பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 09, 2009

திருப்பதி ஏழுமலையான் - தேர்தல் பார்வையாளர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபால்சாமி சாமி தரிசனம் செய்தார். தேர்தல் சுமூகமாக நடைபெற பிரார்த்தனை செய்ததாக அவர் நிருபர்களிடம் கூறினார்.


தேர்தல் முடிந்த பின் பில்லியன் மக்கள் மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

15 Comments:

Anonymous said...

you should have said, billion people would be tonsured after the election.

நாகு (Nagu) said...

அரசியல்வாதிகள் பில்லியன் மக்களுக்கு மொட்டையடித்து மக்களிடமே காணிக்கை வாங்கி தங்கள் உண்டியலில் போட்டுக் கொள்வார்கள்.

Arumugaraj said...

//திருப்பதி ஏழுமலையான் - தேர்தலை பார்வையாளர் //

தலைப்பு தவறாக உள்ளது .. திருத்தவும்

ஆளவந்தான் said...

ஹஹஹ.. அனானி ஏற்கனவே சொல்லிட்டார்.
/
தேர்தல் முடிந்த பின் பில்லியன் மக்கள் மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.
//
மொட்டை அடிக்கப்பட்டு என்று வரவேண்டும் :)

neysamy said...

தேர்தல் கமிஷன் லொள்ளு தாங்க முடியல.நெய்வேலில தேர்தல் முடியறவரைக்கும் சம்பளம் ( புது) மற்றும் பதவி உயர்வும் கூடாது என்று தடையாம். முன்னமேயா வரவேண்டியது ஆறு மாதமாக இழுதடிச்சு இப்ப முடியர சமயத்துல முட்டுக்கட்டை நரேஷ் குப்தா போட்டுவிட்டார். நெய்வேலி ஒரு லக்ஷம் வோட்டும் நரேஷ் குப்தா மற்றும் தேர்தல் கமிஷன் எதிர்ப்புதான். இந்த இலங்கை புலி போராட்டகாரங்களை கொஞ்சம் தேர்தல் வர அடக்கினலேயே புணணியம் கிடைக்கும் .

kalaikovan said...

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல்: ஜெ., அறிவிப்பு

சென்னை: அ.தி.மு்.க., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

நெல்லை- கே.அண்ணாமலை; தேனி- தங்க தமிழ்ச் செல்வன்; சேலம்- செம்மலை; பெரம்பலூர்- மருதை ராஜ்; திருச்சி- குமார்; தூத்துக்குடி- சிந்தியா பாண்டியன்; ஆரணி- முக்கூர் சுப்ரமணியன்; கரூர்- தம்பிதுரை; மயிலாடுதுறை- ஓ.எஸ்.மணியன்; பொள்ளாச்சி- சுகுமார்; திருப்பூர்- சிவசாமி; வேலூர்- வாசு; திண்டுக்கல்- பாலசுப்ரமணியன்; காஞ்சிபுரம்- ராமகிருஷ்‌ணன்; கிருஷ்ணகிரி- நஞ்சே கவுடு; சிவகங்கை- ராஜ கண்ணப்பன்; விழுப்புரம்- முருகன்; மத்திய சென்னை- எஸ்.எஸ்.சந்திரன்; கடலூர்- சம்பத்; நாமக்கல்- வைரம் தமிழரசி; தென்சென்னை- ராஜேந்திரன்

//கடலூர்- சம்பத்; //

Anonymous said...

'தேர்தல் சுமூகமாக நடைபெற பிரார்த்தனை செய்ததாக '

மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து வீரமணி
ஆர்ப்பாட்டம் அறிவிப்பார் :).

லவ்டேல் மேடி said...

ஒருவேள தேர்தல் கோபால் சாமி அரசியல் வியாதிங்க தேர்தலுக்காக குடுத்த ப்பெத்த அமவுன்ட்டுல ஒரு கணிசமான் தொகையை ஏழு மலையானுக்கு செலுத்தியிருப்பாரோ .......??????

R.Gopi said...

//'தேர்தல் சுமூகமாக நடைபெற பிரார்த்தனை செய்ததாக '

மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து வீரமணி
ஆர்ப்பாட்டம் அறிவிப்பார் :).//

***********

ஒன்றே சொன்னீர்கள்
நன்றே சொன்னீர்கள் - அதையும்
இன்றே சொன்னீர்கள்

நான் அவன் இல்லீங்கோ said...

இட்லிவடை லாலு வருணுக்கு எதிராக பேசியதை பற்றி எதுவுமே எழுதாது ஏமாற்றம் அளிக்கிறது.

R.Gopi said...

//நான் அவன் இல்லீங்கோ said...

இட்லிவடை லாலு வருணுக்கு எதிராக பேசியதை பற்றி எதுவுமே எழுதாது ஏமாற்றம் அளிக்கிறது.//

***********

புல்டோசர் ஏத்தி கொன்னுடுவாராம்ல.........

பாத்து பேசுங்க ..... சூதானமா நடந்துக்கோங்க ..... சொல்லிட்டேன்..............

மானஸ்தன் said...

திரு கோபி, திரு நான் அவன் இல்லீங்கோ!
கோச்சுக்காதீங்க. அவர் ஏதோ நம்ம "கரடி" விஜய ராஜேந்தர் மாதிரி எதுகை மோனையா சொல்லி பாத்தார். (வருண் டவுசர்! bull - டவுசர்! அப்டின்னு!)

அவருக்கு நேரம் சரியாய் இல்ல! யாருப்பா அங்க. இந்த ஆளக் கூட்டிண்டு போயி களி போடுங்கப்பா!

R.Gopi said...

//அவருக்கு நேரம் சரியாய் இல்ல! யாருப்பா அங்க. இந்த ஆளக் கூட்டிண்டு போயி களி போடுங்கப்பா!//

**********

போட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் தல.

மானஸ்தன் said...

திரு கோபி.
என் மேல என்ன கோவம் உங்களுக்கு?
"தல"ன்னு சொல்லி என்ன கேவலப்படுத்தாதீங்க!

நாட்டுல ஒரு "தல"தான். அதுவும் நம்ம தி.மு.க. (திருக்குவளை.முத்துவேல்.கருணாநிதி) அவர்கள் மட்டும்தான்! :-) :-D

R.Gopi said...

//மானஸ்தன் said...

திரு கோபி.

என் மேல என்ன கோவம் உங்களுக்கு?
"தல"ன்னு சொல்லி என்ன கேவலப்படுத்தாதீங்க!

நாட்டுல ஒரு "தல"தான். அதுவும் நம்ம தி.மு.க. (திருக்குவளை.முத்துவேல்.கருணாநிதி) அவர்கள் மட்டும்தான்! :-) :-D//

***********

சர்தாம்பா, ரைட்டுப்பா

நம்ம கையில சொல்லிகின இல்ல... இனிமே ஒகே ..........