பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 01, 2009

தாடியும் சுப்ரீம் கோர்ட்டும்

இரண்டு நாட்களாக வரும் இந்த செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் முழுமையாக வரவில்லை.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள நிர்மலா கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர், முகமது சலீம். பள்ளிக்கூடத்திற்கு தாடியுடன் வந்ததால் இது பள்ளி விதிமுறைக்கு எதிரானது என்று கூறி பள்ளி முதல்வர், இவரை வெளியேற்றி விட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சலீம், ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

"இந்திய அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு மத உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. எனவே மாணவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டது விதியை மீறியது ஆகும்" என்று வாதிட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்த வழக்கை விசாரித்து இவ்வாறு சொல்லியுள்ளார். அதை அப்படியே அங்கிலத்தில் தந்துள்ளேன். ( தமிழாக்கம் செய்யவில்லை )

"I am secularist. We should strike a balance between rights and personal beliefs. We cannot overstretch secularism. We don’t want to have Talibans in the country. Tomorrow a girl student may come and say that she wants to wear a burqa. Can we allow it"


என்றும் அவர் கூறினார்.

இதற்கு வழக்கறிஞர் கான்(முஸ்லீம்) "beard was an indispensable part of Islam" என்று வாதிட, நீதிபதி உங்களை பார்த்தால்(மழுங்க ஷேவ் செய்திருந்தார்) அப்படி தெரியவில்லையே என்று பதில் அளித்துள்ளார்.

சீக்கியர்கள் தாடி மற்றும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, எங்களை மட்டும் தாடியை ஷேவ் செய்ய நிர்பந்திப்பது ஏன் என்ற வாதம் எடுபடவில்லை. ( Last year, the Punjab and Haryana High Court turned down a plea by a Muslim Indian air force serviceman for the right to grow a beard. In a letter to the court the IAF had said only Sikhs were allowed to grow beards in the air force and Muslims were forbidden since the “practice” is “not universally recognised in Islam” as a religious duty. )

இன்று பல முஸ்லீம் அமைப்புக்கள் நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

"Such biased minds are not fit to dispense justice which must be neutral and fair. If this logic is true then all similar manifestations by believers in other religions should be banned like turban and kirpan for Sikhs, qashqa and choti for Hindus and wearing of crosses by Christians."
- The All India Muslim Majlis-e Mushawarat

"few would agree with Mr Katju’s view that every Muslim who keeps a beard supports the Taliban or extremism. “Several non-Muslims also sport beards. The beard is not a sign of orthodoxy, extremism or fanaticism. The remark of Justice Katju, hinting that all bearded men are Talibans, is absolutely unjustified and discriminatory"
- Mumbai based journalist Hasan Kamaal

"This is a shocking remark and has hurt the sentiments of community members. We are planning to file a plea against the verdict,''
- Rajya Sabha MP and Jamiatul Ulema-e-Hind leader

நீதிபதியின் இந்த கருத்துக்கள் தேவையில்லாதது. தாடி வைத்த முஸ்லீம்கள் எல்லோரும் தாலிபான்கள் என்று பொருள்படும்படி சொல்லியிருக்க கூடாது.

பிகு: இப்ப என்ன நடக்கும் ?

Shah Bano கேஸ் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல் இங்கே நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. முஸ்லீம்கள் நாளை ஊர்வலம், கண்டனம் என்று நடத்தினால் மன்மோகன் மற்றும் சோனியா உடனே முஸ்லீம்கள் தாடி வளர்க்க என்று தனி சட்டம் கொண்டுவருவார்கள். ஆஸ்திரேலியா
பிரதமர் போல "live by the law of the land and not their own" என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் கிடையாது.

Shah Banoo கேஸ் பற்றி தெரியாதவர்கள் அதை தெரிந்துக்கொள்ள கீழே கொடுத்துள்ளேன். ( நன்றி wiki )

Shah Bano, a 62 year old Muslim woman and mother of five from Indore, Madhya Pradesh, was divorced by her husband in 1978. The Muslim family law (marriage, gifts, inheritance, adoption and a few other civil laws are under the purview of personal laws in India - they are different for Christians, Muslims and Hindus) allows the husband to do this without his wife's consent: the husband just needs to say the word Talaq (meaning divorce) before witnesses for a valid divorce. There are different classifications on Talaq. There are also different aspects as well as other norms of Talaq which differ from sect to sect in Islam.

Shah Bano, because she had no means to support herself and her children, approached the courts for securing maintenance from her husband. When the case reached the Supreme Court of India, seven years had elapsed. The Supreme Court invoked Section 125 of Code of Criminal Procedure, which applies to everyone regardless of caste, creed, or religion. It ruled that Shah Bano be given maintenance money, similar to alimony.

The orthodox Muslims in India felt threatened by what they perceived as an encroachment of the Muslim Personal Law, and protested loudly at the judgement. Their spokesmen were Muslim community leaders Obaidullah Khan Azmi, MJ Akbar and Syed Shahabuddin. They formed an organization known as the All India Muslim Personal Law Board and threatened to agitate in large numbers in all major cities. The then Prime Minister, Rajiv Gandhi, agreed to their demands and cited the gesture as an example of "secularism".

சட்டம் எல்லோருக்கும் பொது. முஸ்லீம்களுக்கு என்று தனியாக சட்டம் எல்லாம் தேவையில்லாதது. தேவை என்று சொல்லுபவர்கள் தாலிபானோ, பாகிஸ்தானோ போகலாம். அவர்கள் விருப்பம்.

44 Comments:

chutneysambhar said...

வெகு விரைவில் இந்த பிரச்னை பூதமாக வெடிக்கும் .
இதனால் அந்த நீதி பதியின் பதவியும் பறிக்க வாய்ப்பு உண்டு .
இஸ்லாமிய சமூகத்தின் வோட்டை பறிக்க அனைத்து மத சார்பற்ற கட்சிகளும் போட்டி போடும்

Krish said...

தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருவத்தில் என்ன தவறு என்று தெரியவில்லை. சீக்கியர்கள் எல்லாம் தலைப்பாகையோடு தான் பள்ளிக்கு செல்கிறார்கள்; இந்தியாவில் மட்டும் அல்ல, அமெரிக்க, ஐரோப....etc.
இந்துக்களில் பலர் நாமம், விபூதி பட்டை இட்டுக் கொண்டு தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை தடுத்தால் அவ்ளோதான். பள்ளியையே நொறுக்கி விடுவார்கள்.

தாடி வைத்துக்கொள்; தொழுகை பண்ணு என்று கட்டாயபடுத்துவது தலிபான் என்றால், இப்படி கட்டாயப்படுத்தி தாடியை எடு, குல்லா போடாதே என்று சொல்வதும் தலிபநிசம் தான்.

SANKAR said...

பீஜேபீயீல் பல முஸ்லிம்கள் பதவியில் இருக்கிறார்கள்
மூஸ்லிம் லீக்கில் யாராவது இந்துக்கள் உருப்பினராகவாவது இருக்கிறார்களா?

சங்கர் நெல்லை

R Gopinathan said...

உங்கள் identity யை வெளிக்காட்டாமல் இருப்பதால் தப்பித்தீர்கள். இல்லையென்றால் இந்நேரம் உங்கள் வீடு புகுந்து உங்கள் வீட்டு வடை சட்டியிலேயே உங்களை இந்நேரம் வறுத்திருப்பார்கள். இருந்தாலும் கடைசியில் உள்ள அந்த மஞ்சள் highlight போட்ட கமெண்டை பதிவில் போடக் கூட ஒரு தைர்யம் வேண்டுமே. அதுக்காகவே இட்லி வடைக்கு ஒரு சபாஷ்.

Naanthan said...

The judge should've not mentioned that all those who sport beard as Taliban. But definitely there is gonna be a law in support of the muslims, thanks to our so called "Secular parties". Now in our country supporting Hindus means religious but supporting all other religions has become Secular. Take this Varun gandhi episode itself for example, he never said tat he'll cut Muslims or Christians hands but he said simply he'll cutoff the hand which threatens Hindus. For that NSA?? but those who attack the parliament and sentenced to death are simply enjoying. If this goes on i fear Hindus will be wiped off totally in 100 yrs. God only should save us. I have many muslims and christians as friends and we never felt tat we belong to some specific religion, we're just good friends. The problems start only due to these useless politicians who have no issues to discuss other than divide people by religion.

Anonymous said...

We are yet to have a uniform civil law, which is always part of BJP's Agenda. Until we have a Uniform Civil law we have to face these issues.

Anonymous said...

தலைமை தேர்தல் ஆணையர் பதவி மதச்சார்பற்றது.
ஆகவே, கோபால்சாமி தன் நெற்றியில் நாமம் போட்டுக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுகிறேன் என்று ஒரு நீதிபதி சொன்னால் இந்த இந்துத்துவவடைகள் ஒத்துக்கொள்ளுமா?

Anonymous said...

that school is a minority institution. they framed that rule.so why blame the court.
it is a christian institution.
let the muslims and christians
sit together and decide.

இருமேனிமுபாரக் said...

சகோதரர் சங்கர் நெல்லை அவர்களே! எந்த தொடர்பும் இல்லாத மறுமொழி ஒன்றை இங்கே தாங்கள் அளித்திரு்க்கிறீர்கள்... என்றாலும் அதற்கான பதில்: பதவிக்காகவும்,வெறுமனே பெயர் தாங்கி முஸ்லிம்களாக உள்ளவர்களையும்,மாற்று மதப்பெண்களை திருமணம் முடித்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிலரை வைத்துக்கொண்டு பிஜேபி தன்னை ஒரு மத சார்பற்ற கட்சியாக காண்பித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் லீக்கிற்கு அப்படிப் படம் காண்பிப்பதற்கு அவசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது? இந்த இடுகையின் கருத்து வேறு எதையோ பேசுகிறது. நீங்கள் வேறு ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சியை இங்கே காண்பிக்கிறீர்கள். நல்லா இருங்கோ....

Sridhar Narayanan said...
This comment has been removed by the author.
மானஸ்தன் said...

இட்லி வடைக்கு நன்றிகள் பல for posting this news item.

ஐகோர்ட்டில் இதை தள்ளுபடி செய்ததே தவறு என்பது என் தாழ்மையான கருத்து. (நான் முஸ்லிம் அல்ல!)...

அந்த மாணவர் தாடி வைத்து "religion" காரணமாகவா இல்லையா என்பது தேவையற்ற விவாதம். மேலும் நீதிபதியின் விமர்சனம்/கருத்து தவறானது (that "Tomorrow a girl student may come and say that she wants to wear a burqa. Can we allow it")...

திரு krish சொல்வதைப்போல் நம்மில் (இந்துக்களில்) பலரும் விபூதி, குங்குமம், நாமம் வைத்துக்கொள்கிறோம். there was a similar issue in a "Christian" school in madras!!

தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படவேண்டும். (as long as they don't cause any major issues in the system)...

கடைசியாக, இட்லி வடையின் "highlighted" comment in the end is "very appropriate".
இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகள் களையப்படவேண்டும் and சட்டம் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்!


பின் குறிப்பு!
நம்ம "சத்யம்" ஊழல் நாயகர்-கு ஜெயிலில் சமைத்து சாப்பிட அனுமதியாம். தினமும் 6 வேளையும் நன்றாக சமைத்து சாப்பிடுகிறாராம்!! கோடி கோடியாக கொள்ளை அடித்தால் சிறைக்குள்ளும் ராஜஉபச்சாரம்!! எங்கே போய் முட்டிக்கொள்வது! இதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் ஐயா இட்லி வடை!

Anonymous said...

//live by the law of the land and not their own//

பார்த்துண்ணே, அப்படி சொல்ல ஆரம்பிச்சா மொதல்ல, பார்ப்பனியம் அடிவாங்கும்ணேன்.

Ravi said...

Intially even I felt if the student was going overboard. But now thinking about it, I tend to agree with Krish. Why relate this simple matter to Talibanism? Being in a Hindu dominant country, we tend to oversee all symbols attributed with Hinduism like smearing vibuthi, kumkum but seem to attribute religious fanatism with similar symbols exhibited in other religions. Just as how pseduo secularism is bad, I think hate campaign (anti-brahmanism by Dravidian parties, anti-Islam/anit-Christianity by the saffron brigade) is equally (or more) bad.

puthiya said...

Anony. beat met to write about "Uniform Civil Code". This will have more impact on Muslims though (they cannot marry and divorce with thalak, thalak - have multiple wives, etc..). Don't pounce on me - just stating the facts.

Anonymous said...

தாலிபானிசமோ, உரிமையோ.. இந்த முல்லாக்களோட தொல்லை தாங்க முடியலைப்பா.. கட்டிய மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு அது எங்கள் மத உரிமை என ஷாபானு வழக்கில் தவ்விய இந்தப் பைத்தியங்கள் தாடி வைத்தால்தான் என்ன?? வேறு எங்காவது சடை போட்டுக்கோண்டால்தான் என்ன??

Anonymous said...

I pity your understanding IV. The judge has not said whoever sports beard is a taliban instead he has said that

In a place of study with rules not allowing a beard you come and say I am a muslim so i will sport a beard so what if it is a place of study so what if the rules say not to have a beard that is talibanism.

Nalaikku rendu jains(saettu pasanga) yaravathu mahaveer dress poda mattar nanum dress podamathan school varuvennu sonna

ennum rendu perr murugar kovanam kattikittu pazani la ninnar athanala naan kovanathulla than varuven. It is my religious sentiment nnu sonna..

how stupid it is.

Baski said...

மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் உண்டு. ஆனால், அவற்றை திருத்திக்கொள்ளும் மனபக்குவம் முஸ்லிம்களுக்கு இல்லை.

சின்னதா திருநீர் வைத்து கொள்வதற்கும்., நம்ம குன்னக்குடி வைத்தியநாதன் மாறி பட்டை போடுவதுக்கும் வித்தியாசம் இருக்கு.
அவரோட பக்தியா இப்படி காட்ட வேண்டாம்.

இதே தான் தலிபான் தாடிகும். நீங்களே யோசியுங்கள்.

"பழையன களைதலும் புதியன புகுதலும்", எல்லாத்துக்குமே பொருந்தும்.
இந்த நூற்றாண்டுகு வாங்க.

நம்ம பகுத்தறிவு தலைவன் மு.க இதையெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார்.
கேட்டால் எதாவது கவிதை சொல்லி சப்பைகட்டுவார்

Anonymous said...

//ennum rendu perr murugar kovanam kattikittu pazani la ninnar athanala naan kovanathulla than varuven. It is my religious sentiment nnu sonna..//

அனானி சொன்னது சரிதான். ஒருவர் தன் பிள்ளையை ஸ்கூலில் சேர்க்கும்போது அந்த ஸ்கூலின் விதி முறைகளை தெரிந்து கொண்டுதான் சேர்க்கிறார். அப்புறம் அட்மிஷன் வாங்கின கையோடு நான் இப்படித்தான் இருப்பேன் என்று அடம் பிடிப்பதுஎப்படி சரியாகும்? நமக்கு சரிப்பபடலேன்னா வேற ஸ்கூலை பார்த்து போக வேண்டியதுதானே?

Anonymous said...

"பதவிக்காகவும்,வெறுமனே பெயர் தாங்கி முஸ்லிம்களாக உள்ளவர்களையும்,மாற்று மதப்பெண்களை திருமணம் முடித்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிலரை வைத்துக்கொண்டு பிஜேபி தன்னை ஒரு மத சார்பற்ற கட்சியாக காண்பித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் லீக்கிற்கு அப்படிப் படம் காண்பிப்பதற்கு அவசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது" super joke mr mubarak see your mmk,and other muslim parties. they always expect பதவி from dmk or admk only they have no agenda

Anonymous said...

இருபாலார் படிக்கும் அரசு கல்வி நிறுனங்களில் மாணவர்கள் வேட்டி அணிந்து வரக்கூடாது என்று சட்டம் உள்ளது. அங்கே போய் தமிழர் உடை அது இது என்று தகராறு பண்ண முடியுமா?

Krish said...

/// சீக்கியர்கள் தாடி வைப்பதும், இஸ்லாமியர்கள் தாடி வைப்பதும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியுமா? சீக்கியர்கள் மதத்தில் சவரம் செய்வது தடைபடுத்தப் பட்டு இருக்கிறது. அதாவது நீங்கள் சீக்கிய மத வழிமுறைகளை பின்பற்றுபவர் என்றால் நீங்கள் சவரம் செய்யவே முடியாது./////

இப்போஅதுவும் Optional தான். யுவராஜ் சிங் தாடி வைத்துக் கொள்வதில்லையே?
அது அவருடைய விருப்பம். பள்ளிகளுக்கென்று விதிமுறை உண்டு. அனால் அது சரியானதா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டில் பல பள்ளிகளில் தமிழில் பேசுவது குற்றமாக கருதப் படுகிறது. அது பள்ளியில் விதிமுறை தான் என்றாலும், அது சரியா?

அய்யப்ப பக்தர்கள் வேட்டியோடும் செருப்பிலமலும் தான் பள்ளிக்கு வருகிறார்கள்? அதற்கு தாடை விதித்தால் சும்மா இருப்பார்கள?

ஒரு கிருஸ்தவ பள்ளியில் திருநீறு அணிந்து வந்த மாணவனை விரட்டியதற்காக, இந்து மக்கள் கட்சி வந்து ரகளை செய்ய வில்லையா?

கொடும்பாவி-Kodumpavi said...

'முடி'யால பிரச்சனையா? முடியலப்பா,
முடியல.. இப்பவே கண்ணக்கட்டுதே..!

Anonymous said...

நீதிபதியின் இந்த கருத்துக்கள் தேவையில்லாதது. தாடி வைத்த முஸ்லீம்கள் எல்லோரும் தாலிபான்கள் என்று பொருள்படும்படி சொல்லியிருக்க கூடாது.

//
தேவையில்லாத சொல்தான் அது.

மணிகண்டன் said...

ஸ்ரீதர், உங்க கமெண்ட் எனக்கு பயங்கர சர்ப்ரைஸ்.

நடைமுறை என்பது வேறு. விதி என்பது வேறு.

என்ன சொல்ல வரீங்க ? விதிய ஒரு பள்ளிக்கூடம் எப்படி நிர்ணயிக்கறாங்க ? சுப்ரீம் கோர்ட் எதுக்கு தாலிபான் உதாரணம் கொடுக்கணும் ? எங்க பள்ளில கூட uniform இருந்தது. அதே சமயம் ஐயப்ப மலை சீசன்ல (!!) ஒரு சில மாணவர்கள் வேட்டி கட்டிக்கிட்டு வருவாங்க. அதுக்காக அவங்கள பள்ளில சேர்த்துக்க மாட்டேன்னு முரண்டு எல்லாம் பிடிக்கல. இது எல்லாம் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போக வேண்டிய விடயங்களே அல்ல. கொஞ்சம் கூட மூளை இல்லாத பள்ளி நிர்வாகம்.

ஒண்ணு பள்ளில எந்தவித மத குறியீடும் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரட்டும். (எனக்கு இதுல உடன்பாடு இல்ல) அப்படி இல்லாட்டி இந்த மாதிரி பள்ளி விதிகள் எந்த அளவு சரின்னு தெரியல. uniform ஒரு வித economic equality க்கு கொண்டு வரப்பட்டதுன்னு சொல்லலாம். தாடி கூடாதுன்னு சொல்றது எதுக்கு ? வெறும் கொழுப்பு தான். வேற ஒண்ணும் இல்ல.

Anonymous said...

Sir,
We are interested what the most "avowed" secular "The Hindu" who gives its free page to the Judge Katju says about its friendly judge's judgement?
A non-secular

R.Gopi said...

நான் முன்பு புத்தாண்டு 2009 என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறு கவிதையின் ஒரு பகுதிதான் இது.

இதை முழுதுமாக படிக்க இங்கே செல்லுங்கள்.

http://edakumadaku.blogspot.com/2009/01/2009.html

********************

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம், நாம் இந்த நேரத்தில்

ஆயுதங்களை புறக்கணிப்போம் - நம்மை
அஹிம்சைக்கு அர்ப்பணிப்போம்
தீயவைகள் கண்டறிந்து ஒதுக்கி வைப்போம்
நல்லவற்றின் தடம் அறிந்து செதுக்கி வைப்போம்

கடின உழைப்பிற்கு இல்லை ஈடு இணை
இதை என்றும், எப்போதும் நீயும் நினை
நம்மை வெற்றிகள் அணுக, இல்லை ஏதும் அணை

griesh said...

சாதி, மதம் இவைகளுக்கு அப்பார்ப்பட்ட வயதை உடையது பள்ளிப்பருவம் இந்தப் பருவத்திலேயே இவ்வகையான வேறுபாடுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆசிரியர்களை தான் முதலில் தண்டிக்க வேண்டும்.

Anonymous said...

தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருவத்தில் என்ன தவறு என்று தெரியவில்லை. சீக்கியர்கள் எல்லாம் தலைப்பாகையோடு தான் பள்ளிக்கு செல்கிறார்கள்; இந்தியாவில் மட்டும் அல்ல, அமெரிக்க, ஐரோப....etc.
இந்துக்களில் பலர் நாமம், விபூதி பட்டை இட்டுக் கொண்டு தான் பள்ளிக்கு வருகிறார்கள்.நீதிபதியின் இந்த கருத்துக்கள் தேவையில்லாதது அந்த நீதி பதியின் பதவியும் பறிக்க VENDUM.பள்ளில எந்தவித மத குறியீடும் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரட்டும்

முபாரக் said...

கொஞ்ச நாள் அடங்கிக் கிடந்த இட்லிவடையின் காவிவெறி மீண்டும் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.உன் ரேட்டிங்கை யாருடனோ போட்டி போட்டு உயர்த்திக் கொள்ளவேண்டி நீ மீண்டும் உன் காவி சுய ரூபத்தை வெளியே காட்டிவிட்டாய். ஏன்டா முஸ்லீம்களின் இரத்தம் குடிப்பதிலேயே குறியா இருக்கீங்க? முஸ்லீம்கள் இன்றைக்கு குண்டு வைக்கிறார்கள் என்றால் அதற்கு உன்போன்ற மதவெறியன்கள் காரணம். நாங்கள் எல்லா சமுதாய மக்களிடமும் நட்புடன் இருக்க தான் விரும்புகிறோம். ஆனால் உன் போன்ற மதவெறியர்கள் ஒழிந்தால் தான் அது நடக்கும் போலிருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணின் கேவலங்களில்,அசிங்கங்களில் நீயும் ஒருவன்.த்தூ.

IdlyVadai said...

//முபாரக் - கொஞ்ச நாள் அடங்கிக் கிடந்த இட்லிவடையின் காவிவெறி //

இந்த பதிவில் எங்கே காவிவெறி இருக்கிறது என்று சொல்லுங்கள் ?

Anonymous said...

Palliyil padikkum yaarukku periya thadi valarnthiruka poradu; appadiye irundaalum evalavu peyarukku valarndirukkum, idayellam oru periya vizayama pannina schoolukuthan thandanai kodukka vendum. Needipathi enda oru theerpu solliirundalum edavadu oru charcy vandu irukkum. Needipathy Talibanai sonnadu , ippadiye ella prachinaikum vittukondu irundal Taliban maadiri avadarku chance irukku endru.
Thyagu

Anonymous said...

பயந்தவன்....

இன்னும் கொஞ்ச நாள் கழித்து AK47 வைத்து கொள்வது எங்கள் உரிமை என்று கூட சொல்லுவார்கள் .... அப்போ அதையும் அனுமதிக்கலாமா

மாயவரத்தான்.... said...

ம்.. இட்லி வடை பேசினால் காவி வெறி. முபாரக் கோஷ்டியினர் பேத்தினால் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை!) அது சிறுபான்மையினர் உரிமை. என்னாவொரு ஜனநாயக நாடுப்பா இது! சூப்பரு!

Nijam Khan said...

திரு மாயவரத்தான்.,,
ஜனநாயக நாடு என்பதன் பொருள் தெரிந்து கொள்க. அனைத்து மத மக்களுக்கும் தங்கள் மதம் குறித்த வழிபாடுகளில் சமஉரிமையுள்ளது. அதுவே பாகிஸ்தானாக இருந்தால் அது சர்வாதிகார நாடு.தனிமனித உரிமை ஜனநாயகம் அங்கு கிடையாது. சரி இன்னும் எத்த‌னை நாளைக்குத்தான் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போகச்சொல்லிகொண்டு இருப்பீர்கள்? காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது முழுக்க முஸ்லீம்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? ஆமாம் ஒன்று கேட்கிறேன்.அப்படி என்னதான் உங்களுக்கு முஸ்லீம்கள் மீது உங்களுக்கு வெருப்பு.தயவு செய்து சொன்னால் திருத்திக்கொள்ள முயற்சிப்போம்.

geeyar said...

Ithu thevai illatha vivatham. Rules yellarukkum common. But yella mathathinarum ithai meerividukirargal. Rules na athil flexifility irukka koodathu. Ex. Christian school il matha pothanaikal nadakkirathu. Hindukkal kaiil kayiru, kaluthil doller(also christian), netriyil vibuthi, rutthiratchai etc., Muslim thadi, purdha. ithil avoid pannanumna yellamathathinarum adjust panna vendiya thirukkum. Neenkal ungal kulanthaikalai padikka mattume anuppinal ithai yellam, yellarume thavirkkalame....

Anonymous said...

"சட்டம் எல்லோருக்கும் பொது. முஸ்லீம்களுக்கு என்று தனியாக சட்டம் எல்லாம் தேவையில்லாதது. தேவை என்று சொல்லுபவர்கள் தாலிபானோ, பாகிஸ்தானோ போகலாம். அவர்கள் விருப்பம்"

Idli vadiyidam irundhu intha comment-ai edhirpaarkavillai.

By Civizen of India (Identitied as Muslim).

மாயவரத்தான்.... said...

நிஜாம் கான்.. நான் எங்கே முஸ்லீம்களை பாகிஸ்தான் போகச் சொன்னேன்? அல்லது அவர்கள் மீது வெறுப்பு என்று சொன்னேன்? இங்கே என் பக்கத்தில் உட்கார்ந்து இதைப் படிக்கும் எனது நெருங்கிய இஸ்லாமிய நண்பனே உங்கள் கருத்தைப் படித்து விட்டு வாயால் மட்டும் முடியாமல் வேறெதுவாலோ சிரிக்கிறான். உங்கள் திசை திருப்பும் வேலைகளை வேறெங்காவது வைத்துக் கொள்ளவும்.

Nijam Khan said...

திரு மாயவரத்தான்.,,
வாயின்றி வேறெதுவாலோ சிரிக்கும் அதிசய பிராணிகளுடனெல்லாம் கூட்டனி வைத்திருக்கிறீர்களா! பாவம் உங்களை நம்பும் அந்த முஸ்லீம் நண்பன்.

R Gopinathan said...

தங்களை இந்தியர்களாக நினைக்காமல் தங்களை சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டும், எல்லா ஹிந்துக்களும் தங்கள் எதிரிகள் என்பது போலப் பேசிக்கொண்டும், தொட்டதுக்கெல்லாம் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்று கூக்குரலிட்டுக் கொண்டும், செக்யுலர் என்று சொல்லிக் கொண்டு ஹிந்துக்களையும் அவர்களின் மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசினால் தங்களுக்கு மைனாரிட்டிகளின் வோட்டு கிடைக்கும் என்று நினைத்து மைனாரிட்டிகளின் வோட்டு பொறுக்க அலையும் அரசியல் கட்சிகளை (உதாரணம் திமுக) தங்கள் உற்ற நண்பன் போல எண்ணிக் கொண்டும் சில அல்லது பல (எல்லோரும் அல்ல) முஸ்லிம்கள் இருக்கும் வரை முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் போக்கு இங்கு இருக்கத்தான் செய்யும். முதலில் இதை எல்லாம் மாற்ற நண்பர் நிஜாம் கான் போன்றவர்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது? (எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் உண்டு. நான் அவர்களின் வீடுகளில் தங்கி அவர்களுடனே உண்டு வாழ்ந்திருக்கிறேன். இன்றும் அவர்கள் எனக்கு நண்பர்கள் தான். )

எல்லா முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும் என்று இட்லி வடை சொல்லவில்லையே! செய்திக்கு அடியில் வந்த IV இன் கமெண்டை கீழே தந்துள்ளேன்.
>>சட்டம் எல்லோருக்கும் பொது. முஸ்லீம்களுக்கு என்று தனியாக சட்டம் எல்லாம் தேவையில்லாதது. தேவை என்று சொல்லுபவர்கள் தாலிபானோ, பாகிஸ்தானோ போகலாம். அவர்கள் விருப்பம்.<<

பொதுவாக எல்லோருக்கும் ஒரு நியாயம் அல்லது சட்டம் என்று இருக்கும்போது தங்களுக்கு மட்டும் அது செல்லாது என்று விதண்டாவாதம் செய்யும் சிலரைப் பற்றி தானே IV அப்படி சொல்லி இருக்கிறார்? அதற்க்கு உதாரணமாகத் தானே ஷா பானு வழக்கை சொல்லி இருக்கிறார்? ஒட்டு மொத்த சமுதாயத்தோடு ஒத்துப் போகாமல் தங்களுக்கு என்று தனியாக ஒரு சட்டம் (இஸ்லாமிய மத அடிப்படையிலான தனிச் சட்டம் ) வேண்டும் என்று நினைக்கும் சில முஸ்லிம்களைப் பற்றி IV சொன்ன கருத்தைத் திரித்து அவர் ஒட்டு மொத்தமாக எல்லா முஸ்லிம்களையும் பாகிஸ்தான் போகச் சொன்ன மாதிரி ஒரு போய்த் தோற்றத்தை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள் நண்பர் நிஜாம் கான் அவர்களே? உங்களின் இந்த திரிப்புக்குக் காரணம் நான் முதலில் சொன்னது போல உங்களைப் போன்ற முஸ்லிம்களின் (எல்லா முஸ்லிம்களையும் சொல்லவில்லை, இந்த மாதிரிப் பேசும் சிலரை அல்லது பலரைப் பற்றித்தான் சொல்கிறேன்) ஆழ் மனதில் இருக்கும் ஹிந்துக்களின் மீதான வெறுப்புதான் காரணம் என்று எங்களுக்கு சந்தேகம் வராதா? சிலர் இதை உங்களைப் போல நாசுக்காக சொல்கிறீர்கள். சிலர் முபாரக் போல போக்கிரித்தனமாக சொல்கிறார்கள். வின் டிவி, தமிழன் டிவி என்று பார்ப்பவர்களுக்கு நான் சொல்லும் உண்மை விளங்கும். அவற்றில் பகிரங்கமாக நடக்கும் விஷப் பிரசாரத்தை ஏன் எந்த அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை என்று புரியவில்லை. அல்லது உங்களைப் போன்ற சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களாவது repudiate செய்யத் தயாராக இருக்கிறீர்களா? (இந்த ரீடர் கமெண்ட்ஸ் பகுதியிலேயே முபாரக் என்பவரின் ஏண்டா போடா வாடா என்ற ஏக வசன கமென்ட்களையும் அதற்க்கு IV இன் பொறுமையான பதிலையும் படிக்கவும்)

எல்லா முஸ்லிம்கள் மீதும் எங்களைப் போன்றவர்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் உங்களைப் போல் பேசும் சில முஸ்லிம்கள் மீது என் போன்றவர்களுக்கு கோபம் வருகிறது என்பது உண்மைதான். மேலே சொன்னது போல நீங்கள் திரித்துப் பேசினால்/ எழுதினால் எங்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? தொடர்ந்து படியுங்கள்.

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப் படுபவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்கள் என்று இன்னொரு திரிப்பு திரித்திருக்கிறீர்கள். இப்படிப் பட்ட மனசாட்சிக்கு விரோதமான் ஒரு ஆகாசப் புளுகை பலர் படிக்கும் ஒரு பதிவில் எழுத முடிந்த உங்கள் நேர்மையின்மையைப் பார்த்தால் எங்களுக்கு கோபம் வராதா?

காஷ்மீர் என்பது என்னவோ முஸ்லிம்கள் மட்டுமே வாழும் ஒரு மாநிலம் என்று ஒரு போய்த் தோற்றத்தை ஏற்படுத்த இன்னும் எத்தனை நாள் தான் உங்களைப் போன்றவர்கள் முயன்றுகொண்டே இருக்கப் போகிறீர்கள்? இதைப் பார்த்து நாங்கள் கோபப் படக் கூடாதா?

உற்றார் உறவினரையும் சொத்துக்களையும் இழந்து சொந்த நாட்டிலேயே ஆதரவில்லாதவர்களாக, தங்களுக்காகப் பேச எந்த 'செக்யுலர்' தலைவரும் இல்லாத அகதிகளாக வாழும் லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்களைப் பற்றி ஏன் உங்களைப் போன்றவர்களுக்குத் தெரிவதில்லை? இதைப் பார்த்தால் எங்களுக்குக் கோபம் வராதா?

நண்பர் நிஜாம் கான் அவர்களே, "திருத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்" என்று நீங்கள் சொன்னதே கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்பதற்கான காரணங்களை மேலே சொல்லி இருக்கிறேனே? திருத்திக் கொள்வீர்களா?

"குண்டு வைப்பவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்ல. பயங்கரவாதிகளுக்கு மதமே இல்லை. இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை" என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக "இன்றைக்கு முஸ்லிம்கள் குண்டு வைக்கிறார்கள் என்றால் " என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கும் முபாரக்குக்கு நன்றி. பெரியார் பிறந்த மண்ணில் எல்லாமே கேவலமாகத் தான் இருக்கும் என்று முபாரக் நினைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், முபாரக் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரவும் பகலும் இதே பூமியில் தான் வருகின்றன. இரவு வருவதால் அதன் பின் பூமியில் எல்லாமே இருட்டாகவா பொய் விடுகிறது? மீண்டும் ஒளி வருவதில்லையா? அது போலத் தான் ஈ வே ரா [ பெரியார் ?! ] இந்த மண்ணில் வந்ததாலேயே இந்த மண்ணில் இருக்கும் எல்லாமே கேவலமாகப் பொய் விடவில்லை.

Anonymous said...

nama nammla secular state secular state nu...we loosing ourselves...ENakku enga perima veetla mariyathai kidacha...enga periyamma paiyanuku enga vetla kodukra mariyahtaiyaa naa varaverpen. Namma(Madha) makkalukku matha countryla mukiyama muslim countryla enna mariyathai kidaikuthu...ippadi intha arasiyal vathigal ootukaga pesi pesiye nama nammala iallaka porom koodiya seekrame...2050 la india Hindusthana mattum irukkathu kandippa

Appo Indiayavla Hindus Sirubanmai ina makkala irupaanga....

Ithu nadakam paka vendiya namma kadamai urimai...

மாயவரத்தான்.... said...

நிஜாம் கான். நண்பன் பிராணீயா இல்லையா என்று தெரியாது. முஸ்லிம் என்று மட்டும் தெரியும்.

Baski said...

நான் எதிர்பார்த்து மாறியே நம்ம பகுத்தறிவு பகலவன் வின் தேர்தல் அறிவிக்கையில் சொல்லிட்டார்.
"பொது சிவில் சட்டம் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தப்படும். "

அப்போ இப்படி சில சட்டங்களுக்கு பரிந்துரைக்கலாமே !

. இந்து பொது சிவில் சட்டம்
. இஸ்லாம் பொது சிவில் சட்டம்.
. கிருத்துவர் பொது சிவில் சட்டம்.
. ராமதாஸ் ஜாதி பொது சிவில் சட்டம்.
. திருமாவளவன் ஜாதி பொது சிவில் சட்டம்.
. அழகிரி ஆதரவாளர்கள் பொது சிவில் சட்டம்.

எண்ணே அவரது சமத்துவ சிந்தனை! பகுத்தறிவு!

வோட்டு வேணும்னா என்ன வேணும்னாலும் செய்வார்.
கண்டிப்பா பாரத ரத்னா கொடுக்க வேண்டியது தான். நோபல் பரிசுக்கு கூட பரிந்துரை செய்யணும்.

உதயம் said...

ஷா பானு வழக்கில் இஸ்லாமியர்கள் தெரிவித்த எதிர்ப்பின் விளைவாக அரசியலமைப்புச் சட்டமோ அல்லது வேறு எந்தச் சட்டமோ அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் திருத்தப்படவேயில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. 1985இல் வெளியிடப்பட்ட ஷா பானு வழக்கின் தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து 1986இல் இயற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டமும் முறையான அடிப் படையுடன் புரிந்துகொள்ளப்பட வேண்டும். விவாகரத்து பெற்ற பெண்களின் பராமரிப்பு என்பது சிவில் சட்டம் சார்ந்த விஷயம். இது இந்தியாவில் அனைத்துச் சமூகத்தினரின் மத ரீதியான திருமணங்களுக்கு அந்தந்த மதங்களின் தனிச்சட்டங்களின்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிவில் திருமணங்களுக்கு 1954ஆம் ஆண்டு இந்திய சிவில் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. விவாகரத்து கோரும் பெண்ணிற்கு சிவில் கோர்ட்டில் உரிய சட்டங்களின் அடிப்படையில் முறையான தீர்ப்பு வரும் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கு அவருடைய முன்னாள் கணவன் ஒரு சிறுதொகையைப் பராம ரிப்புக்காக வழங்க வேண்டுமென்று 1973ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய கிரிமினல் வழிமுறைச் சட்டம் 125 சிஆர் பிசி வழிசெய்தது. இதன்படி, இறுதித் தீர்ப்பு வரும்வரை இடைக்கால நிவாரணமாக ஒரு சிறுதொகையை விவாகரத்து பெறும் பெண்களுக்கு வழங்க, முன்னாள் கணவருக்கு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிடலாம். இந்துக்கள், பெ�த்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்திய சட்டத் தொகுப்பிலுள்ள இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956, ""இந்து திருமணச் சட்டம்"" 1955 இன் பிரிவு 24-25இல் உள்ள பராமரிப்பு ஏற்பாடு ஆகிய சட்டங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட மதங்களைச் சார்ந்த விவாகரத்துப் பெற்ற பெண்களுக்கு இந்தப் புதிய சிஆர் பிசி வழங்கும் பராமரிப்புத் தொகை சிவில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை மட்டுமே தரப்படும். ஏனைய மதத்தவருக்கு உள்ளது போன்ற இணையான - தனித்த பராமரிப்புச் சட்டங்கள் எதுவும் இஸ்லாமியப் பெண்களுக்கென்று இருக்கவில்லை. இந்நிலை இஸ்லாமியப் பெண்களின் நலனுக்கு எதிராக இருந்த போதிலும் இஸ்லாமியப் பெண்களுக்கான தனிச் சட்டம் அது வரையில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அதுவரை இயற்றப் படாமலிருந்த இஸ்லாமியருக்கான தனிச்சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு எந்த உதவியும் வழங்காது எனத் தவறாக எண்ணி 125 சிஆர் பிசி 1973 என்ற சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப் பட்ட தற்காலிகமான பராமரிப்பு ஆணையே நிரந்தரமானது, முடிவானது என்று கருதப்பட்டது. இக்கருத்து சட்ட ரீதியாக மிகத் தவறான ஒன்றாகும். இந்நிலை இஸ்லாமியப் பெண்களின் நலனுக்கு எதிரானதாகும். இஸ்லாமியருக்கான தனிச் சட்டம் பெண்களுக்கு 125 சிக்ஷீ றிநீஐ விடவும் பல வழிகளில் அதிகப் பயன் தருவதாக உள்ளது. இஸ்லாமியர்கள் பரவலாக எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றம் இஸ்லாமியப் பெண்கள் (விவாகரத்து உரிமைப் பாதுகாப்பு) என்ற சட்டத்தை உருவாக்கியது.

1955 � -56இல் இயற்றப்பட்ட இந்து பராமரிப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் மட்டுமே பொறுமை இழக்கும் வகையில் நீண்டகாலம் நடைபெறும். ஆனால் புதிதாக இயற்றப்பட்ட இஸ்லாமியப் பராமரிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதனால் சிஆர் பிசிஇல் தரப்பட்டுள்ள வேகமான பல வழி முறைகளைப் பயன்படுத்தி விரைவாகத் தீர்ப்பு வழங்க இச்சட்டம் வழிவகை செய்தது. இதுவே இஸ்லாமியப் பெண்களுக்குப் பயனளிக்கக்கூடிய சட்டப் பிரிவாகும். இப்புதிய சட்டம் ஷா பானு தீர்ப்பைப் புறக்கணிக்கவில்லை. இச்சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தையோ, கிரிமினல் நடைமுறைச் சட்டத்தையோ (சிஆர் பிசி), மற்றும் எந்த ஒரு சட்டத்தையோ மாற்றவுமில்லை. இதில் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக எதுவுமே இல்லை.

நன்றி; காலச்சுவடு

Anonymous said...

உச்ச நீதி மன்றமா? உச்சி குடுமி மன்றமா?
பட்டை நாமம் பரவாயில்லை;தலைப்பாகை தவறில்லை
தாடிக்கு மட்டும் தடா என்னே ஒரு நீதி.

பாரபட்சமே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்.உரிமைகள் பறிக்கப்படும் சமூகத்தில் அமைதி என்பது கானல் நீரே. நீதிபதியின் தீர்ப்பு விமர்சனத்திற்குரியதே. ஆனால் இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு வருவது உறுதியாகி வருகிறது. இந்துத்துவாவின் வக்கிர காவி வெறியும் பரந்து விரிந்து வருவது இட்லி வடையின் பதிவிலிருந்தும் அறிய முடிகிறது.