பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 24, 2009

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும் - 2

இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த அருண் ஷோரி அவர்களின் கட்டுரையின் அடிப்படையில் எழுதப் பட்டது.. ( பாகம் - 2 )

3. அத்வானி சொல்லும் எண்ணிக்கையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது

கிடப்பது கிடக்க கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற கதையாக கொள்ளையடித்து மறைத்து வைக்கப் பட்ட பணத்தைப் பற்றி கவலைப் படாமல், அதைத் திருப்பிக் கொண்டு வருவோம் என்று அத்வானி சொன்னவுடனேயே, அவர் சொல்லும் எண்ணிக்கை தப்பு என்கிறது காங்கிரஸ். முன்பு போஃபோர்ஸ் ஊழலையும் இது போலவே நொட்டைச் சொல் சொல்லியே பி.சிதம்பரமும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மறைத்தார்கள். ஒரு வீட்டில் கொள்ளை போகிறது. போலீஸில் வீட்டுக்காரர் புகார் செய்கிறார். நகை பணம் எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் சொத்து கொள்ளை போயிருக்கிறது என்று வீட்டுக்கார புகார் சொல்கிறார். விசாரிக்க வேண்டிய இன்ஸ்பெக்டரோ அதெப்படி ஒரு லட்சம் என்று சொல்லலாம்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நகை பணம் எல்லாம் சேர்த்து 85321 ரூபாய்க்குத்தான் கொள்ளை போயிருக்கும் அநியாயமாக ஒரு லட்சம் என்கிறீர்கள். ஆகவே நான் இந்த திருட்டு வழக்கை விசாரிக்க முடியாது என்று சொன்னால் அது எவ்வளவு அயோக்கியத்தனமாகவும், கேவலமாகவும் இருக்குமோ அவ்வளவு அயோக்கியத்தனமாக இருக்கிறது காங்கிரஸின் நிலை. ஆம் அத்வானி சொல்லும் அளவுக்கு கள்ளப் பணம் இருக்காது என்றும் அத்வானியின் தகவல் ஆதாரம் குறையுள்ளது என்றும் அவ்வளவு தூரம் இருக்க முடியாது என்றும் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் கபில் சிபல், பி.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் போன்ற காங்கிரசின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள். உண்மை நிலை என்ன?

ஓ யி சி டி எனப்படும் உலக அமைப்பு செய்த ஆராய்ச்சியின் படி பல்வேறு நாடுகளில் இருந்தும் வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், செல்வந்தர்களும், தீவீரவாதிகளும் ஒளித்து வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்த பட்சம் 1.2 டிர்ல்லியன் டாலர்கள் முதல் அதிக பட்சம் 11.5 டிரில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்கிறது. இந்த அறிக்கையின் முழு விபரமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளி வந்துள்ளது. இருந்தாலும் இந்த விஷயத்தில் எந்தவிதமான உலகளாவிய ஆராய்ச்சியும் செய்யாமலேயே சிதம்பரம் போன்ற அறிவாளிகள் இந்த கணக்கே தப்பு என்கிறார்கள். இந்த புள்ளி விபரம் தப்பு என்ற விஷயம் எப்படி இவர்களுக்குத் தெரியும்? காங்கிரசின் செய்தித் தொடர்பாளரான ஜெயராம் ரெமேஷ் அத்வானி சொல்வது தப்பு வெறும் 25 லட்சம் கோடிகள் மட்டும்தான் இந்திய பணம் ஸ்விஸ் வங்கியில் இருக்கிறது அதுக்கெல்லாம் போய் அலட்ட வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். 25 லட்சம் கோடி இவருக்கு வேண்டுமானால் சாமானிய பணமாக இருக்கலாம். கபில் சிபலோ இன்னும் மோசமாக அத்வானி சொல்வது பெரிய ஜோக், சில லட்சம் கோடிகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர 1 டிரில்லியன் எல்லாம் சாத்தியமேயில்லை என்று கேலி செய்கிறார்.

ஐயா, இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக வெளியே போயிருக்கும் பணம் ஒரு சில கோடிகளாக இருப்பினும் கூட அது யாருடைய பணம்? விவசாயிகளின், தொழிலாளிகளின், நேர்மையான வரி கட்டிய சாமானிய மக்களின் பணம் அல்லவா அது? அரசாங்க கஜானாவுக்குப் போயிருந்து மீண்டும் மக்களை அடைந்திருக்க வேண்டிய பணம் 5 லட்சம் கோடியாக இருந்தால் என்ன 500 கோடியாக இருந்தால் என்ன? அதை மீட்டுத் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா? திருட்டுப் போன பொருளின் மதிப்பு புகாரில் கொடுக்கப் பட்ட மதிப்பை விட நூறு ரூபாய்கள் குறைவாக இருக்கும் என்ற சந்தேகத்தில் திருடனைப் பிடிக்க மாட்டேன் என்று சொல்லும் போலீஸ்காரரின் அயோக்கியத்னம் அல்லவா அது? எவ்வளவு ஆணவம் இருந்தால் காங்கிரஸ்காரர்களிடமிருந்து இப்படி ஒரு எகத்தாளமான, திமிரான பதில் வரும்? மக்களை எவ்வளவு தூரம் கிள்ளுக் கீரையாக நினைத்திருந்தால் இப்படி ஒரு பதிலை இவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியும், நேர்மையும் இல்லாமல் சொல்லியிருக்க முடியும்? திருட்டுப் போன பணம் ஆயிரம் ரூபாயோ, லட்சம் ரூபாயோ திருடனைப் பிடித்து பணத்தை மீட்க்க வேண்டியதுதானே போலீஸின் கடமை? பதிலுக்கு புகார் கொடுத்தவனையே கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினால் என்ன அர்த்தம்?

கடந்த அக்டோபர் மாதம் ஓ யி சி டி தனது அறிக்கையை வெளியிட்டவுடனேயே மிகச் சிறிய நாடான ஐயர்லாந்து நாடு போராடி தன் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக களவாடப் பட்டு ஸ்விஸ் வங்கியில் சேமித்து வைக்கப் பட்டிருந்த சில பில்லியன் ஈரோக்களை மீட்டு வந்திருக்கிறது. ஒரு அயர்லாந்திற்கும் உறுத்து கூட உலகத்திலேயே மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவிற்கு ஏன் இல்லாமல் போனது? ஒரு சிறிய நாடு கூட தன் பணத்தை மீட்டு வரும் பொழுது இந்தியா முயன்றால் தன் நாட்டில் இருந்து வரி கட்டாமல் வெளியேறிய பல லட்சம் கோடி ரூபாய்க்களை மீட்க்க முடியாதா? ஏன் அதற்கான ஒரு சின்ன துரும்பைக் கூட காங்கிரஸ் அரசாங்கம் கிள்ளிப் போடவில்லை என்பதே இப்பொழுது கேள்வி. இங்கே இவ்வளவு பணம் இருக்கிறது, நீங்கள் கேட்டால் யார் யார் கள்ளக் காசை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலையே ஜெர்மன் அரசு கொடுக்கத் தயாராக இருக்கிறது அதனால் கேளுங்கள் என்று அத்வானியும், பா ஜ க வும் கரடியாக கத்திய பின்னாலும் கூட கேட்க்க மறுப்பது மட்டும் அல்லாமல் அப்படி துப்பு கொடுத்தவர்களையே ஏளனம் செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

இவ்வளவு நடந்த பிறகும், மன்மோகனின் அரசாங்கம் பிடிவாதமாக இந்த விபரங்களைக் கேட்க்க மறுத்து வருவது ஏன்? ஏப்ரல் 18 அன்று ஸ்விஸ் அரசின் இந்தியத் தூதுவர் இந்த நொடி வரை இந்திய அரசிடமிருந்து அரசு பூர்வமாக ஒரு சின்ன கோரிக்கை, ஒரு தொலைபேசி கூட எங்களுக்கு விபரம் கேட்டு வரவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார். ஏன் இந்த பிடிவாதமான மவுனம் என்று நேர்மையாளாரான மன்மோகன் நாட்டு மக்களுக்கு விளக்குவாரா?

போபர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்ட இத்தாலிய குவாட்ரோச்சியின் லண்டன் வங்கியின் பணத்தை முடக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவு போட்டும் கூட குவாட்ரோச்சியை பணத்தை எடுக்க அனுமதித்த காங்கிரஸ் அரசு எப்படி ஸ்விஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்கப் போகிறது? இவர்களை எப்படி நம்புவது? ஊழல்வாதிகளுக்கு எப்பொழுதுமே துணை போகும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் காட்டும் அளவற்ற மெத்தனம் காங்கிரஸின் உண்மை முகத்தையே காண்பிக்கிறது. திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல இந்த விஷயத்தை திசை திருப்ப ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது

4. இந்தக் கோரிக்கையை எழுப்புவதன் மூலம் அத்வானி அந்த வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக ஒளித்து வைத்திருக்கும் பணத்தை இடம் மாற்றம் செய்வதற்குத் தூண்டுகிறார்.

காங்கிரஸின் மற்றுமொரு புத்திசாலி வக்கீல் சொல்கிறார், அத்வானி இந்த விஷயத்தைக் கிளப்புவதினால் ஸ்விஸ் வங்கியில் பணத்தை கள்ளத்தனமாக வைத்திருப்பவர்கள் எல்லாம் பணத்தை வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தி விடுவார்களாம். ஜெர்மனியிடம் இந்திய கருப்புப் பண முதலைகளின் பெயர்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே இருக்கின்றது. அதை ஜெர்மனியும் வெளிப்படையாக அறிவித்து இந்தியா கேட்டால் நாங்கள் தருவோம் என்றிருக்கிறது. அப்படி இருக்க ஏதோ இது மாபெரும் ரகசியம் போலவும் அத்வானிதான் அதைச் சொல்லி கெடுத்து விட்டார் என்பது போலவும் சொல்லி காங்கிரஸ்காரர்கள் பழி சுமத்துகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே எவ்வளவு கோமாளித்தனமான அறிக்கை இது என்பது புரிந்து விடும். அமெரிக்காவின் ஒபாமா முதல் ஃபிரான்ஸின் சாக்ரோசி வரை ஸ்விஸ் வங்கியில் இருக்கும் தத்தம் நாட்டுப் பணத்தை மீட்க்க வேண்டும் என்று உரத்த குரலில் போராடி வரும் பொழுது அத்வானி சொன்னது மட்டும் எப்படி ரகசியமானது? ஒபாமா பேசும் பொழுதும், ஜெர்மனி பட்டியலைப் பெற்ற பொழுது பணத்தை எடுத்துக் கொண்டு ஓடாதவர்களா அத்வானி சொன்ன பொழுது மட்டும் ஓடப் போகிறார்கள். அப்ப்டியே அவர்கள் இடம் மாற்றினால் அந்தத் தகவலையும் இந்திய அரசுக்கு ஸ்விஸ் அரசு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுதைய நிலமை. அப்படி ஸ்விஸ் அரசு மறுக்குமானால் ஜி20 நாடுகள் ஸ்விஸ் அரசின் மீது தடை விதிக்கக் கூடும் என்பதுதான் தற்பொழுதைய நிலை. இப்படி இருக்க இந்திய அரசு கள்ளப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்தும், கள்ளப் பண விபரங்களை ஸ்விஸ் அரசிடமும் பிடிவாதமாகக் கேட்க்க மறுத்து அத்வானி மீது கோமாளித்தனமான குற்றசாடுக்களை அள்ளி வீசும் நோக்கம் என்ன? இதுதானா யோக்யவான் மன்மோகனின் யோக்யம்? இதுதான பொருளாதார மேதையின் நேர்மை? இதற்குத்தானா இவ்வளவு படித்தார் மன்மோகன்?

என் வீட்டில் திருட்டுப் போய் விட்டது என்று நான் போலீஸிடம் புகார் கொடுக்கிறேன். திருடியவன் திருட்டுப் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்ற தகவலையும் நானே கொடுக்கிறேன். திருடன் ஒளித்து வைத்துள்ள இடம் ஊருக்கே தெரிந்தும் இருக்கிறது. ஆனால் விசாரிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியோ நீ அதை என்னிடம் சொன்னால் திருடன் பணத்தை வேறு இடத்திற்கு மாற்றி விடுவான் என்கிறார். இதுதானா போலீஸ் அதிகாரியின் கடமை உணர்ச்சி? இதுதானா அவரது நேர்மை? இதுவா சட்டம்?

ஜெர்மன் அரசு மட்டும் அல்ல அமெரிக்க அரசும் கூட 800 பில்லியன் டாலர் பணத்தை வரி கட்டாமல் ஸ்விஸ் வங்கியில் கள்ளத்தனமாக வைத்துள்ளவர்களின் பட்டியலை ஸ்விஸ் வங்கியான யு பி எஸ் ஸிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த தகவலும் எல்லா மீடியாக்களிலும் வந்தது. இதைப் படித்தவுடன் தங்கள் கள்ளப் பணத்தை இடம் மாற்றாத இந்தியர்களா அத்வானி சொன்னவுடன் மாற்றி விடப் போகிறார்கள்? கேட்ப்பவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியுமா? எருமை ஏரோப்ளேன் ஓட்டுமா? மக்களின் அறியாமையைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களின் கவனத்தை திசை திருப்பி இந்த விஷயத்தை அமுக்கி விடப் பார்க்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். அப்படியே பணத்தை வேறு இடத்திற்கு மாற்றினாலும் கூட எங்கு எவ்வளவு எப்பொழுது மாற்றினார்கள் எந்த தகவலையும் ஸ்விஸ் அரசு இந்திய அரசுக்கு அளித்தே ஆக வேண்டும். இந்த உலகில் இனிமேல் கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் ஒளிய இடம் கிடையாது. இந்திய அரசு கேட்க்க வேண்டும். அதைச் செய்யவே மன்மோகனின் அரசு மறுத்து வருவது அவர்களது கள்ள நோக்கத்தையே அம்பலப் படுத்துகிறது

கீழ்க்கண்ட மீதக் கேள்விகளுக்கான பதில்கள் நாளை தொடரும்.........

5. ஏன் பி ஜே பி அரசின் பொழுது ஃபெரா சட்டத்தை ஃபெமா சட்டம் மூலம் மாற்றி குற்றங்களை ஒருங்கிணைத்து தண்டனை கொடுக்க முயலவில்லை?

6. அத்வானியின் பா ஜ க ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்து கிழித்தது?

- விஸ்வாமித்ரா
( தொடரும்.. )

பாகம் - 1


13 Comments:

Anonymous said...

வெளி நாடுகளில் உள்ள பணம் பற்றி பேசுவது ஒரு புறம் இருக்கட்டும்.
நம் வேட்பாளர்களின் உண்மையான சொத்துக் கணக்கு பற்றி யாரவது பேசுகிறார்களா??
மு.க. முதல் பச்சையம்மா வரை எல்லாரும் பொய்தான் சொல்கிறார்கள். தோழர் பாண்டியன் உள்பட.
(தோழரின் அண்ணா நகர் வீடு நாற்பது லக்ஷம் மட்டும்தானாம்!).

இவர்கள் 10 கோடி முதல் 50 கோடி வரை உள்ளதாகக் காட்டினால் உண்மையில் எவ்வளவு இருக்கும்?

இதன் அடிப்படையில் ஏன் இவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை செய்யக்கூடாது? ஒரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வால்பையன் said...

//பி.சிதம்பரமும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மறைத்தார்கள்.//

சிலேடையை ரசித்தேன்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அத்துவானி கச்சி ஆறு வர்ஷமா ஆச்சிய புடிச்சிட்டு குந்திகினு இருந்தாங்களே.. அப்போ இந்த சுச்சி பேங்கு மூடி வச்சிருந்தாங்களா?

எலீஷன் வந்தாலே ராமுறுக்கு கோயில காட்டுவோம்னு சொல்லி டகால்டி வுட்டுகினே கீறாங்களே.. அதே மாதிரி தான இந்த சுச்சி பேங்கு பணம் கொண்டாறதும்.

எப்டியும் ஆட்சிக்கு வர போறதில்லைனு தெரிஞ்சதும் என்னா வேணாலும் பேஸறாருய்யா அத்துவானி.

Gokul said...

இதுவரை அத்வானி ஒரு எதிர்க்கட்சியாக எழுப்பிய பிரச்சினைகளில் இதுதான் மிகப்பெரியதும் முக்கியமானதும் அரசியல்வாதிகளுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்ககூடியதும் ஆகும்.

நிச்சயம் அந்த பணத்தில் கபில் சிபில், சிதம்பரம், சோனியா ஜெயலலிதா , மு.க, முதற்கொண்டு எல்லா முன்னாள் /என்னால் மத்திய மாநில அமைச்சர்களும் இருப்பார்கள், ஆகவே இது எந்த அரசாங்கம் வந்தாலும் எடுக்க முடியாத பணம் (பா.ஜா.க வந்தாலும்) ஆனால் அத்வானி இந்த கேள்வியை எழுப்பியதற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும், (பா.ஜா.க ஆட்கள் எல்லோரும் பணத்தை எந்த பாங்கில் வைத்து இருக்கிறார்கள் ..ஸ்டேட் பாங்கிலா?)

இந்த கேள்வியின் முக்கியத்துவத்தை குறையாமல் பாதுகாப்பது எளிதல்ல. ஏன் என்றால் பத்திரிக்கை நிறுவன அதிபருக்கும் , தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கும் அங்கே பணம் இருக்கும். So, a good start , மற்றபடி இதனை ஒரு உருப்படியான பதிலை பெறுவது மக்களின் / மீடியாக்களின் சுரணை உணர்வு மற்றும் (குறைந்த பட்ச) common sense பொருத்து இருக்கிறது.

M Arunachalam said...

Sanjay Gandhi,

Do you really don't have brain or are you acting as if you don't have one?

When the worldwide pressure on Swiss & other Tax havens to open up their banking & tax laws & be more transparent has come-up now only when Sonia Cong & DMK's UPA Govt is at power at the centre, where is the question of Advani's party doing something on this, when they ruled the country some 5 years back?

As Sonia Cong spokespersons do, you are also trying to divert people's attention from the main question by raising totally irrelevant points.

Sonia, Karunanidhi & their family members & co-horts have stashed their illicitly acquired sin money in Swiss & other countries. So, they are fearful & hence are dilly-dallying on this issue.

Tell us, WHERE HAVE YOU KEPT YOUR BLACK MONEY, mate? Otherwise, why should you be afraid if Advani raises this question now?

Baski said...

காவேரி-கங்கை இணைப்பு திட்டம்.
சேது சமுத்திரம் திட்டம்

இது மாறி பல திட்டங்கள் சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் ஞபாகம் வரும்.
அப்புறம் Long term memory loss "கஜினி" மாறி ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஞபாகம் வரும்.

இந்த "கருப்பு பணம்" திட்டமும் இதே போன்ற ஒரு கனவு திட்டமாகவே இருக்கும்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//Do you really don't have brain or are you acting as if you don't have one?
//
முனியாண்டி விலாஸ் அதிபர் நீங்க தானா? நெறைய மூளை வச்சிருக்கிங்களோ அத்வானி மாதிரி?

அந்த பணத்தை எல்லாம் கொண்டு வரதுல யாருக்கும் பிரச்சனை இல்லை. உலக நாடுகளின் நெருக்குதல்களால் இப்போ வாய்ப்பு கொஞ்சம் கூடுதலா இருக்கலாம். ஆனால் அப்போ இதற்காக பிஜேபி அரசாங்கம் என்ன முயற்சி செய்தது? உலக நாட்டு நெருக்கடிகளால் வாய்ப்பு வரும் வரை ஏன் காத்திருக்கனும்?

இவர்கள் அன்றைக்கே சுவிஸ் பேங்கிற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டியது தானே?

வந்துட்டாரு மூளையை பத்தி ஆராய்ச்சி பண்ண.

//Tell us, WHERE HAVE YOU KEPT YOUR BLACK MONEY, mate? Otherwise, why should you be afraid if Advani raises this question now? //

ஒரு பழய 2 ரூபாய் நாணயம் பரண்மேல கிடந்திருக்கும் போல. ரொம்ன கருபபய்டிச்சி. அதை சுவிஸ் பேங்க்ல போட்டு வசிருக்கேன். அந்த 2 ரூபாட் கருப்பு பணமும் அரசாங்கத்துக்கு போய்டுமோன்னு தான் பயம். வேற என்ன?

ஏன் சார், நாட்டுக்கே தெரியும், பிஜேபி பணக்காரர்களின் தயவில் பணக்காரர்களுக்காகவே நடத்தப் படும் கட்சி என்று. சுவிஸ் பேங்கில் அரசியல்வாதிகள் பணம் மட்டும் இல்லை சாரே. அரசியல் சாராத பணக்காரர்களின் பணமும் இருக்கு. அவர்களின் பணத்தின் மீது கை வைத்தால் பிஜேபி என்ற கட்சியே இருக்காது.

அதவானிக்கு இரும்பு மனிதர் என்பது சும்மா லுலுலாய்க்கு வச்ச பேரு. அவர் மாதிரி அடுத்தவனுக்கு பயந்தவரு வேற யாரும் இல்ல. அருண்ஜேட்லிக்கும் சுதான்சு மிட்டலுக்கும் நடந்த சண்டையை கைகட்டி மட்டுமே வேடிக்கை பார்த்தார்.

கந்தகாருக்கு தீவிரவாதிகளை ஜெஸ்வந்த் சிங் கொண்டு போய் விட்டப்போ அதவாணிகிட்ட அதுபத்தி கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லைன்னு அதவாணியே சொல்லி இருக்கிறார். ஆதாரம் வேணுமா?

இவரா கருப்புப் பணத்தை கொண்டுவருவார். சொல்லுங்கள் மூளை ஆராய்ச்சியாளரே. :)

Anonymous said...

சஞ்சய் காந்தி

பெயரைப் பார்த்தாலே ஆளுக்கு மூளையை முட்டியில் வைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. இது நாள் வரை பி ஜே பி என்ன எந்த கொம்பனாலுமே ஸ்விஸ் போன்ற நாடுகளைக் கேள்வி கேட்க்க வழியில்லாமல் இருந்து வந்தது. பி ஜே பி தலைகீழாக நின்றிருந்தாலும் ஒரு புண்ணாக்கும் நடந்திருக்காது. ஆனனப் பட்ட அமெரிக்கா கூட தங்கள் நாட்டினர் வைத்திருக்கும் கணக்கினை இது நாள் வரை ஸ்விஸ் நாட்டில் இருந்து வாங்க முடியவில்லை. நிலமை இப்படி இருக்கும் பொழுது ஏன் பி ஜே பி நடவடிக்கை எடுக்கவில்லை என்று முட்டாள்தனமாக இவரும் இன்னும் சில அல்லக்கைகளும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது நிலமை மாறி இருப்பதால் அத்வானி இந்தப் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார். சஞ்சய்காந்தி போன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு நாளைக்கு குண்டு வைக்க எங்க போய் பணத்தைப் பதுக்குகிறது என்று ஆத்திரம் வருவது இயற்கையே. மூளை வழியே சிந்திக்கும் எவனுக்கும் ஏன் இவ்வளவு நாட்களாக விட்டு விட்டு இப்பொழுது திடீரென்று பி ஜே பி இதை எழுப்புகிறது ஏன் இது நாள் வரை எழுப்ப முடியவில்லை என்பது புரியும். போபர்ஸ் பிரச்சினையில் ஸீவீடனில் இருந்தும் ஸ்விஸ்ஸில் இருந்தும் தகவல்களை வாங்குவதற்கு பல ஆண்டுகள் ஆயின என்பது சஞ்சய்காந்தி என்ற பெயரில் இங்கு எழுதியிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு தெரிந்திருக்கு நியாயம் இல்லைதான். குண்டு வைப்பவர்களுக்கு வேறு பொது அறிவு எங்கிருந்து வரப் போகிறது? இங்கு அத்வானி இரும்பு மனிதரா பித்தளை மனிதரா என்பது பிரச்சினையில்லை, காங்கிரஸ் ஏன் இந்த விஷயத்தில் வாயைத் திறக்க மறுக்கிறது என்பதுதான் கேள்வியே அந்த முக்கியமான கேள்வியை சோனியாவின் ஏஜெண்டுகளான ச காந்தி போன்றவர்கள் திசை திருப்புகிறார்கள். இதே வேலையைத்தான் சோனியாவின் பிற எடுபிடிகளான சிதம்பரம், கபில் சிபல் ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் செய்து வருகிறார்கள். விஸ்வாமித்ராவின் முந்தைய கட்டுரையிலேயே மிகத் தெளிவாக ஏன் இப்பொழுது இந்த பிரச்சினை கிளம்பியிருக்கிறது என்று எழுதியுள்ளார் அதைப் படிக்க கொஞ்சம் மூளை வேண்டும் என்ன செய்வது ச கா போன்ற அல்லக்கைகளிடம் பொறுமையாகப் படிப்பதையும் புரிந்து கொள்வதையும் எதிர்பார்க்கவா முடியும்.

M Arunachalam said...
This comment has been removed by a blog administrator.
IdlyVadai said...

மக்களே தனி நபர் விமர்சனம் இங்கே வேண்டாம். நன்றி.

M Arunachalam ( edited ) said...

I got the answer from your reply comments. You have brain but you are acting as though you are a fool.

You seem to be hell-bent on proving my charge that you are a co-hort of Sonia and DMK looters. Thats why you are intent on trying to deflect the attention away from the matter - why Sonia Cong ruled UPA Govt is IMPOTENT to take any action in getting to know the names of black-money stashers from Swiss, Germany & other countries.

Is the money you have stashed abroad is only a black-money or is it also meant for "terrorist" activities, Sanjay Gandhi?

I know you will try to deflect by giving a totally irrelevant answer but keep in mind people are "watching" your idiotic answers.

Mukkodan said...

Having worked for a Swiss bank for lots of years I know a bit on the intricacies involved in this whole thing.

Some points from my side...

1. BJP/LKA is making the right noise at the right time when the whole International community is just ripe to do this.

2. LKA is asking for this ever since the Banking secrecy were put under scanner by the Developed economies.

3. It wud be virtually impossible for any country to get this thing done without a conducive Consensus from G20/ G7/ Security Council/Big 5 countries, which currently seem to evolve.

4. Not all the money he quoted can be brought back. Only a peanut of that can be brought, that too with Indian judiciary fully supporting the process.

Insider Info: Almost 100% of the Corruption Money stashed here are from Cong. Netas in this 60 years.

What I still don't understand is the double standards and empty rhetoric of people like Sanjay Gandhi in this forum.

Mukkodan said...

Please all of you here read on the Germany's Voluntary offer to India on the list of Indians stashed in Liechtenstein (Part of Swiss) and Cong's silence and refusal in even accepting this offer.