பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 08, 2009

தேர்தல் 2009 - மதுரை யாருக்கு ?

நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏயப்பா; என்ன குதி குதிக்கிறார்கள்-அழகிரி; பாவம் அந்தப் பிள்ளையைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?

அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே" என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது - கலைஞர் அறிக்கை.

சரி மதுரை பற்றி அலசலாம்..

மதுரை பாராளுமனறத் தொகுதியில், புதிதாக ஆறு சட்டசபை தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன அவை

1. மதுரை மத்தி,
2. மதுரை மேற்கு ,
3. மதுரை கிழக்கு ,
4. மதுரை வடக்கு,
5. மதுரை தெற்கு,
6. மேலூர்

மதுரை தொகுதியில் இருந்த திருப்பரங்குன்றம், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

சமயநல்லூர் தொகுதி தற்போது மதுரை வடக்கு, மதுரை தெற்கு என்று ஆகியுள்ளது.

மதிரை தொகுதியில்
ஆண் வாக்காளர் 508226
பெண் வாக்காளர் 508744

போன தேர்தலில்

மதுரை மேற்கு
1 மோகன் இ.கம்யூனிஸ்ட் 56814
2 ஏ.கே.போஸ் அ.தி.மு.க 31468
28% அதிகமாக பெற்றுள்ளார்

மதுரை மத்தி
1 மோகன் இ.கம்யூனிஸ்ட் 45565
2 ஏ.கே.போஸ் அ.தி.மு.க 24703
29% அதிகமாக பெற்றுள்ளார்

மதுரை கிழக்கு
1 மோகன் இ.கம்யூனிஸ்ட் 39866
2 ஏ.கே.போஸ் அ.தி.மு.க 28205
17% அதிகமாக பெற்றுள்ளார்

சமயநல்லூர்
1 மோகன் இ.கம்யூனிஸ்ட் 105960
2 ஏ.கே.போஸ் அ.தி.மு.க 71126
19% அதிகமாக பெற்றுள்ளார்

மேலூர்
1 மோகன் இ.கம்யூனிஸ்ட் 60117
2 ஏ.கே.போஸ் அ.தி.மு.க 55466
4% அதிகமான பெற்றுள்ளார்

கடந்த தேர்தல்களை பார்த்தால் 55% வாக்குகள் பதிவாகிறது ( POLLING PERCENTAGE M58.74 F51.25 T55.05)

2004
மோகன் இ.கம்யூனிஸ்ட் 414433 56 %
ஏ.கே.போஸ் அ.தி.மு.க 281593 38 %
18% கூடுதலாக பெற்றுள்ளார்

1999
மோகன் சி.பி.எம் 328204 44 %
முத்துராமலிங்கம் தி.மு.க 290981 39 %
5% கூடுதலாக பெற்றுள்ளார்


மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ~10-15% சதவிதம் ஓட்டு என்று வைத்துக்கொண்டால் போட்டி நிச்சயம் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. மதுரை சினிமா நகரம் அதனால் விஜயகாந்த் அலை நிச்சயம் இருக்கும். அதிமுகவிற்கு பாதிப்பு இருக்கும்.அழகிரியின் செல்வாக்கில் திமுக 5000 முதல் 25,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கலாம். 3 லட்சம் எல்லாம் முடியாத காரியம் என்று நினைக்கிறேன். திருமங்கலம் மாதிரி நடந்தால் மக்களுக்கு பிரியாணி ரெடி. நடக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு அழகர் கோயிலில் பொங்கல்

எது எப்படியோ, மதுரை மக்களுக்கு நிச்சயம் ஒரு 20-20 காத்திருக்கிறது.


28 Comments:

R.Gopi said...

//அழகிரியின் செல்வாக்கில் திமுக 5000 முதல் 25,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கலாம். 3 லட்சம் எல்லாம் முடியாத காரியம் என்று நினைக்கிறேன். திருமங்கலம் மாதிரி நடந்தால் மக்களுக்கு பிரியாணி ரெடி. நடக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு அழகர் கோயிலில் பொங்கல்

எது எப்படியோ, மதுரை மக்களுக்கு நிச்சயம் ஒரு 20-20 காத்திருக்கிறது. //

************

20/20 நடக்கும். அழகிரி வெல்வார்.

ஆனால், பாவம் மதுரை மதுரை மக்கள்.

("தல" இன்னாமா பீல் பண்றாருப்பா புள்ளைய பாத்து ..... )

நான் அவன் இல்லீங்கோ said...

இது என்னய்யா இது ஒரு முழு நீல கேப்டன் படம் பாத்த மாதிரி இருக்கு, இவ்வளவு புள்ளி விபரமா?? இருந்தாலும் மு.க.வுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல??

Anonymous said...

///("தல" இன்னாமா பீல் பண்றாருப்பா புள்ளைய பாத்து ..... )////

அவருக்கு உள்ளூர "கிலி"ப்பா!!!!

இட்லி வடையாரே! இந்த பதிவு செய்தது யாரு? நீங்களா, இல்ல நமது மதுரை தொகுதி "இன்-சார்ஜ்-ஆ".....

யாரா இருந்தாலும் பாராட்டுக்கள்!! வரும் நாட்களில் இன்னும் விலாவாரியான அலசலை கொடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

"தலையின்" இந்த வரிகளுக்கு அர்த்தம் புரிகிறதா?

///"இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே" என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது - கலைஞர் அறிக்கை.///

இரண்டு கேள்விகள்!
(1) எது நல்ல "காரியம்"??

(2) "தல" யார் உயிரைப் பற்றி பேசுகிறார்? (எனக்கு திடீர்னு "தினகரன்" சம்பவம் நினைவுக்கு வருகிறது" - ஏன் என்று தெரியவில்லை")!

IdlyVadai said...

//இட்லி வடையாரே! இந்த பதிவு செய்தது யாரு? நீங்களா, இல்ல நமது மதுரை தொகுதி "இன்-சார்ஜ்-ஆ"..... //இதை பார்த்துவிட்டு காவிரி கணேஷ்(மதுரை தொகுதி இன்-சார்ஜ்) ஒரு பதிவு போடுவார் என்ற நம்பிக்கையில் நானே தான் இந்த பதிவை போட்டேன்.

Arumugaraj said...

மதுரையில் மட்டும் அண்ணாத்தே ஜெயிச்சிட்டார்னா மஞ்ச நைனா தன் வாரிசிற்கு DEFENCE மினிஸ்டேர் போஸ்ட் தான் கேட்பார் ஏன் என்றால் அஞ்சா நெஞ்சன் ஆயிற்றே ..கலி காலம்!!!

Anonymous said...

first "front", second "front", fourth "front" அப்படி எல்லாம் எத்தனையோ வருது நாட்டுல இப்போ! ("third" front இல்லையாம்", ஊருல பேசிக்கரானுக!!)...

இப்படி பல "matter" இருந்தாலும் நீங்க போட்ட மதுரை போஸ்ட்!! ஆஹா! இதுக்கு பேருதான் "leading from the front"!!!! இட்லி வடையாரே சூப்பர் போங்க!!!

திரு காவிரி கணேஷ் கூடிய சீக்கிரம் சூடான செய்திகளோடு வருவார் என்று நம்புவோம்!

Anonymous said...

அது என்ன சில வினாடிகளுக்கு "சூரியன்" அப்பொறம் "கருப்பு-செவப்பு" கொடி?
அதுவும் மதுரைக்கு மட்டும்?

என்ன உள்குத்து இது இட்லி வடையாரே?

IdlyVadai said...

//அது என்ன சில வினாடிகளுக்கு "சூரியன்" அப்பொறம் "கருப்பு-செவப்பு" கொடி?
அதுவும் மதுரைக்கு மட்டும்?

என்ன உள்குத்து இது இட்லி வடையாரே?//

விரைவில் மற்ற தொகுதிகள் பற்றி அப்டேட் தொடரும்.

Anonymous said...

Muthal poni madhuraiyilaa ? MuthaRkonal muRRum konalthaan..

Anonymous said...

புரிஞ்சது! புரிஞ்சது! :-)

Inba said...

if azhagiri wins,
Madurai peoples will get briyani
with Alva..

Anonymous said...

ஸ்டாலின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றும் முடிவுகள் அறிவிக்க அஃஅ தி மு க செய்த தகிடு த்தங்கள் மறக்கலாமா ? நண்பா ?

யாரையும் குறை சொல்லும் முன் சிந்திக்க வேண்டும்

santhosh said...

How to get a voter ID in Madurai? I feel Madurai people are lucky in this way. They get Biriyani and freebies so often, i really envy them..

Krish said...

தேர்தல் கமிசன் எதற்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு புறம் வருன் மீது புகர் கொடுக்கிறார்கள். நல்லது தான். அதே போல் இந்த மாரிதி சொல்லி வைத்து அயோக்கியத்தனம் பண்ணுபவர்களை ஒன்றும் செய்வது இல்லை.
திருமங்கலம் தேர்தலில் பணம் விளையாடியது என்றும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் தேர்தலுக்கு அப்பறம் ஒன்னும் நடக்கலை. அதே போல், இந்த தேர்தலிலும் அட்டூழியங்கள் தொடரும் என்பதும் தெரியும். ஆனாலும் தேர்தல் கமிசன் ஒன்றும் செய்யப் போவது இல்லை.

எம். கண்ணன் said...

மு.க.அழகிரி ரவுடியிசத்தில் ஜெயிக்கலாம்., ஜனநாயகத்தில் ( தேர்தலில் ) குதித்திருக்கிறார். கட்டவுட்டால் வேண்டுமானால் மதுரையை கலக்கலாம். மக்கள் ஓட்டில் கலக்கலாம் என நினைத்தால் மன்னை கவ்வுவது நிச்சயம். நீண்ட காலம் எந்த பதவியும் இல்லாமலே. . .லீலாவதி, தா.கிருஷ்ணன், தினகரன் அலுவலக ஊழியர்கள் என கொலைகளை அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார். வெளிவந்தது மட்டுமே மேற்கண்ட லிஸ்ட். வெளிவார கொலைகளின் லிஸ்ட் தனி.
ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் முக. அழகரி படம் வைக்காததற்கு முன்பு வரை பொருட்களின் விலை பாக்கெட்டுகளில் பிரிண்ட் செய்யப்பட்ருந்த அளவே விற்றக்கப்பட்டது. அழகிரி படம் கடைக்குள் வந்தவுடன் எல்லா பொருட்களிலும் இரண்டு ரூபாய் சேர்த்து வசூலித்து வருகிறார்கள். இவர் எம்பி - ஆனால் என்னவாகும் என்று தொகுதி மக்களுக்கு தெரியாதா? எங்களை ( மதுரை மக்கள் )பற்றி உங்களுக்கு தெரியாது. ஆப்பு வைத்தால் தப்பிக்கவே முடியாது. ஏற்கனவே மதுரையில் மதுரையில் சூ க் காட்டிக்கிட்டிருந்த சுப்பிரமணிய சாமியை கொஞ்சம் கேட்டு பாருங்கள் தெரியும்.

Anonymous said...

மு.க.அழகிரி ரவுடியிசத்தில் ஜெயிக்கலாம்., ஜனநாயகத்தில் ( தேர்தலில் ) குதித்திருக்கிறார். கட்டவுட்டால் வேண்டுமானால் மதுரையை கலக்கலாம். மக்கள் ஓட்டில் கலக்கலாம் என நினைத்தால் மன்னை கவ்வுவது நிச்சயம். நீண்ட காலம் எந்த பதவியும் இல்லாமலே. . .லீலாவதி, தா.கிருஷ்ணன், தினகரன் அலுவலக ஊழியர்கள் என கொலைகளை அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார். வெளிவந்தது மட்டுமே மேற்கண்ட லிஸ்ட். வெளிவார கொலைகளின் லிஸ்ட் தனி.
ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் முக. அழகரி படம் வைக்காததற்கு முன்பு வரை பொருட்களின் விலை பாக்கெட்டுகளில் பிரிண்ட் செய்யப்பட்ருந்த அளவே விற்றக்கப்பட்டது. அழகிரி படம் கடைக்குள் வந்தவுடன் எல்லா பொருட்களிலும் இரண்டு ரூபாய் சேர்த்து வசூலித்து வருகிறார்கள். இவர் எம்பி - ஆனால் என்னவாகும் என்று தொகுதி மக்களுக்கு தெரியாதா? எங்களை ( மதுரை மக்கள் )பற்றி உங்களுக்கு தெரியாது. ஆப்பு வைத்தால் தப்பிக்கவே முடியாது. ஏற்கனவே மதுரையில் மதுரையில் சூ க் காட்டிக்கிட்டிருந்த சுப்பிரமணிய சாமியை கொஞ்சம் கேட்டு பாருங்கள் தெரியும்.
எம். கண்ணன்
நரிமேடு, மதுரை.

Inba said...

Brailer or chicken Business peoples those who affected due to chickenkunia are going to have great time.. the reason is Madurai and Ramanathepuram DMK canditates..
(briyani cookers too)

Anonymous said...

Money distribution has already started in Madurai. The Current going rate is Rs.5000 per vote.

EC and Naresh Gupta seem to be sleeping?! Maybe Naveen Chawla takes care of all these not to get noticed.

லவ்டேல் மேடி said...

டும்......டும்....டும்....டும்......டும் ..!!!!!


ஐயா....... அம்மா...... !!!!! மதுரை வாழ் பெருமக்களே......!!!!!


இதனால எல்லாருக்குமும் தெரிவிப்பது என்னவென்றால் .........!!!!!
எல்லாருமும் ... அவிக .... அவிக .... ஊட்டு ரேசன் கார்ட நல்லா தொடச்சு புதுசு பண்ணி வெச்சுக்குமாறு தி.மு. க சார்புல தெரிவிச்சுக்குரோமுங்கோவ்...........!!!!!!
டும்......டும்....டும்....டும்......டும் ..!!!!!

R.Gopi said...

//எல்லாருமும் ... அவிக .... அவிக .... ஊட்டு ரேசன் கார்ட நல்லா தொடச்சு புதுசு பண்ணி வெச்சுக்குமாறு தி.மு. க சார்புல தெரிவிச்சுக்குரோமுங்கோவ்...........!!!!!!

டும்......டும்....டும்....டும்......டும் ..!!!!!//

***************

புதுசா 3 லட்சம் ஏற்கனவே அடிச்சுட்டோம்ல ............

போங்கப்பு ....... அவிங்க எப்பவுமே அப்படித்தான் ஏதாவது சொல்லுவாங்க .......

Anonymous said...

தியாகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அங்கே கம்யூனிஸ்டுகள் என்று இருக்கும் ...

சதி வழக்குகள், துப்பாக்கித் தோட்டா சித்தரவதைகளுக்கு அஞ்சாமல் சுதந்திரப் போராட்டக் களத்தில் முன் நின்றவர்கள் அவர்கள். ஆங்கிலேயனாகட்டும், தொடர்ந்து இந்தியாவில் ஆண்ட கொள்ளைக் கூட்டமாகட்டும் கம்யூனிஸ்டுகளைக் கண்டு பயந்தே வந்திருக்கிறது. உயிர்த் தியாகத்திற்கும் அஞ்சாமல் காரியத்தை சாதிக்கும் திராணி இருக்கிறது அவர்களுக்கு.

அதனால்தான் கலைஞர் புலம்பியிருக்கிறார்.

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்.

எத்தகைய அராஜகத்தையும் செய்து, மக்களை பயப்படுத்தி, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடமுடியும் என்ற நம்பிக்கையில் மதுரையில் களம் இறங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் எதிர் நிர்ப்பவர்களோ கம்யூனிஸ்டுகள். கறைபடியாத எளிமைக்கும், கலங்காத வீரத்திற்கும் பெயர்போனவர்கள். அவர்களின் சார்பில் மிகச் சரியான எளிய அரசியல்வாதி என அனைத்து ஊடகங்களையும் ஒருமித்த குரலில் கூற வைத்த பி.மோகன் எதிர்த்து நிற்கிறார்.

திமுக அறிக்கையை படிக்கும்போது கலைஞர் பயந்துவிட்டார் என்பது தெளிவாகிறது. அவரின் இத்தனை ஆண்டு அனுபவம்தான் இப்படி புலம்ப வைத்திருக்கிறது. இந்தத் தள்ளாத வயதில், மார்க்சிஸ்டுகளை எதிர்த்து நிர்ப்பதையோ, தனது அன்பு மகனின் தோல்வியை எதிர்கொள்ளவோ அவர் விரும்பவில்லை.

அனுபவமற்ற அடிதடி அரசியல் ரவுடியான அழகிரிக்குத் கடந்தகாலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக மக்களின் மன நிலையை ஒரு வேலை அவரை சுற்றியிருக்கும் அல்லக்கைக் கூட்டம் போல அவர் எண்ணியிருக்கலாம். அதனால்தான் அவரும் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கப் போவதாக கிளிப்பிள்ளை போலக் கூறி வருகிறார். அவர் குடும்ப ஊடகங்களும் அதையே திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றன. ஒருவேளை அவருக்கு பள்ளிக் கணக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் தி.மு கழகத்தைக் கலக்கடிக்கப் போகும் மக்கள் கணக்கு தெரியாது.

saamakodanki said...

அழகிரிக்கு ஒரு வேண்டுகோள்....
நீங்கள் மதுரையின் நாடாளுமன்றக்குழு உறுப்பினராகவே ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கீழ்வரும் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களை தாண்டி உங்களை தரிசிக்க முடியுமா? உங்கள் பொறுப்பு எல்லாவற்றையும் இவர்களிடம் விட்டு விட்டு மதுரையை சுற்றி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருக்கும் பண்ணை வீடுகளில நீச்சலடிக்க போய் விடுவீர்கள்.பிறகு மதுரையை யார் காப்பாற்றுவது? உங்களுக்கு தெரியாவிட்டால் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் பதவி கொடுத்துள்ள சிலரின் லடசணத்தை பாருங்கள். இப்படி முடிவெடுக்கும் நீங்கள் மதுரை எம்பி ஆகத்தான் வேண்டுமா....?
தேன்மொழி்
எழுத படிக்க தெரியாத இவர் உங்களின் ஆசியால் மதுரை மேயராக ஆக்கப்பட்டவர். இவரது கணவர் கோபிநாதன். மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் வெளிநாட்டு துணிகள் என்ற பெயரில் தரையில் கடை விரித்து படிப்படியாக முன்னேறியவர்??எந்த வித பெரிய வருமானமும் இல்லாமல் இருந்த கோபிநாதன் இன்று மதுரையின் பிரபல கோடீஸ்வரர். உங்களின் அடிப்பொடியாக இருந்த கோபிநாதனுக்கு மதுரை மாநகராட்சியின் தெற்குமண்டல தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்தீர்கள். இந்த கோபிநாதனின் லட்சணம் என்ன தெரியுமா? இவரது மண்டலத்திற்குட்பட்ட எந்த இடததில் வீடு கட்டினாலும், எலவு விழுந்தாலும் மாநகராட்சி இடத்தை பயன்படுத்துவது தெரிந்தால் அங்கே கோபிநாதனின் கார் போய் நிற்கும். 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ கொடுத்தால் தான் கார் கிளம்பும். இல்லாவிட்டால் வீடு கட்ட முடியாது.
கோபிநாதனின் மனைவியான தேன்மொழி, மேயர் ஆன பிறகு தான் வீட்டில் காகித பேப்பர்களில் கையெழுத்து போடவே கற்றுக் கொண்டது தனிக்கதை.இப்படி எந்த படிப்பறிவும் இல்லாத ஒரு பெண்ணை மேயராக்கினால் மதுரை எப்படி வளரும்? அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை? தேன்மொழியை மேயராக்கியது எதற்காக?
துணைமேயர் பி.எம்.மன்னன்
திமுக வின் முன்னாள் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான தா.கிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் தற்போது மதுரையின் துணைமேயராக இருக்கும் மன்னன் 2 வது குற்றவாளி உங்கள் நண்பர் என்பதற்காக இவருக்கு துணைமேயர் பதவி.ஒரு காலத்தில் நண்பர்களிடம் ஓசி சட்டை வாங்கி அணிந்து கொண்டிருந்த பி.எம்.மன்னனின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்கிறது மாநகராட்சி வட்டாரம். இது தவிர பினாமிகளை வைத்துஒரு விளம்பர ஏஜன்சியை நடத்தி வருவது தனிக்கதை. மாநகராட்சி வீதிகளில் போர்டுகளை குழி தோண்டி (வழிகாட்டி பலகைகள்) அதில் பெயரளவுக்கு திருக்குறளை எழுதி வைத்துவிட்டு விளம்பரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் எவ்வளவு பணம் யார் பாக்கெட்டுக்கு போகிறது என்பது மன்னனுக்கே வெளிச்சம்.
எஸ்ஸார் கோபி
மதுரை விமானநிலையம் அமைந்துள்ள இடத்தின் குறுநில மன்னர் இவர். சூதாட்ட விடுதி, திருட்டு விசிடி தொழிற்சாலை, விபச்சாரம் என்று செயது வருவது உங்களுக்கு தெரியாதா? தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் 3 வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் நடத்தும் சூதாட்ட கிளப்பில் விளையாட . சென்னையில் இருந்து கூட விமானத்தில் வந்து லடசக்கணக்கில் பணத்தை வைத்து விளையாடி விட்டு செல்கிறார்கள். இது தெரியாதா உங்களுக்கு?
அட்டாக் பாண்டி
உங்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தினகரன் பத்திரிகை அலுவலகம் மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பத்திரிகையாளர்களும் கொளுத்தப்பட்டனர். இந்த தீவைப்பு தாக்குதலை தொடங்கி வைத்தவர் தான் அட்டாக் பாண்டி. குழந்தைகள் பார்த்தால் நிச்சயமாக மயக்கம் போட்டு விழுந்து விடும் தோற்றம் இவருக்குநீங்கள் கொடுத்த பரிசு என்ன? மதுரை மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி. அய்யோ...ஒரு முன்னோடி விவசாயிக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருந்தால்...மதுரையின் வேளாண்மை சிறந்திருக்குமே?...படிக்கவே இலலாத, பயிருக்கும், பல்லிக்கும் வித்தியாசம் தெரியாத பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட ஒரு ரவுடிக்கு நீங்கள் வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி அளித்தீர்களே...இதன் அர்த்தம் என்ன?
மிசாபாண்டியன்
இவரை போல் ஒரு பச்சோந்தியை பார்க்கவே முடியாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அம்மாவே சரணம் என்றார். பிறகு திமுக வுக்கு வந்து சேர்ந்தார். குறைந்த படசம் 100 ரவுடிகள் புடை சூழ இருக்கும் மிசா உங்கள் வீ்ட்டிற்கு அருகில் குடியிருப்பது தான் வேறு வழியே இல்லாமல் நீங்கள் மிசாவை வைத்திருக்க காரணம். ஏனெனறால் உங்களை காப்பாற்ற உங்களுக்கு மதுரையில் யார் சொந்தங்கள்? எச்சி சோற்றுக்கு 100 காக்கா..அதில் மிசாவும் ஒன்று .
வி.கே.குருசாமி
ஒரு காலத்தில் லோடுமேன் வேலை பார்த்த இவர் இப்போது மதுரை மண்டலத்தலைவர்..
இப்படி பட்டியல் நீளுகிறது. நக்கீரனும், சிவனும் விவாதம் நடத்திய மதுரையில் உங்களின் கைங்கர்யத்தால் யாரெல்லாம் மதுரையை ஆளும் நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா...அரசியலுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன் வந்து பார்ததால் ....மூர்ச்சையாகி விழுந்து விடுவான். நீங்கள் எம்.பி யாகி விட்டால் மதுரை என்னவாகும்?தயவு செய்து நீங்கள் தேர்தலில் நி்ற்கத்தான் வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்...மதுரை மக்கள் நன்றாக இருந்து விட்டு போகட்டுமே..பாவம் விட்டுவிடுங்கள்.

Anonymous said...

மதுரையில் கண்டிப்பாக அழகிரிவலம் நடக்கும்.. அதை அந்த கடவுளே நினைச்சாலும் தடுக்க முடியாது ....

Inba said...

check out the below link..

abt
Anja Nenjan(arajagathuku?) Azhagiri and Terror star JK.Rithish

http://www.athishaonline.com/2009/04/blog-post_06.html

nara said...

எத்தகைய அராஜகத்தையும் செய்து, மக்களை பயப்படுத்தி, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடமுடியும் என்ற நம்பிக்கையில் மதுரையில் களம் இறங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் எதிர் நிர்ப்பவர்களோ கம்யூனிஸ்டுகள். கறைபடியாத எளிமைக்கும், கலங்காத வீரத்திற்கும் பெயர்போனவர்கள்.


கஷ்டம்டா சாமி - இந்த காமெடிக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா?
யாருப்பா அந்த திமுக காரன்........? லீலாவதி படத்தை பார்த்து நமுட்டு சிரிப்ப்பு சிரிக்கிரது

Erode Nagaraj... said...

ம்ம்...
ஏம்பா இட்லி..
பல்லு வலியா உமக்கு?
பாயும் வேகம் ஜெட் லீ "தாண்டா"
பன்ச் வெச்சா இட்லி "தாண்டா"
அப்படீன்னு ஒரே,ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமா இருக்கே!

அழகிரியின் அலம்பல்கள்னு பேர் வெச்சா,பெயர்-அச்சமா மாறீடுமோ?

எப்படியோ, நான் புது visitor.
EN -joyed this blog .

Anonymous said...

ஈரோடு திரு நாகராஜ் அவர்களே!
எப்டி அய்யா இப்படி! :-)
என்ன இதுக்குனே ரூம் போட்டு யோசிப்பீங்களா?

இந்த "காக்கா எச்சம்" மாதிரி "மச்சத்தால"அரசியல் நடத்துற நம்ம ஊரு அரசியல் வியாதிங்களுக்கு இனிமேயானும் வரட்டும் "அச்சம்"..

ganesh said...

பாவம் மதுரை மக்கள்... என்று சொல்பவர் கூட அழகிரி வெற்றி பெறுவார் என்று கூறுகிறார். மற்றொருவர் மு.க.°டாலினை ஜெயிக்க விடாமல் அதிமுக செய்த தகிடுதத்தம் கொஞ்சமா.. என்று மடக்குகிறார். இதெல்லாம் இருக்கட்டும். இப்போது நடக்கும் போட்டி கடந்த பத்து ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து அப்பழுக்கற்ற பேரோடு நம்முன் நிற்கும் மோகனுக்கும், கலைஞர் மகன் வந்திருக்கேன் என்ற அறிவித்துக் கொண்டே செல்லும் அழகிரிக்கும் இடையிலான போட்டி.


அராஜகம், அட்டுழியம், அரசியல் கொலைகள் என்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப்பார்க்கலாமே... கலைஞர் மகன் வந்திருக்கேன் என்று கூறிக்கொண்டு ஓட்டுக் கேட்கும் அழகிரி, அந்த அந்த°தை வைத்துக் கொண்டு மதுரைக்கு என்ன செய்திருக்கிறார்...?? பெரியா°பத்திரி விரிவாக்கம் நடந்ததா...?? பா°போர்ட் அலுவலகம் வந்ததா...?? கேந்திரிய வித்யாலயா வந்ததா...?? இல்லை... இவருடைய கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கமிஷன் இல்லாமல் வேலை நடந்ததா...? எதுவுமே இல்லையே...


இதெல்லாம் மோகன்தானே செய்திருக்கிறார்... மோகன் வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போது முக்கியம்.. அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்...