பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 17, 2009

தேர்தல் களம் - 2009 - வசந்த் ஆதிமூலம்


தேர்தல் களம் - 2009 - என்ற தலைப்பில் வசந்த் ஆதிமூலம் எழுதி அனுப்பிய பதிவு

பரபரப்பான பேட்டிகள் , கலவரப்படுத்தும் கருத்துகணிப்புகள் , விமர்சனங்கள் , தேர்தல் அறிக்கைகள் இந்தியா முழுமையும் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது . தேசிய கட்சிகளின் செல்வாக்கு முற்றிலுமாக சரிந்து மாநில கட்சிகள் பெரும் செல்வாக்குடன் திகழ்கின்ற இத்தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாதவையாகவே இருக்கின்றது .

முடிவுகள் எப்படி இருப்பினும் நமக்கு (மக்களுக்கு) தேவையான மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணிக்கும் பின் அமையப்போகும் கூட்டணிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கத்தான் போகிறது .

அறுபது ஆண்டுகாலமாய் நாம் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகவே போய்கொண்டு இருக்கிறது . நாம் விரும்பும் அரசாங்கம் , நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாதவரை நாம் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளே . இருப்பினும் இத்தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்துதான் ஆகவேண்டும் .

இப்பொழுது பிரச்சனையே நாம் போடப்போகும் ஓட்டுகள்தான் . இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்தலை பற்றிய கணிப்பில் நாம் அளிக்கும் ஓட்டின் சதவிதம் 55 - 60 வரை மட்டுமே . நாம் விரும்பும் மாற்றத்தை இந்த சதவிதம் சத்தியமாய் தரமுடியாது . மாற்றத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்கள் ஓட்டே போடுவதில்லை என்பதே நிஜம் .

வாக்கு சதவிதத்தை கணிசமாக அதிகரிப்பது ஒன்றுதான் மாற்றத்திற்கான முதல் வழி. அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை என்பதும் நெஞ்சை சுடும் நிஜம் . வாக்குரிமையை கட்டாயமாக்கும் சட்டம் பற்றி பலர் பல குரலில் சொல்லியாயிற்று . நடக்காதது என்பதும் தெளிவாயிற்று .

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நல்லவர்களையும் , வாக்களிக்கவே சோம்பல்படும் உத்தமர்களையும் விட்டு விடுவோம் . இவர்கள் தவிர நிஜத்தில் ஒரு பகுதி என்னவென்றால், நம் மக்களில் வாக்கு அளிக்க விருப்பம் இருந்தும் வாக்களிக்க இயலாதவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் .

புரியவில்லையா...? படித்தவர்களும் , இளைஞர்களும் அதிகம் நிறைந்த நம் நாட்டில் இவர்களில் பெரும்பாலோர் வாக்களிப்பதில்லை . கிராமம் , சிற்றூர் , பேரூராட்சி , நகரம் , மாநகரம் என அனைத்து இடங்களிலும் உள்ள படித்த இளைஞர்களில் பெரும்பான்மையானோர் தனது சொந்த ஊர்களில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்திருப்பவர்கள் .

வெளியூர்களிலும் , வெளிநாட்டினிலும் வேலை பார்க்கும் இவர்களின் சதவிதம் ஏறக்குறைய 20 - 30 வரை இருக்கும் . எத்தனை பேர்களுக்கு இவர்களில் வாக்களிக்கும் வாய்ப்பு இருக்கும் ..? குடும்ப சூழல் , நெடுந்தூர இருப்பு இன்னும் பற்பல காரணங்கள் வாக்களிக்கமுடியாமைக்கு . எங்கு போய் கொட்டுவது இவர்களின் ஓட்டுகளை ..?

பொது அடையாள அட்டை, எங்கும் வாக்களிக்கும் உரிமை, அதற்கேற்ற தெளிவான செயல் திட்டங்கள், வாக்களிக்கும் அவசியம் பற்றிய சிறந்த பிரச்சாரம். நிச்சயம் மாற்றத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்டுவிடும் . இதற்கு அடுத்த கட்டமாக வாக்களிக்காத மற்றொரு பிரிவினரை வாக்கு சாவடிக்கு வரவழைக்கும் திட்டமாக இருக்கவேண்டும் .

பெண்கள் , முதியோர் இவர்கள் பெருமளவில் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையில் ஒருசில வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் . வாக்களிக்கும் உரிமை , தேவையற்ற பயம் இவற்றுக்கான விளக்கங்கள் சிறந்த முறையில் பிரசாரப்படுத்தவேண்டும் .

முதன்முறையாக வாக்களிப்போரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமானவையாக இருக்கும் . இவர்களை வாக்குசாவடிக்கு வரவழைக்கும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் .

படிப்படியாக இவற்றை சாத்தியமாக்கும் முயற்சி இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை , வலிமையான இந்தியாவை சினிமாவில் மட்டுமின்றி நேரிலும் காணலாம் .

நடக்கவே நடக்காது - என்று தெரிந்தும் பிரயாசையுடன் ,வாக்களிக்க வக்கற்ற ஓர் அப்பாவி இந்தியன் .
-தோழமையுடன் ,
வசந்த் ஆதிமூலம் .

(படம்: Times of India )

19 Comments:

Anonymous said...

உண்மை தான்.. அனைத்து படித்த , பணிபுரியும் இளைஞர் கூட்டம் அனைத்தும் இருப்பது தங்களின் சொந்த ஊர்களில் இருந்து வெகு தொலைவில். அரசாங்கம் அளிப்பதோ
ஒரு நாள் விடுமுறை. பின் எவ்வாறு நாம் ஊர் சென்று ஓட்டுப் போட்டுத் திரும்புவது?

இதே காரணத்தால் தான் என்னால் எனது ஓட்டை இந்த முறை பதிவு செய்ய இயலாது.
என்ன செய்ய Online-ல் வாக்கைப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

ஆனால் நம் அரசியல் வாதிகள் ஞானிகள்...! அப்படிப் பட்ட Online-voting-ஐ நடை முறைப் படுத்தினால், படித்த கூட்டம் அனைத்தும் வாக்களித்து விடும் என்ற பயம் .. பின் அவர்களின் பாடு திண்டாட்டம் தான்!!!!!!
ம்ஹூம்............ கனவுகள் எப்போதும் சுகமானவை தான்!!!!!!!!

வாருங்கள் கனவு காண்போம் !!!!!!!!! :)

Anonymous said...

இட்லி வடையாரே!

1. உங்க கேள்வி பதில் பதிவு ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை ?

2. சர்தாஜி - சிதம்பரம் - செருப்பு உங்க கருத்து என்ன ?

3. கையும் களவுமாக மாட்டினால் என்ன செய்வீர்கள் ?

4. தமிழ் நாட்டில் இந்த தேர்தலில் அம்மா கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? அய்யா கூட்டணிக்கு எவ்வளாவு சீட் கிடைக்கும் ?

5. நேற்று ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்த விழாவை ஜெயா டிவியில் நேரடி ஒளிபரப்பை பார்த்தீர்களா ?

6. தேர்தல் டீம் உறுப்பினர்கள் ஏன் பதிவு எழுதுவதில்லை ?

Anonymous said...

ஒரு வேளை தி.மு.க இந்த தேர்தலில் வெற்றி கணிசமான வெற்றி பெற்று மத்தியில் காங்கிரசும் வெற்றி பெற்று விட்டால் கருணாநிதியின் செயல் திட்டங்கள் எப்படி இருக்கும் .

1) தி.மு.க பொது குழு கூடி மாவீரன் அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கு மதிய காபினெட் மந்திரி பதவி கொடுக்க முடிவெடுக்கும் .
2) கனிமொழியின் இதனை வருட அரசியல் மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டின்படி அவருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் .
3) கலைஞரின் உடல் நலம் கருதி தி.மு.க பொது க்குழு ஸ்டாலினை முதல் மந்திரியாக்க முன் மொழியும்.
4) அழகிரி அல்லது ஸ்டாலின் மகன்கள் இருவரில் ஒருவர் தி.மு.க இளைஞர் அணி செயலாளராக நியமிக்கபடுவார்கள்.
5) பழையபடி தயாநிதி தொலை தொடர்பு துறை மந்திரியாக்கப்படுவார்.
6) இருவரில் ஒருவர் தி.மு.க இளைஞர் அணி செயலாளராக நியமிக்கபடுவார்கள்.
5) பழையபடி தயாநிதி தொலை தொடர்பு துறை மந்திரியாக்கப்படுவார்.
6) அழகிரியின் மகள் மகளிர் அணி தலைவியாக நியமிக்க படுவார்
7) கலைஞர் ஈழ தமிழருக்காக கடிதமும் , கவிதையும் எழுதிகொண்டே இருப்பார்
8) ஜெயா மற்றும் வைகோ விருக்கு எதிராக தினம் ஒரு அறிக்கை வெளிஇட்டு கொண்டு இருப்பார்.

குடும்பத்தை செட்டில் பண்ணிய சந்தோஷத்தில் 'கண்கள் பனிக்கும் இதயம் இனிக்கும்'

Anonymous said...

(1) வட சென்னை

1.டி.கே.எஸ்.இளங்கோவன் -(தி.மு.க.)

2. தா.பாண்டியன்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)

3.டாக்டர்தமிழிசை சவுந்தர ராஜன்- பா.ஜ.க.

4. வி.யுவராஜ்-(தே.மு.தி.க.)

5. எம்.பி.ஸ்ரீதரன்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(2) மத்திய சென்னை

1. தயாநிதி மாறன் -(தி.மு.க.)

2. முகம்மது அலி ஜின்னா -(அ.தி.மு.க.)

3.வி.வி.ராமகிருஷ்ணன்- (தே.மு.தி.க.)

4. எஸ்.ஹைதர்அலி- (மனிதநேய மக்கள் கட்சி)

5. யூனிஸ்கான்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(3) தென் சென்னை

1. ஆர்.எஸ்.பாரதி-(தி.மு.க.)

2. சிட்லபாக்கம் ராஜேந்திரன்-(அ.தி.மு.க.)

3. இல.கணேசன்-பா.ஜ.க.

4. வி.கோபிநாத்- (தே.மு.தி.க.)

5. சந்தான கிருஷ்ணன்- (சமாஜ்வாடி)

(4) திருவள்ளூர் (தனி)

1. காயத்ரி ஸ்ரீதரன்- (தி.மு.க.)

2.டாக்டர்வேணுகோபால்- (அ.தி.மு.க.)

3. ஆர்.சுரேஷ்-(தே.மு.தி.க.)

4. வக்கீல் ஆனந்தன்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(5) காஞ்சீபுரம்

1.டாக்டர்இ.ராமகிருஷ்ணன்- (அ.தி.மு.க.)

2. டி.தமிழ்வேந்தன்- (தே.மு.தி.க.)

(தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை)

(6) ஸ்ரீபெரும்புதூர்

1. டி.ஆர்.பாலு-(தி.மு.க.)

2. ஏ.கே.மூர்த்தி-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3.அருண்சுப்பிரமணியன்- (தே.மு.தி.க.)

4. ராஜப்பா- (பகுஜன் சமாஜ் கட்சி)

(7) அரக்கோணம்

1. எஸ்.ஜெகத்ரட்சகன்- (தி.மு.க.)

2. அரங்கவேலு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. லயன் எஸ்.சங்கர்- (தே.மு.தி.க.)

4.பேராசிரியர் மேரிஜான்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(8) வேலூர்

1. அப்துல் ரஹ்மான்- மு.லீக் (தி.மு.க. கூட்டணி)

2. எல்.கே.எம்.பி.வாசு- (அ.தி.மு.க.)

3. எஸ்.சவுகத் ஷெரீப்- (தே.மு.தி.க.)

4. கே.ராஜேந்திரன்- பா.ஜ.க.

5. மன்சூர் அகமது- (பகுஜன் சமாஜ் கட்சி)

(9) கள்ளக்குறிச்சி

1. ஆதிசங்கர்-(தி.மு.க.)

2. கோ.தன்ராஜ்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. எல்.கே.சுதீஷ்- (தே.மு.தி.க.)

4. செந்தில்குமார்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(10) சேலம்

1. கே.வி.தங்கபாலு-காங். (தி.மு.க. கூட்டணி)

2. செ.செம்மலை- (அ.தி.மு.க.)

3. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்- (தே.மு.தி.க.)

4. பாலசுப்பிரமணியன்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(11) தர்மபுரி

1. தாமரைச்செல்வன்- (தி.மு.க.)

2. இரா.செந்தில்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. டாக்டர் வி.இளங்கோவன்- (தே.மு.தி.க.)

4. புருஷோத்தமன் (முன்னாள் எம்.எல்.ஏ.- பகுஜன்சமாஜ்கட்சி)

(12) கிருஷ்ணகிரி

1. இ.ஜி.சுகவனம்-(தி.மு.க.)

2. கே.நஞ்ஜே கவுடு- (அ.தி.மு.க.)

3. பி.டி.அன்ரசன்- (தே.மு.தி.க.)

4. ஜி.பாலகிருஷ்ணன்- (பா.ஜ.க.)

5. வி.வி.மூர்த்தி- (பகுஜன் சமாஜ் கட்சி)

(13) கோவை

1. ஆர்.பிரபு-(காங்)

2. ஆர்.பாண்டியன்- (தே.மு.தி.க.)

3. பி.ஆர்.நடராஜன்- (மார்க்சிஸ்ட் கம்யூ.)

4. ஜி.கே.செல்வக்குமார்- (பா.ஜ.க.)

5. கதிர்மணி-(சமாஜ்வாடி)

6. ராமசுப்பிரமணியம்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(14) நீலகிரி (தனி)

1. ஆ.ராசா-(தி.மு.க.)

2. டாக்டர் கிருஷ்ணன்- ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. எஸ்.செல்வராஜ்- (தே.மு.தி.க.)

4. குருமூர்த்தி-(பா.ஜ.க.)

(15) திருப்பூர்

1. கார்வேந்தன்-காங்.

2. திருப்பூர் சிவகாமி- (அ.தி.மு.க.)

3. ந.தினேஷ்குமார்- (தே.மு.தி.க.)

(16) நாமக்கல்

1. செ.காந்திசெல்வன்- (தி.மு.க.)

2. வெ.வைரம் தமிழரசி- (அ.தி.மு.க.)

3. என்.மகேஷ்வரன்- (தே.மு.தி.க.)

(17) பொள்ளாச்சி

1. ம.சண்முகசுந்தரம்- (தி.மு.க.)

2. கே.சுகுமார்-(அ.தி.மு.க.)

3. கே.பி.தங்கவேல்- (தே.மு.தி.க.)

4. வி.எஸ்.ரமேஷ்-(பா.ஜ.க.)

5. கோவை இ.உமர்-(மனித நேய மக்கள் கட்சி)

(18) ஈரோடு

1.கணேசமூர்த்தி-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)

2.கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன்- (தே.மு.தி.க.)

3. என்.பழனிச்சாமி- (பா.ஜ.க.)

(19) திருவண்ணாமலை

1. த.வேணுகோபால்- (தி.மு.க.)

2. ஜெ.குரு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. எஸ்.மணிகண்டன்- (தே.மு.தி.க.)

4. ஆதிவெங்கடேசன்- (சமாஜ் கட்சி)

(20) ஆரணி

1. கிருஷ்ணசாமி- காங்.

2. சுப்பிரமணி (அ.தி.மு.க.)

3. மோகன் - (தே.மு.தி.க.)

4. சங்கர்-(பகுஜன் சமாஜ் கட்சி)

(21) சிதம்பரம் (தனி)

1. தொல்.திருமாவளவன்- விடுதலை சிறுத்தை (தி.மு.க. கூட்டணி)

2. பொன்னுசாமி- பா.ம.க.(அ.தி.மு.க. கூட்டணி)

3. சபா.சசிகுமார்- (தே.மு.தி.க.)

4. ராஜேந்திரன் (முன்னாள் எம்.எல்.ஏ.)-(பகுஜன் சமாஜ் கட்சி)

(22) கடலூர்

1. கே.எஸ்.அழகிரி- காங்.

2. எம்.சி.சம்பத்- (அ.தி.மு.க.)

3. எம்.சி.தாமோதரன்- (தே.மு.தி.க.)

(23) மயிலாடுதுறை

1. மணிசங்கர் அய்யர்- காங்.

2. ஓ.எஸ்.மணியன்- (அ.தி.மு.க.)

3. ஜி.கே.பாண்டியன்- (தே.மு.தி.க.)

4. டாக்டர் எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா- (மனிதநேய மக்கள் கட்சி)

5. சப்தரிஷி-(பகுஜன் சமாஜ் கட்சி)

(24) பெரம்பலூர்

1. து.நெப்போலியன்- (தி.மு.க.)

2. கே.கே.பாலசுப்பிர மணியன்-(அ.தி.மு.க.)

3. துரை.காமராஜ்- (தே.மு.தி.க.)

4. சுந்தரவிஜயன்- (சமாஜ்வாடி)

5. செல்வராஜ்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(25) கரூர்

1. கே.சி.பழனிச்சாமி- (தி.மு.க.)

2. மு.தம்பித்துரை- (அ.தி.மு.க.)

3. ஆர்.ராமநாதன்- (தே.மு.தி.க.)

4. தர்மலிங்கம்-(பகுஜன் சமாஜ் கட்சி)

(26) தஞ்சை

1. எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்- (தி.மு.க.)

2. துரை.பாலகிருஷ்ணன்-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. டாக்டர் ப.ராமநாதன்- (தே.மு.தி.க.)

4. எஸ்.வீரமணி- (சமாஜ்வாடி)

(27) திருச்சி

1. சாருபாலா தொண்டமான்- காங்.

2. ப.குமார்- (அ.தி.மு.க.)

3. ஏ.எம்.ஜி.விஜயகுமார்- (தே.மு.தி.க.)

4. லலிதா குமாரமங்கலம்- (பா.ஜ.க.)

5. ஆர்.ராதாராஜ்- (சமாஜ்வாடி)

6. கல்யாணந்தரம்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(28) விழுப்புரம் (தனி)

1. எம்.ஆனந்தன்- (அ.தி.மு.க.)

2. பி.எம்.கணபதி- (தே.மு.தி.க.)

3. வக்கீல் துரைசாமி- விடுதலை சிறுத்தை (தி.மு.க. கூட்டணி)

(29) நாகை (தனி)

1. ஏ.கே.எஸ்.விஜயன்- (தி.மு.க.)

2. எம்.செல்வராஜ்-இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)

3. மகா.முத்துக்குமார்- (தே.மு.தி.க.)

(30) மதுரை

1. மு.க.அழகிரி- (தி.மு.க.)

2. பி.மோகன்- மார்க்சிஸ்ட் கம்யூ. (அ.தி.மு.க. கூட்டணி)

3. கா.கவியரசு- (தே.மு.தி.க.)

4. தர்பார் ராஜா- (பகுஜன் சமாஜ் கட்சி)

(31) சிவகங்கை

1. ப.சிதம்பரம்- காங்.

2. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்- (அ.தி.மு.க.)

3. டாக்டர் பர்வத ரெஜினா பாப்பா- (தே.மு.தி.க.)

4. எம்.ஜி.தேவர்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(32) ராமநாதபுரம்

2. கே.சிவக்குமார் என்கிற ஜெ.கே.ரித்தீஷ்- (தி.மு.க.)

3. வ.சத்தியமூர்த்தி- (அ.தி.மு.க.)

4. திருநாவுக்கரசர்- (பா.ஜ.க.)

5. சிங்கை ஜின்னா- (தே.மு.தி.க.)

6. எஸ்.சலீமுல்லாகான்- (மனிதநேய மக்கள் கட்சி)

7. எஸ்.கிருஷ்ணகாந்தன் யாதவ்- (சமாஜ்வாடி)

8. பிரிசில்லாபாண்டியன்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(33) விருதுநகர்

1. வைகோ- (ம.தி.மு.க.)

2. வி.சுந்தரவடிவேலு- காங்.

3. மா.மா.க. பாண்டியராஜன் (தே.மு.தி.க.)

4. கனகராஜ்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(34) தேனி

1. ஆரூண்- காங்.

2. தங்கதமிழ்ச்செல்வன்- (அ.தி.மு.க.)

3. எம்.சி.சந்தானம்- (தே.மு.தி.க.)

4. இளையராஜா- (பகுஜன் சமாஜ் கட்சி)

(35) திண்டுக்கல்

1. என்.எஸ்.சித்தன்- காங்.

2. பி.பாலசுப்பிரமணி- (அ.தி.மு.க.)

3. ப.முத்துவேல்ராஜ்- (தே.மு.தி.க.)

4. வீரலோகநாதன்- (சமாஜ்வாடி)

5. சீனிவாசபாபு- (பகுஜன் சமாஜ் கட்சி)

(36) நெல்லை

1. ராமசுப்பு-காங்.

2. கே.அண்ணாமலை- (அ.தி.மு.க.)

3. எஸ். மைக்கேல் ராயப்ப்ன் (தே.மு.தி.க.)

(37) தென்காசி

1. வெள்ளைப்பாண்டி- காங்.

2. பொ.லிங்கம்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)

3. க.இன்பராஜ்- (தே.மு.தி.க.)

4. டாக்டர் கிருஷ்ணசாமி- (புதிய தமிழகம்)

5. எம்.ஜோதிராஜ்- (சமாஜ்வாடி)

(38) தூத்துக்குடி

1. எஸ்.ஆர்.ஜெயதுரை- (தி.மு.க.)

2. டாக்டர் சிந்தியா பாண்டியன்- (அ.தி.மு.க.)

3. எம்.எஸ்.சுந்தர்- (தே.மு.தி.க.)

4. ஜீவன்குமார்- (பகுஜன் சமாஜ் கட்சி)

(39) கன்னியாகுமரி

1. ஜெ.ஹெலன் டேவிட்சன்- (தி.மு.க.)

2. ஏ.வி.பெல்லார்மின்- மார்க்சிஸ்ட் கம்யூ.(அ.தி.மு.க. கூட்டணி)

3.பொன்.ராதா கிருஷ்ணன் -(பா.ஜ.க.)

4. எஸ்.ஆஸ்டின்- (தே.மு.தி.க.)

5. சிவகாமி (பகுஜன் சமாஜ் கட்சி)

(40) புதுச்சேரி

1. நாராயணசாமி- காங்.

2. பேராசிரியர் மு.ராமதாஸ்- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

3. கே.ஏ.யு. அசனா- (தே.மு.தி.க.)

4. விஸ்வேஷ்வரன்- (பா.ஜ.க.)

Anonymous said...

தூத்துகுடி மாவட்டம் உடன்குடியில் விஜயகாந்த் பிரசாரம். 'என் குழந்தைக்கு நீங்கதான் பேர் வைக்கணும்!' என்று தன் மூன்று வயதுப் பெண் குழந்தையை அவரிடம் கொடுத்தார் ஒரு அம்மணி. 'இன்னுமா இந்தக் குழந்தைக்குப் பேர் வைக்கலை?' என அதிர்ச்சி காட்டிய கேப்டன், பிறகு வைத்த பெயர் பிரேமலதா!

IdlyVadai said...

அனானி

கேள்விகளுக்கு சனிக்கிழமை பதில் சொல்லுகிறேன்.
நன்றி
இட்லிவடை

மற்றவர்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் அதையும் இங்கேயே கேட்கலாம்.

sundaikai said...

வசந்த் அவர்களே நீங்க போன தேர்தல் சமயத்திலே வாக்குச்சாவடிக்கு போனீங்களா? சும்மா கழககண்மணிகள் பூத் வாசலிலே ஆண், பெண், வயதானவர்கள் என்று பார்க்காமல் கேவலமா நடுந்துகிடாங்க. அங்கே இருந்த காவலர்கள் பெண்களிடம் ஏன் மா நீங்க ஒட்டு போட வந்தீங்க இங்க தான் அடி தடி நடுகுதில்லே... சட்டம் தன் கடமையைசெவ்வன்னே செய்தது (துட்டு சார் துட்டு அரசன் முதல் ஆண்டி வரை வாங்கி வாங்கி கைகள் செவந்து புடுச்சுன்னா பார்துகிடங்க)

மானஸ்தன் said...

"எந்த" சனிக்கிழைமை? :-D :-)

Anonymous said...

என்னுடைய ஒரே கேள்வி

நீங்க தான் எ.அ.பாலா என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி இருக்க ஏன் பதிவு எழுதிய பின் "Test Comment" போடுவதில்லை ?

IdlyVadai said...

//"எந்த" சனிக்கிழைமை? :-D :-)//

இன்னும் 6 மணி நேரத்தில் வரும் சனிக்கிழமை. மொத்தம் 7 கேள்விகள் தான் வந்திருக்கிறது அட்லீஸ்ட் 10 வந்தால் நல்லா இருக்கும் :-)

மானஸ்தன் said...

சரி. இதோ மிச்ச மூணு கேள்விகள்!

(1)
////நிச்சயம் தென் சென்னை திமுகவுக்கு தான்.////
தென் சென்னைக்கு ஏன் இன்னும் கருப்பு-செவப்பு கொடி போடலை?

(2)
செய்தி: 4 வருஷம் கிரிக்கெட் ஆடிய தோனிக்கும், பல "கலர்" படங்களில், "பச்சையான" சிரிப்பு வசனங்களைப் பேசி சிந்தனையைத் தூண்டிய "சின்னக் கலைவாணருக்கும்" விருது!!!

"பத்ம" விருதுகள் ராணுவ அதிகாரிகளுக்கும், நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்கும் மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்பது என் கருத்து. நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

(3)
உங்களின் உண்மையான பெயர் என்ன? வீடு எந்த ஏரியா-ல இருக்கு?? யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டாங்க!! தைரியமா சொல்லுங்க!
:-D :-)

ஒரு வேளை இதுல ஏதாவது கேள்விய சாய்ஸ்-ல விட்டா (விடுவீங்க, தெரியும்), இருக்கட்டுமேன்னு இந்த கடைசிக் கேள்வி.

(4)
செய்தி
"IIT-JEE pattern change springs surprise"
முன் அறிவிப்பு இல்லாமல் இந்த மாதிரி மாற்றங்கள் செய்வது சரியா? ஏற்கனவே நமது மாணவ-மாணவிகள் மிகவும் "மன-அழுத்தத்திற்கு" உள்ளாக்கப் பட்டு உள்ளார்கள். இந்த கூடுதல் அழுத்தம் தேவையா?

Krish said...

இட்லி வடை கேள்விகள்:

௧. தோனி, ஹர்பாஜன் சிங்க் பத்மஸ்ரீ விருது வாங்க வராமல் புறக்ககனிட்ட்தது பற்றி?

௨. தற்போது MLA வாக இருக்கும் சிலர் , MP க்கு போட்டியிடுவது பற்றி? அவர்கள் ஜெயித்தால் MLA பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? மறுபடி தேர்தல். ஷிட்!

sundaikai said...

என்னபா இவ்வளவு easy-aana கேள்விகள் கேக்கறீங்க ?

அடுத்து அரசமைக்கபோவது யாரு? அவர்கள் எவ்வளவு சுருட்டுவார்கள்?
யாருக்கு தேபோசிட் காலியாகும்?
தமிழ்கத்தில் சட்டம் ஒழுங்கு உருப்புடியகுமா?
விலைவாசி குறைய chance-உண்டா?
லஞ்சத்திற்கு discount குடுப்பார்களா?
எந்த சாதி மற்றும் மதத்திற்கு அதிக ஒதுக்கீடு கொடுக்கப்படும்?

hari said...

எல்லோரும் ஒட்டு போட்டால் என்ன ஆகும்? திரும்பவும் தி மு க வும் ஆ தி மு க வும் தான் வரும். அது அல்ல தீர்வு. ஒரு தொகுதியில் 50% அதிகமான வாக்குகள் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கவேண்டும். அல்லது அந்த வேட்பாளர்களின் சொந்த செலவிலேயே திரும்பவும் தேர்தல் வைக்கவேண்டும. எந்த MP or MLA ராஜினாமா செய்தாலும் அந்த கட்சி செலவிலேயே திரும்பவும் தேர்தல் வைக்கவேண்டும். வாக்கு போடும்போது எந்த கட்சிக்கும் வோட்டளிக்க விருப்பம் இல்லை என்ற பொத்தான் வைக்கவேண்டும். அதுவும் ரகசியமாக செய்ய வாய்ப்பு இருக்க வேண்டும்.
இட்லி வடைக்கு கேள்வி
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இந்த இரு கட்சிகளும் இதனை செல்வாக்கோடு இருக்கும்?
அரசியல் வாதிகள் எபபோதுதான் கருத்து மோதல்கள் நடத்துவார்கள்?
ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே மேடையில் அமர்ந்து எப்போது விவாதம் செய்வார்கள்?
-ஹரி

Baski said...

இம்முறை ஏன் பா.ஜ.க./அ.தி.மு.க இந்த கூட்டணி அமையவில்லை?
பா.ஜ.க. தான் அ.தி.மு.க வேண்டாம் என முடிவெடுத்து தனியாக களத்தில் இறங்குகிறதா?

Tell your views/assumptions.

Prabhu Swaminathan said...

good article...

I was upset that I will not be able to vote in this election since i am not in India. But by god's grace i am traveling back in may and will be in Tamilnadu to vote on 13th!

Prabhu Swaminathan said...

//கலைஞரின் உடல் நலம் கருதி தி.மு.க பொது க்குழு ஸ்டாலினை முதல் மந்திரியாக்க முன் மொழியும்.

Ithai naan chinna vaisula irunthu keetutu iruken sir...innum konja varushathula naane retired aiduven..

வசந்த் ஆதிமூலம் said...

ஒரு சாதாரண குடிமகனின் (நம்மை போன்ற ) அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த கடமை என்ன ? வாக்களிப்பதே கடினம் என்ற சூழலில் கேள்வி கேட்பதும் கருத்து சொல்வதும் தவிர நாம் செய்ய வேண்டியவை என்ன ?

R.Gopi said...

தேர்தல் கூட்டணி - களவாணி கயவர்கள்

அரசியல் ஆடுகளம்
ஆனதிங்கு போர்க்களம்

கடலென ஓடும் கள்ளப்பணம்
அவை அனைத்தும் நம் வரிப்பணம்

ஏழைகளின் வயிற்றில் அடித்து சேர்த்தது
மொத்தமும் டாஸ்மாக் கடைக்கு போய் சேர்ந்தது.

எங்கெங்கு காணினும், பார்க்கும் இடமெங்கும் வண்ண வண்ண போஸ்டர்கள்
இருக்கும் ஏழை பாழைகளுக்கு என்ன செய்தார்கள் இந்த போஸ்டர் மாஸ்டர்கள்?

களவாணி கயவர்கள், பல கரைவேட்டிகளில்
பட்டி தொட்டியெங்கும், பலபல தட்டிகளில்

நேற்றுவரை வசைபாடிய எல்லோரின் வாய்கள்
நம்மை பார்த்து, கூசாமல் கூப்புது கைகள்

எதிரே நின்றவனை ஏசி ரூமில் இருந்து ஏசியவர்கள்
இன்று அதே ஏசி ரூமில் கூட்டணிக்கு பேசுவார்கள்

கையில் உருப்படியாய் இருக்கும் நம் ஓட்டை
துருப்பாய் வைத்து ஆடுவோம் வேட்டை

நம் கைகளில் இருக்கும் அந்த துருப்பு சீட்டை
வைத்து, பிடிப்போம் கள்ளர்களின் கழுத்தை

சிறிது அசந்தாலும், நம் ஓட்டு நம்மிடம் இல்லை
தெளிவாய் இல்லையேல், நாமே நம்மிடம் இல்லை.

பிடிப்பார்கள் கள்ளர்கள் நம்ம ஊரு கோட்டை
பிடித்ததும் போடுவார்கள் நாட்டை - ஆட்டை!!

மக்களே பாருங்கள் களவாணிகளின் கூட்டணி
பார்த்ததும் சொல்லுங்கள், மவனே மாட்டுனடா நீ ............

http://edakumadaku.blogspot.com/2009/03/blog-post_23.html