பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 18, 2009

இட்லிவடை பதில்கள் - 18-04-2009

நீண்ட நாட்களுக்கு பிறகு சில கேள்வி பதில்கள்


அனானி கேள்விகள்
1. உங்க கேள்வி பதில் பதிவு ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை ?
இதே கேள்வியை கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் கேட்கவும்.

2. சர்தாஜி - சிதம்பரம் - செருப்பு உங்க கருத்து என்ன ?
சிங்(கம்) சிங்கிளாத்தான் வரும்.

3. கையும் களவுமாக மாட்டினால் என்ன செய்வீர்கள் ?

ஒரு ஊரில் ஒரு வண்டு இருந்தது. அரண்மனைத் தோட்டத்தில் சும்மா பறந்துகொண்டிருந்தது அதற்கு ஒரு நாள் ஒரு ஆசை ஏற்பட்டது. நம்மை யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறார்களே, இப்படி அனாமதேயமாக வாழ்க்கை வாழ்கிறோமே என்று எண்ணி ஏதாவது செய்ய திட்டமிட்டது. ஒரு நாள் ராஜகுமாரன் தூங்கிக்கொண்டிர்ந்தபோது அவனைக் கொட்டியது. அவன் அலறினான். ராஜாவுன் ராணியும் ஓடி வந்தார்கள் அவர்களையும் ஒரு கொட்டு கொட்டிவிட்டு பறந்தது. 'ஐயோ' என்று அலறினார் ராஜா. உடனே சேவகர்கள் ஓடிவந்தார்கள். அவர்களையும் கொட்டியது. அவர்களுடைய அலறல்களைக் கேட்டு மந்திரிகள் ஓடிவந்தார்கள் அவர்களையும் கொட்டியது. தளபதிகள் வந்தார்கள் அவர்களுக்கும் அதேகதிதான். ராஜா, வலி தாங்கமுடியாமல் குதிக்க, குதிக்க அவரை தோளில், மார்பில், மூக்கில், காதில், காலில், கையில் என்று கொட்டிக்கொண்டேயிருந்தது. ராணியும் ராஜாவுன் அலற... வண்டைப் பிடிக்க முயன்ற ஒவ்வொருவரும் அதனிடம் கொட்டுப்பட்டார்கள். ஊரெங்கும் செய்தி பரவ கூட்டம் கூட்டமாக மக்கள் அரண்மனைக்கு ஓடிவந்தார்கள். ஊரே ஸ்தம்பித்தது. நிர்வாக வேலைகள் நின்றன. குழப்பம் கூத்தாடியது. கடைசியில் ஒருவழியாய் அந்த வண்டைப் பிடித்து, அடித்துக் கொன்றார்கள். சாகுமுன் அது தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. பிறவி என்றால் இப்படி ஏதோனும் செய்துவிட்டு சாகவேண்டும். எல்லோரும் என்னை பற்றி பேசும்படி பண்ணிவிட்டேன். உயிர் போனால் போகட்டும்.

4. தமிழ் நாட்டில் இந்த தேர்தலில் அம்மா கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? அய்யா கூட்டணிக்கு எவ்வளாவு சீட் கிடைக்கும் ?

அம்மா கூட்டணி - 20 - 25
அய்யா கூட்டணி - 10 - 15

5. நேற்று ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்த விழாவை ஜெயா டிவியில் நேரடி ஒளிபரப்பை பார்த்தீர்களா ?

பார்த்தேன்.
அதிமுக வேட்பாளர்கள் அம்மாவை வணங்கினார்கள். மற்ற கட்சி வேட்பாளர்கள் மக்களை வணங்கினார்கள். கடைசியாக ஜெயலலிதா
"நாளை நமதே நாற்பதும் நமக்கே" என்ற போது "நாமம் உங்களுக்கே" என்று என் காதில் விழுந்தது. உங்க காதில் ?

6. தேர்தல் டீம் உறுப்பினர்கள் ஏன் பதிவு எழுதுவதில்லை ?
இட்லிவடையை ஜெயலலிதா போல் நினைத்துவிட்டார்கள். அதனால் பேசாமல் இருக்கிறார்கள்.

மானஸ்தன் கேள்விகள்
7. தென் சென்னைக்கு ஏன் இன்னும் கருப்பு-செவப்பு கொடி போடலை?
சரத்பாபு வருவார் என்ற நப்பாசையில்.

8. செய்தி: 4 வருஷம் கிரிக்கெட் ஆடிய தோனிக்கும், பல "கலர்" படங்களில், "பச்சையான" சிரிப்பு வசனங்களைப் பேசி சிந்தனையைத் தூண்டிய "சின்னக் கலைவாணருக்கும்" விருது!!!. "பத்ம" விருதுகள் ராணுவ அதிகாரிகளுக்கும், நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்கும் மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்பது என் கருத்து. நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

பத்ம விருதுகள் விளையாட்டு தனமாகவும், காமெடியாகவும் ஆகிவிட்டது. ராணுவ அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் டிவியில் வருவதில்லை, வந்தால் அவர்களுக்கும் கொடுப்பார்கள்.

9. உங்களின் உண்மையான பெயர் என்ன? வீடு எந்த ஏரியா-ல இருக்கு?? யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டாங்க!! தைரியமா சொல்லுங்க!

என் பெயரை மாட்டும் சொன்னால் எங்க குருப்பில் இருக்கும் மற்றவர்கள் கோவித்துக்கொள்வார்கள். எல்லா பேரையும் சொன்னால் ஆட்டோவிற்கு பதில் லாரி அனுப்ப வேண்டியிருக்கும்.

10. IIT-JEE pattern change springs surprise" முன் அறிவிப்பு இல்லாமல் இந்த மாதிரி மாற்றங்கள் செய்வது சரியா? ஏற்கனவே நமது மாணவ-மாணவிகள் மிகவும் "மன-அழுத்தத்திற்கு" உள்ளாக்கப் பட்டு உள்ளார்கள். இந்த கூடுதல் அழுத்தம் தேவையா?

மாற்றங்கள் செய்வதை நான் வரெவேற்கிறேன். அப்ப தான் அவர்களின் உண்மையான அறிவு வெளிப்படும். மாணவ மாணவிகள் கையில் ஐபாடு இல்லாமல் இருந்தால் இந்த பாடு பட வேண்டாம்.

அனானி கேள்வி
11. நீங்க தான் எ.அ.பாலா என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி இருக்க ஏன் பதிவு எழுதிய பின் "Test Comment" போடுவதில்லை ?

அதற்கு தான் R.Gopi, மானஸ்தன் போன்றவர்கள் இருக்கிறார்களே !

தொடந்து இதே பதிவில் கேள்வி கேட்கலாம். பதில் அடுத்த சனிக்கிழமை :-)

24 Comments:

R.Gopi said...

இட்லிவடை,

இதுக்கு பதில் சொல்லுங்க :

******************

நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி கூறி
உள்ளார்.

(மக்களே, நல்லா கேட்டுக்கோங்க....... தப்பு பண்றவங்க யாரா இருந்தாலும் இனிமே "தலயோட பார்வைல இருந்தும், தண்டனைல இருந்தும் தப்பிக்க முடியாது.....

சரி அப்படியே இவங்களுக்கும் தண்டனை உண்டான்னு சொல்லிடுங்க "தல"

மதுரை தினகரன் ஆபீஸில் மூன்று பேர்கள் எரிக்கப்பட்டதற்கான காரணகர்த்தா மு.க.அழகிரி?

"திருமா" நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது பல நூறு வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கான காரணகர்த்தா, "திருமா" மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை?

கோர்ட்டில் இருந்த காவல்நிலையத்தை எரித்தும், கடைகளை அடித்து உடைத்தும், ரவுடித்தனம் செய்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை?

ஸ்பெக்ட்ரம் ரூ.65,000 கோடி ஊழலில் சிக்கிய மத்திய மந்திரி ராசா மீது நடவடிக்கை??

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட "காடு வெட்டி குரு" விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா?? (பா.மா.க.கூட்டணி தான் இப்போ இல்லையே?).

இதற்கெல்லாம் "தல" என்ன பதில் சொல்வார்??

அப்துல் கலாம் அவர்கள் இன்றைய இளைஞர்களை கனவு காண சொன்னால், அதற்கு நானா பொறுப்பு?? என்பார்.....)

************

சரி, இப்போ, இந்த கேள்விக்கெல்லாம் இட்லிவடையோட பதில் என்ன??

R.Gopi said...

//அனானி கேள்வி
11. நீங்க தான் எ.அ.பாலா என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி இருக்க ஏன் பதிவு எழுதிய பின் "Test Comment" போடுவதில்லை ?

அதற்கு தான் R.Gopi, மானஸ்தன் போன்றவர்கள் இருக்கிறார்களே !//

*************

ஹீ ஹீ ............ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜ சுப்ரமணியன் said...

ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி என்பதால், பகுத்தறிவு சிங்கங்கள் எதுவுமே nomination file பண்ண வரவில்லையாமே? என்ன ஒரு பகுத்தறிவு!!

சித்து said...

1.மதவாதம், மதச்சார்பின்மை வேறுபாடு கூறுக.
2. இன்னும் எத்தனை நாட்கள் தான் நாம் இந்த தீவிரவாதிகளை வெறுமனே எச்சரிதுக்கொண்டிருப்போம்?
3. மும்பை தாக்குதல் தீவிரவாதி கஸாப் தான் ஒரு மைனர் என்றும் தன்னை சிறார் நீதி மண்றத்தில் விசாரிக்க வேண்டும் மேலும் என்னை வதை செய்து வாக்குமூலம் வாங்கிவிட்டனர் அது செல்லாது என்றும் கூறியுள்ளாரே?? இறுதியில் அவன் விடுதலை கூட ஆகிவிடுவனோ??
4. நவீன் சாவ்லா தலைமையில் தேர்தல் நடு நிலையோடு நடத்தப்படுமா??

ரஜினி ரசிகன் said...

கருனாநீதி கெட்டவரா? ரொம்ப கெட்டவரா?

தங்கபாலு சுயமா சொன்ன பதில் எதாவது இருக்கா?

சிதம்பரம் ஷூ எரிஞ்சவரை மன்னிசுட்டார், அதுனால நாங்களும், கடந்த 20 வருசமா ஒன்னும் செய்யாத சிதம்பரத்தை மன்னிச்சு ஒட்டு போடனுமா?

ராமதாஸ் எப்போ கூட்டணி மாறமாட்டார்?

கொஞ்ச வருசத்துக்கு முன்னால செல்வி, இப்போ அம்மா, எப்போ பாட்டி?

தலைவர் குடும்பத்திளிருந்த் யார் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர்? அரிவுநிதியா? உதயநிதியா? வேற எதாவது நிதியா?

அடுத்த தி.மு.க முதல்வர்(சால்ரா) யார்? அன்பழகனா? ஆற்காடா?

கருணாநிதியின் மிக பெரிய சால்ரா யார்(உ.பி இல்லாத)?

இன்னும் 5 வருடங்கள் கழித்து தி.மு.க-வில் எத்தன மு.க குடம்பத்தினர் இருப்பார்கள்?

செருப்படி மற்றும் கட்டையடி வாங்கிய சிதம்பரம் அடுத்து என்ன அடிவங்குவார்?

ரிஷபன் said...

1) திருமா- வுக்கு மட்டுமவது டெபாசிட் கிடைக்குமா ?

2) கருப்பு பணத்தை 100 நாட்களில் அத்வானி இந்தியாவுக்கு கொண்டுவருகிறேன் என்று சொல்லியிருக்காரே ? மீன்ண்டும் எத்தனை நாளில் அதை திரும்ப அந்த வங்கிகளுக்கே நம் அரசியல்வாதிகள் அனுப்புவார்கள்.

3)மதுரை தொகுதியில் திமுக வினர் தாக்கப்ப்டுகிறார்களமே என்ன கொடுமை இது ? ஆளும் (?!) மைனாரிட்டிக் கட்சிக்கே இந்த நிலையா ?

4)ஒபாமா, சி.ஐ.ஏ-வின் விசாரனை நடைமுறைகளை (ரகசியங்களை) வெளியிட்டு இருப்பதன் மூலம் என்ன
சாதித்திருக்கிறார் ? இவரும் வெறும் பரபரப்பு அரசியல் வாதி தானா ?

5)ஹைகோர்ட் பசுமை நீதிமன்றம் ஆகிறதாமே ! ”காக்கி” மட்டும் தான் அவர்களுக்கு அலர்ஜியா ?

Anonymous said...

இட்லிவடை ,இந்த கொடுமையையும் அறிந்து வைத்திருங்கள்.
http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

கிரி said...

//"நாளை நமதே நாற்பதும் நமக்கே" என்ற போது "நாமம் உங்களுக்கே" என்று என் காதில் விழுந்தது//

ஹா ஹா ஹா

கிரி said...

// ராஜ சுப்ரமணியன் said...
ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி என்பதால், பகுத்தறிவு சிங்கங்கள் எதுவுமே nomination file பண்ண வரவில்லையாமே? என்ன ஒரு பகுத்தறிவு!!//

நல்ல கேள்வி ..யாராவது தெரிந்தால் பதில் கூறவும்

Anonymous said...

கலைஞர் & கம்பெனி

தமிழகத்திள் வெளிவரும் 7 அச்சு ஊடகங்களின் (நாளிதழ் மற்றும் இதழ்களின்) விபரம்:

1.தினகரன்
2.தமிழ் முரசு
3.சினிமா
4.குங்குமம்
5.வண்ணத்திரை
6.முத்தாரம்
7.குங்குமச் சிமிழ்

நான்கு இந்திய மொழிகளில் வரும் 20 க்கும் மேற்பட்ட டி.வி சேனல்களின் விபரம்:

1.சன் டிவி
2.சன் நியூஸ்
3.சன் மியூசிக்
4.கே டிவி
5.சுட்டி டிவி
6.ஜெமினி டிவி
7.ஜெமினி நியூஸ்
8.ஜெமினி மியூசிக்
9.ஜெமினி கேபிள் விசன்
10.சூர்யா டிவி
11.தேஜா டிவி
12.தேஜா நியூஸ்
13.உதயா டிவி
14.உதயா மூவிஸ்
15.உதயா 2
16.உதயா வர்த்தேகலு டிவி
17.உஷே டிவி
18.ஆதித்யா டிவி
19.கிரன் மியூசிக்
20.கிரன் டிவி

இந்தியா முழுவதும் இயங்கும் 42 எஃப் எம் ரேடியோ சேனல்களின் விபரம்:

1. Suryan FM Chennai
2. SFM - Kozhikode
3. SFM - Nasik
4. Suryan FM - Coimbatore
5. SFM - Indore
6. SFM - Vadodara
7. Suryan FM - Tirunelveli
8. SFM - Vijayawada
9. SFM - Rajkot
10.Suryan FM - Madurai
11.SFM - Varanasi
12.SFM - Aurangabad
13.Suryan FM - Tuticorin
14.SFM - Rajahmundry
15.SFM - Ahmedabad
16.Suryan FM - Pondicherry
17.SFM - Kanpur
18.SFM - Warangal
19.Suryan FM - Tiruchy
20.SFM - Thiruvananthapuram
21.SFM - Nagpur
22.SFM - Vishakapatinam
23.SFM - Thrissur
24.SFM - Kochi
25.SFM - Bangalore
26.SFM - Mangalore
27.SFM - Gulbarga
28.SFM - Hyderabad
29.SFM - Kannur
30.SFM – Asansol
31.SFM - Jaipur
32.SFM - Allahabad
33.SFM - Shillong
34.SFM - Bhubaneshwar
35.SFM - Jabalpur
36.SFM - Pune
37.SFM - Tirupati
38.SFM - Mysore
39.SFM - Lucknow
40.SFM - Guwahati
41.SFM - Bhopal
42.SFM - Jamshedpur

புதிதாக தொடங்க பட்டுள்ள நிறுவனங்கள்:

1. சன் ஆடியோ
2. சன் பிக்சர்ஸ்

1.கலைஞர் டிவி
2.இசைஅருவி
3.கலைஞர் செய்திகள்
4.சிரிப்பொலி - விரைவில் ஒளிபரப்ப உள்ளது
5.சித்திரம் - விரைவில் ஒளிபரப்ப உள்ளது

1.எதிரொலி நாளிதழ்
2.இன்பாக்ஸ் நாளிதழ்

ரெட் ஜியண்ட்ஸ் மூவிஸ்-உதயநிதி ஸ்டாலின்

ராயல் கேபிள் விஷன் - மூ.க. அழகிரி-மதுரை

கிளவுட் நைன் மூவிஸ்( CLOUD NINE MOVIES) - தயாநிதி அழகிரி

திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த முக & Co வின் இன்றைய சொத்துகள் இவ்வளவுதான இன்னும் இருக்கா?

Anonymous said...

@அனானிமஸ்
நம்ம தல கஷ்டப்பட்டு "(ஊரையும் நாட்டையும் மக்களையும் ஏமாத்தி)" சம்பதிச்தைப்பற்றி நீங்க இப்படி
தவறாகப் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

///ராஜ சுப்ரமணியன் said...
ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி என்பதால், பகுத்தறிவு சிங்கங்கள் எதுவுமே nomination file பண்ண வரவில்லையாமே? என்ன ஒரு பகுத்தறிவு!!///


//"பகுத்தறிவு"//
நம்ம வேட்பாளர்களில் "பலருக்கு" அறிவே இல்லை....அப்புறம் எங்கே இருந்து பகுத்தறிவு வரும்???

//"சிங்கம்"//
சிங்கம்-single-ஆக வரும் என்பது இந்தக்காலத்துக் குழந்தை கூட அறிந்த புது மொழி!!!! நம்ம ஊருல வேட்பாளர்கள் எல்லாரும் "கூட்டம் கூட்டமாகத்தான்" வந்து வேட்பு மனு தாக்கல் செய்கிறாகள்!!!!! மீதியை "நீங்களே புரிந்து கொள்ளுங்கள்"!!!

புரியவில்லை என்றால் "ஒரு காலத்துல வாய்ஸ் குடுத்தவரின்" படம் பாருங்கள்!
:-D :-)

Anonymous said...

இட்லி வடையாரே!
ரெண்டு நாள் முன்னாடி "சிக்கனம்" பத்தி பதிவு செய்த போதே நெனச்சேன்! அது சரிதான் என்று நிரூபித்து விட்டீர்கள்!

ஏன் அய்யா, நேத்திக்கு வந்த 15 கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கலாமே? எதற்காக இந்த சிக்கனம்? 11 இந்த வாரம் மீதி அடுத்த வாரம் என்று??

என்னவோ போங்கள்! உங்களுக்கே இது சரியாகப்பட்டால் சரிதான்!

பின் குறிப்பு:
4. தமிழ் நாட்டில் இந்த தேர்தலில் அம்மா கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? அய்யா கூட்டணிக்கு எவ்வளாவு சீட் கிடைக்கும் ?

அம்மா கூட்டணி - 20 - 25
அய்யா கூட்டணி - 10 - 15

கணக்கு உதைக்கிறது! possible combinations: 20+10, 20+15, 10+25, 15+25.
இதில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் மிச்சம் உள்ள தொகுதிகள் யாருக்கு என்று சொல்லவும். (even though the question was only on ayya and amma")!!!

Anonymous said...

ஒரு ஐடியா: கேள்வி பதில் எழுதுபவருக்கு ஏதாவது பெயர் இருக்கட்டும். உதாரணமாக:சட்னி,சாம்பார்,மேதாவி, மேதை, தெனாலிராமன், கொக்கி.
சரி, இப்போ ஒரு கேள்வி: கண்ணம்மா படம் எடுத்தவருக்கு கலைமாமணி அல்லது பத்மஸ்ரீ கொடுக்காதது அநியாயம் இல்லையா?

Anonymous said...

//ஜெ. பிரச்சாரம்"//
விமானம் மூலம் தூத்துக்குடி, பிறகு காரில் பாளை, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோயில், மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி, பிறகு விமானம் மூலம் மதுரை!


முதலமைச்சராக இருந்த போது மாதம் "ஒரு ருபாய்" சம்பளம் வாங்கினார்!
இப்போது அந்த வேலையும் இல்லை, அதனால் அந்த சம்பளமும் இல்லை! (அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினர், இருந்தாலும் மு.க.வின் அரசு குடுக்கும் காசை அவர் வாங்க மாட்டார்!)!!

கதை இப்படி இருக்க, "bloody" ஏன் இந்த "chartered" flight trips?? இப்படி ஊதாரித்தனமாக ஊர் ஊராக சென்று அடுத்தவரைத் "திட்டுவதற்கு" இது தேவையா? இந்தப் பணத்தில் சில குடும்பங்களை வாழ வைக்கலாம். பலரைப் படிக்க வைக்கலாம். சோ போன்றவர்கள் எடுத்துச் சொல்லலாமே! அட்லீஸ்ட், "துக்ளகில்" விமர்சனமாவது செய்யலாமே! செய்வாரா?

இட்லி வடை, இதைப்பற்றி உங்களின் விமர்சனத்தை பதிலாக அளிக்கவும்!

Inba said...

யாருக்கு சீட் கொடுத்தது பெரிய காமெடி (கொடுமை)
மு.க அழகிரி அல்லது ஜெ.கே.ரித்திஷ்?

நம்ம ஊரு கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர்களுக்கு கம்யூனிசம் பத்தி தெர்யுமா?

ஸ்ரீலங்காவில எப்போ அமைதி வரும்?

Anonymous said...

இட்லி வடை க்ரூபுக்கு வேற வேலையே இல்லையா?

Anonymous said...

@anonymous
இட்லி வடை குரூப்புக்கு வேற வேலை இருக்கா இல்லையானு கேக்கறதுதான் உங்க வேலையா?

இஷ்டம் இருந்தா கலந்துக்கங்க, இல்லேன்னா IPL பாக்கப்போங்க. அதுவும் பிடிக்கலைன்னா "மானாட மயிலாட" பாருங்க!

அத விட்டுட்டு எதுக்கு இப்டி? நல்லவா இருக்கு? வேணாம்!

milagaipodi said...

sarathbabu jeyikannumnu blog yezhutharavanga ethanai peru avanga vote-ai poduvaanga ?

milagaipodi said...

"2. சர்தாஜி - சிதம்பரம் - செருப்பு உங்க கருத்து என்ன ?
சிங்(கம்) சிங்கிளாத்தான் வரும்."

arasiyal nagareegathai pathi pala pathivu potta unga kitte irunthu ippadi oru pathilai ethirpaarkala.... :(

கிரி said...

//Anonymous said...
கலைஞர் & கம்பெனி

தமிழகத்திள் வெளிவரும் 7 அச்சு ஊடகங்களின் (நாளிதழ் மற்றும் இதழ்களின்) விபரம்:

1.தினகரன்
2.தமிழ் முரசு
3.சினிமா
4.குங்குமம்
5.வண்ணத்திரை
6.முத்தாரம்
...............................................................................//

கலக்கல் ரிப்போர்ட்

இதை படித்தவுடன் உண்மையிலே கண்ணை கட்டி விட்டது

R.Gopi said...

//மானஸ்தன் said...
@anonymous
இட்லி வடை குரூப்புக்கு வேற வேலை இருக்கா இல்லையானு கேக்கறதுதான் உங்க வேலையா?

இஷ்டம் இருந்தா கலந்துக்கங்க, இல்லேன்னா IPL பாக்கப்போங்க. அதுவும் பிடிக்கலைன்னா "மானாட மயிலாட" பாருங்க!

அத விட்டுட்டு எதுக்கு இப்டி? நல்லவா இருக்கு? வேணாம்!//

**************

மானஸ்தன்

இதுதான் நெத்தி அடி..........

R.Gopi said...

//கிரி said...
//Anonymous said...
கலைஞர் & கம்பெனி

தமிழகத்திள் வெளிவரும் 7 அச்சு ஊடகங்களின் (நாளிதழ் மற்றும் இதழ்களின்) விபரம்:

1.தினகரன்
2.தமிழ் முரசு
3.சினிமா
4.குங்குமம்
5.வண்ணத்திரை
6.முத்தாரம்
...............................................................................//

கலக்கல் ரிப்போர்ட்

இதை படித்தவுடன் உண்மையிலே கண்ணை கட்டி விட்டது//

**************

கிரி

திருடரதுன்னு முடிவு பண்ணியாச்சு, அப்புறம், எதுக்காக ஒண்ணு, ரெண்டு விட்டுட்டு போறது. அதான், ஒரு லாரிய கொண்டு வந்து, வீட்டையே காலி பண்ணி எடுத்துட்டு போறது.

அந்த ஸ்டைல் தான், "தல"யோட ஸ்டைல்.

முதலில் எனக்கு இந்த தமிழ்நாட்டை எழுதி வை
பின், இந்தியாவை எழுதி வை

அப்புறம் இருக்கவே இருக்கு, இந்த உலகம். நாங்கள் எடுத்தது போக, மீதம் ஏதாவது இருந்தால், அடுத்த தேர்தலில் இலவசமாக தருகிறோம்.

Anonymous said...

Anony,

கலைஞர் & கம்பெனி has more than what you have listed...

Commercial & residential properties all over Tamilnadu, Estates, holdings in various industries, funds
Owned&Leased Businesses
Usual Bribes & collection from party
many small businesses by wives, grandchildren
and still counting....