பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 09, 2009

தேர்தல் 2009 - வடசென்னை யாருக்கு ?

நேற்று மதுரை தொகுதியை தொடர்ந்து இன்று வட சென்னை ( வாசகர் விருப்பம் ).

நாடார், வன்னியர், மீனவர், முஸ்லிம், தலித் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தொழிலாளர்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் அதிகம் வாழும் தொகுதி வட சென்னை...இந்த முறை போட்டி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பாண்டியன், தி.மு.க. சார்ப்பில் டி.கே.எஸ்.இளங்கோவன்.

வட சென்னையில் தற்போது உள்ள தொகுதிகள்

திருவொற்றியூர் [எம்.எல்.ஏ - கே.பி.பி.சாமி (தி.மு.க.) ]
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் [பி.கே.சேகர்பாபு (அ.தி.மு.க.) ]
பெரம்பூர் [ கே.மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ]
ராயபுரம் [ டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.) ]
கொளத்தூர் [ புது தொகுதி ]
திரு.வி.க((தனி) [ புது தொகுதி ]

இதுவரை 13 பொது தேர்தல்கள் சந்தித்துள்ளது வட சென்னை. அதில் 9 தேர்தல்களில் திமுக தான் இங்கே வெற்று பெற்றுள்ளது.

கடந்த இரண்டு தேர்தல்களில்
1999 - ( 43% சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளார்கள் )
குப்புசாமி தி.மு.க 471101 54 %
சௌந்தர ராஜன் சி.பி.எம் 311312 35 %
19% அதிகமாக பெற்றுள்ளார்


2004 - ( 46% சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளார்கள் )
ஆண் வாக்காளர்கள் 1015695, அதில் ஓட்டு போட்டவர்கள்- 509908 - 50.22%
பெண் வாக்காளர்கள் 985171, அதில் ஓட்டு போட்டவர்கள் - 405878 - 41.21%
மொத்த வாக்காளர்கள் 2000866, ஓட்டு போட்டவர்கள் - 915786 - 46%

குப்புசாமி தி.மு.க 570122 62 %
சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 316583 34 %
28% அதிகமாக பெற்றுள்ளார்


ராயபுரம்
1 குப்புசாமி தி.மு.க 39728
2 சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 23927
25% அதிகமாக பெற்றுள்ளார்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
1 குப்புசாமி தி.மு.க 67542
2 சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 41181
24% அதிகமாக பெற்றுள்ளார்

பெரம்பூர்
1 குப்புசாமி தி.மு.க 79284
2 சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 39245
33% அதிகமாக பெற்றுள்ளார்

திருவொற்றியூர்
1 குப்புசாமி தி.மு.க 223562
2 சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 127948
27% அதிகமாக பெற்றுள்ளார்

வில்லிவாக்கம், துறைமுகம் தற்போது வட சென்னையில் இல்லை.

வில்லிவாக்கம்
1 குப்புசாமி தி.மு.க 134426
2 சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 69605
31% அதிகமாக பெற்றுள்ளார்

துறைமுகம்
1 குப்புசாமி தி.மு.க 25501
2 சூகுமாறன் நம்மியார் பா.ஜனதா 14669
26% அதிகமாக பெற்றுள்ளார்


ராயபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 25% அது தற்போது அதிமுக வசம் உள்ளது. 25% சதவிதத்துக்கு மேல் இருக்கும் இடங்கள் திமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சியிடம் தான் இருக்கிறது.

தற்போது உள்ள கூட்டணியை பார்க்கும் போது, ராயபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக கூட்டணி அதிக வாக்குகள் பெறும் ஆனால் வித்தியாசம் அதிகம் இருக்காது.

பெரம்பூர், திருவொற்றியூர் இரண்டும் திமுக கோட்டை அதை அசைக்க முடியாது என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இருந்தால் கூட இந்த இரண்டு தொகுதிகளும் திமுக வெற்றி பெறும்.

கொளத்தூர், திருவிக தொகுதி இரண்டும் தற்போது புதிதாக சேர்க்கப்பட்ட தொகுதிகள். ஒரு பேச்சுக்கு கொளத்தூர் தொகுதி திமுகவிற்கும், திரு.வி.க((தனி) அதிமுக கூட்டணிக்கும் செல்வாக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட வட சென்னை திமுக தொகுதியாகவே நான் கருதுகிறேன்.


தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி அதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கும். தா.பாண்டியன் நிற்பதால் அதிமுக கூட்டணிக்கு கொஞ்சம் அதிக ஓட்டுக்கள் கிடைக்கலாம்.

அதே போல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் இங்கே அதிகம் இருப்பதால் இரண்டு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்றவை தா.பாண்டியனை விட அதிக கவர்ச்சியாக இருக்கும். எம்.ஏ பொருளாதாரம் படித்த தா.பாண்டியனுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும்.

அதிமுக கூட்டணிக்கு இந்த முறை கூடுதலாக 15% ஓட்டுகள் கிடைத்தாலும் கூட திமுக ~10,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெரும்.

வட சென்னை - திமுக கூட்டணிக்கு தான்.


அடுத்து என்ன தொகுதி வேண்டும் ?

27 Comments:

Anonymous said...

வணக்கம் திரு இட்லி வடையாரே!

அதுதான் சொல்லிட்டீங்கல்ல!!

அப்டியே அந்த "கருப்பு-செவப்பு" கொடிய "வடசென்னை"க்கு பக்கத்துல போட்டுடுங்க!

Anonymous said...

விரைவில் எதிர் பாருங்கள் இட்லி வடையின் அலசலை!

முதலில்
(1) திருமா நிற்கும் "சிதம்பரம்"!

(2) சிதம்பரம் நிற்கும் "சிவகங்கை"


பிறகு பிரச்சனைக்குரிய (காரணகர்த்தாக்கள் அடைப்புக்குறியில்!)

(3) காஞ்சீபுரம் (மல்லை சத்யா)

(4)திருவண்ணாமலை (காடுவெட்டி)

(5)வேலூர் (த.மு.மு.க)

(6)நீலகிரி (spectrum)

(7) கன்னியாகுமரி (காங்கிரஸ்)

sankaralingam said...

Thaa. Pandian is man of simplicity.. people should select the right person.. but this will not happen...

anyhow.. good work idlyvadai..

i am expecting a report for Coimbatore and Sriperambadur..

Sankar.

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

கோயமுத்தூர் தொகுதி அ பத்தி சொல்லுங்களேன் இட்லிவடை

★кєттαναη ιѕ вα¢к★ said...

### மானஸ்தன் said...

விரைவில் எதிர் பாருங்கள் இட்லி வடையின் அலசலை!

முதலில்
(1) திருமா நிற்கும் "சிதம்பரம்"!

(2) சிதம்பரம் நிற்கும் "சிவகங்கை"

###


மன்னிக்கவும் தலைவா.. நீங்கள் சொல்வது தவரு !

சிவகங்கை இந்த முறை 'சிதம்பரம்' இல்லை. அவரது தவப்புதல்வன் "கார்த்தி" ப சிதம்பரம் தான்......

Payam Ariyan said...

செருப்படி புகழ் சிதம்பரம் நிற்கும் "சிவகங்கை" தொகுதி நிலவரம்?????

நான் அவன் இல்லீங்கோ said...

நன்றி இட்லிவடை அவர்களே. இத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தர் ராஜன் நிற்பதாக செய்திகள் வெளியானதே அதைப்பற்றி?

IdlyVadai said...

//நன்றி இட்லிவடை அவர்களே. இத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தர் ராஜன் நிற்பதாக செய்திகள் வெளியானதே அதைப்பற்றி?///அவர் நிற்க்கிறார் அவ்வளவு தான். மிஞ்சி போனால் 2.5% ஓட்டுகள் இவர்களுக்கு வரும். தற்போது தேமுதிக நிற்பதால் அது கூட கிடைக்காது என்று நினைக்கிறேன். ( 1991 - 2.26%, 1996 - 2.36% பிஜேபி வாங்கிய ஓட்டுகள்.)

அதிமுக 1977ல் - 44% ஓட்டுகள் வாங்கியது, 1980ல் 38%, 2004ல் - 34.5% ( போன முறை அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் நின்றார். ஆக அது முழுவதும் அதிமுகவின் ஓட்டு).

subramanian said...

Is the analysis of south & central madras already over?

IdlyVadai said...

//Is the analysis of south & central madras already over?//

not yet

Krish said...

எஸ் எஸ் சந்திரன் Vs தயாநிதி மாறன்.....

சி.தவநெறிச்செல்வன் said...

தேர்தல் முடிவுகள்
இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னனியில் உள்ளது
(as per IDLY VADAI)

Ravee (இரவீ ) said...

கணக்கு உதைக்குதே ....
எனக்கு என்னமோ 1 or 2% வித்யாசத்தில் பாண்டியன் ஜெயிப்பார்னு தோனுது.
(அட உங்க புள்ளிவிவரத்தின்படி தாங்க... )

Anonymous said...

IV,
Super Analysis. Can you please analyze Tiruchirappalli thoguthi?

பா. ரெங்கதுரை said...

தாமஸ் பாண்டியன் என்கிற இடதுசாரி முகமூடி அணிந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவ மத / தேவர் ஜாதி வெறியரைத் தோற்கடிப்பது ஒவ்வொரு மானமுள்ள வடசென்னை வாக்காளரின் கடமை. பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்தராஜன் இந்துக்களின் வாக்குகளைப் பிரித்துவிட அனுமதிக்கக்கூடாது.

மணிகண்டன் (Manikandan K S) said...

Central Chennai Please

Election said...

தற்பொழுது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கொளத்தூர் தொகுதியின் பெரும்பகுதி , முன்பு புரசைவாக்கம் சட்டமன்ற தொகுதியாக இருந்தது. அப்பொழுது, மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருந்தது. புரசைவாக்கம் தொகுதியைப் பொறுத்தவரை, ப.ரங்கநாதன் தனிப்பட்ட செல்வாக்கு மூலம் தொடர்ந்து MLA வாக இருந்து வந்தார். திமுகவில் சேர்ந்தபின்பு, கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் திரு VS பாபு MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி, தீக்குளித்த திரு.முத்துக்குமாரின் வீடு, இந்தத் தொகுதியில்தான் வருகின்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த திரு VS பாபு சென்றபோது, அவருக்கு செருப்படி உட்பட பல எதிர்ப்புகள் ஏற்பட்டன. அதனால் அப்பகுதியை பொறுத்தவரை, திமுகக் கூட்டணிக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது.

பெரம்பூர் தொகுதியைப் பொறுத்தவரை, அங்கே திமுகவை விட கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிக செல்வாக்கு இருக்கின்றது. கடந்த முறை திரு செ.குப்புசாமியின் வெற்றியில், தொழிற்சங்கங்களின் ஆதரவு முக்கியமானது. இம்முறை, கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகக் களமிறங்குவதால், தொழிற்சங்கங்கள் மேலும் முனைப்போடு களப்பணி ஆற்றக்கூடும். மேலும், வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், இலங்கை விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவமே நிலவுகிறது.

இவை அனைத்தையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது, இத்தொகுதியில் திமுக தேறுவது சிரமம்தான்.

Thalaivar said...

sikkiram sriperumbadur patri eluduinga aan endral nangal vada chennai yil iruindu sriperumdur matra patu ullom

Baski said...

Can we have a map that explains LokSabha constituencies.

லவ்டேல் மேடி said...

இட்லி........ வடைக்கு..... சரியான சட்னி ... சாம்பார் இல்லீங்கோவ்வ்........!!! ஊசிபோகரதுக்குள்ள தேடி புடிங்கோவ்.........!!!!!!!!

டிக்கிலோனா said...

நாக்க மு.கவுக்கு 235 கோடி ரூபாய்க்கு சொத்தாமே?? தெரியுமா??

ஆதாரம்...

http://www.empoweringindia.org/new/preview.aspx?candid=112626

ரஜினி ரசிகன் said...

Vaiko???????????????

Anonymous said...

ஐயா டிக்கிலோனா!
சரியா பாருங்க அந்த வெப் சைட்ட! அது 235 கோடி இல்ல..
23 கோடியே 55 லக்ஷத்து 72 ஆயிரத்து 885 ருபாய் மட்டும்.

நம்ம ஊருல பிச்சைக்காரன் கூட கைல 2 லக்க்ஷம் வெச்சுண்டு அலையறான். இந்த ஆள் கைல "cash balance" 45000 தான் இருக்காம்!

அட இங்க பாருங்கயா! இவர் கூட NSS, LIC எல்லாம் எடுத்து வெச்சுருக்கறு!
ஐயோ! amount-a பாருங்க! ஒரு லக்ஷத்து பத்தாயிரமாம்!!!!!!

படிச்சுட்டு வந்த "election" officers எல்லாரும் கேணப்பசங்க மாதிரி இந்த affidavit declaration-ஐ
accept பண்ணறாங்க! அப்பொறம் இந்த நாடு எங்க உருப்படும் :-(

Anonymous said...

இன்று மாலைமலரில் வந்த செய்தி!

//மனைவியை விட சொத்து குறைந்த தேவேகவுடா: ரூ.65 லட்சம் கடன் உள்ளது வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10.

தேவேகவுடாவுக்கு ஹரதன ஹல்லி என்ற இடத்தில் மூதாதையர் வீடு ஒன்று உள்ளது. 2 அம்பாசிடர்(1974, 2004 மாடல்) கார்கள் உள் ளன.ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நகை உள்ளது. ஆக மொத்தம் அவரது சொத்து மதிப்பு 32 லட்சத்து 55 ஆயிரத்து 987 ரூபாய் 62 பைசா ஆகும். ஆனால் 64 லட்சத்து 99 ஆயிரத்துக்கு கடன் உள்ளதாம்.//


இந்தத் தூங்குமூஞ்சி கிழவன் எல்லாம் "இந்தியத் திருநாட்டின்" முன்னாள் பிரதமர்!
இவர்களின் திருட்டுத்தனத்திற்கும், பித்தலாட்டங்களுக்கும் ஒரு அளவே இல்லையா?
இந்த ஆள் சொல்வதை அப்படியே ஒப்புக்கொண்டாலும், இவரை மாதிரி "கடன்கார நாதாரிகள்" அரசியல் பண்ணவில்லை என்று யார் அழுதது? இந்த மாதிரி "பன்னாடைகளின்" பின்னால் the so-called "மூன்றாவது அணி"!! தூ. கேவலம்.

மக்கள் எப்போதுதான் முழித்துக்கொ"ல்"வார்களோ!

suresh said...

Hi,

Can you clarify why there is Black and Red Icon near 2 and 32 ( Chennai North and Madurai in the team name list.

Does this mean this seats has already gone to DMK ?

R.Gopi said...

//Krish said...

எஸ் எஸ் சந்திரன் Vs தயாநிதி மாறன்.....//

*********

இட்லிவடை,

இது எப்போ?? சூப்பரா இருக்குமே, சீக்கிரம் போடுங்க .........

Jayakanthan - ஜெயகாந்தன் said...

தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். "அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!'' என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.
(Thanks from Vikatan).

Please Support & extend your help this Young Man so that more Youths will follow his path & change this politics.