பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 06, 2009

3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - அழகிரி

வேட்பாளர் நேர்காணலுக்காக சென்னை வந்திருந்த அவர் இன்று மதுரை திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்க திமுகவினர் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் மூன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
மார்க் ட்வைன் என்ன சொல்லுகிறார் .....


கல்கி தலையங்கம் ஒரு பகுதி

மதுரையில் மட்டுமே திடுதிப்பென்று 90,000 “புது” வாக்காளர்கள் பதிவுக்கு விண்ணப்பிக்கப் போக, அவர் களுள் அனேகம் பேர் ஏற்கெனவே பதிவு பெற்றவர்கள்தான் என்பதை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்திருக்கிறது. கள்ள வோட்டுக்களைப் பெருக்கும் அப்பட்டமான இந்த மோசடியை, தமிழகத்தின் எந்த அரசியல்வாதியும் கண்டிக்கவில்லை; முதல்வர், மூச்சுக்கூட விடவில்லை!


முட்டாள்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நம்மால் வெற்றி பெற்றிருக்கவே முடியாது - மார்க் ட்வைன்

20 Comments:

Anonymous said...

மதுரை மக்களவைத் தொகுதியில் பெருமளவில் போலி வாக்காளர்களை சேர்க்க முயற்சிகள் நடைபெறுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று சென்னையில் (28. 03. 2008) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையில் பெருமளவில் போலி வாக்காளர்களைச் சேர்க்க மனுக்கள் வந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன.

இதுகுறித்து விசாரிப்பதற்காக மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி கே. சத்யகோபால் நியமிக்கப்பட்டார்.

அவரது விசாரணையில் சில விண்ணப்பங்களில் வாக்காளர் குறித்த முக்கியத் தகவல்கள் விடுபட்டிருந்ததும், சிலர் உறவினர் முகவரியை அளித்திருந்ததும் தெரியவந்தது.

சில விண்ணப்பங்களில் இருந்த முகவரிகளில் சென்று விசாரித்தபோது, தாங்கள் விண்ணப்பிக்கவே இல்லை என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு சில விண்ணப்பங்களில் இருந்த முகவரிகளில் விண்ணப்பதாரர்கள் வசிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

வேறு தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, மதுரைத் தொகுதியில் சேர்ப்பதற்கு நடந்த முயற்சியே இது.

-- Dinamalar News

ராகவன் பாண்டியன் said...

நெத்தியடி! :)

Hariharan # 03985177737685368452 said...

மீனாட்சி..... மதுரையை இப்படி அம்போன்னு அருவா அழகிரி போக்கில விட்டுட்டியேயேயே.... சரி இந்த மதுரை அழிஞ்சாத்தான் புதுசா மதுரை வெளிப்படும். மதுரைய அழிக்க அழகிரியை விட்டா வேறு நல்ல ஆள் ஏதுங்கிறீயா மீனாட்சி.. அதுவும் சரிதான்!

எது எப்படியோ மீனாட்சி.. மதுரையை ரக்ஷி!

mazhai said...

ஆக திருமங்கலம் மதுரை தொகுதியில் தான் இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
என்னடா சம்பந்தம் இல்லாமல் பேசுறேன்னு நினைக்காதீங்க....
என்னென்னவோ பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வருது, வேறொன்னுமில்ல

sathappan said...

நெத்தியடி!

You people die due to 'VAITHEYRICHAL'

Vazhga Mr.அழகிரி MP

sathappan

தூத்துக்குடி தமிழன் said...

தமிழ்நாட்டுல யாருயா 37 தொகுதின்னு சொன்னது....? விருப்ப படரவங்க எல்லாரும் மதுரை ல வாகளிங்கோஓஓஓஓஓஓஒ............

அச்சுப்பிச்சு said...

ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு. When rape is inevitable, relax and enjoy it! என்று. அதைப்போல தமிழ்நாட்டுக்கு இவர்களைத்தவிர வேறு வழியில்லையென்றால், நான் மஞ்சள் துண்டு கவிராயருக்குப்பதிலாக மதுரை அஞ்சா நெஞ்சரையும், தளபதியையும் கைநீட்டி வரவேற்பேன். பெரியவர் செய்யும் ஒண்டிக்கு ஒண்டி அரசியலில் இருந்தும், காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படும் கவிதைகளில் இருந்தும் விடுதலை கிட்டுமே!

தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சீரழிவு.

அச்சுப்பிச்சு

லவ்டேல் மேடி said...

ஓஓஓ.......!!! அழகிரித் தம்பி...... ஆல்ரெடி ஓட்டு புக்குடா....????? கஷ்ட காலம் ....!!!

Anonymous said...

அப்ப எங்க அண்ணன் மூணறை லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கமாட்டார், 2 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுவித்தியாசத்தில் ஜெயிப்பார்னு வச்சுக்கங்க.

cho visiri said...

பதிவாகும் அனைத்து வோட்டுகளுமே அண்ணனுக்கே (சாரி....அப்பாவுக்கே)பதிவாகும்படி மென்பொருள்
த்யார் என மகுடி ஊத்டி மகளே! (மீன் விழியாளே)

★кєттαναη ιѕ вα¢к★ said...

வணக்கம்.

இப்போ மதுரைல ஆடுங்க எல்லாம் தி.மு.க கொடி கட்டுன வண்டிய பாத்து பயப்புடுதாம் ?

மருபடியும் பிரியாணிக்கு ரெடி பண்ணிருவாங்கன்னு தான்....

அண்ணே அப்படின்னா! நீங்க எங்க தொகுதியிலயும் நிக்கணும்.... 10,000 காசாவது கிடைக்கும்!! காலெஜ் ஃபீஸ் கட்டுவேன்........

இவண்
# அன்பு பிரபாகரன்

Karnan said...

சொட்டை இப்படி யோசிச்சாம். இது எப்படி இருக்கு

சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு முன் என்னை சந்தித்து, "குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை. வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்' என்று கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்த போது, இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால்... என்று ஒரு கணம் நினைத்தேன்.

என்ன ஆகும். நம்ம குடும்ப ரேசன் கார்டுக்கும் , வேட்பாளர் பட்டியலுக்கும் வித்தியாசம் தெரியாது.

நம்ம அடுத்து வர இருக்கிற சட்டசபை தேர்தலில் ஓதுங்கி, புதுமுகங்களுக்கு வழிவிடுறதை பற்றி யோசிக்கலாமே.

சாகும் வரை பதவி என்பது தான் 'பகுத்தறிவோ' ??

pappu said...

பூத் ஆபிசர் வரை முடிவு பண்ணிட்டதா பேச்சு!

Anonymous said...

//முட்டாள்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நம்மால் வெற்றி பெற்றிருக்கவே முடியாது - மார்க் ட்வைன் //

பஞ்ச் உண்மை.

அப்ப மதுரைக்காரய்ங்க "அம்புட்டு" பேரும் முட்டாப்பயபுள்ளகதானா ?

ஜெ. மிக முட்டாள்தனமாக மார்க்சிஸ்டுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளார். நேரடியாககளம் இறங்கி இருந்தால், போட்டி கடுமையாக இருந்திருக்கும். 2 முறை ஜெயித்து ஒன்றுமே மதுரைக்கு செய்யாமல், "அறுவாள்,சுத்தியல்" முனை மழுங்கிப் போய்விட்டது. கேப்டனின் பெண் வேட்பாளர்(யாதவர் ஜாதி) இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. "அ"னாவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

தொடர்ந்து "அ"னாவை பற்றியே செய்தி போடறீங்க. ஜாக்கிரதையா இருங்க பாஸூ ! உங்க லேப்டாப் மற்றும் & நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். "வாக்கிங்" போகும்போது, "பத்திரிக்கை" ஆபிஸ்(!!) போகும்போது ஜாக்கிரதையாக இருங்கள். ஆட்டோ ரெடியாக இருக்கிறது.

- மதுரை மீனாட்சி.

மஞ்சள் ஜட்டி said...

மு.க வின் நெடுநாள் கனவு ஜென்ம சாபல்யம் அடைந்ததா...அழகிரியை எம்.பி தேர்தலில் நிற்க வைத்து பார்க்க....இப்போ மு.க.முத்து தான் மொத்தமா ஒதுக்கப்பட்டவர் போல...இன்னமும் கொஞ்ச நாள்லே அவர் அழுக ஆரம்பிப்பார்..அப்போ மு.க அவருக்கு நாய் பிஸ்கட் போடுற மாதிரி கொஞ்சம் அமௌன்ட் குடுத்து..வாயை அடைத்து விடுவார்....இந்த கருமாந்திரங்களை பார்க்க தானே போகிறோம்...

மதுரை வாழ மக்களே, அண்ணன், தம்பிகளே..அக்க,தங்கைகளே...பிகர்களே....

இது உங்களுக்கு ஒரு சான்ஸ்...விடாதீங்க..துணிந்து முடிவெடுத்து, உங்கள் ஓட்டுகளை போடுங்க...காசுக்கோ, கறி சோற்றுக்கோ அடிபணிந்து விடாதீர்கள்...

R.Gopi said...

//முட்டாள்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நம்மால் வெற்றி பெற்றிருக்கவே முடியாது - மார்க் ட்வைன் //

*************

யாருங்க அது நாம கஷ்டப்பட்டு கள்ள ஒட்டு போடறோம், அது முட்டாள்கள் ஓட்டுன்னு சொல்றது.

"இது களவாணிகள் போடும் கள்ள ஒட்டுங்கோ". இப்படி பொத்தாம்பொதுவா பேசிட்டு போயிடாதீங்கோ ................

லவ்டேல் மேடி said...

// கர்ணன் said.......
சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு முன் என்னை சந்தித்து, "குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை. வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்' என்று கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்த போது, இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால்... என்று ஒரு கணம் நினைத்தேன். ///
அட ஏனுங்கோ தம்பி.........!!! நானு சுப்பக்கா தொகுதியிலதானுங்கோ இருக்குறேனுங்கோ......!!!! அந்த அம்முனி போன சலக்கா தேர்தல் ஓட்டு கேட்டு வந்தப்போ ..... " ஈரோட்டை முதன்மை மாவட்டமாக மாத்துவேன்னு ......" சொல்லிபோட்டு ........ அப்பறம் ஈரோட்டு பக்கமே தல வெச்சு படுக்கல...........

இந்த தடவ சுப்பக்கா ஓட்டு கேட்டு ஈரோட்டு பக்கம் வந்தா டப்பா டேன்ஸ் ஆடிபோயிமாக்கும் ...........!!!!! ஊரே கோவத்துல இருக்குதுங்கோ தம்பி.........!!!!!

Anonymous said...

எங்க அண்ணன்,மதுரை மாவட்ட முதலமைச்சர்,கண்டிப்பாக மூணறை லட்சம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்று உன் முகத்தில் கரிய பூசத்தான் போறார்.நீ அம்மாவுக்கு அடிக்கும் ஜால்ராவை நிறுத்து.

Anonymous said...

Dear IdlyVadai,
Kindly have a look at this news in dinamani.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20090407122557&Title=TamilNadu+News&lTitle=R%AAZLm&Topic=104&ndate=4/8/2009&dName=No+Title&Dist=

I am sorry that I could not type in Tamil ...

Anonymous said...

முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மு.க.அழகிரியைப்பற்றியும், மதுரை தொகுதியையும் பற்றி தெரிவித்துள்ளார்

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.