பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 07, 2009

பெரம்பலூர் தொகுதி யாருக்கு - சரவணன்

பெரம்பலூர் தொகுதிக்கு திமுக சார்பில் நெப்போலியன் தான் நிறுத்தப்படுவார் என்று முன்பே ஊகித்திருந்தேன். ( உங்களிடம் சொல்லாமல் விட்டு விட்டோமே என்றூ இப்போது நான் வருத்தப்படுகிறேன்.). அதே போல் கரூர் தொகுதிக்கு கே.சி.பழனிசாமியே ( மீண்டும் ) நிறுத்தப்படுவார் என்பது எதிர்பார்த்ததுதான். சரி. விஷயத்துக்கு வருவோம்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
1. பெரம்பலூர்
2. லால்குடி
3. துறையூர்
4. மண்ணச்சநல்லூர்
5. முசிறி
6. குளித்தலை

இவற்றில் மூன்றீல் திமுக வேட்பாளருக்கு செல்வாக்கு உள்ளது. வேட்பாளர் நெப்போலியன், அமைச்சர் KNநேருவின் உறவினர். எனவே அவரது தொகுதியான லால்குடியில், இவர் சாதி(ரெட்டியார்) மக்கள் கணிசமான அளவு உள்ள குளித்தலை தொகுதியிலிம், திமுகவிற்கு அதிகம் எதிர்ப்பலை இல்லாத துறையூர் தொகுதியிலும் இவர் அதிக ஓட்டு பெறமுடியும் பெரம்பலூரில் திமுக மீது அதிருப்தியான மனநிலையே காணப்படுகிறது. முசிறி மற்றூம் மண்ணச்சநல்லூரில் அதிமுக வலுப்ப்ற்று உள்ளது. அதிமுகவில் நிறுத்தப்படும் வேட்பாளரைப் பொறுத்தே மேற்கொண்டு கணிக்க முடியும். தற்போதைய தகவல்படி அதிமுகவில் ராஜாராம் அல்லது ராமச்சந்திரன் இவர்களில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம். ஹான்ஸ் ரோவர் கல்லூரி அதிபர் ஜான் அசோக் வரதராஜனும் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒருவேளை கிறிஸ்துவர்கள் கணிசமாக உள்ள திருச்சி தொகுதி கூட கிடைக்கலாம். கிரமங்கள் நிறைந்த இத்தொகுதியில் விஜயகாந்திற்கு மவுசு இருந்தாலும். அவை ஓட்டுகளா மாறுமா என்பது சந்தேகமே. தற்போதைய நிலவரப்படி "நட்சத்திர" வேட்பாளராக உள்ள நெப்போலியனே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் - பெரம்பலூர் தொகுதிக்காக சரவணன்

சரவணனுக்கு பிகு: நீங்க எழுதுவதை ஸ்கிரின் ஷாட்டாக எனக்கு அனுப்பி நான் டைப் அடித்து போட வேண்டியுள்ளது. அடுத்த முறை அனுப்பும் போது ஒரு கோப்பாக, அட்டாச் செய்து அனுப்புங்க நன்றி.

8 Comments:

Anonymous said...

I think neppolean can win the race easyly becase as saravanan mentioned
his community people ara the majarity people in Lalgudi,Thuraiyur,Kulitalai.In Mannachanallur their is no scope for ADMK( i think) because DMK is strong in mannachannalur.ADMK candidate can get Votes at Musiri that too not as much as earlier elections.

R.Gopi said...

சரவணன்

நம்ம இட்லிவடை ரெம்ப பிசிபா........அவர ரெம்ப படுத்தாதீங்க. இன்னா கேக்கராரோ, அப்டியே செஞ்சுடுங்க.... ஓகே...........அது ...........

தூத்துக்குடி தமிழன் said...

இட்லிவடை..., கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க... நீங்க ஏன் டைப் அடிக்க ஒரு நல்ல Typist ( ? ) ஆ வெச்சுக்க கூடாது....? :)

Anonymous said...

@ தூத்துக்குடி தமிழன்

அவர் "typist" வெச்சுண்டாலும் சரியா வராது.
ஏன்னா தமிழ்ல கம்போஸ் பண்ண "தட்டச்சர்" தான் தேவை!

"mokkais" apart, this is a decent first-stage input on perambalur!

திரு சரவணன், உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
போட்டி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன் கொஞ்சம் "detailed analysis" தந்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பாக நம்ம "கேப்டன்" மற்றும் "தமிழ்குடிதாங்கி" இவர்களின் வாக்கு வங்கி/செல்வாக்கு எப்படி உள்ளது என்று கொஞ்சம் அலசவும்.

முடிந்தால் 2004 பாராளுமன்றம் மற்றும் 2006 சட்டப் பேரவை ஓட்டு விவரங்களையும் பதிவு செய்து வைக்கவும்!

லவ்டேல் மேடி said...

ஏற்கனவே சம்பாருச்ச்ச காசுல நெப்போலியன் சாப்ட்வேர் கம்பனி ஆரபிச்சு ஓ..ஹோ ..ன்னு ஓடிகிட்டு இருக்குது........!!!!! தொகுதிக்கு ஒரு மண்ணும் பண்ணல.......!!!

இப்போ அந்த ஆளுக்கு இது வேறயா.........!!!!


கொடும..... கொடுமைன்னு .... கவிரியாத்துக்கு போனா .... நடு ஆத்துல " ______ " டண்டனக்கா ஆடிகிட்டு இருதுச்சாமா...........

நாரத முனி said...

டைபிஸ்ட் பேர் என்ன .. கெட்டி சட்னியா ?

பெரம்பலூர்ல நெப்ஸ் வெற்றி பெறுவது உறுதி, அவரு சொந்த ஊர் லால்குடி... அங்க (மறைந்த) அவர் அப்பா மீது எல்லாருக்கும் ஒரு மரியாதை உண்டு.
அது மட்டும் இல்ல பொதுவா கட்சி வித்யாசம் இல்லாம பழகரவரு நேரு... let us see...

Anonymous said...

இட்லி வடையாரே!
ஒரு விளம்பரம் போட்டுக்கறேன், ஒங்க "permission"னோட!


"இலவச" விளம்பரம்

இட்லி வடைய தொரத்தர எல்லாரும், அப்டியே இந்த "மானஸ்தன்" blogspot-க்கும் தினமும் ஒரு விசிட் அடிங்க! நன்றி.

Anonymous said...

To மனஸ்தான்:

உங்கள் வலைப்பதிவு அப்டி ஒன்னும் நல்ல இல்லை! Improve பண்ணுங்க