பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 10, 2009

பத்ரி எங்கே இருந்தாலும் உடனே நடிகர் ராமராஜனை சந்தியுங்கள்

முதலில் நண்பர், சக பதிவர் லக்கிலுக்கு வாழ்த்துக்கள். 'விஜயகாந்த்' பற்றி புத்தகம் எழுதியுள்ளார். இது அவருடைய இரண்டாவது புத்தகம்.

ஒரு வருடத்துக்கு முன்பு விஜயகாந்த் பற்றி லக்கி புத்தகம் எழுத போகிறார் என்று சொல்லியிருந்தால் எல்லோரும் சிரித்திருப்பார்கள். ஆனால் தற்போது கூட்டணி மற்றம் போல பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. புத்தகத்தின் அட்டை படத்தை கிளிக் செய்தால் விவரம்.

சரி பத்ரி எதற்கு நடிக்ர் ராமராஜனை சந்திக்கணும் ? பதில் கீழே...

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி அதிமுக சார்பில், தேர்தல் பிரச்சார கூட்டம் வண்ணாரப்பேட்டையின் நடந்தது. அதில் ராம்ராஜன் விஜயகாந்தை பற்றி பல விஷயங்கள் பேசியுள்ளார் அதில் ஒரு விஷயம்

"ஜெயலலிதாவை பற்றி விஜயகாந்த் தொடர்ந்து பேசினால், அவரது அந்தரங்கத்தை புத்தகமாக எழுதி வெளியிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.


பத்ரி ( அல்லது பிரசன்னா )உடனே நடிகர் ராமராஜனை தொடர்பு கொண்டால் தமிழக மக்களுக்கு இன்னொரு விஜயகாந்த் புத்தகம் கிடைக்கும். எவ்வளவு நாட்களுக்கு தான் ஓபாமா புத்தகத்தையே படித்துக்கொண்டிருப்பது ?


14 Comments:

Anonymous said...

இட்லி வடையாரே!
உங்களுக்கு திரு பிரசன்னா மற்றும் திரு பத்ரி மேல் எதாவது கோபம் இருந்தால் அவர்களை நேரில் "சந்தித்து ரெண்டு அடி" அடித்துவிடுங்கள்!

இவரும் கருப்பு, அவரும் கருப்பு என்கிற ஒரே காரணத்திற்காக நீங்கள் இந்தப் புத்தகத்தை உங்கள் நண்பர்கள் மேலே "force" செய்வது கண்டிப்பா கண்டனத்திற்குரியது! :-D :-)

இதுக்கு பதிலா நீங்க அவங்களுக்கு ஒங்க ஸ்டைல்-ல "விடாது கருப்பு" original DVD அனுப்பி வையுங்க!! புண்ணியமாக போகும்! :-D :-)

Baski said...

Thanks,
Atleast you compared Vijaykanth with Obama. And not with some non-sense.

I was a fan of Vijayakanth., not for his cinema stunts. But for his political stand. I am impressed with his actions sofar.

I am sure DMK/ADMK will see a major impact.

Anonymous said...

லக்கியின் வர இருக்கும் புத்தகங்கள்.


சிம்பு

தனுஷ்.

கிழக்கு மேற்கு நோக்கி நகருகிறது... AYYO PAAVAM...

Anonymous said...

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி புதிய தேர்தல் கமிஷனராக நியமனம்


தலைமை தேர்தல் கமிஷனராக, என்.கோபாலசாமி தற்போது பதவி வகித்து வருகிறார். நவீன்சாவ்லா, எஸ்.ஒய்.குரேஷி இருவரும் தேர்தல் கமிஷனர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபாலசாமி, வருகிற 20-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக மூத்த கமிஷரான நவீன்சாவ்லா, வருகிற 21-ந்தேதி அன்று புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பதவி உயர்வு பெறுகிறார்.


இதனால், காலியாகும் தேர்தல் கமிஷனர் பொறுப்புக்கு, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.எஸ்.சம்பத் நியமிக்கப்படுகிறார்.


தமிழ்நாட்டை சேர்ந்தவரான 59 வயது சம்பத், ஆந்திர மாநில பட்டியலை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவராவார். அடுத்த ஜனவரி மாதத்தில் 60 வயதாகும் இவர், 65 வயது வரை தேர்தல் கமிஷனராக பதவி வகிப்பார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை செயலாளராக இருந்த சம்பத், கடந்த ஜனவரி மாதத்தில் மின்சார துறை செயலாளராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.

சுட்டி குரங்கு said...

நாங்களும் நளினி கிட்ட கேட்டு ராமராஜன் அந்தரங்கத்தை புத்தகமாக எழுதி வெளியிடுவோம்ல :-)

லக்கிலுக் said...

அடுத்ததாக ராமராஜன் பற்றி புத்தகம் எழுத உத்தேசித்திருக்கிறேன் :-)

லக்கிலுக் said...

வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். புத்தகத்துக்கு நிறைய இன்புட் கொடுத்ததற்கும் நன்றி!

R.Gopi said...

//"ஜெயலலிதாவை பற்றி விஜயகாந்த் தொடர்ந்து பேசினால், அவரது அந்தரங்கத்தை புத்தகமாக எழுதி வெளியிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.//

***********

எழுத்தாளர் ராமராஜன் - ஐயோ, தமிழ்நாட்டுக்கு இன்னொரு எழுத்தாளரா??

அப்போ, பால் சொம்பு, மீனாச்சி, மூக்கணாங்கயிறு, பட்டாப்பட்டி டவுசரு .....!!! இனிமே பாக்க முடியாதா??

அய்யகோ, என்னே தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை??

Anonymous said...

விஜயசாந்தி,ரோஜா,ஜெயப்ரதா,ரம்பா போன்ற அரசியல்வாதிகளைப் பற்றி கிழக்கு நூற்களை வெளியிடும்.

k said...

Idly,

Can you publish this article from IE

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Rahul+Gandhi,+spin+doctor&artid=7/Ycr41wlSU=&SectionID=d16Fdk4iJhE=&MainSectionID=d16Fdk4iJhE=&SEO=A+P+J+Abdul+Kalam,+Mohd+Azam+Khan,+Mulayam+Singh+Y&SectionName=aVlZZy44Xq0bJKAA84nwcg==

மாயவரத்தான்.... said...

பரபரப்பு பதிப்பகத்தின் அடுத்த புத்தகம் ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாறாமே?!

http://twitter.com/mayavarathaan

Anonymous said...

Thamizhvannan publications has already published a book on Vijayakanth. For how long they will do this down load,
cut and paste style writing-publishing.

Erode Nagaraj... said...

சபாஷ்...சரியான போட்டி... பசுநேசன்-பிரேமநேசன் நல்ல combination.

I would like to share something very interesting, happened in one wedding concert that we presented. That was a marriage of some ass-director. (சிரிக்காதீங்கபா.. அஜிஸ்டெண்டு தான், சுர்க்கமா சொன்னேன்).

After main song and my thani Avarthanam was over, the singer asked me, what to sing as a lighter piece. I suggested "காக்கை சிறகினிலே". She started singing and the guy entered the hall was none but, premanEs, that too when she was singing, "உந்தன் கருமை நிறம் தோன்றுதடா"

He came to the dias, keeping his shouders and hands very rigid, just like sivaji ganesan takes any karpoora haarathi!

After reaching back home he would have bothered to imitate the ONAn of his vEshti and would have said, "நானும், எவ்ளோ நேரந்தான், தொந்தி இல்லாதமாதிறியே... தம் கட்டி நிக்கறது" :)

லவ்டேல் மேடி said...

அட .... அப்போ... சீக்கிரமாவே ஒரு நல்ல அந்தரங்க புத்தக வெளியீட்டு விழா நடக்கப் போவுதுன்னு சொல்லுங்கோ தம்பி.....!!!