கி சூரியனிலிருந்து ஏற்கனவே சேமித்து வைத்து ஒளியை உமிழ

தொடங்கி விடுமாம். எனவே தமிழ்நாட்டில் இனி இரவு என்பதே வராது. இரவு வந்தால் தானே விளக்கு வேண்டும். இதற்கு

கரண்ட் வேண்டும். எனவே அன்னை சோனியாவின் தாழ் தொழுது அந்த சேடிலைட்டை தமிழகத்தை நோக்கி இருக்கும் படி

உலக நாடுகளுக்கு வேண்டுகோள் வைக்க போகிறோம். எனது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அமைச்சர் ஆற்காட்டார், உலக

நிறுவனங்களை தமிழ்நாட்டின் சாப்ட்வேர் துறையில் மட்டும் முதலீடு செய்யாதீர்கள் என்று புத்திசாலித்தனமாக பேசியது

போல் இப்போதும் பேசிவிடாமல் , அந்த சேடிலைடை மீட்டெடுத்து வரும் தூதுவராக செயல்படுவார் என்றும் உறுதி

கூறுகிறேன்.
இத்துடன் இப்போது நாம் தமிழக மக்கள் இட்லி, இடியாப்பம் செய்ய பயன்படுத்தும் நமது 1 ரூபாய் அரிசி என்பது மிகசுவையாக

பஞ்சாபில் விளையும் பாசுமதிக்கு நிகராக இருப்பதாக நமது கழக உடன்பிறப்புகள் புகழ்ந்து உரைக்கின்றார்கள். ஆனால் 1 கிலோ

1 ரூபாய் அரிசியை சமைக்க 9 கிலோ விறகு தேவைப்படுவதாக சில இடங்களில் சொல்கிறார்கள். எனவேஇந்த இடங்களில்

உள்ள வீடுகளை எல்லாம் இடித்து விட்டு அங்கே கருவேலை மரங்களை நட்டுக் கொள்ள வசதி செய்யப்படும் என்று

மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். இந்த இடங்களில் உள்ள மக்கள் மரங்களில் மரவீடுகளை அமைத்து காற்றோட்டமாக தங்கி

கொள்ளலாம். இதனால் கரண்ட் கூட தேவைப்படாது. மழை பெய்தால் மட்டும் கொஞ்சம் சிரமம். எனவே இலவச டிவி

வழங்கியது போல் இந்த தேர்தல் முடிந்த பிறகு தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அருமை மைந்தன் அழகிரியின் பிறந்த

நாளுக்கு வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை எல்லாம் வெட்டி வசதியான டெண்டுகளாக தைத்து வழங்கப்படும் என்று

புளகாங்கிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இனி செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க செலவில்லாத

ஹேம் ரேடியோ தமிழ் மக்கள் அனைவருக்கும் வழங்க நானும், ஆற்காட்டாரும் முடிவு செய்திருக்கிறோம். இந்த ஹேம்

ரேடியோ சாதாரணமானது அல்ல. உலக தமிழர்கள் அனைவருடனும் தொடர்பு கொண்டு அவர்கள் நமது முயற்சியால்

தற்போது, மிக்க மகிழ்ச்சியடனும், மிகுந்த உடல்நலத்துடனும் வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் கூட எளிதாக தொடர்பு

கொள்ளலாம் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன்.
இது தவிர இப்போதெல்லாம் எங்களுக்கு எதிராக ஏராளமானவர்கள் இது போல் இணைய வலைதளங்களில் கிண்டி கெழங்கு

எடுப்பதாக தகவல்கள் வருகிறது.எனவே வரும் காலத்தில் அட்டாக் பாண்டி போல் உண்மையான தமிழ் இளைஞர்களை நமது

கழக அணியின் போர்படையில் இணைத்து தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் இந்த இனிய புத்தாண்டு நாளில் கசப்பான

செய்தியாக வேறுவழியில்லாமல் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவண்
என்றும் தமிழ் மக்கள் மாக்கான்களாகவே இருக்க விரும்பும்
மு.க என்ற முதலும் கடைசியுமான உண்மை தமிழன்????.

Mani-bahrain said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சாமகோடங்கி said...

இப்போதெல்லாம் எங்களுக்கு எதிராக ஏராளமானவர்கள் இது போல் இணைய வலைதளங்களில் கிண்டி கெழங்கு எடுப்பதாக தகவல்கள் வருகிறது.எனவே வரும் காலத்தில் அட்டாக் பாண்டி போல் உண்மையான தமிழ் இளைஞர்களை நமது கழக அணியின் போர்படையில் இணைத்து தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் இந்த இனிய புத்தாண்டு நாளில் கசப்பான செய்தியாக வேறுவழியில்லாமல் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவண்
என்றும் தமிழ் மக்கள் மாக்கான்களாகவே இருக்க விரும்பும்
மு.க என்ற முதலும் கடைசியுமான உண்மை தமிழன்????.

அஞ்சா நஞ்சன் said...

அடப்பாவமே! ஏப்ரல் 1 க்கு இ.வ. விளையாண்டதை புரிஞ்சுக்காமே இத்தனை பேர் கொளம்பி போயிட்டாங்களே!

Anonymous said...

Ada paavi IdlyVadai, Ippadi engalai April Fool pannitiye...nee Ooosamal indupol endum vazha Tamil Puthandu Vazhthukkal. KS

ILA said...

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

வலைஞன் said...

//வலைஞன்

அப்படியே என்ன பரிசு வேணும்னு லேசா கோடி காட்ட வேண்டியதுதானே??

4 தொகுதி

40 கோடி, ஒகேவா??//

Dear Gopi,

அப்படியே ஆறு தொகுதி,அறுபது கோடி ஆக்கிவிட்டீர்கள் என்றல்,தீபாவளியை மாசி மதம் மாற்றினாலும் ஆதரிப்போம்!

வலைஞன்

லவ்டேல் மேடி said...

என்ன இட்லி வடையாரே........!! பதிவே இல்ல.....!! உள்ள தல்லீட்டாங்களா...!!! ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!

IdlyVadai said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துசொன்ன நண்பர்களுக்கு நன்றி.

//என்ன இட்லி வடையாரே........!! பதிவே இல்ல.....!! உள்ள தல்லீட்டாங்களா...!!! ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!//

சித்திரை திருநாளுக்கு தமிழக அரசு விடுமுறை விடாமல் இருக்கலாம் ஆனால் எங்க அலுவலகம் நேற்று விடுமுறை ( அம்பேத்கார் பிறந்த நாள் )

மானஸ்தன் said...

///சித்திரை திருநாளுக்கு தமிழக அரசு விடுமுறை விடாமல் இருக்கலாம் ஆனால் எங்க அலுவலகம் நேற்று விடுமுறை ( அம்பேத்கார் பிறந்த நாள் )///

ஒரு சின்ன சந்தேகம்.
நீங்க ஆபிசில் இருந்துதான் எழுதுவீங்களா? உங்க வேலைக்கு நடுவுல எழுதறீங்களா? இல்ல எழுதறதுதான் உங்க வேலையா? சொல்லுங்க அண்ணா!!

Erode Nagaraj... said...

Krish, வலைஞன், கொடும்பாவி, Srini, Sundararajan, யோசிப்பவர், நாகை சிவா, Mani-பஹ்ரைன்... எல்லோரும் ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோங்க... வாழ்த்துக்கள் இல்லை, வாழ்த்துகள் தான். ஆடு- ஆடுகள் / வடை-வடைகள் போல.