பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 28, 2009

தேர்தல் 2009 - ராமநாதபுரம் யாருக்கு ?


தொகுதி அலசல் + ஒரு நேரடி ரிப்போர்ட்... (நன்றி: சித்து )


ஜெ.கே.ரித்தீஷ்-(தி மு க ) இந்த தொகுதியின் வேட்பாளர். சத்திய மூர்த்தி-(அ.தி.மு.க) சார்பிலும், திருநாவுக்கரசர் (பா.ஜ.க) சார்பிலும் நிற்கிறார்கள்.

இங்கே ரித்தீஷ்குமார் பிரசாரம் செய்தபோது அங்குள்ள மக்களிடம் மைக்கை கொடுத்து அரட்டை அரங்கமாக கலக்குகிறார். மக்களும் மை கிடைத்த சந்தோஷத்தில் 'எங்களுக்கு 'டிவி' வரவில்லை. சுனாமி வீடு ஒதுக்கப்படவில்லை' என குறைகளை அடுக்கி போனார்கள். தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு கிடைக்கும் என்று பதிலளித்தார் ரித்தீஷ். ரித்தீஷ் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரச்சனை இவ்வாறு இருக்க வெங்கையாநாயுடு திருநாவுக்கரசரை ஆதரித்து இவ்வாறு பேசியுள்ளார் "பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படும். பாக்.,கில் உள்ள பயங்கரவாத பயிற்சி கூடங்கள் கூண்டோடு அழிக்கப்படும். ராமர் பாலம் பாதுகாக்கப்பட்டு, சேது சமுத்திர திட்டம் மாற்று வழியில் நடைபெறும்" மக்கள் புரியாமல் கைத்தட்டினார்கள் என்று சொல்லுகிறார்கள்.

அதிமுக சார்பில் யாரோ யார் நின்றால் நமக்கு என்ன ? அம்மா இந்த தொகுதிக்கு வந்து கருணாநிதி வேலை நிறுத்தம் பற்றி பேசிவிட்டு, மக்களுக்கு பிரியாணி கொடுத்துவிட்டு ஹெலிகாப்டரில் பறந்துவிட்டார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் புதிய சட்டசபை தொகுதிகளாக, இரண்டு மாவட்ட சட்டசபை தொகுதிகளும் சேர்ந் துள்ளன.
இத்தொகுதியில் வரும் ஆறு சட்டசபை தொகுதிகள்:
1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி(தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

தற்போது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும், திருவாடனை சட்டமன்ற தொகுதி சிவகங்கை தொகுதியில் இருந்தும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அறந்தாங்கி என்றால் உங்களுக்கு திருநாவுக்கரசர் ஞாபகம் வந்தால் நீங்கள் அரசியல் செய்திகளை தொடர்ந்து படிப்பவர்.


2004 - 59%(ஓட்டு பதிவு)
பவானி ராஜேந்திரன் தி.மு.க 335287 50 %
முருகேசன் அ.தி.மு.க 225337 33 %
வித்தியாசம் - 17%

1999 - 56%
மலைசாமி அ.தி.மு.க 265253 42 %
பவானி ராஜேந்திரன் தி.மு.க 258607 41 %
வித்தியாசம் - 1%

1998 - 57%
சத்தியமூர்த்தி அ.தி.மு.க 258978 42 %
உதயப்பன் தி.மு.க. 234886 38 %
வித்தியாசம் - 4%

இந்த தொகுதி அதிமுக-ப.ஜ.கவிற்கும் - திமுக தேமுதிகவிற்கும் நல்ல போட்டியாக இருக்கும்.

சித்துவின் நேரடி ரிப்போர்ட்...

ராமேஸ்வரம் சென்று வந்தேன், அங்கு பேசிய ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், மற்றும் சில அடித் தட்டு நபர்கள் ஒருமித்த கருத்தாக கூறியது இந்த முறை மக்கள் மனதில் இரு கழகங்கள் மேலும் நம்பிக்கையற்று போயுள்ளதால் ப.ஜ.க திருநாவுக்கரசு தான் ஜெய்க்கும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது என்றனர். அறந்தாங்கி தொகுதியும் ராமநாதபுரம் தொகுதியுடன் இணைக்கபட்டுளதால் அத் தொகுதியில் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்ட மன்ற தேர்தலில் வென்றுள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஊருக்குள் எந்த ஒரு சிறு காது குத்து கல்யாணம் கருமாதி என்றாலும் தவறாமல் கலந்துக் கொண்டு நற்பணியாற்றி செல்வாக்குடன் அவர் விளங்குவதாகவும் கூறினர் மேலும் தி.மு,க வேட்பாளர் ரித்தீஷ் மீது ஒரு மதிப்போ மரியாதையோ இல்லை, இவர் குடும்பத்துக்கு ஐந்தாயிரம் வரை ரொக்கமாக வழங்கவுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் சில அதிரடி பரிசுகளும் காத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. ஆ.தி.மு.க. வேட்பாளருக்கு இரண்டாம் இடம் வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர், அதாவது ஒன்று ப.ஜ.க அல்லது ஆ.தி.மு.க தான் இந்த தொகுதியை கைப்பற்றும் என்று ஒருமித்த கருத்தாக கூறினர்.

- சித்து

16 Comments:

Anonymous said...

ரித்தீஷ்குமார் இவருக்கு இன்னொரு பெயர் உள்ளது அது முகவை குமார், ஆம் சென்னை முகப்பேரில் இவர் ஒரு நல்ல (கழக) கலக கண்மணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் ஆற்றிய சமூக கலப் பணிகள் கேட்போரை வியப்பில் ஆழ்த்தும் அந்த அளவுக்கு பிரபல்யம்.....

Anonymous said...

///*** ஜெ.கே.ரித்தீஷ்-(தி மு க ) இந்த தொகுதியின் வேட்பாளர். சத்திய மூர்த்தி-(அ.தி.மு.க) சார்பிலும், திருநாவுக்கரசர் (பா.ஜ.க) சார்பிலும் நிற்கிறார்கள்.
***///

ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதி நல்ல வறட்சியான பகுதி, இந்த கொடுமை வேற சேர்ந்து ரொம்ப வறண்டு போய் விடும், பட்ட காலிலே படும், கேட்ட குடியே கெடும் என்பார்களே அது உண்மை தானோ?

மானஸ்தன் said...

செய்திருக்கும் "analysis"-க்கும் போட்டுருக்கற கொடிக்கும் சம்பந்தமே இல்லை!

ஏதாவது உள்குத்து இருக்கா இட்லி வடையாரே?

R.Gopi said...

ஜெ.கே.ரித்தீஷ் எவ்வளவு பணம் அள்ளி கொட்டினாலும், அவர் வாய்க்கு மக்கள் அள்ளி கொட்டப்போவது மண்தான்.............

நாக்குல நோர தள்ளி வேலை செஞ்சா கூட, பல லட்சம் சேர்க்க முடியல. ஆனா, இந்த ரித்தீஷ் ராமநாதபுரம் சீட்டுக்கு 30 கோடி கொடுத்தாராமே, இவங்கள எல்லாம் கேக்கறதுக்கு யாரும் வர மாட்டாங்களா??

அன்பு ★ பிரபாகரன் ★ said...

ஜெ.கே.ரித்தீஷ் எவ்வளவு பணம் அள்ளி கொட்டினாலும், அவர் வாய்க்கு மக்கள் அள்ளி கொட்டப்போவது மண்தான்...

சித்து said...

இட்லிவடையில் என் பெயர் வந்தது பெருமையாக கருதுகிறேன், நன்றி.

ந.லோகநாதன் said...

அடுத்த சூப்பர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ்-(தி மு க ) வெற்றி உறுதி! பணம் நல்லா வேலை செய்யும்

Anonymous said...

பாஜக வெல்ல வாய்ப்பிருப்பதாக ரிப்போர்ட்டில் இருக்கிறது. சைட் டெம்ப்ளேட்டில் இராமநாதபுரத்துக்கு அருகில் இரட்டை இலை போட்டிருப்பதன் மர்மம் என்ன? இட்லிவடையாரின் உள்மன ஆசையா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

R.Gopi said...

// மானஸ்தன் said...
செய்திருக்கும் "analysis"-க்கும் போட்டுருக்கற கொடிக்கும் சம்பந்தமே இல்லை!

ஏதாவது உள்குத்து இருக்கா இட்லி வடையாரே?//

********

அட ஆமாம்.

குடுத்து இருக்கற ரிபோர்ட்டுக்கும், இட்லிவடை போட்டு இருக்கற கொடிக்கும் சம்பந்தம் இல்லையே.....

இதுல அவரு ஏதாவது "நுண்ணரசியல்" வச்சு இருக்காரோ என்னவோ......

இல்ல, நீங்க சொல்றது மாதிரி, ஏதாவது "உள்குத்தா"??!!!

Krish said...

வீட்டுக்கு ஐயயிரமா? நான் இன்னும் நூறு, இருநூறு நினைச்சிகிட்டு இருந்தேன். தமிழ் நாடு நல்ல முன்னேறிகிட்டு வருது

Inba said...

டெரர் ஸ்டார் ஜே.கே.ரித்திஷ் வெற்றி பெற்றவுடன்
ராமநாதபுரத்தில் நிலவும் "தண்ணீர்" பிரசினையை தீர்க்கப்படும்

அதாங்க
எல்லாருக்கும்
ரேஷன் கார்டோடே
டாஸ்மார்க் சரக்கு ப்ரீ

Anonymous said...

Put one leave and half Lotus in the side and give me a hope for atleast one Lotus in 39 + 1.

Ananth said...

rithisu win pannama irundha sari!

சூரியன் said...

திருநாவுக்கரசர்க்கும்,ரித்திஷ்க்கும்தான்போட்டியே.. ஆனா நீங்க இலையை போட்டிருக்கிங்கிலே...

மரைக்காயர் said...

திருநாவுக்கரசு 50,000 ஓட்டுகளுக்கு மேல் ஒரு ஓட்டு வாங்கினால் கூட நான் மொட்டை போட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

hello, M.M.K saarbil salimullah khan enbar potti idugirare...thoguthiya alasunavarukku idhu theriyaatha...thirunavukkarasara vida ivar adhigam vote vangathan porrar...