பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 09, 2009

கடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 2 - அண்ணன் Vs தம்பி

கடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 2 - அண்ணன் Vs தம்பி - கலைக்கோவன்

கடலூர் அ.தி.மு.க வேட்பாளர்- M.C.சம்பத்

அ.தி.மு.க -வில் ஏற்ற இறக்கம் என்பது இயல்பான ஒன்று.
அப்படி திடீர் ஏற்றத்தை (உடன் இறக்கத்தையும்)சந்தித்த சிலரில் ஒருவர் தான் இப்போதைய கடலூர் அ.தி.மு.க வேட்பாளர்- M.C.சம்பத்

கட்சியில் செல்வாக்குடன் விளங்கிய தன் அண்ணனையே மிஞ்சி மா.செ ஆக அறிவிக்கப்பட்டார், உடன் நடைபெற்ற 2001 தேர்தலில் நெல்லிகுப்பம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளரானார்.

2001- ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்று, உள்ளாட்சி(யின் நல்லாட்சி) துறையை பெற்றார்.
பிறகு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதும் இவருக்கு கட்சியில் சரிவு ஏற்பட்டு மா.செ. பொறுப்பும் பிடுங்கப்பட்டது

இருந்தாலும் கட்சியில் மேலும் கெட்ட பெயர் சம்பாதிக்காமல் பொறுத்திருந்து, மீண்டும் ஓரு ஏற்றம், 2006 தேர்தலுக்கு பின் மீண்டும் மா.செ வாக அறிவிக்கப்பட்டார், இப்போது வேட்பாளராகவும்.


இது குறித்து, அ.தி.மு.க பிரமுகருடன் தொலைபேசி குறுபேட்டி

வேட்பாளர் பற்றி..,

மக்கள் எதிர்பார்த்த விஷயம்.வெற்றி வேட்பாளரை தான் அறிவிச்சிருக்காங்க.

வெற்றி வாய்ப்பு

நிச்சயம் வெற்றி எங்களுக்கு தான்,மாற்று கருத்தே கிடையாது.
பா.ம.க கூட இருக்கறது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.

(பேட்டியளித்தவர் -R.பழனி, பண்ருட்டி ஒன்றிய அ.தி.மு.க அவை தலைவர்)

[கொசுறு தகவல்-பழசு
தற்போதைய அ.தி.மு.க மா.செ வும் ,அ.தி.மு.க களமிறக்கப்பட இருக்கும்
M.C.சம்பத் இவரின் சகோதரர்]

கொசுறு தகவல்-புதுசு
தே.மு.தி.க வேட்பாளர் M.C.தாமோதரன் இவரதுஅண்ணன்.
அண்ணன் Vs தம்பி

கடலூருக்காக ...., கலைக்கோவன்

2 Comments:

லவ்டேல் மேடி said...

அப்ப.... எப்புடியோ .... இந்த குடும்பத்துல ஒரு எம்.பி சீட் கன்பாம்......!!! பொழைக்க தெருஞ்ச குடும்பமடா சாமி.......!!!!!!!!

மானஸ்தன் said...

இவங்களோட அண்ணன் M.C.தண்டபாணி இருக்காருங்க காங்கிரஸ்-ல!!!

அவருக்கும் சீட்ட குடுக்க சொல்லுங்கப்பா! கடலூர் "குடும்ப" தொகுதி ஆயிடும்!