பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 20, 2009

தேர்தல் 2009 - திருநெல்வேலி(அல்வா) யாருக்கு ?

தேர்தல் களம் 2009 திருநெல்வேலி - அல்வா யாருக்கு ..? - வசந்த் ஆதிமூலம் .

கிட்டத்தட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் . தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் . கடந்த பல வருடங்களாக அதிமுக வின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது . நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. தனுஷ்கோடி ஆதித்தன் - காங்கிரஸ் . கடந்த தேர்தலில் அதிமுகவை விட ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் . ஜெயிச்சிட்டு ஊரைவிட்டு போனவரு அரசியல் , ஆஸ்பத்திரி ன்னு ஐந்து வருடங்களை கழித்துவிட்டு இப்போதான் ஊருக்கு திரும்பினதா கேள்வி .

திருநெல்வேலி திமுக வினரை பொறுத்தமட்டிலும் வில்லங்கமான தொகுதி . இதுவரை நடந்த தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது . அய்யா உஷாராக காங்கிரஸ் க்கே மீண்டும் தாரை வார்த்து விட்டார் நெல்லை தொகுதியை .

திமுக அணி - பெயர் :ராமசுப்பு (58) (காங்கிரஸ்- திருநெல்வேலி). 1989, 91 ஆகிய இருமுறை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காங்., எம்.எல்.ஏ.,
தமிழ் ஈழம் , விலைவாசி உயர்வு , மாணவர்கள் - காவல் துறை , வக்கீல்கள் - காவல் துறை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சிகள் கையில் எடுக்கும் நிலையில் காங்கிரஸின் நிலை திண்டாட்டம்தான் . மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடியில் ஓரளவு பயனடைந்துள்ள இப்பகுதியில் தள்ளுபடி மட்டுமே வேலைக்காகுமா என்பது சந்தேகம் தான் . வேட்பாளரை பொறுத்தமட்டிலும் ராமசுப்பு தொகுதியில் ஓரளவு நன்மதிப்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது . திமுக வை பொறுத்தவரை கருப்பசாமி பாண்டியன் (கானா) மற்றும் மாலைராஜா (எம்எல்ஏ ) தனித்தனியாக செயல்பட்டு வருவதாலும் , கானா அணி மாறப்போவதாக வந்த தகவல்களும் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன . மற்றவை அஞ்சா நெஞ்சன் கைகளில் ...

அதிமுக அணி - பெயர் : கே.அண்ணாமலை ( அ.தி.மு.க.,) உள்ளூர் புள்ளிகள் , பழைய பெரும் தலைகள் பலர் விருப்பப்பட்ட தொகுதியை தென்காசியை சேர்ந்த நபருக்கு ஒதுக்கப்பட்ட பின்பு அம்மா பேச்சுக்கு மறுபேச்சு ஏது ? . சுறுசுறுப்பாக களம் இறங்கிவிட்டனர் இரத்தத்தின் இரத்தங்கள் . நெல்லை அதிமுக வின் கோட்டை என்பதால் சாட்டையை சுழற்றிக்கொண்டு பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்து தொகுதியை வலம் வர ஆரம்பித்துவிட்டனர் . வேட்பாளரை பொறுத்தவரையில் எதிர்மறையான பலகருத்துகளே தென்படுகின்றன . தீவிர பிரச்சாரமும் , கூட்டணி பலமும் அதிமுக அணிக்கு வலு சேர்க்கலாம் .

தேமுதிக - பெயர் :மைக்கேல் ராயப்பன் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) முதன்முதலில் நெல்லையில் பிரசாரத்தை துவக்கியது கேப்டன் தான் . வெற்றி பெறப்போகும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் நெல்லை மக்களை விட கேப்டனுக்கு அதிக பங்கு இருக்கிறது .

தவிர சரத்குமாரும் தனது பங்கிற்கு கரு.நாகராஜன் என்பவரை நிறுத்தியுள்ளார் .

இக்கட்டுரையில் எந்த ஒரு ஜாதியின் பெயரையோ , சமூகத்தின் பெயரையோ குறிப்பிட விரும்பவில்லை . ஆயினும் திருநெல்வேலி தொகுதியை பொறுத்தமட்டிலும் குறிப்பிட்ட சில சமூகம் சார்ந்த ஓட்டுகளே பெரும்பான்மையான வெற்றியை தீர்மானிக்கின்றன என்பது வேதனையான உண்மை.

தற்போதைய நிலவரப்படி கடினமான போட்டியில் அதிமுக அணி சற்றே முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

நெல்லை தொகுதியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் பல ஆண்டுகளாய் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்பதுதான் நிஜம் .


மொத்தத்தில் யார் ஜெயித்து வந்தாலும் அல்வா மக்களுக்குத்தான் .


- வசந்த் ஆதிமூலம் .

2 Comments:

Anonymous said...

தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,53,645.


மறு சீரமைப்பிற்குப் பிறகு எல்லாத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லக்ஷதிற்கு "normalise" செய்யப்பட்டுள்ளது.
(உதாரணத்திற்கு, தென் சென்னை கடந்த முறை 20 lakhs. தற்போது 11.5 lakhs).திரு வசந்த்.
///நெல்லை தொகுதியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் பல ஆண்டுகளாய் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்பதுதான் நிஜம் .///

ஒரு சில முக்கியமான-தீர்க்கப்படாத பிரச்சினைகளை பட்டியலிடவும்.

R.Gopi said...

//ஒரு சில முக்கியமான-தீர்க்கப்படாத பிரச்சினைகளை பட்டியலிடவும்.//

இது கருணாநிதியின் உண்மையான சொத்து கணக்கு போல. கண்டே பிடிக்க முடியாது.

உண்மை என்னன்னா, அனைத்து பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே உள்ளது, அது தீர்க்கப்படவே இல்லை.