பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 03, 2009

விழுப்புரம் மக்களவை தொகுதி அலசல் - தாண்டவக்கோன்

விழுப்புரம்(தனி) தொகுதிக்கான அலசல் - தாண்டவக்கோன்

திண்டிவனம் மக்களவை தொகுதி விழுப்புரமாக மாறியிருக்கிறது அவ்வளவு தான். சில பகுதிகள் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் மற்றும் ஆரணி தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன. But, it does not alter the demographic contour very much.

இந்த தொகுதியில் இம்முன்றும் முக்கிய பங்கு வகிக்கும்:
1. சாதி
2. பணம்
3. கட்சி

I am not sure of the order.

சாதி

வன்னியர்களும் தலித்துகளும் கிட்டத்தட்ட சம அளவு உள்ள தொகுதி. இதுவரை பொதுதொகுதியாக இருந்தது இப்பொழுது தனி தொகுதியாக மாறியிருக்கிறது.

2004 வரை, ஒருமுறை தவிர, வன்னியர்களே இங்கு வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். இதுவரை பெரிய கட்சிகள் அனைத்தும் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்கள். ஆக முதல் மூன்று இடத்தில் வருவதற்கே வன்னியராக இருப்பது மிக அவசியமாக இருந்திருக்கிறது.

வேறு சாதிகள் எதுவும் களத்தில் இல்லை என்பதால் இதுவரை இங்கு பெரும்பான்மையான தலித்துகள் கட்சி பார்த்தே வாக்களித்துள்ளனர். இந்த முறை தனி தொகுதியாக மாறியுள்ளதால் வன்னியர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

ரெட்டியார், அகமுடையார் மற்றும் முதலியார்களும் இங்கு குறுப்பிடும் அளவுக்கு இருக்கிறார்கள். Though they themselves are not in large numbers, being landlords and in most cases holding party positions, they are in most cases the interface between the voters and the candidates.
இதுவரை இங்கு வன்னியர்களான கட்சியான உழவாளர்கள் கட்சி, பின் காங்கிரஸ், திமுக, மதிமுக மற்றும் பாமக வெற்றிப்பெற்று இருக்கிறது. அதிமுக இதுவரை ஜெயித்ததில்லை. பாமக தனியே நின்று 11-20 சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறது(சதவீதம் குறைவதை கவனிக்கவும்). கடைசியாக காங்கிரஸ் தனியே நின்று 4% வாக்குகளை பெற்றது! மதிமுக கூட்டணியாளும் செஞ்சியாரின் தனி ஆளுமையாளும் இங்கு இருமுறை வென்று இருக்கிறது. விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்கு வங்கி இருக்கலாம் ஆனால் இன்னும் பதிவாகவில்லை.

தனியாக நின்று திமுக 44.5% வாக்கு வாங்கியிருக்கிறது; அதிமுக 38% வாங்கியிருக்கிறது. பாமகவிற்கு 10% வாக்குகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதிமுக கூட்டணி 48 சதவீதம் வாக்குகளை பெரும், atleast in paper.

தேர்தல் ஜனநாயகத்தில் ஒரு கட்சிக்கு ground level organization மற்றும் பிற சாதி ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதனை திருமாவளவணுக்கு இந்த தொகுதி உணர்த்தலாம். இரு முறை தோற்ற பிறகு அம்பேத்கருக்கு அது புரிந்தது.

ஒரு ஊரில் 100 தலித்துகள் இருந்தால் 20 தலித்துகள் திமுகவிலும், 20 பேர் அதிமுகவிலும், 3 பேர் பகுஜன், 5 பேர் தேமுதிமுகவிலும், 10 பேர் விடுதலை சிறுத்தைகளிளும் இருக்கிறார்கள். This is the problem for a typical dalit party.

ஒரு தலித் வேட்பாளர் வெறும் தலித் வாக்குகளை வைத்து மட்டும் ஜெயிக்கவே முடியாது. மேலும் பிற சாதி வாக்காளர்களால் ஒரு தலித் வேட்பாளர் is subjected to more critical scrutiny than பிற சாதி வேட்பாளர்கள். ஆக விடுதலை சிறுத்தைகளுக்கு 10% வாக்கு வங்கி மற்றும் திமுகவின் தலித் வாக்குகள் 15% என்று வைத்துக்கொண்டாலும் மீதி வாக்குகளுக்கு அது திமுகவின் மேல் சாதி வாக்குகளையே நம்பியிருக்கிறது.


பணம்

தன் கட்சி வேட்பாளர்களுக்கே திமுக பணம் தராது அந்தந்த வேட்பாளர்களும் மாவட்ட செயலாளர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும். திமுக விடுதலை சிறுத்தைகளுக்கு பண உதவி செய்வது கேள்விக்குறி. இன்னும் வேட்பாளர் அறிவிக்காததுற்கு இது ஒரு காரணம்.

அதிமுக தன் சொந்த கட்சி வேட்பாளர் நிற்பதால் பணம் செலவழிப்பதில் பிரச்சினை இருக்காது.

முடிவு

Writing is clear, unless DMK wishes to repeat a la Thirumangalam in all 40 constituencies. In fact, it might because with the entry of more family members into the game the stakes are too high to be left to voters’ intelligence.

- தாண்டவக்கோன்

21 Comments:

கலைக்கோவன் said...

//அதிமுக தன் சொந்த கட்சி வேட்பாளர் நிற்பதால் பணம் செலவழிப்பதில் பிரச்சினை இருக்காது.//

இது தான் அ.தி.மு.க. வின்
முக்கிய பலம்(கூட்டணி தவிர்த்து)

Anonymous said...

ஒண்ணு தமிழில் எழுதனும், இல்ல இங்கிலீசில் எழுதனும், அது என்ன அழகான படத்தில கீறல் விழுந்த மாதிரி அங்க அங்க இங்கிலீசு?

மஞ்சள் ஜட்டி said...

அனானி,
தமிழ் புரியலேன்னா நாக்க மு.க கிட்ட அர்த்தம் கேளு..விரிவா கவிதையாவே சொல்லுவாரு..
இங்கிலீஷ் புரியலேன்னா புங்காத்தா கோயில்ல சூரதேங்கா உடைப்பாங்க, போயி அதுல ரெண்டு தேங்கா பத்தை எடுத்து சாப்பிடு, அப்பாலே தானா இங்கிலீஷ் அர்த்தம் புரியும்...
---------------------------------------------------
வேல மெனக்கெட்டு ஒருத்தர் தகவல் சேகரிச்சி குடுக்குறாரு, அத்த நீ கமெண்டு அடிச்சி கெடுக்குரியா??

இந்த அனானி கமெண்ட்டை மட்டுறுத்தின இட்லிவடையை கண்டிக்கிறேன்..பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற செயல் இது.. ஏன் இந்த வேலை??

IdlyVadai said...

//இந்த அனானி கமெண்ட்டை மட்டுறுத்தின இட்லிவடையை கண்டிக்கிறேன்..பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற செயல் இது.. ஏன் இந்த வேலை??//

அவர் அவர் தங்கள் கருத்துக்களை சொல்லுகிறார்கள். அதை நான் வெளியிடுகிறேன், இதில் தப்பு இல்லை. வரும் எல்லா கமெண்ட்ஸும் என் கருத்து என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் ?

கொடும்பாவி-Kodumpavi said...

R.Gopi ச்சும்மா தாளிக்கிறாருப்பா.. இட்லி வடையவே பின்னுக்கு தள்ளிட்டாரு ‘ அதிகம் திட்டுபவர்கள் ‘ பகுதியில். அடக்கம்னு அடங்கிடாதீங்க தல.. அட உம்மதான் சொல்றேன் இனா வானா.

மாலன் said...

பலமுனைப் போட்டியில் 48 சத்வீத வாக்கு என்றால் அது மிகப் பெரிய வெற்றியாக (landslide) வெற்றியாக அமையும். தனித் தொகுதி என்பதால் தலித் வேட்பாளர்கள்தான் போட்டியிட முடியும்.அதனால் தலித் வாக்குகள் பிரியும். அந்தத் தொகுதிகளில் மற்ற சாதியினரின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் வாக்குகளாக அமையும். நீங்கள் இந்த தொகுதியில் வன்னியர்கள் கணிசமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். வன்னியர்கள் பாம்க, திமுக, அதிமுக என எல்லாக்கட்சிகளிலும் இருக்கிறார்கள். அதில் இரண்டு கட்சியினர் ஒரு அணியில் நிற்கும் போது அந்த அணியின் பலம் கூடுகிறது. அந்த வகையில் அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது
நல்ல கணிப்பு. வாழ்த்துக்கள்
மாலன்

IdlyVadai said...

மாலன்,

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்து நிச்சயம் தேர்தல் டீமை உற்சாகப்படுத்தும்.

அன்புடன்,
இட்லிவடை

Thandavakone said...

திரு மாலன் அவர்களுக்கு,

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

தாண்டவக்கோன்

மஞ்சள் ஜட்டி said...

//அவர் அவர் தங்கள் கருத்துக்களை சொல்லுகிறார்கள். அதை நான் வெளியிடுகிறேன், இதில் தப்பு இல்லை. வரும் எல்லா கமெண்ட்ஸும் என் கருத்து என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் ?//

அதெல்லாம் ஒரு கமெண்ட்டா ?? ஏன் நீங்க சரியா மட்டுறுத்தல.. யார் வேணாலும் எப்படி வேணாலும் கமெண்ட் அடிக்கலாம்..அதுக்காக கஷ்டப்பட்டு ஒருத்தர் எழ்துவாரு, அனானி ரூபத்துல அவர De-Motivate பண்ணுற மாதிரி சப்பை கமெண்ட் வந்தாலும், நீங்க அப்ரூவ் பண்ணி பிரசுரிச்சிடுவீங்க?? என்ன ஒரு மரியாதை நீங்க குடுக்கிறது..அந்த கட்டுரையை எழ்தினவருக்கு??

R.Gopi said...

கொடும்பாவி-Kodumpavi said...
R.Gopi ச்சும்மா தாளிக்கிறாருப்பா.. இட்லி வடையவே பின்னுக்கு தள்ளிட்டாரு ‘ அதிகம் திட்டுபவர்கள் ‘ பகுதியில். அடக்கம்னு அடங்கிடாதீங்க தல.. அட உம்மதான் சொல்றேன் இனா வானா.

************

"கொடும்பாவி" யோட நுண்ணரசியல் வெளையாட்டுல மொத பலி நானா??

"தல" உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?? நான் பாட்டுக்கு ஏதோ தனியாதானே போயிட்டு இருக்கேன்.........

Rohajet said...

excellent thandavekone

vck mainly depands on the support of ponmudi and pushparaj,DMK M.L.A-kandamangalam(reserved). Another setback for v c k is contesting in indepentend symbol, which is not popular. so as of now ADMK has upper hand. lets wait for the name of canditates and decide.

கிரி said...

//"கொடும்பாவி" யோட நுண்ணரசியல் வெளையாட்டுல மொத பலி நானா??//

:-))))))

mani said...

//அதெல்லாம் ஒரு கமெண்ட்டா ?? ஏன் நீங்க சரியா மட்டுறுத்தல.. யார் வேணாலும் எப்படி வேணாலும் கமெண்ட் அடிக்கலாம்..அதுக்காக கஷ்டப்பட்டு ஒருத்தர் எழ்துவாரு, அனானி ரூபத்துல அவர De-Motivate பண்ணுற மாதிரி சப்பை கமெண்ட் வந்தாலும், நீங்க அப்ரூவ் பண்ணி பிரசுரிச்சிடுவீங்க?? என்ன ஒரு மரியாதை நீங்க குடுக்கிறது..அந்த கட்டுரையை எழ்தினவருக்கு??
hallo manja-jatti, there is nothing wrong in anony's comment. we should write either in tamil or in english. why should we mix both ? just for showing?

IdlyVadai said...

//hallo manja-jatti, there is nothing wrong in anony's comment. we should write either in tamil or in english. why should we mix both ? just for showing?//

யார் எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம். மக்களுக்கு புரிய வேண்டும் அவ்வளவு தான். மற்றபடி இந்த விஷயத்தை இத்தோடு விடுங்க நண்பர்களே.
Thanks for your understanding

கொடும்பாவி-Kodumpavi said...

R.Gopi.. இது தேர்தல் நேரம் நான் சொன்னதெல்லாம் choiceல வுடுங்க. நுண்ணரசியல் எல்லாம் தெரியாது. ச்சும்மா சிண்டு முடிச்சு வைக்கதான் தெரியும் (?!) இட்லி வடையாரை லுல்லாயிக்கு உசுப்பேத்தி விட்டேன்.

இதபெடி இர்கு..?

மடல்காரன்_MadalKaran said...

பாடிகாட் முனி எத்தனை அரசியல் தலைவர்களுக்கு பிரமுகர்களுக்கு ‘பாடிகாட்'ஆக சென்றுள்ளார்? 20feb09 அப்புறம் ஒரு கடுதாசி உண்டா? ரொம்ப வேலையா? இல்ல இங்க நடக்குற 'அரசியல்' காட்சிகளைப்பார்த்து நொந்து போய்டாரா? இட்லி வடை முடிஞ்சா கொஞ்சம் குறி கேட்டு சொல்லுங்க. இதுக்கெல்லாம் Recession காரணம் சொல்லாதீங்க. முனிக்கு பணி செய்யறவர் நீங்க. அவர் 'அருளால்'தான் நீங்க இப்ப தொடங்கி இருக்கற பணிய செம்மையா செய்ய முடியுது. 'காக்கா கிஸ்' போன்ற ஊள் குத்துடன் இருக்கும் மொக்கைய தவித்துட்டு விளம்பரத்திற்கு நடுவில் வரும் சீரியல் போல பதிவிடுங்க.
அன்புடன், கி.பாலு.

Anonymous said...

என்ன சொன்னாலும் நம்ம "இட்லி வடையார்" ரொம்ப "diplomatic". அதே நேரத்துல குடுக்க வேண்டிய மெசேஜ்-ஐ "ஊசில வாழைபழம் ஏத்தற" மாதிரி சொல்லிடுவார்!

இப்ப கூட பாருங்க, ஒரு "segment" தமிழ்-ல, ரெண்டாவது பாதி "இங்கிலீஷ்"-ல!!

அய்யா, நீங்க ஒரு நல்ல வழிகாட்டி!! :-)


பின் குறிப்பு!
எல்லாம் சரிதான்! எங்க போனீங்க? ஒரு நாள் பூரா ஆளையே காணும்?

Prabhu Swaminathan said...

Nice observation by the author of this article. And I don't think there is anything wrong in writing in english.

Also Idlyvadai sir i think it is right time to start a poll for all 40 constitution as well as national level poll so that we can know the mindset of public and judge the outcome of the election

R.Gopi said...

//கொடும்பாவி-Kodumpavi said...

R.Gopi.. இது தேர்தல் நேரம் நான் சொன்னதெல்லாம் choiceல வுடுங்க. நுண்ணரசியல் எல்லாம் தெரியாது. ச்சும்மா சிண்டு முடிச்சு வைக்கதான் தெரியும் (?!) இட்லி வடையாரை லுல்லாயிக்கு உசுப்பேத்தி விட்டேன்.

இதபெடி இர்கு..?//

****************

லுல்லுல்லாயிக்கு உசுப்பேத்தறதா??

ஹலோ, இது நம்ம "தல" ஸ்டைல் ஆச்சே!!!

என்னவோ போங்க, உங்க வெளையாட்ட தொடர்ந்து நடத்துங்க.

நானும் அவ்ளோல்லாம் டென்சன் ஆகல சார். நன்றி தல .......

லவ்டேல் மேடி said...

ஏனுங்கோ தம்பி ......!! சித்த எங்கூரு ஈரோட்ட பத்தியும் ஏதாவது இதுமாதிரி எழுதுங்கோ தம்பி.......!!!

Anonymous said...

அண்ணாச்சி!
இப்போதான் பாத்தேன். விழுப்புரம் தொகுதி அலசலுக்குப் பிறகு ரிசல்ட் போடலைன்னு..
தேர்தல் நாள் நெருங்கிட்டே வருது!!
மொதல்ல கொடியப் போடுங்க ராசா!!


அப்டியே சிவகங்கை, சிதம்பரம், விருதுநகர் பத்தி எழுதி ரிசல்ட் போடுங்க.