பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 06, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2009

முன்குறிப்பு: ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 நிகழ்ச்சியை எப்படி எழுக்கலாம் என்று யோசித்த விஜய் டிவி, இந்த ரவுண்டை புதுசாக கொண்டு வந்திருக்கிறார்கள். இது அடுத்த வருஷம் வர போகும் நிகழ்ச்சி

நடுவர்கள் வழக்கம் போல் உன்னிஜி, சுஜாதாஜி, ஸ்ரீநிஜி. தொகுப்பாளராக எரிச்சல் மூட்ட வருவது ஹேமமாலினி யூகேந்திரன் வாசுதேவ நாயர்.

"Welcome to Airtel super singer 2008, சாரி 2009 (அதையே திருப்பித் திருப்பி சொன்னால் இப்படித்தான் தப்பு வரும்), தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் வேட்டை. இது அரசியல் ரவுண்ட்

முதல் கண்டஸ்டண்ட் யார் என்று பார்ப்பதற்கு முன் ஒரு சின்ன பிரேக்.

"Welcome back to Airtel super singer 2008, sorry 2009! தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் வேட்டை. அரசியல் ரவுண்ட்ல முதல் கண்டஸ்டண்ட் வைகோ.. உங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள் வைகோ"

என் பெயர் வைகோ. என் பெயர் காரணமா என்று தெரியாது, என்னை எல்லோரும் வை.Go என்று விரட்டுகிறார்கள். என் குருநாதர் கலைஞர். இப்ப யாரும் இல்லை, என் சீடர்கள் எல்லாம் சீடை போல உருண்டு ஓடிவிட்டார்கள். என்னுடைய ஹாபிஸ் வெங்கலக் குரலில் வீரசபதம் செய்வது, தோனியில் இலங்கை போவது, யாராவது உண்ணாவிரதம் இருந்தால் அவர்களுக்கு பழ ஜூஸ் கொடுப்பது..

சரி மிஸ்டர் வைகோ என்ன பாடல் பாட போறீங்க ?

அரண்மனைக் கிளியில், என் தாய் எனும் கோயிலை பாடல், இசைஞானி பாடியது.

என் தாயகம் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே

என் தாயகம் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே
என்னைத் தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சமில்லை கிளியே

இப்ப நம்ம ஜட்ஜஸ் என்ன சொல்றாங்க பார்க்கலாம். உன்னிஜி

"நன்னா பாடினீங்க. பல்லவி Neatஆ இருந்தது. முதல் சரணத்தில கொஞ்சம் ஸ்ருதி போச்சு"

"அடுத்த வாட்டி பாடும் போது ஸ்ருதி கமலஹாசனை கூட்டிகிட்டு வரேன்"

"ஐயோ நான் அந்த ஸ்ருதியை பத்தி சொல்லலை"

இப்ப நம்ம சுஜாதாஜி

"என்னக்கு ரொம்பப் புடிச்சுது உங்க Performance. உன்னி சொன்னப்பல பல்லவி Too Good. ஸ்ருதி தான்..."

ஸ்ரீநிஜி உங்க கமெண்ட்ஸ்

"வைகோ, இவங்க சொன்னாப்பல ரொம்ப நல்லா இருந்தது ஆனா Not your best performance. அப்பறம் லிரிக்ஸ் எல்லாம் மறந்துட்டீங்க. தாய் என்று வரும் இடத்தில் தாயகம் என்று சொல்றீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

நன்றி மிஸ்டர் வைகோ. அடுத்த ரவுண்டுக்கு நீங்க இருப்பீர்களா அல்லது, வெளியேறி வேற கூட்டணிக்கு போவீர்களா என்று தெரியாது. பார்க்கலாம்.

"Airtel super singer 2009 தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் வேட்டை, அரசியல் ரவுண்ட்ல அடுத்த கண்டஸ்டண்ட் நம்ம டாக்டர் ராமதாஸ்! வணக்கம் டாக்டர் ராமதாஸ் உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க."

என் பெயர் மருத்துவர் ராமதாஸ். ஆனால் யாரையும் வருத்துபவன் இல்லை (ஹார்ம்லெஸ்). எனென்றால் நான் யாருக்கும் வைத்தியம் பார்ப்பதில்லை, ஆனால் என்னுடன் கூட்டணி வைத்துக்கொள்பவர்கள், அடிக்கடி மருத்துவமனைக்குப் போவார்கள் எனக்கு பிடித்தது மாம்பழம்தான்; ஏன் என்றால் அது மஞ்சளாக இருக்கும். எனக்கு சூரியனைப் பிடிக்கும். ஏனென்றால் சூரியன் சுட்டெரிக்கும் வெயில்காலத்தில் தான் மாம்பழம் கனியும். மாம்பழத்துக்கு மேலே இரண்டு இலை இருக்கும்; அதுவும் எனக்குப் பிடிக்கும். ஆனால் எப்போது எது பிடிக்கும் என்பதை அப்போதைக்கப்போதுதான் சொல்லமுடியும். என்னிடம் ஒன்றும் இல்லை நெஞ்சத்தில் அன்பும், பாக்கெட்டில் மணியும் இருக்கின்றன, அவ்வளவுதான். எனக்கு குரு வைத்துக்கொள்வதில் நம்பிக்கை கிடையாது. அதனால் என் சிஷ்யனின் பெயர் காடுவெட்டி குரு. எனக்கு பெரியதிரையும் சின்னத்திரையும் அறவே பிடிக்காது. ஆனாலும் மக்களுக்காக மக்கள் தொலைக்காட்சி மட்டும் பார்ப்பேன்.

சரி மிஸ்டர் ராமதாஸ் நீங்க என்ன பாடல் பாட போறீங்க

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

ஏழு என்கிறாய் என் 7 ஸ்வரம் அவள்
ஏழு ஜென்மமாய் என்னை ஜெ'யிக்க வந்தவள்
அவள் வேறேயாரு (போயஸ்)கார்டனிலே பாரு ...

ஜட்ஜஸ் உங்க கமெண்ட்ஸ்

நீங்க டாக்டர் அதனால "Clinically efficient performance" அங்க அங்க சுருதி போச்சு ஆனால் கேட்க நல்லா இருந்தது.

This round is your round. ரொம்ப நல்லா இருந்தது. ஒரிஜினல் பாடலைவிட அங்கங்கே இம்புரூவ் செய்து பாடியது நல்லா இருந்தது. ஏழை என்கிறதை ஏழு அப்பறம் அவன் என்பதை அவள், கண்ணாடிக்குப் பதில் கார்டன்.. too good.

பிரமாதமா இருந்தது. பாடியதில் நல்ல Grip இருந்தது. அதுவும் ஏழு சொல்றபோது நல்ல Grip. என்ன ஸ்ருதி தான் கொஞ்சம் problem. ப்ராக்டிஸ் பண்ணா வந்துடும்.

"நான் டாக்டராவே பிராக்டீஸ் பண்ணாம வந்தவன். பாட்டுக்கா பிராக்டீஸ் செய்வன்? வந்துட்டாய்ங்க நீதி சொல்ல.."

அடுத்த கண்டஸ்டன்ட் யாருன்னு பார்க்கறதுக்குள்ள ஒரு சின்ன பிரேக். இது Airtel super singer 2009 தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் தேடல் வேட்டை.

Welcome back to Airtel super singer 2009 தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் வேட்டை. அரசியல் ரவுண்ட்ல நமது அடுத்த கண்டஸ்டன்ட் கேப்டன் விஜயகாந்த்.

வாங்க விஜயகாந்த் உங்களை ஏன் எல்லோரும் கேப்டன் என்று கூப்பிடுகிறார்கள் ?

விஜயகாந்த் என்னுடைய பேர். நான் எப்போதும் Leftist. நான் காலை சொன்னேன். எனக்கு தீவிரவாதிகளை அடிப்பதும் தமிலனின் நலனைச் சிந்திப்பதுமே பொலுதுபோக்கு. என்னுடைய குரு எம்.ஜி.ஆர். என்னை மக்கள் கேப்டன் என்று கூப்பிடுவார்கள். நான் எப்போதும் தனியாள், என் கூட்டணி எப்போதும் மக்களுடனும் கடவுளுடனும்தான். ஏனென்றால் அவர்கள்தான் பங்கு கேட்க மாட்டார்கள்..

ஓகே நீங்க என்ன பாடல் பாட போறீங்க

நான் இளையராஜா பாட்டு பாடப் போறேன்.

நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்
துட்டு தொகுதி துட்டு
கூத்து என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது..
பாட்டு தான் . புது பாட்டு தான்... தனக்குதக்க
கூட்டுதான் இணைஞ்சது ஒரு கூட்டு தான்


கான்ஃபிடன்ஸ் இல்லை விஜய்காந்த். கொஞ்சம் அழுத்தமா பாடியிருக்கலாம். உங்களுக்கே நீங்க பாடினது சந்தேகமாக இருந்தது என்று நினைக்கிறேன். பல்லவியில கொஞ்சம் தப்பு இருந்தது.

Definetly good performance. உன்னி சொன்னப்பல பல்லவி கொஞ்சம் நல்லா பாடியிருக்கலாம். ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் என்பதை இன்னும் கூட ஓப்பனா பாடியிருக்கலாம். அதில தப்பு இல்லை. அரசியல் என்று வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம்.

கேப்டன் என்ன ஆச்சு. நல்லா வாய்விட்டு பாடுங்க, ஜெயிப்பது தோற்பது எல்லாம் சகஜம். உங்களுக்கு fundamental கொஞ்சம் பிராப்ளம். அடிக்கடி உங்க வாய்ஸை மாத்தி மாத்தி பாடறீங்க. அது மாதிரி செய்யாதீங்க உங்க future ஸ்பாயில் ஆயிடும்.

அனந்த்ஜி நீங்க என்ன நினைக்கிறீங்க.

பாடுவதற்கு நல்ல energy வேண்டும். அது உங்களிடம் கொஞ்சம் மிஸ்ஸிங்.நான் உங்களுக்கு “நல்லா ஸ்ருதி ஏத்திட்டு பாடுங்க”ன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு வேற ஸ்ருதியை ஏத்திட்டு வந்துடுறீங்க.இது சட்டசபை இல்லை. அந்த மாதிரி எல்லாம் வரக் கூடாது. வேணுமுனா பன்னும் ரொட்டியும் சாப்பிட்டு பாடுங்க. எனி வே.. ஆல் த பெஸ்ட்.

Airtel super singer 2009 தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் வேட்டை. அரசியல் ரவுண்ட்ல அடுத்த கண்டஸ்டன்ட் நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் கலைஞர்.

கலைஞர் உங்களைப் பற்றி இரண்டு ஒரு வார்த்தைகள் சொல்லுங்க.

என்னுடைய ஹாபிஸ் குடும்பங்களுடன் இருப்பது. அவர்கள் போடும் சின்னச் சின்ன சண்டைகளை எல்லாம் சரி செய்து வைப்பது. மற்றபடி சினிமா நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டால் கலைஞர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கும்வகையில் கடைசிவரையில் அமர்ந்திருந்து ரசித்துப் பார்ப்பேன். பிறகு மருத்துவமனைக்கு போவேன்.

என்ன பாட்டு பாடப் போறீங்கன்னு தெரிஞ்சுக்க எல்லாருமே ஆவலா இருக்கோம்.

மச்சான் பேரு மதுர
(அழகிரிய)வெச்சன் பாரு எதிர
அவன் றெக்கைகட்டி பறந்துவரும்
ரெண்டு காலு குதிர

ஜட்ஜஸ்....
கலைஞர் உங்களுக்கு ஸ்டேஜ் பர்ஃபார்மன்ஸ் பத்தின கலை இன்னும் சரியா கைகூடலை. மச்சானைப் பத்தி பாடும்போது மத்த அத்தனைபேரையும் தயக்கத்தோட பார்த்துப் பார்த்து பாடறீங்க. நீங்க பாடும்போது யாராவது குறுக்க வந்து மைக்கப் பிடிங்கிடுவாங்களோ, வெளிய போயிடுவாங்களோன்னு பயப்பட இது குடும்பம் இல்லை. தைரியமா உங்களுக்குத் தெரிஞ்சதைப் பாடலாம்.

பாடினீங்க. ஆனா பாடல் தேர்வு விஷயத்துல நீங்க கோட்டை விட்டுட்டீங்க. உங்களுக்கு மட்டும் பிடிச்சா போதாது. மக்களுக்கும் மத்தவங்களுக்கும் பிடிக்கற மாதிரி பாடலா இருக்கணும்.

கலைஞர்கள் பேரைக் காப்பாத்திட்டீங்க. ஆனா உன்னிஜியும் ஸ்ரீநிஜியும் சொன்ன மாதிரி தேர்வு சரியில்லைன்னு உங்களுக்கே தெரிஞ்சதால டோன் கைகொடுக்கலை. அடுத்த ரவுண்ட்ல இன்னும் கொஞ்சம் தடுமாறாம செய்ய வாழ்த்துகள்.

Airtel super singer 2008, தமிழகத்தின் மிக பிரம்மாண்ட வெங்கலக் குரல் வேட்டை. அரசியல் ரவுண்ட்ல அடுத்து நாம் அழைப்பது திருமா.. உங்களைப் பத்தி சொல்லுங்க திருமா.

திருமாவளவன் என் பேர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சு ஆதிக்கசாதி அத்தனை பேரையும் அடிபணிஞ்சு போவேன். அடங்க மறு அத்து மீறு... இன்னும் என்னன்னவோ சொல்லிதான் ஆரம்பித்தோம். இப்போது மறந்துவிட்டது. ஆனாலும் வெங்கலக் குரல் துருப்பிடிக்காமல் இருக்க இங்கே வந்திருக்கேன். முதலில் மானாட மயிலாடக்கு தான் கூப்பிட்டார்கள், ஆனால் அங்கே குஷ்பு இருப்பதால் போகவில்லை. மற்றபடி எனக்கு ஹாபீஸ் என்று ஒன்று இல்லை போர் அடிச்சா ஈழ விடுதலை, போஸ்டர் எரிப்பு, பஸ் உடைப்பு என்று ஏதாவது செய்வேன். இல்ல இருக்கவே இருக்கு சத்தியமூர்த்தி பவன்.

குட். என்ன பாட்டு பாடப் போறீங்க?

அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

ஜட்ஜஸ்
சாரி திருமா, உங்களுக்கான பாடலா இல்லாம ஊரான் பாடலைப் பாடறதால உங்க குரலுக்கு சூட் ஆகலை. பாவம் இல்லவே இல்லை. I mean the feel.

சொன்ன மாதிரி ஃபீலிங்ஸ் மிஸ்ஸிங். அதுக்குக் காரணம் எது அடிக்கற கை, எது அணைக்கிற கைங்கற குழப்பம் உங்களுக்கே இருக்கறதுதான்.

பல்லவியை வ்ட சரணம் நல்லா இருந்தது. இன்னும் அந்த feel வரலை, தீக்குளிப்பதற்கும் பாத்ரூமில் குளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கில்ல.

நமது அடுத்த கண்டஸ்டன்ட் கேப்டன் ஜெயலலிதா.
( இந்த சமயத்தில் ஜெயலலிதாவிற்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் வருகிறார்).
அம்மா ரெஸ்ட் எடுக்க எஸ்டேட் போயிருக்காங்க அதனால் நான் அம்மாவுக்கு Proxy.
"இப்படி எல்லாம் செய்யக்கூடாது".
"நீங்க மட்டும் சின்மையீக்கு பதில வறீங்க நான் வரக்கூடாதா ?"
"சரி, ஏதோ இவ்வளாவு தூரம் வந்துட்டீங்க உங்களை பற்றி சொல்லுங்க"
"என்னை பற்றி சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை"

சரி ஏதாவது பாடிட்டு போங்க.

( கையில் அம்மா படத்தை வைத்துக்கொண்டு பாட ஆரம்பிக்கிறார்)

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
டெல்லியையே ஆட்ட்ப்போகும் தெய்வமும் நீயே.
முருகா.. முருகா.. முருகா.. முருகா..
(சுப்ரமணிய சுவாமியை நினைத்தவாரே)

ஜட்ஜஸ்:

உங்க வாயிஸ் Hauntingக இருந்தது. நீங்க ஏதோ பார்த்து பயந்து போயிருக்கீங்க என்று நினைக்கிறேன். பயப்படாம பாடுங்க.

கையில பாட்டு புத்தகம் வைத்து பாடுவதை பார்த்திருக்கிறேன் ஆனா நீங்க அம்மா போட்டோ வைத்துக்கொண்டு பாடுவது it is so different.

நல்லா மூச்சு விட்டு பாடுங்க. அம்மா தான் ஊரில இல்லையே அப்பறம் ஏன் மூச்சு விட பயப்படுறீங்க ?

இன்றைய நிகழ்ச்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது. நாளை 'நாக்-கவுட்' ரவுண்ட். நேயர்களே நளை மீண்டும் சந்திப்போம். அது வரை வணக்கம் கூறி விடை பெறுவது ஹேமமாலினி யூகேந்திரன் வாசுதேவ நாயர்.

[ நாளை என்ன வர போகிறது என்று முன்னோட்டமாக இவை வருகிறது]

இல.கணேசன்.....
நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!
ஆயிரம் பாடட்டும் மனது!
என் ஆசைக்கு இல்லை உறவு!

கார்த்திக் .....
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

வைகோ....
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்தாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

எஸ்.வி.சேகர்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

விஜயகாந்த்
"தனியே... தன்னந்தனியே

தா.பாண்டியன்
ஜிங்குசா ஜிங்குசா
செகப்புக் கலரு ஜிங்குசா
பச்ச கலரு ஜிங்குசா
மஞ்ச கலரு ஜிங்குசா

40 Comments:

மடல்காரன்_MadalKaran said...

நெஞ்சம் இனித்தது. கண்கள் பனித்தது. இட்லி வடை ருசித்தது.
கூடவே அதிக சிரித்து வரும் வயிற்று வலிக்கு மருந்து என்ன என்பதையும் மறக்காமல் பதிவில் போடவும்.

கொடும்பாவி-Kodumpavi said...

இந்த மாதிரி பதிவெல்லாம் சனி ஞாயிற்று கிழமைல போடுங்க.. கொஞ்சமாவது நினைச்சு பாத்தீங்களா ‘பல' பேர் ஆபீஸ்ல இட்லி வடை படிக்கறாங்க.. திடீர்னு கணினிய பாத்து ‘கெக்கபெக்கே'ன்னு சிரிச்சுகிட்டு இருந்து மத்தவங்க என்ன நினைப்பாங்க..? (இன்னிக்கு முத்திடுச்சுன்னு நினைப்பாங்க) அடுத்தவங்க பிரச்சனைய நினைச்சு பார்த்து பதிவிடனும். ஏன்யா சிந்திக்க மாட்டேங்கிறீங்க? மக்களே கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.

அக்கம் பக்கம் said...

'இட்லி வடை'க்கு Airtel Super Singer 2008 மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு என்னு நான் தெரிந்து கொள்ளலாமா? இதற்கு முனபு கூட இதைப் பற்றி ஒரு பதிவினை நான் படித்தேன். அதான் ராகினிஸ்ரீ யை நீக்கி விட்டாயிற்றே.. அதன் பிறகும் ஏன் இவ்வளவு கோபம்...

Anonymous said...

சூப்பர் கற்பனை பாஸ்.

மு.கவும், ஜெயும் (அநியாயத்திற்கு "ரெஸ்ட்" எடுக்கறாங்க பாஸ்.) ஒ.பியின் "பிராக்ஸி" தான் "தூள் பஞ்ச்"

இந்த போஸ்ட் எப்படி, தொடர்ந்து தேர்தல் முடியும்வரை தொடருமா ?

காங்கிரஸ் "ஜால்ராக்களை" இந்தபோட்டியில் சேர்க்கவில்லையா ?

Anonymous said...

செம கலக்கல் ... உங்களுக்கு சுருதி, பல்லவி, சரணம் எல்லாம் perfect. இட்லி you are rocking.

R.Gopi said...

IV

Songs selction supero super.

AIRTEL Vs IV,

(What is the problem today?)

Thomas said...

தேர்தல் super cheaters 2009……!

இந்தியாவின் மிக பிரமாண்டமான ஊழல் வேட்டை......!

முதலில் தொகுதி ரவுண்ட்......

அருமையா அருமை

Mohan Kumar said...

நன்னா இருந்துது.. உங்க கிட்டேந்து எதிர் பார்கவே இல்லை.. This is your best performance till date..

ஆனா.. உன்னிஜி நன்னாவை ஒரே முறை use பண்ண மாதிரி காட்டிநேள்.. அது தப்பு.. இன்னும் அதிகமா அவர் use பண்ணுவார்.

தொடர்ந்து இப்படியே maintain பண்ணுங்கோ

Mohan Kumar
My blog: http://veeduthirumbal.blogspot.com

கிரி said...

//ஒன்றும் இல்லை நெஞ்சத்தில் அன்பும், பாக்கெட்டில் மணியும் இருக்கின்றன//

ஹா ஹா ஹா

//ஏழு என்கிறாய் என் 7 ஸ்வரம் அவள்
ஏழு ஜென்மமாய் என்னை ஜெ'யிக்க வந்தவள்
அவள் வேறேயாரு (போயஸ்)கார்டனிலே பாரு ... //

கலக்கல்

மஞ்சள் ஜட்டி said...

அவாளோட தீர்ப்பு..

இது "அவா" ப்ரோக்ராம் ஆச்சே?? வை.கோ, மு.க, மத்தவாள் எல்லாம் எங்கேயிருந்துன்னா வந்தார்?? "அவா" இல்லேன்னா இதுல கலந்துக்கப்படாது..மாமா கோச்சுப்பார்....யார்.யார் "அவா" இல்லியோ, அவள்ளாம் ரிஜெக்டேடு...பேசாம ஆத்துக்கு போங்கோ..

அப்படின்னு, சொல்லிட்டாளாம்ன்னு வருத்தப்படரா போங்கோ..

-- இது சங்கு மாமி என்னாண்டே பொலம்பினது...

மானஸ்தன் said...

"too much" man!

ஞாயிற்றுக் கிழமை பூரா ஆளக் காணும்னு நெனச்சப்பவே ஏதோ புதுசா வருதுன்னு பட்சி சொல்லிச்சு!



///"Definetly good performance. உன்னி சொன்னப்பல பல்லவி கொஞ்சம் நல்லா பாடியிருக்கலாம். ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் என்பதை இன்னும் கூட ஓப்பனா பாடியிருக்கலாம். அதில தப்பு இல்லை. அரசியல் என்று வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம்."///

இந்த "portion" எல்லாத்தையும் தூக்கி சாப்ட்டுடுத்து!


நீங்க என்னதான் இவ்ளோவ் நன்னா programme குடுத்தாலும், ஒரு பெரிய குறை!
you have not mentioned anything about "illimination" :-D
tank-Q! :-D :-)

மஞ்சள் ஜட்டி said...

கார்த்திக் குக்கு...இந்த பாட்டு ரொம்ப பொருந்துமே??

"நெஞ்சுக்குள்ளே இன்னாருக்குன்னு சொன்னா தெரியுமா.
நான் கெஞ்சி சீட் கேக்குறது உனக்கு தெரியுமா?
கட்சியே அழிஞ்சாலும், அம்மா காலிலே விழுவேன்..
சொல்லி சொல்லி விரட்டினாலும், செருப்பாக தேய்வேனே...
உண்ணாமல், உலராமல் கார்டன் வாசலில் காத்திருப்பேன்....."


"பொன்னுமணி" பட பாடல் மேட்டில் படிக்கணும்...:))

மஞ்சள் ஜட்டி said...

இப்போ கலைஞருக்கு முறை ...எனவே அவரது பாடல்..

"டாக்டர் செத்தார், அம்மா சேர்த்தார்,
காடு வெட்டி குருவை வெச்சி அட்ரா...அட்ரா..நாக்க மு.க, நாக்க மு.க...நாக்க மு.க
----
40 தொகுதி வெச்சான், 40 தையும் சீரமைச்சான்.,
ஆஸ்பத்திரியில் படுக்க வெச்சான், கவிதை டைரி எழுத வெச்சான்...
அடிங்கடா, அடிங்கடா....மருத்துவரை அடிங்கடா....
----
அழகிரியை நிக்க வெச்சான், கறி சோறு போட வெச்சான்...
சுப்ரமணிய சாமிக்கு மதுரையில ஆப்பு வெச்சான்....

-----
உஸ்..உஸ்...உஸ்....
ஐயோ..பாடச்சொல்லி கொல்லுறாங்களே...
----


போதும் கலைஞர் அய்யா.. நீங்க ரொம்பவே பாடிட்டீங்க...அதனால மே 16 ம் தேதிக்கு பின்னர் வைல்ட் கார்ட் ரவுண்டில் "அவா" உங்களை கூப்டுவா....

Anonymous said...

Engaathu maaplannu sollikardhula naekku romba perummaya irukku. Besh Besh. Will keep coming now.

நான் அவன் இல்லீங்கோ said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ? Airtel Super singer total damage.

மஞ்சள் ஜட்டி said...

இப்போ..ரஜினி வந்திருக்கார்...அவர் வழங்கும் பாடல் இதோ...

"ஒரு காற்றில் அலையும் சிறகு...
அது யாருக்கு ஒட்டு போடும்...??
கண்ணில் காணும் சின்னம் எல்லாம்...எனக்கு
என்னவென்று தெரியும்....ரசிகனே..
நீ ஒட்டு போட்டா போடு...இல்லே
எங்கே வேணாலும் குத்து....
இது என்ன உள்குத்தோ..யார் அறிவார்??"

---
சார்,
இது ரொம்பவே மொக்கையா இருக்கு, தயவு செய்து நீங்க..தேர்தல் முடியற வரை இமய மலையிலோ, டான்சானியா நாட்டிலோ இருங்க....எங்களை கொஞ்சம் வாழ விடுங்க...இப்படியே போனா தி.ஆர்.பி ரேட்டிங் போயிடும்...

மஞ்சள் ஜட்டி said...

இப்போது பாட வந்திருப்பவர்கள்...சித்தியும், சித்தப்பாவும்....(மன்னிக்கவும். திருமதி & திரு ராதிகா sarathkumaar அவர்கள்)
----
"அப்பா சரத் குரலில் : இரண்டு கைகள் எட்டானால்....(பி.ஜெ.பி யில் உள்ள இருவரின் கைகளையும் சேர்த்து)
ச.ம.க வுக்கே....எதிர் காலம்....
மகன் சரத் குரலில் : அம்மா கும்பல்களே...ஓடுங்கள் .... பூனைகள் நான்கு வருகின்றன..."

----

சார்,
ரொம்ப நல்லாவே உங்க கருத்தை (அப்பா சரத், மகன் சரத் குரல்ல) சொன்னீங்க..ஆனா இது அசத்த போவது யாரு நிகழ்ச்சி இல்ல...அதனால மன்னிக்கணும்... வேற இடம் பாருங்க..

மஞ்சள் ஜட்டி said...

அடுத்து வருவது...திரு.தங்க பாலு...அவர்கள்..
----
சீட் தந்த கலைஞருக்கு தங்கபாலு லாலி..,
kandukitta soniyaa அம்மாவுக்கு நான் paadum laali..,
செருப்பாலடிக்கும் தமிழக காங்கிரசாருக்கு.......(அழுகிறார்..)
சீட் இல்லை லாலி...
என்னை தாங்கும்..தி.மு.க விற்கு.....எப்போதும் லாலி....
-----
(வரம் தந்த சாமிக்கு - மெட்டில் படிக்கவும்)
----
என்ன ....ஏர் டேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எழவு வீடாக்கிட்டாறு இவரு??
செக்யூரிட்டி ... சாரை சத்திய மூர்த்தி பவனுக்கே ஆட்டோல ஏத்தி விடுங்க...

மஞ்சள் ஜட்டி said...

இந்த அத காலத்துல...விஜய. டி.ஆர் இல்லேன்னா எப்படி?? எங்கேயும் அவருக்கு வரவேற்ப்பு இல்லாத காரணத்தினால்...விஜய் டிவி ஆபீஸ் முன்பாக நின்று புலம்புகிறார்...உங்களுக்காக ஒரு நேரடி ஒளிபரப்பு:
-----
நானும் உங்கள் தயவை....யியி...யீ....
நாடிவந்த கரடி..டி..டி.....(தளும்புகிறார், தலையை சிலுப்பி, தாடியை நீவி....)
தேடி வந்த வேளை....நிருபர் செய்த லீலை...
தாடியும் மழிந்ததடி...ஈ...ஈ ....(சொறிகிறார், அழுகிறார்....)
தொகுதி ஆசையும் அழிந்ததடி....உயிரே...எ..எ...எ..

----
உடனே விஜய் டிவி தலைமை நிர்வாகி வெளியே வந்து::

சார்,
ரொம்ப தளும்பாதீங்க...விஜய் டிவி சார்பா நாங்களே உங்களை தேர்தல்ல நிக்க வெக்கிறோம்...இப்போதைக்கு அப்பீட் ஆயிக்குங்க..

மஞ்சள் ஜட்டி said...

நேர் காணலுக்கு பின் மதுரை சீட் உறுதியான சந்தோஷத்தில்...நம்ம அஞ்சா நெஞ்சன் அவர்கள்...சிறப்பு பாடகராக அனைத்து பங்கேர்ப்பாளர்களுக்கும் "கறி விருந்து" படைக்க....
----
வந்தேண்டா மதுரைக்காரன்...அடடா....கள்ள ஒட்டு பத்தி பாடப்போறேன்..
கறி விருந்து வெச்சி கேட்க போறேன்....
இலைக்கு அடியில...நோட்டு வெச்சா ஓட்ட நீயும் குத்துடா தம்பி....
இலைக்கு மேல கறி துண்டு வெச்சா...தின்னுட்டு கம்பி நீட்டுடா தம்பி...


Anna malai song tune :))
----
போதும் சார்...

நீங்க இப்படியே...மதுரைக்கு போயி சுப்ரமணிய சாமிக்கு கறி விருந்து வைக்க முயற்ச்சி பண்ணுங்க...

மஞ்சள் ஜட்டி said...

இட்லி வடை....

இது போதுமா..இல்ல இன்னமும் வேண்டுமா?? ஸ்கூல் ல இட்லி திங்கற போட்டில 42 இட்லி தின்னவனாககும் நான்....:))

seetha said...

idlyvadai, does sujatha speak tamil?or what she thinks as tamil

சின்னப்பையன் said...
This comment has been removed by the author.
சின்னப்பையன் said...

ஏன் இந்த ஏர்டல் சூப்பர் சிங்கர்மேல் இவ்வளவு கோபம். மற்றபடி பாட்டு செலக்சன் ரொம்ப சூப்பர்

மானஸ்தன் said...

திரு மஞ்சள் ஜட்டி அவர்களே!
நீங்க சொல்லவே வேணாம்! ஒங்க போட்டோவைப் பாத்தாலே தெரியுது !!! :-)

பின் குறிப்பு:
ஸ்கூல் "days"-ல சரி. இப்போ "perth"-ல எப்டி? அதே "trend" continue ஆகிறதா? :-) :-D

Anonymous said...

நேற்று இரவு 7:30க்கு சிரிப்பொலியில் சிரிப்பதிகாரம் நிகழ்ச்சி. வசனங்களில் அவ்வளவு உள்குத்து.

'என்ன தாயி பண்றது. ரெண்டுமே தருதலைக் குட்டிங்க. ஒன்னோட ஒன்னு அடிச்சிக்குதுங்க.. உண்ணாவிரதம் இருப்பேன்னு கூட சொல்லிப் பாத்துட்டேன். ம்ம்ம்.. குடும்பம்னாலே பிரச்சனை தான்.'

இது முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறதா? எதிராக இருக்கிறதா?

Taken from http://sombaery.blogspot.com/2009/04/blog-post_06.html

மஞ்சள் ஜட்டி said...

இட்லி வடைக்கு ஒரு கேள்வி...

உங்களோட அறிமுக படலம் இருக்கிற பக்கத்துல (அதான் அய்யர் சாம்பார் ஊத்துராரே..அந்த படம்) உக்கார்ந்து சாப்பிடுறவர்....அவர பார்த்தா நம்ம அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணன் மாதிரி இருக்காரு...அவருக்கே இட்லி வடையா??

மஞ்சள் ஜட்டி said...

//திரு மஞ்சள் ஜட்டி அவர்களே!
நீங்க சொல்லவே வேணாம்! ஒங்க போட்டோவைப் பாத்தாலே தெரியுது !!! :-)

பின் குறிப்பு:
ஸ்கூல் "days"-ல சரி. இப்போ "perth"-ல எப்டி? அதே "trend" continue ஆகிறதா? :-) :-D
//

அண்ணே!!

பெர்த் ல இட்லி கெடைக்கிறதில்ல....என்ன பண்ண... muffin தான் திங்கறது.....தெனமும்..

மேலும், நீங்க பார்த்த என்னோட ஐ.டி படம் "ஸ்ரீ காந்த் தேவா" படம்...ஆனந்த விகடன் லேர்ந்து சுட்டது.....:)) கொஞ்சம் காமெடியா இருந்தது...அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன்...

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...

இட்லி வடை....

இது போதுமா..இல்ல இன்னமும் வேண்டுமா?? ஸ்கூல் ல இட்லி திங்கற போட்டில 42 இட்லி தின்னவனாககும் நான்....:))//

************

முன்னமே தெரிஞ்சிருந்தா, ஒங்களுக்கு கூட ஒரு சீட்டு தந்து இருப்பாக.......

பின்னி பெடலேடுக்கறீயலே அப்பு.....

"தல"யோட மஞ்சள் துண்டுக்கு போட்டியா இங்க ஒரு "மஞ்சள் ஜட்டி" இருக்காருன்னு "தல" கிட்ட சொல்ல மாட்டேண்ணே.........

மானஸ்தன் said...

இப்பதான் கவனிச்சேன்!
இல்லை நுனி இடது பக்கம் இருக்கணும் அய்யா!!!

திரு மஞ்சள் ஜட்டி ரொம்ப சரியா கேட்டுருக்கார்! அவர் கருப்பு கண்ணாடி போடாதுனால இது "புதுமுகம்" இல்லேன்னு ரொம்ப தெளிவா தெரியறது!! :-த


கேள்வி சரியாய் இருந்தாலும் ஒரு சிறிய தவறு இருக்கு அய்யா MJ! சாம்பார் ஊத்தறவர் ஐயர் இல்ல! கொஞ்சம் "ஓல்ட்" ஆக இருந்தாலும் அவர் Ai"youg"கார்!!!!!!!!! :-D

மஞ்சள் ஜட்டி said...

Wow!! Manasthan...

You called me MJ (Michael Jackson) ?? King of mokkai??

மானஸ்தன் said...

திரு ம.ஜ!
நீங்க அடிக்கற "sarcastic" கமெண்ட்ஸ்-கு ஏத்த மாதிரி சரியான போட்டோ தான் போட்டுருக்கீங்க!

ஒங்களுக்கு இப்போ எல்லாம் இட்லி கெடைக்கலைன்னு, நம்ம இட்லி-வடை "blog"-ல எல்லாரையும் வறுத்து எடுக்கறீங்க!

நடத்துங்க! நடத்துங்க! :-D :-) :-)

மஞ்சள் ஜட்டி said...

என்ன இட்லி வடை...

சத்தத்தையே..காணும்?? அழகிரி அண்ணன் அடிச்சுட்டாரா??

மஞ்சள் ஜட்டி said...

இந்த கூத்தை எல்லாம் பார்த்த...அய்யா நாக்க.மு.கவின் மூத்த மகன் மு.க.முத்து, தன் வாரிசு மு.அறிவுநிதி (அதாவது Knowledge Fund) உடன் நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு நேராக வந்து விட...அங்கே ஒரு பாச சந்திப்பு...

இதை விஜய் டிவி லைவ் கவரேஜ் ஆக (அதான் அடிக்கடி பில்டப்பு குடுப்பாங்களே) செய்து ஒளியேற்றி விட....அங்கே நாக்க மு.கவும், அவர் வாரிசும் பாட...ஒரே பாசமழை தான் போங்கள்....

அதிலிருந்து உங்கள் பார்வைக்கு சில...
------
நாக்க மு.க :
பாசமலரே.....நாக்க.முகவின்..வாச மலரே !!!
அல்வா குடுக்கும் நாள் வந்ததே....
நான் அழகிரிக்கு கொடுத்தது எம்.பி....
ஆனால் உனக்கு நான் கொடுப்பது...
(சற்றே தடுமாறுகிறார்)


உடன்..பதிலுக்கு..
மு.க. முத்து :
நீங்களும் பொம்மை....நானும் பொம்மை...
நம்மை சுத்தியும் எல்லாம் பொம்மை...
நீங்க கொடுத்தது அல்வா அல்வா...
என்ன பண்ணுறது எல்லாம் அல்வா...


(உடனே..அவர் மகன் அறிவு நிதி....அப்பா! போதும், வாங்க வீட்டுக்கு போகலாம்...)

Prabhu Swaminathan said...

Awesome!!! very good creativity..

லவ்டேல் மேடி said...

ஏனுங்கோ தம்பி...... நானுமும் நல்லா பாடுவேனுங்கோ .......!!!!! எனக்குமும் ஏர்டெல் சூப்பரு ஜிங்கருல ஒரு சீட்டு வாங்கி குடுத்துபோடுங்கோ தம்பி .....!!!!

வேணுமுன்னா ஒருக்கா பாடி காட்டுட்டுங்களா .......!!!!



" நின்னுகோரிஈஈஈஈஈஈ........... வரணும்....... இஸ்...ஹே.. வரணும்...... !!!!

நின்னுகோரிஈஈஈஈஈஈ........... வரணும்....... இஸ்...ஹே.. வரணும்......!!!! ""


போதுமுங்களா........????

Anonymous said...

Aiyo!!! what a post... enjoyed thoroughly...especially the Idly Vadai Vs Manjal Jatty competition...ROTFL

SK

தமயந்தி - நிழல்வலை said...

airtel super singerai naan rasichu paarpen.. athai vida unga article suuuppperrr.

ரிஷபன் said...

இட்லி,
கொடும் பாவி சொன்ன மாதிரி
கொஞ்சமாவது நினைச்சு பாத்தீங்களா ‘பல' பேர் ஆபீஸ்ல இட்லி வடை படிக்கறாங்க.. திடீர்னு கணினிய பாத்து ‘கெக்கபெக்கே'ன்னு சிரிச்சுகிட்டு இருந்து மத்தவங்க என்ன நினைப்பாங்க..?
வாய் விட்டு சிரிக்க வைத்தது இந்தப் பதிவு.

மஞ்சள் ஜட்டி said...

//முன்னமே தெரிஞ்சிருந்தா, ஒங்களுக்கு கூட ஒரு சீட்டு தந்து இருப்பாக.......

பின்னி பெடலேடுக்கறீயலே அப்பு.....

"தல"யோட மஞ்சள் துண்டுக்கு போட்டியா இங்க ஒரு "மஞ்சள் ஜட்டி" இருக்காருன்னு "தல" கிட்ட சொல்ல மாட்டேண்ணே.........//

ஐயோ...சாமி !! ஆளை விடுங்க...

ஆஸ்திரேலியா வுக்கு ஆட்டோ வராதுங்கற தையிரியம் தான்....