பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 10, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-04-2009

அன்புள்ள முனி,

நலமா ? வைகுண்டத்தில் வெயில் எல்லாம் எப்படி இருக்கு ? அங்கேயும் நம்ம அரசியல் கட்சி தலைவர்கள் வந்து போஸ்டர் ஒட்டுகிறார்களா ?

தஞ்சையை சேர்ந்த டொமினிக் சேகரிடம் நம்மிடம் இல்லாத ஒன்று ஒருக்கிறது. ஜோக்ஸ். சில வருஷங்களுக்கு முன்பு இவர் அப்பா கொஞ்சம் ஜோக்ஸை இவரிடம் தந்துள்ளார். அப்பா செஞ்சதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்குன்னு நினைத்து பத்திரிக்கையில் வரும் எல்லா ஜோக்குகளையும் சேமிக்க அரம்பித்தார். தற்போது இவரிடம் 7 லட்சம் ஜோக்குகள் இருக்கிறது. அரசியல் வாதிகளின் பேச்சுகள் இதில் இல்லை, அதையும் சேர்த்தால் 70 லட்சம் வந்திருக்கும்.

அடுத்த முறை தஞ்சை சென்றால் "நமிதா ஜோக்ஸ் எவ்வளாவு இருக்கும் ? " என்று கேட்க போகிறேன். இப்ப நமிதா ஜோக்ஸ் இல்லாமல் பத்திரிக்கை இல்லை தெரியுமா ? அப்பத்தானே கோடைக்கு குளு குளு நமிதா கிளாமர் படங்கள் முக்கால் பக்கம் போட முடியும் ?

நடிகை நமீதாவுக்கு தற்போது கிடைத்துள்ள பட்டம் - "ஆறடி உயர ஆல்கஹால்"
இது ஜோக் இல்லை நிஜம். கோடை காலத்தில் டிவியில் குளிர்பான விளம்பரம் கூட ஜோக்ஸ் மாதிரி வர ஆரம்பித்துவிட்டது. ஆல்கஹால் குடிக்காதவர்கள் மிரண்டா குடிக்கலாம், அசினின் இந்த விம்பரத்துக்காகவே

அதே போல் தேர்தல் சமயம் அதனால், பத்திரிக்கையில் அரசியல் ஜோக்ஸ் வாரத்துக்கு 32 வருகிறது. போன வாரம் படித்த ஜோக் இது.

"டாக்டர் என்னை தினமும் ரொம்ப தூரம் நடக்கச் சொல்றாரே... எங்கய்யா போறது ?"

"வீட்டுக்கும் எதிர்லயே இருக்கும் ஸ்கூல் வரைக்கும் நடந்துட்டு வந்துடுங்க. படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரமாச்சே!"


சரி கொஞ்சம் அரசியல் பேசுவோம் :-)

கீழே உள்ள படத்தை இரண்டு நிமிஷம் நல்லா பாரு.
நல்லா பார்த்தாச்சா ? இது திமுக நேர்காணல் போட்டோ.

"உங்களுக்கும் நேர்காணல் நடந்ததா?" என்று அழகிரியிடம் அப்பாவியாக ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில்

''தி.மு.க. ஜனநாயகம் நிரம்பிய ஒரு கட்சி. அதன் விதி எல்லோருக்கும் பொதுவானது. அந்த அடிப்படையில் நானும் நேர்காணலில் கலந்துகொண்டேன்.

தலைவர்தான் நேர்காணல் நடத்தினார். தி.மு.க-வில் சேர்ந்தது முதல் தற்போது வரைக்கும் கழகத்துக்கு நான் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தேன். கழகத்துக்கு சோதனையான காலங்களில் நான் தோள் கொடுத்ததை தலைவரும் நினைவு கூர்ந்தார். அதன்பின் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்துதான் எனக்கு ஸீட் கொடுத்திருக்கிறார்கள்.''

இதில் கேள்வி கேட்டவன் கேனையனா இல்லை அதை படிக்கும் நாம கேனையனா ?

ஒரு வேட்பாளர் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது ஆனால் விண்ணப்பதார்கள் நேர்காணலில் கேட்கும் கேள்வி - "எவ்வளவு செலவு செய்வீர்கள்?"

கேள்வி: பகுத்தறிவு என்றால் என்ன ?
பதில்: கேள்வி கேட்க வேண்டும் ? ( பதில் என்பதை சேர்த்தும் படிக்கலாம் )


வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

இது கண்ணதாசன் எழுதிய பாடல். கடைசிவரை யாரோ என்று கேட்டிருக்கிறார். எனக்கு தெரிந்து கடைசி வரை வரப்போவது ஜாதி தான். கிராமங்களில் உள்ள சுடுகாட்டு தகன மேடை கல் வெட்டில் "தேவர் மயானம்", "ஆதி திராவிடர் மயானம்" என்று எழுதப்பட்டு வருகிறது.

சமத்துவபுரகள் ஒரு பக்கம் இது மாதிரி இன்னொரு பக்கம். ஜாதி பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டுமென்று புறப்பட்ட திராவிட கட்சிகள் இன்று சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி என்று தங்கள் வயிறு வளர்க்க ஜாதியை வளர்க்கிறார்கள்.

ஜாதி சங்கங்கள் நேரடியாக தேர்தலில் போட்டிபோட முடியாது என்பதால் முகமூடியாக ஓர் அரசியல் கட்சி துவங்குகின்றன அல்லது ஏதோனும் ஒரு கட்சியுடன் 'ஒட்டிக்கொள்கின்றன. இவை முடியவில்லை என்றால் சாராயம் காய்ச்சுகிறார்கள்.

இதை எல்லாம் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் செய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள், ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. நம்ம மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருப்பார்கள் ? நம்மை போல தான் இருப்பார்கள்.

சென்னையில் தற்போது வெயில் ரொம்ப அதிகம்.

ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிக் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நயன்தாரா, த்‌ரிஷா, ப்‌‌ரியாமணி, ஸ்ரேயா ஆகியோருக்கு புடவை அளிக்கப் போகிறாராம். அப்பறம் தினசரி வாழ்க்கையில் ஹிந்துக்கள், முஸ்லிம்களோடு பேசக்கூடாது. அவர்கள் நடத்தும் கடைகளில் எந்தப் பொருளும் வாங்கக்கூடாது' என்றுகிறார். சமீபத்தில் இவர் சென்னைக்கு வந்திருந்தார். சென்னையில் அன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பம் என்று சொன்னார்கள்.

சரி கோமாளி செய்திகளை பார்க்கலாம்.

முதலில் வைகோ பேசிய 'ரத்த ஆறு' பேச்சு

பிரணாப் முகர்ஜி தான் தேச துரோகி, தமிழின துரோகி. பிரபாகரன் உடம்பில் சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்.

இலங்கையில் நடைபெறும் பெறும் போரை இந்தியா நடத்துகிறது. அதனை பிரான்ஸ் பத்திரிகைகள் உறுதிப்படுத்துகிறது. ஈழத்தமிழர்களை பாதுகாக்க தாய் தமிழன் ஆயுதம் ஏந்தி போராட ஈழம் செல்வான். அதில் முதல் ஆளாக நான் இருப்பேன்.

இந்திய அரசு உடனடியாக போரை நிறுத்த சொல்ல வேண்டும். இல்லையெனில் இந்திய என்ற ஒரு தேசம் இனி இருக்க போவதில்லை என்று மீண்டும் கூறிக்கொள்கிறேன்


உடனடியாக ஜெயலலிதா வைகோவை கூட்டணியிலிருந்து எட்டி உதைக்க வேண்டும். செய்வாரா ?

வைகோவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது , தேசவிரோதமானது , சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டது. வைகோவின் பேச்சுக்காக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்


என்று தைரியமாக கேட்டவர் சு.சாமி. "அவரை ஒரு கோமாளியாக மட்டும்தான் என்னால் பார்க்கமுடிகிறது" என்று ஒரு பிரபல பதிவர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தமிழ்நாட்டில் கொஞ்சமாவது தைரியமாக பேசும் நபர்களை அறிவுஜீவிகள் கோமாளியாக தான் பார்க்கிறார்கள் என்ன செய்ய ?

வருண் பேசியதற்கும் வைகோ பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ? என்பது என் கருத்து.

நேற்றைய வைகோ பேச்சுக்கு இன்று அவர் புது விளக்கம் தந்துள்ளார் - தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நான் சொன்னது, மத்திய அரசை எச்சரிக்கை செய்யத்தான். இந்த வாசகத்தை முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை கூறியிருக்கிறார் என்று பேசியுள்ளார்.

கலைஞர் இது மாதிரி எவ்வளவோ பேசியிருக்கிறார். தன் உயிரை எவ்வளவொ தானம் செய்திருக்கிறார். நேற்று கூட

நான் ஆட்சியை துறந்து, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமையுமானால், இறையாண்மைக்கு விரோதமாகவும், சோனியாவை இழித்தும், பழித்தும்
இவர்கள் பேசும் பேச்சுக்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என எண்ணிப் பார்த்து, இவர்களைக் காப்பதற்காக நான் ஆட்சியை இழக்கவில்லை


ஏன் தன் பதவியைக் கூட தானம் செய்திருக்கிறார். இதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது. ஆக வைகோ சொல்ல வருவது இது தான் மைக் கிடைத்த சந்தோஷத்தில் பேசிவிட்டேன். அதை எல்லாம் சிரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது.

இப்பவே இப்படி என்றால் மே மாதம் வெயில் இன்னும் அதிகமாக இருக்குமாம்.


ஈழத்தமிழர் ஆதரவு ஜுரம் கலைஞருக்கும் தேர்தலோடு வந்துவிட்டது. பிப் மாதம் திமுக செயற்குழுவில் கலைஞர் என்ன பேசினார் ?

ஆனால் நாம் மிகத் தெளிவாக இருக்கிறோம். நாம் இலங்கையில் வாழுகின்ற தமிழர்களுக்காகத்தான் இந்த இயக்கம் பிரச்சாரமானாலும், எழுத்தானாலும், குரல் கொடுப்பதாக இருந்தாலும் அதைச் செய்கிறதேயல் லாமல் அங்குள்ள தனிப்பட்ட தலைவர்களுக்காக அல்ல. இங்கே தமிழ்நாட்டில் ‘பிரண்ட்லைன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ‘இந்து’ குழுமத்தால் நடத்தப்படுகின்ற பத்திரிகை உங்களுக்குத் தெரியும். அது ஒரு காலத்தில் பிரபாகரனுடைய அட்டைப் படத்தைப் போட்டு மிகப் பிரமாதமாக விளம்பரம் எல்லாம் செய்து அவர் வெற்றி பெற்றால் எத்தகைய நிலையிலே ஆட்சி நடக்கும் என்று அவரிடத்திலே பேட்டி கண்ட போது அந்தப் பேட்டியிலே அவர் சொல்கிறார் - நான் திடுக்கிட்டேன், ஆச்சரியத்தால் வியந்து விழிகளை அகல விரித்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது - "நீங்கள் வெற்றி பெற்றால் தமிழ் ஈழத்திலே உங்கள் ஆட்சி எப்படி இருக்கும்’’ என்று நிருபர் கேட்கிறார். அதற்கு பிரபாகரன் ‘சர்வாதிகார ஆட்சியாகத்தான் இருக்கும்’ என்று திட்டவட்டமாகச் சொன்னார்.

அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் போன்றவர்கள் வரிசையாகக் கொல்லப்பட்டார்கள் என்ற இந்தச் செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வர வர நம்முடைய அனுதாபம் குறைந்து குறைந்து குறைந்து மறைந்தே போய்விடுமோ என்று சொல்லுகின்ற அளவிற்கு நிலைமை முற்றியது.


நேற்று கலைஞர் என்ன பேசினார் ?

ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.

இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து- பல நாடுகளை கவர்ந்து- பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது-போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி `போரஸ்' என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது- பெருந்தன்மையோடு கேட்டான்- உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று- அந்த நிலையிலும் போரஸ் மன்னன், ``என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்'' என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு- அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக-அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக- தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.

போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்- நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன்- போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும்- பிரபாகரன் தோல்வியுறுத்தாலும்- போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.


ஒரு பொது தேர்தல் தலைவர்களை எப்படி எல்லாம் பேச வைக்கிறது. தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இலங்கை ராணுவத் தளபதி சொன்னது இவ்வளவு உண்மை ?

சரி கடைசியாக லேட்டஸ்ட் ஜோக்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் மு.க.அழகிரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.

கடிதத்தை முடிக்கும் முன்பு ஒரு சின்ன தத்துவம்

அடங்காத பையனுக்கும் அழகான பெண்ணுக்கும் ஒரே வித்தியாசம் தான் - அடங்காத பையன் ஊரைச் சுற்றுவான்; அழகான பொண்னை ஊரே சுற்றும்.

அடுத்த கடித்ததில் விரிவாக வேறு தகவல்கள் பற்றி எழுதுகிறேன்.

அன்புடன்
இட்லிவடை

இந்த கடிதம் எழுதி சில நிமிடங்களில் எனக்கு முனியிடமிருந்து டிவிட் ஒன்று வந்தது அதில்

வெயிலினால் இவர்கள் உளறுவதை பொறுக்க முடியாமல் வருண பகவான் வங்க கடலில் புயலை உருவாக்கி அதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.


21 Comments:

Anonymous said...

அந்தத் தத்துவத்தையும் "மஞ்சள்"ல போடுங்க இட்லி வடை!

முரண்பாட்டின் மொத்த உருவமான "தலைக்கு" வெய்யில் எல்லாம் ஒரு காரணம் கிடையாது! எல்லா நாளும் ஒரே மாதிரிதான்! அவர் பேசிட்டு போகட்டும்.

காமடியாக நினைத்து சிரித்துவிட்டுப் போவோம்!

மடல்காரன்_MadalKaran said...

இரண்டு மாதம் ஒரு முறையேனும் மடல் எழுதுறீங்க முனீக்கு. நல்லது.

இப்போ நடக்கற தேர்தல் திருவிழாவை பற்றி மடல் எழுதணும்னா ஒரு தனி வலைப்பதிவே வேணும். வைகோ கொஞ்சம் கொஞ்சமா முழு அரசியல்'வியாதி' ஆகிக்கிட்டு இருக்காரு. உதட்டளவில் இருக்கும் நாட்டின் இறையாண்மை ஏட்டளவிற்கு இறங்காமல் இருக்க இறைவன் அருள் இந்தியாவிற்கு அவசியம். உயிர்களின் மதிப்பு என்ன என்பதை இலங்கையில் நடக்கும் யுத்தம் சொல்லும். இதை வைத்து ஒரு அரசியல் அரங்கேற்றம் இங்கு. அதனால் ஆதாயம் பெறும் கட்சிகள் பல. மக்களுக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி என்பது போய் இலவசங்கள் கண்களை மறைக்கின்றன இவர்களை சொல்லி குற்றமில்லை பசி வந்தால் ‘பத்து'ம் பறந்து/மறந்து போகும்.

Rajaraman said...

\\சரி கடைசியாக லேட்டஸ்ட் ஜோக்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் மு.க.அழகிரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.//

ஹா ஹா ஹா ஹா ஹா.. .. .. ..

இதை இந்த வார சிறந்த நகைச்சுவையாக தேர்ந்தெடுத்து பரிசு வழங்குமாறு IV க்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

நான் அவன் இல்லீங்கோ said...

குருமாவும் காங்கிரஸ் தலைங்களும் செய்யும் காமெடி பற்றி எதுவும் கூறாமல் விட்டது ஏமாற்றம் அழிக்கிறது. இந் நாட்டை முனி தான் காப்பாற்ற வேண்டும்.

வாழவந்தான் said...

IV, update Muni letter column in sidebar

chutneysambhar said...

//அடங்காத பையனுக்கும் அழகான பெண்ணுக்கும் ஒரே வித்தியாசம் தான் - அடங்காத பையன் ஊரைச் சுற்றுவான்; அழகான பொண்னை ஊரே சுற்றும்.//

Best part of the letter

Krish said...

இலங்கை தமிழர்கள் பிரச்சனைய கொடுமைக்கு அரசியல் ஆக்காறாங்க! இத வெச்சி, எதையாவது பேசி, ஓட்டு வாங்கனும் தான். அதை தவிர, வேற எந்த குறிக்கோளும் இருக்கிறமாதிரி தெரியல! Cheap Politics.

IV, அதிமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பற்றி news இல்லியா?

Anonymous said...

ஏம்பா முனீ, உனக்கு நீஸ் தெரியாதா? இனிமே மந்திரிங்க ப்ரெஸ் மீட்டிங்கை கோவிலுக்குள்ள வெச்சிக்கப் போறாங்களாம்.. எல்லாம் ஷூ பயம் தான் காரணம்.

IdlyVadai said...

//ஏம்பா முனீ, உனக்கு நீஸ் தெரியாதா? இனிமே மந்திரிங்க ப்ரெஸ் மீட்டிங்கை கோவிலுக்குள்ள வெச்சிக்கப் போறாங்களாம்.. எல்லாம் ஷூ பயம் தான் காரணம்.//

நல்ல ஐடியா. ஆனால் பெரியார் தொண்டர்கள் செருப்பு மாலையுடன் வந்தால் என்ன செய்வீர்கள் ?

saikrishna said...

ஜாதி பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டுமென்று புறப்பட்ட திராவிட கட்சிகள் இன்று சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி என்று தங்கள் வயிறு வளர்க்க ஜாதியை வளர்க்கிறார்கள்.// "see tambras" and s.ve. sekar, y u didnn't talk abt their

Anonymous said...

உடனடியாக ஜெயலலிதா வைகோவை கூட்டணியிலிருந்து "எட்டி உதைக்க" வேண்டும்.// why you always blame congress and dmk pmk vck mdmk only.

Rama Krishnan said...

//// நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள், ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. நம்ம மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருப்பார்கள் ? நம்மை போல தான் இருப்பார்கள் ////

ஆ ஊ என்றால் விடுதலை சிறுத்தைகளையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் வருத்தேடுப்பதே பலருக்கு தொழிலாய் போச்சு.

என்னமோ இந்த ரெண்டு கட்சிகள் மட்டும் தான் சாதியை தூக்கி பிடிச்சுட்டு அலையுரமாதிரியும் திமுக அதிமுகவிலெல்லாம் காங்கிரஸ் பிஜெபிவிலெல்லாம் சாதியே பார்க்காதமாதிரியும் எங்களை நம்ப செய்யும் கேணத்தனத்தை விட்டொழியுங்கள்.

சாதிஎதிர்ப்பை,சாதிமறுப்பை,சாதிஒழிப்பை முன்னிலைபடுத்தும் மிகவும் பிரபலமான அண்டர்லைன் மிகவும் பிரபலமான முதல் பத்து தனி நபர்களையும் பத்து பத்திரிகைகளையோ அல்லது பத்து அமைப்புகளையோ அல்லது பத்து பிளாக்கர்ஸ்களையோ கொஞ்சம் பட்டியல் இட்டு காட்டுங்கள்.

ஆறு எம்பிக்கள் ஒரு கேள்விகூட கேட்காதது பற்றி வருத்தப்பட்டீர்கள். அவர்களில் பாமகாவினர் அடக்கமா? அப்படியில்லை எனில் பாமகவின் ஆறு பிளஸ் ஒன் எம்பிக்களின் ப்ரொக்ரெஸ் ரிப்போர்ட் ஒன்றை உங்களுக்கு இருக்கும் பத்திரிகை அனுபவங்களை கொண்டு விமர்சிக்கலாமே!

ஆனால் நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள். அ.கி.மூர்த்தி, வேலு, பாண்டிச்சேரி ராமதாஸ், தன்ராஜ் முதல் யாரையும் உங்களால் குறை சொல்ல முடியாது.ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவிசுகம் அனுபவித்த தேசிய மற்றும் திராவிட கட்சிகளின் மந்திரிகளை விட பாமக அமைச்சர்கள் பத்து ஆண்டுகளில் சாதித்தது அதிகம்.

அதனால்தான் சாதி சாதி என்ற ஒற்றை சொத்தை வாதத்தை கொண்டு பதினைந்து வருடங்களாக குரைத்து கொண்டே உள்ளீர்கள். சமகால அரசியலில் மக்கள் யாரையும் ஓரளவு சீர்தூக்கி பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். வெற்றி பெற செய்கிறார்கள்.

என்ன கருணாநிதி மேல் உள்ள வெறுப்பால் ஜெயலலிதாவை மட்டும் தவறி வெற்றிபெற செய்துவிடுகிறார்கள். இதுதான் தமிழகத்தின் பாவம்.

துக்ளக் சோ விற்கு பின் யாரும் வாரிசாக ஆள் இல்லை தமிழகம் தப்பித்துவிடும் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஒரு நல்லது நடக்க இட்லிவடை விடாது போல் தெரிகிறது.

IdlyVadai said...

//ஆ ஊ என்றால் விடுதலை சிறுத்தைகளையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் வருத்தேடுப்பதே பலருக்கு தொழிலாய் போச்சு. //

விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியை தவிற
புதிய தமிழகம்
மக்கள் தமிழ் தேசம்
புதிய நீதிக் கட்சி
கொங்குவேளாளக் கவுண்டர் பேரவை
நாடார் மகாஜன சங்கம்
பார்க்கவ குலத்தினர்
தேவர் பேரவை
பிராமண பேரவை ( எஸ்.வி.சேகர் )

இதை தவிற முஸ்லீம், கிறுஸ்துவர் என்று நிறைய இருக்கிறது.

"அறிவாலயத்துக்கு முன்பு ஆட்டோவில் மைக் கட்டிக்கொண்டு ஏதாவது சாதிக் சங்கம் ஊர்வலம் போனால் அதன் தலைவரை உள்ளே கூப்பிட்டு ஸீட் கொடுக்கும் அவல நிலைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது கவலைக்குரியது" என்று நான் சொல்லவில்லை சொன்னவர் முரசொலி மாறன்.

Anonymous said...

இட்லிவடை...தூக்கதுலேர்ந்து முழிச்சுகோங்க!

மக்கள் தமிழ் தேசம் "அழிஞ்சு" அதுலேந்து "ராஜ கண்ணப்பன்" அம்மா காலுல விழுந்து, சிவகங்கை சீட் வாங்கியாச்சு!!

நீங்க எல்லாம் தப்பாக பதிவிடலாமா?

nerkuppai thumbi said...

உங்கள் பதிவில் சொல்லியிருக்கும் பொதுவான கருத்துக்கள் மிகச் சரியே. குறிப்பாக ஒரு கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்கவில்லை எனச்சொல்லவில்லை என்றே நான் கருதுகிறேன்.
பொதுவாக தமிழக உறுப்பினர்கள் அகில இந்திய பிரச்னைகளில் நாட்டம் காட்டுவது இல்லை; காவிரி, ஈழம், இரு கழக பரஸ்பர தாக்குதல்கள் தவிர வேறு பொது பிரச்னைகளை குறித்து கருத்து சொல்வது குறைவு. இரா செழியன் போன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள் நாடு தழுவிய நோக்கு கொண்டிருந்தனர்.
நம் உறுப்பினர்களின் செயல் முறை இன்னும் பல மடங்கு உயர்வு பெற வேண்டும் என்பதே எம் அவா; பதிவரின் அவாவும் அதே என நினைக்கிறேன்.

R.Gopi said...

மஞ்சள் துண்டு மைனர் நேர்காணல் வைத்து "அண்ணன் அழகிரி"க்கு சீட் கொடுத்தார்.

"அஞ்சா நெஞ்சன் அழகிரி"க்கு அடுத்தவர்களால் ஆபத்து.

இந்த ரெண்டு மேட்டர் தான் தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் கிச்சு கிச்சு

Natrajan said...

அறிவாலயத்துக்கு முன்பு ஆட்டோவில் மைக் கட்டிக்கொண்டு ஏதாவது சாதிக் சங்கம் ஊர்வலம் போனால் அதன் தலைவரை உள்ளே கூப்பிட்டு ஸீட் கொடுக்கும் அவல நிலைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது கவலைக்குரியது" என்று நான் சொல்லவில்லை சொன்னவர் முரசொலி மாறன்”

“ சொன்னது வாழப்பாடியார் என்று நினைவு. சரிபார்க்கவும்
ந்டராஜன்

மாயவரத்தான்.... said...

//சொன்னது வாழப்பாடியார் என்று நினைவு. சரிபார்க்கவும்
ந்டராஜன்//

What? IV's name is Natarajan?!

saamakodanki.madurai said...

அஞசாநெஞசனுக்கு ஆபத்தா..நரேஷ்குப்தா இந்த புகார் மனுவ வாங்கி படிச்சுட்டு பொத்துனு மயக்கம் போட்டு வுழாமயா இருந்தாரு..அய்யோ பாவம். என்ன கொடும சார் இது.கலிமுத்துன இப்படி தான் இருக்கும். முனி அபபிடியே கொஞ்சம் மதுர பக்கம் வாங்க.அட்டாக பாண்டி் உங்கள பாக்கணுமாம்.

tamilpponnu said...

//ஒரு வேட்பாளர் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது ஆனால் விண்ணப்பதார்கள் நேர்காணலில் கேட்கும் கேள்வி - "எவ்வளவு செலவு செய்வீர்கள்?"//

எனக்கும் ரொம்ப நாளா இதே டவுட்டு.

Natrajan said...

அடப்பாவி - மாயவரத்தான். அது comment போட்ட என் பெயர்.வேறு நல்ல விஷயதாரருக்கு என் பெயரை வைத்து இருக்கலாம். நான் மறந்து கூட இத்துப்போன (வார்த்தை உபயம் லக்கி) கடையில் சாப்பிடுவது இல்ல.
-