பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 19, 2009

தேர்தல் 2009 - சேலம் யாருக்கு ( கார்த்திக் )


தேர்தல் 2009 - சேலம் யாருக்கு - கார்த்திக்

சேலம் ஒரு பார்வை:

சேலம் இதுவரை காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வருகிறது, காங்கிரசோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோதான் இங்கு பல முறை வெற்றிக் கனியை பறித்து வந்துள்ளனர்.

14 தேர்தல்களில்,
8 முறை காங்கிரசும்,
3 முறை தி.மு.காவும்,
2 முறை அ.தி.மு.கவும்,
1 முறை தமிழ் மாநில காங்கிரசும்,
1 முறை வாழப்பாடி ராமமூர்த்தி சுயேச்சையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரிந்து நின்றாலும் காங்கிரஸ் ஆட்களே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி மூலமே வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது.

புதிதாக வரையறுக்கப்பட்ட தொகுதிப்படி, சேலம் தொகுதியில் பின்வரும் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
1. ஓமலூர்
2. சேலம் - மேற்கு
3. சேலம் - வடக்கு
4. சேலம் - தெற்கு
5. வீரபாண்டி
6. எடப்பாடி

சென்ற தேர்தலில், K.V.தங்கபாலு இந்த தொகுதியிலிருந்து தெரிந்தெடுக்கப் பட்டார். இந்த தொகுதியில் இம்முறையும் இவரே நிறுத்தபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இம்முறையும் இங்கே அன்னைக்கும், அம்மாவுக்கும் போட்டி இருக்கும்.

கடந்த தேர்தல் முடிவுகள்.
தங்கபாலு (இ.தே.கா) - 444,591 - 59.93%
ராஜசேகரன் (அ.தி.மு.க) - 268,964 - 36.26%


- கார்த்திக்

10 Comments:

மானஸ்தன் said...

//அவர் கை ஆட்டி சென்றதை பலர் கை சின்னத்திற்கு வோட்டு கேட்டதாகவும், சிலர் டாடா காட்டிவிட்டு சென்றதாகவும் கூறுகின்றனர்.//

"brilliant பஞ்ச்" திரு கார்த்திக்.
++++++++++++++++++++++++++++


திரு தங்கபாலுவிடம் நிருபர்கள் கேள்வி.

நிருபர்: அய்யா ஏன் நீங்க பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து வருடங்களில் எதுவுமே பேசவில்லை?

தங்கபாலு: நான் "டாட்டா" காட்டிவிட்டு வந்தது உண்மைதான். அந்த சேலம் மக்களின் சாபத்தால் எனக்கு கடந்த 5 வருடங்களாக "பேச்சு" வரவில்லை. :-( அதனால்தான் இந்த முறையாவது பேசவேண்டும் என்பதற்காக "பரிகாரம்" தேட மீண்டும் அங்கேயே போட்டியிடுகிறேன்.

"மறப்போம்"-"மன்னிப்போம்" என்பதில் இந்தத் தமிழ் நாட்டு முட்டாள் மக்களுக்கு நிகர் இந்த ஏரேழு லோகத்திலும் யாரும் இல்லை. இதை அன்னை சோனியா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.

saikrishnamurari said...

please remove this post.he gave wrong informations.dmdk canditate name is mohanraj,salem-1 mla ravichandran not joined dmk.former salem-1 mla (admk) venkatachalam only joined dmdk.semmalai is famous canditate compare to thangabalu.semmalai is vanniar but thangabalu is not vanniar.vanniar is majarity in salem.valapadi ramamoorthy not independent, he cotested with admk alliance and won in 1998 but 1999 he lost,admk is storng in salem.not hung semmalai'll win.he won independently in mgr period

அன்பு ★ பிரபாகரன் ★ said...

கொடி போடுங்க..

இட்லி வடை சார். அப்புறம் எப்படி ?

R.Gopi said...

சேலம் - இட்லிவடை ஸ்பெஷல் கவரேஜ்

//காங்கிரஸ்:

தற்போது சிட்டிங் MP தங்கபாலு, இவர் வோட்டு கேட்க வந்ததோடு சரி என்று பலர் கூறுகின்றனர். அவர் கை ஆட்டி சென்றதை பலர் கை சின்னத்திற்கு வோட்டு கேட்டதாகவும், சிலர் டாடா காட்டிவிட்டு சென்றதாகவும் கூறுகின்றனர்.//

ஹா ஹா ஹா

//பேட்டியாளர்: உங்களுக்கு அ.தி.மு.க சவாலா இல்லை தி.மு.க சவாலா?
அ. ரா: சவாலா? அப்படியென்றால்?? எங்களுக்கு சவால் யாருமே இல்லை//

டேய், இது சவால் இல்லை, பெரிய சவடால் டோய்ய்ய்ய்ய்ய் ............

IdlyVadai said...

saikrishnamurari,

ஆமாம் தப்பாக தான் இருக்கு. நானும் சரி பார்க்கவில்லை. நன்றி.

கார்த்திக்,

உங்க பதிவை திருத்தி எனக்கு அனுப்புங்க. நன்றி

வண்ணத்துபூச்சியார் said...

Gold Balu க்கு டாட்டாதான்.

R.Gopi said...

"தல"யின் லேட்டஸ்ட் ஜல்லி பாத்தீங்களா??

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று கூறியுள்ளார்.

என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை.

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Krish said...

///இந்த தொகுதியில் இம்முறையும் இவரே நிறுத்தபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது////

தங்கபாலு பெயரை அறிவிச்சி ரொம்ப நாளாச்சே!

ந.லோகநாதன் said...

WHO WILL WIN? Please tell me that?

sakthin said...

salem, omalur, edapppadi are more vanniyar populated areas. So ADMK+ PMK alliance can help.I don't think congress has any standalone majority hereSelva ganapathy cn split some in favour of dmk from ADMK. Semmalai being vanniyar might play a major role than selvaganapthy's vote base.