பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 12, 2009

தேர்தல் 2009 - கோவை யாருக்கு


வட சென்னையை தொடர்ந்து இன்று கோவை...

கோவை பாராளுமன்றத் தொகுதியில் தற்போது உள்ள தொகுதிகள்

1. சூலூர்
2. கவுண்டம் பாளையம்,
3. கோவை வடக்கு ,
4. கோவை தெற்கு,
5. பல்லடம்,
6. சிங்காநல்லூர்.

கோவை மக்களவையில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில், தற்போது 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன.

1952-ல் துவங்கி 2004 வரை நடந்த பொதுத் தேர்தல்களில் கோவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 5 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 4 முறை, திமுக, பாஜக தலா 2 முறை, மார்க்சிஸ்ட் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இங்கே இரட்டை இலை வென்றதே கிடையாது.

1996 தேர்தலுக்குப் பிறகு கோவை தொகுதி கிடைத்திருப்பதால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இது "கெளரவ' தொகுதியாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் சி.கே.குப்புசாமி இங்கு மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது உறவினரான சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் இருமுறை இத்தொகுதியின் எம்.பி ஆகியுள்ளார்.


2004 முடிவுகள்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 504981 57 %
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 340476 39 %
18% வித்தியாசம்

1999 முடிவுகள்:
ராதா கிருஷ்ணன் பா.ஜ.க 430068 49 %
நல்லக்கண்ணு சி.பி.ஐ 375991 43 %
6% வித்தியாசம்.

2004 தொகுதி முடிவுகள்

சிங்காநல்லூர்.
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 106004
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 61772
வித்தியாசம் 26% ( இங்கே மதிமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது )

கோவை மேற்கு
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 40471
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 35678
வித்தியாசம் 6%

கோவை கிழக்கு
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 47961
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 30591
வித்தியாசம் 22%

பேரூர்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 101089
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 67122
வித்தியாசம் 20%

பல்லடம்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 79777
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 55994
வித்தியாசம் 27%

திருப்பூர்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 128325
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 89253
வித்தியாசம் 18%

2004 முவுகளை பார்க்கும் போது அதிமுக கூட்டணிக்கு 39% சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளது என்று தெரிகிறது (பிஜேபிக்கு 5% ஓட்டு வங்கி இருக்கிறது என்று வைத்துக்கொண்டால்).

கோவையில் கட்சிகளின் நிலவரம்:

அதிமுக - 35%
திமுக - 36%
கம்யூனிஸ்ட் - 10-12% ( தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி )
காங்கிரஸ் - 10-11%
பிஜேபி - 5% (தற்போது நிச்சயம் 2-3% குறைந்திருக்கும் )
தேமுதிக - ?

1970களில் ~65% சதவிகிதம் பதிவான ஓட்டுகள், கடந்த இரண்டு தேர்தல்களில் 55% சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இந்த முறை 60% மேல் பதிவாகும் என்று எண்ணுகிறேன், பார்க்கலாம்.


பழைய முடிவுகள் பார்க்கும் போது மதிமுகவிற்கு சில இடங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தேமுதிகவிற்கு என்ன செல்வாக்கு என்று தெரியவில்லை. பாமகவிற்கு இங்கே செல்வாக்கு கிடையாது(கோவை மக்கள் புத்திசாலிகள்).


2009 எப்படி இருக்க போகிறது ?

அதிமுக கூட்டணி 47-51%
திமுக - 44-47%%

தேமுதிக ஓட்டை பிரித்தாலும், இங்கே அதிமுக கூட்டணி தான் வெற்றி பெரும்.


M.Kannan கருத்து

கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் ஒரு புறம் இருந்தாலும். இந்த முறை கோவையில் உள்ள நடுத்தர மக்கள் மற்றும் சிறு தொழில் அதிபர்கள் ஓரே அணியில் திரள உள்ளனர். ஏனென்றால் கரண்ட் கட் தமிழகத்தில் எங்கு என்ன பாதிப்பு என்று தெரியாது. ஆனால் கோவையில் அதன் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று தெருவிற்கு வந்துள்ளனர். பல தொழிலதிபர்களும் தங்களது லாபத்தில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். மின்சாரத்தையே நம்பியிருக்கும் பல தொழிற்சாலைகள் ஏற்றுமதி வாய்ப்பை இழந்துள்ளது. இதன் பிரதிபலிப்பு பல முறை ஆயிரக்கணக்கான சிறு தொழில் அதிபர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற எதிர்ப்பு இயக்கம் இந்திய அளவில் பதிவு செய்யப்பட்டது. அதன் தாக்கம் இந்த தேர்தலில் இருக்கும். அது திமுக, காங்கிரஸ் கூட்டணியை கதிகலங்க செய்யும்.
மேலும் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தமிழகத்தில் மற்ற நகரங்களை விட தொழில் நகரான கோவையை ஒரு அசை அசைத்து பார்த்திருக்கிறது. வெளி நாட்டு கார் நிறுவனங்களுக்கான உதிரி பாகம் தயாரித்து அனுப்புவது தொடங்கி, பவுண்டரி, இஞ்சினியரிங் என பல தொழில்களின் பேஸ் மட்டம் ஆட்டம் கண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய காங்கிரஸ் அரசு 1991 களில் ஆரம்பித்து வைத்த புதிய பொருளாதர கொள்கைதான் அடித்தளம் அமைத்து ஆசிர்வாதம் செய்தது என்பதை பல போராட்டங்களில் பெரும் தொழில் அதிபர்கள் எடுத்துரைத்துள்ளனர். இந்த நினைவலைகள் அனைத்தும் கடந்த ஒரு வருடாக மேலேழுந்து வந்தது. இதற்கெல்லாம் தீர்வு காண தற்போது சரியான நேரம் கிடைத்திருக்கிறது என்று தொழில் அதிபர்களும் முடிவுக்கு வந்துள்ளனர். அதற்கு ஓரே வழி தற்சமயம் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்புவதுதான் என்பது இந்த மக்களின் மனதில் பதிந்துள்ளது. இது கோவை நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவை 47 சதவீதம் தீர்மானிக்கும்.34 Comments:

ரஜினி ரசிகன் said...

ரொம்ப சீரியஸ், ரொம்ப மொக்கை எல்லாம் பிடிக்காது. மானே, தேனே என்று இலக்கிய நடையோடு பேசுவதும் சுத்தமா பிடிக்காது. ஸோ, அதெல்லாம் இங்கே கிடையாது. ஒன் & ஒன்லி டைம்பாஸ். இட்லிவடை, இப்போ ரொம்ப சீரியஸா வேலை பாத்துக்கிட்டு இருக்கே?

R.Gopi said...

//2009 எப்படி இருக்க போகிறது ?

அதிமுக கூட்டணி 47-51%
திமுக - 44-47%%

தேமுதிக ஓட்டை பிரித்தாலும், இங்கே அதிமுக கூட்டணி தான் வெற்றி பெரும்.//

************

அட்ரா அட்ரா அட்ரா சக்கை.

மானஸ்தன் said...

வணக்கம் இட்லி வடை!
கோவை அலசலுக்கு நன்றி........என் சில கருத்துக்கள்!

////
அதிமுக - 35%
திமுக - 36%
கம்யூனிஸ்ட் - 10-12% ( தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி )
காங்கிரஸ் - 10-11%
பிஜேபி - 5% (தற்போது நிச்சயம் 2-3% குறைந்திருக்கும் )
தேமுதிக - ?
///

இந்த சதவீதக் கணக்கு உதைக்கிறது! கடந்த 20 ஆண்டுகளில் எந்தக்கழகமும் தனியாக எந்தத் தேர்தலையும் சந்தித்தது இல்லை...அப்படி இருக்க, 35%, 36% என்பதெல்லாம் வெறும் ஊகமாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் வாதம்..

ம.தி.மு.க. என்ற கட்சியையே காணவில்லை என்று அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன! அப்படி இருக்க, தங்களின் ////பழைய முடிவுகள் பார்க்கும் போது மதிமுகவிற்கு சில இடங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது.//// என்ற statement வியப்பை அளிக்கிறது...

மேலும், வேட்பாளர்களின் (பண)பலமும், கூடவே இருந்து குழி பறிக்கும் செயல்களும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் திரு பிரபு இங்கு நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. CPIM வேட்பாளர் திரு நடராஜன் பற்றி பெரிதாக அறியப்படவில்லை. தொகுதி மக்களுக்கு அவர் நல்ல பரிச்சயம் ஆக இருக்கலாம். திரு விஜயகாந்த் வேட்பாளர் கடந்து சட்டப் பேரவை முடிவுகளை வைத்துப் பார்த்தால் கணிசமாக ஓட்டுகளைப் பிரிப்பார் என்றே தோன்றுகிறது.

கடைசியாக உங்களின் //அதிமுக கூட்டணி 47-51%, திமுக - 44-47%%// கருத்தும் இந்த "contest" ரொம்ப கடுமையாக இருப்பதைக் காட்டுகிறது.

இதை முடிக்கும் முன், இரண்டு விஷயம்!
(1) நீங்க போட்ட அந்த "இலை" ரொம்ப மங்கலாக இருக்கு....was it intentional?? :-

(2) தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன் எந்தக் கட்சி யாருடன் இருக்கும் என்று கணிப்பது கடினம்! அதனால் "அந்த அந்த" கட்சியின் சின்னங்களையே போடுவதுதான் உசிதமாக இருக்கும்!!

(3)
//பாமகவிற்கு இங்கே செல்வாக்கு கிடையாது(கோவை மக்கள் புத்திசாலிகள்).//
இந்தக் கருத்து முழுமையாக ஏற்புடையதல்ல. தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் "கேவலமான" அரசியல் கட்சிகளையும், மட்டமான அரசியல் வியாதிகளையும் மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுத்து அனுப்புகிறார்கள்.....தமிழ்குடிதாங்கி கண்டிப்பாக பச்சோந்தி தான். ஆனாலும், அவரை மாறி மாறி "கட்டி அணைக்கும்" கழகங்களும், காங்கிரசும் அதே ரகத்தை சேர்ந்தவைதான் கண்டிப்பாக.

மொத்தத்தில் "எல்லாக் கட்சிகளும்" சாக்கடையில் ஊறிய மட்டைகள்தான்!! மக்கள் "நாற்றம்" குறைவான மட்டையை தேர்ந்து எடுத்து, மறக்காமல் "நன்றாக" கழுவி பின் பயன்படுத்த வேண்டும்.

அந்த நன்நாள் என்னாளோ!!

மானஸ்தன் said...

இட்லிவடை அவர்களே!
uniform-ஆ எல்லாக் கட்சிக்கும் கொடிய போடுங்க. சின்னம் வேண்டாம்.

btw, இப்போ இல்லை கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கு! :-D :-)

IdlyVadai said...

//இந்த சதவீதக் கணக்கு உதைக்கிறது! கடந்த 20 ஆண்டுகளில் எந்தக்கழகமும் தனியாக எந்தத் தேர்தலையும் சந்தித்தது இல்லை...அப்படி இருக்க, 35%, 36% என்பதெல்லாம் வெறும் ஊகமாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் வாதம்..//

என் ஊகம் தான் இது. 2004ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது பிஜேபிக்கு கிடைத்தது 38.74% அப்படி பிஜேபிக்கு 5% வாக்கு வங்கி இருக்கு என்று வைத்துக்கொண்டால் அதிமுகவிற்கு இருக்கும் செல்வாக்கு 34-35%

சிங்கநல்லூரில் மதிமுகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 1996, 2001 முறையே 8.88, 12.99 கிடைத்துள்ளது
அதே போல் கோவை மேற்கு தொகுதியிலும் 5% மேல் கிடைத்துள்ளது.

கடைசியாக உங்களின் //அதிமுக கூட்டணி 47-51%, திமுக - 44-47%%// கருத்தும் இந்த "contest" ரொம்ப கடுமையாக இருப்பதைக் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் பக்கம் தான் ஓட்டு விழும் என்று நினைக்கிறேன்.

//இதை முடிக்கும் முன், இரண்டு விஷயம்!
(1) நீங்க போட்ட அந்த "இலை" ரொம்ப மங்கலாக இருக்கு....was it intentional?? :-//

அதிமுக கொடி போடலாம் என்று தான் பார்த்தேன். ஆனால் அண்ணா ரொம்ப சின்னதாக தெரிகிறார். ( ஏற்கனவே அண்ண்வை இவர்கள் சின்னதாகிவிட்டார்கள் நாமும் இன்னும் ஏன் சின்னதாக ஆக்க வேண்டும் என்று இலையை போட்டேன்). இப்ப இலையை பாருங்க :-)

மானஸ்தன் said...

உங்கள் எண்ணம் நல்லதுதான்!!! இருந்தாலும் அந்த கொடியையே போட்டுடுங்க..

சின்னதா இருந்தாலும் அண்ணா கொஞ்சம் பார்வைல இருப்பார்! இல்லேன்னா நம்ம கழகக் கண்மணிகளின் "கொள்கைகள்" போல அண்ணாவையும் காத்துல பறக்க விட்டுடுவாங்க நம்ம ரத்தத்தின் ரத்தங்கள்!

"இலை" இப்போ "தூக்கலா"தான் இருக்கு! :-D

Anonymous said...

BJP also has a chance here.

பா. ரெங்கதுரை said...

//பாமகவிற்கு இங்கே செல்வாக்கு கிடையாது(கோவை மக்கள் புத்திசாலிகள்)//

கொங்கு வேளாளர்கள் எனப்படும் கவுண்டர் ஜாதி வெறியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில் வன்னியர்கள் எனப்படும் படையாச்சி/பள்ளி ஜாதி வெறியர்கள் மிகச் சிறுபான்மையினரே. இதில் புத்திசாலித்தனத்திற்கு எந்தப் பங்கும் இல்லை.

neysamy said...

There is no MDMK and PMK in Coimbatore.Hence only ADMK has only lefts are with them. Vijayakanth will split ADMK vote.Hence strong Cong and DMK will win the seat.

R.Gopi said...

அண்ணா இப்போ ரொம்ப சின்ன "சின்னா"வா ஆயிட்டாரு........ இப்போ இல்ல, அவரு "சின்னா" ஆகி ரொம்ப நாள் ஆச்சு.

மானஸ்தன் சொன்ன மாதிரி, "கழக கண்மணிகள்" கொள்கைகளை போல அண்ணாவையும் பறக்க விட்டுடுவாங்க, அவர் சொல்ல மறந்த ஒண்ணு என்னன்னா!!


"உடன் பிறப்புகள்" (கழகத்துல இதுதான் மிக மிக முக்கியமான வார்த்தை).

Vinitha said...

காங்கிரஸ் சார்பில் பிரபு நின்றால், இன்னும் பத்து சத்விகிதம் கம்மவார் ஓட்டுக்கள் விழும் சான்ஸ் உண்டு. அவர் வெற்றி பெறுவார். ;-)

Inba said...

பாமகவுக்கு திண்டிவனதுலேயே செல்வாக்கு இல்லை
அம்மா எமாந்துடாங்க

Krish said...

Lets see IV ( will compare the original results with ur prediction!)

...We just curious to know about the VIP thoguthees!

Vaiko, Chithambaram, Sutheesh, Kuruma..etc...

Balaji Manoharan said...

hi idly vadai.....

By saying Kovai to AMMA.now AIADMK started their account in Idlyvadai survey ..

one more point..
in vellore constituency my name is specied.I am gathering the details,
tell me for what email id i have to sent the report of vellore constituency.
my email id bmanoharan@gmail.com

IdlyVadai said...

//one more point..
in vellore constituency my name is specied.I am gathering the details,
tell me for what email id i have to sent the report of vellore constituency.
my email id bmanoharan@gmail.com//

idlyvadai2007@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நன்றி.

மானஸ்தன் said...

என் சார்பிலும், இட்லி வடை சார்பிலும், நம்ம இட்லிவடை வலைப்பூவை துரத்துபவர்கள் சார்பிலும் அனைத்து மக்களுக்கும் "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துக்கள்!!!

நம்ம "தல" மற்றும் அவர் ஜால்ராக்களுக்கு "விரோதி" வருஷ வாழ்த்துக்கள்!!!! (தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னால் அவருக்கு கோவம் வரலாம்")! "தல" எல்லாருக்கும் வாழ்த்துக்கள் சொல்வாரா என்று எனக்குத் தெரியாது!! ஆனால் நாளைக்கு கண்டிப்பாக திட்ட மாட்டார்!

காரணங்கள்!
(1) நாளைக்கு தேதி 13!! (இந்த நம்பர் நம்ம மஞ்சத் துண்டு "பகுத்தறிவுப் பாசறைத் தலைக்கு" ராசியானதாம்!)

(b) அடுத்த மாதம் 13-ஆம் தேதி சாயங்காலம் 1700 hours வரைக்கும் அவர் அடக்கி வாசிப்பார்!

மானஸ்தன் said...

ஐயா இட்லிவடை!
இப்போ "election" காத்து யார் பக்கம் வீசறதுன்னு சரியா புரியலை. ஆனா அந்த காத்துல "இலை" மட்டும் அசையுது? (வெள்ளைக்கார சரக்கு அடிச்சவன் மாதிரி!")

கருப்பு-செவப்பு கொடி ஆடாம அசையாம இருக்கு? (டாஸ்மாக் சரக்கு சாப்பிட்டவன் மாதிரி")...

எப்டியா இப்படி? அனிமேஷன் போட்டு தாக்கறீங்க!!
இதுல என்னய்யா உள்குத்து வெச்சுருக்கீங்க? தயவு பண்ணி கொஞ்சம் சொல்லிடுங்க!!

அன்பு ★ பிரபாகரன் ★ said...

நல்லா இருக்கு.. ஆனா நல்லா இல்ல....


அந்த ரேன்சுல இருக்கு! நம்ம தமிழக அரசியல்...

Erode Nagaraj... said...

புத்தாண்டு வாழ்த்துகள் :)

Erode Nagaraj... said...

புத்தாண்டு வாழ்த்துகள் :)

Prabhu Swaminathan said...

This analysis has been done not taking KMP in to consideration. I am sure KMP will get more votes than BJP and DMDK. So we will have to revisit this constituency.

R.Gopi said...

//மானஸ்தன் said...

ஐயா இட்லிவடை!

இப்போ "election" காத்து யார் பக்கம் வீசறதுன்னு சரியா புரியலை. ஆனா அந்த காத்துல "இலை" மட்டும் அசையுது? (வெள்ளைக்கார சரக்கு அடிச்சவன் மாதிரி!")

கருப்பு-செவப்பு கொடி ஆடாம அசையாம இருக்கு? (டாஸ்மாக் சரக்கு சாப்பிட்டவன் மாதிரி")...

எப்டியா இப்படி? அனிமேஷன் போட்டு தாக்கறீங்க!!
இதுல என்னய்யா உள்குத்து வெச்சுருக்கீங்க? தயவு பண்ணி கொஞ்சம் சொல்லிடுங்க!!//

***************

Super matter 'THALA'

kalakkunga, kalakkunga.......

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லாள் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

R.Gopi said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என் விரிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்து இதோ இங்கே :

http://edakumadaku.blogspot.com/2009/04/2009.html

neysamy said...

கம்யூனிஸ்ட் பார்ட்டிக்கு கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் இறங்குமுகம்.அதே நிலை இங்கும் எதிரொலிக்கும்.

cho visiri said...

தமிழ் கூறும் நல்லோர் அனைவருக்கும் சிறியேனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மானஸ்தன் said...

நம்ம இட்லிவடை தேர்தல் டீம் என்ன பன்னிண்டு இருக்காங்க? இன்னும் சரியாய் ஒரு மாசம்தான் இருக்கு...சுடசுட செய்தி குடுக்க வேண்டாமா?

அம்மா "தினமும்" ஒரு வேட்பாளரை மாத்துது! :-) மதுரைல ஒரு பெண் வேட்பாளர் பயந்து ஆட்டத்துலேந்து ஒதுங்கிட்டாங்க! ரெண்டு "தேசிய கட்சிகளின்" வேட்பாளர்கள் யார் என்றே தெரியவில்லை!! நம்ம "தேவர் குலக்கொழுந்து", "கரடி" மற்றும் "சித்தப்பா" ஆகியோர் திராவிட கட்சிகளின் மேல் கரிசனம் கொண்டு இப்போது வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை!

எலியான புலித்தலைவர் (according to இ.கம்.) காங்கிரசிற்கு விசுவாசமா இருப்பாராம்! (நன்றி : தினமணி).


நாட்டுல இவ்வளவு விஷயம் நடக்கும் போது நீங்க லீவு போட்டுட்டு போறது கொஞ்சம் கூட நன்னா இல்லை. ஆமாம். சொல்லிட்டேன். :-) :D

திரு இட்லிவடை!

உங்களுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடியறவரைக்கும் லீவு கிடையாது. :-D :-)

நான் சொன்னா சொன்னதுதான்!

M.Kannan said...

கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் ஒரு புறம் இருந்தாலும். இந்த முறை கோவையில் உள்ள நடுத்தர மக்கள் மற்றும் சிறு தொழில் அதிபர்கள் ஓரே அணியில் திரள உள்ளனர். ஏனென்றால் கரண்ட் கட் தமிழகத்தில் எங்கு என்ன பாதிப்பு என்று தெரியாது. ஆனால் கோவையில் அதன் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று தெருவிற்கு வந்துள்ளனர். பல தொழிலதிபர்களும் தங்களது லாபத்தில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். மின்சாரத்தையே நம்பியிருக்கும் பல தொழிற்சாலைகள் ஏற்றுமதி வாய்ப்பை இழந்துள்ளது. இதன் பிரதிபலிப்பு பல முறை ஆயிரக்கணக்கான சிறு தொழில் அதிபர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற எதிர்ப்பு இயக்கம் இந்திய அளவில் பதிவு செய்யப்பட்டது. அதன் தாக்கம் இந்த தேர்தலில் இருக்கும். அது திமுக, காங்கிரஸ் கூட்டணியை கதிகலங்க செய்யும்.
மேலும் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தமிழகத்தில் மற்ற நகரங்களை விட தொழில் நகரான கோவையை ஒரு அசை அசைத்து பார்த்திருக்கிறது. வெளி நாட்டு கார் நிறுவனங்களுக்கான உதிரி பாகம் தயாரித்து அனுப்புவது தொடங்கி, பவுண்டரி, இஞ்சினியரிங் என பல தொழில்களின் பேஸ் மட்டம் ஆட்டம் கண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய காங்கிரஸ் அரசு 1991 களில் ஆரம்பித்து வைத்த புதிய பொருளாதர கொள்கைதான் அடித்தளம் அமைத்து ஆசிர்வாதம் செய்தது என்பதை பல போராட்டங்களில் பெரும் தொழில் அதிபர்கள் எடுத்துரைத்துள்ளனர். இந்த நினைவலைகள் அனைத்தும் கடந்த ஒரு வருடாக மேலேழுந்து வந்தது. இதற்கெல்லாம் தீர்வு காண தற்போது சரியான நேரம் கிடைத்திருக்கிறது என்று தொழில் அதிபர்களும் முடிவுக்கு வந்துள்ளனர். அதற்கு ஓரே வழி தற்சமயம் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்புவதுதான் என்பது இந்த மக்களின் மனதில் பதிந்துள்ளது. இது கோவை நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவை 47 சதவீதம் தீர்மானிக்கும்.

IdlyVadai said...

M.Kannan மிக நல்ல அலசல். அருமை.

உங்களை கருத்தையும் பதிவில் சேர்த்துவிட்டேன். மின்சார பிரச்சனை எனக்கு ஸ்டிரைக் ஆகவில்லை.

Anonymous said...

BJP, Kavundar Peravai, Vijayakanth will split votes upto 20%. Which means there is clear picture. DMK-Congress combine wins by 10% Margin.

லவ்டேல் மேடி said...

யாரு வந்தாளுமும் ஊருக்காக ஒருத்துரும் ஒன்னும் பண்ண போறதில்ல.......!!! அப்பறம் எதுக்குங்கோ தம்பி இந்த பரபரப்பு.....!!!

Anonymous said...

IV,
Enga Tiruchirappalli thoguthi pathi post podunga....

As a trichian and out of trichy, am very well eager to know this...

As of now, i know one thing,

It is P.Kumar Vs. Current mayor chaarubala...

While chaarubala is known face and did nothing as a mayor, we dont know who is P.Kumar. Thevai illama ADMK yaarayo pottu irukanga...

Can you do an analysis pls...

சந்திப்பு said...

ஐயா இட்லி - வடை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை போடவும். அது கிடைக்கவில்லை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

http://www.prophezine.com/Portals/0/article_images/socialist_communist_symbol.jpeg

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9f/ECI-hammer-sickle-star.png

http://www.mchenrycountyblog.com/uploaded_images/Car%20Sticker-hammer%20and%20sickle%20at%20Border%27s-727561.jpg