பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 23, 2009

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும் - 1

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும்: அருண் ஷோரி அவர்களின் இண்டியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின் தமிழ் வடிவம்

இந்தியாவில் இருந்து களவாடப் பட்டு, இந்திய அரசின் சட்டங்களை ஏமாற்றி, வருமான வரியில் கட்டாமல் ஏமாற்றி அந்நிய நாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப் பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்த பிரச்சினையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது காங்கிரஸ் கட்சி. நான்கு பிரபலமான சட்ட நிபுணர்களின் கேள்விகள் இது வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து கீழ்க்கண்ட 6 எதிர் வினைகளை மட்டும் எழுப்பிள்ளது.

1. ஏன் அத்வானி இவ்வளவு நாட்களாக இந்த பிரச்சினையை எழுப்பாமல் இப்பொழுது தேர்தல் தருணத்தில் எழுப்புகிறார்?

2. ஜி 20 அமைப்பு இந்த பிரச்சினையை எழுப்புவதற்கு சரியான அமைப்பு கிடையாது

3. அத்வானி சொல்லும் எண்ணிக்கையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது

4. இந்தக் கோரிக்கையை எழுப்புவதன் மூலம் அத்வானி அந்த வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக ஒளித்து வைத்திருக்கும் பணத்தை இடம் மாற்றம் செய்வதற்குத் தூண்டுகிறார்.

5. ஏன் பி ஜே பி அரசின் பொழுது ஃபெரா சட்டத்தை ஃபெமா சட்டம் மூலம் மாற்றி குற்றங்களை ஒருங்கிணைத்து தண்டனை கொடுக்க முயலவில்லை?

6. அத்வானியின் பா ஜ க ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்து கிழித்தது?

இந்தக் கேள்விகள் மிகவும் அபத்தமானவை என்பதும், மாட்டிக் கொண்டு முழிப்பவன் அவஸ்தையில் கேட்க்கும் கேள்விகள் என்பதும் இந்தக் கேள்விகளை சற்று ஆராய்ந்தாலே யாருக்கும் எளிதாக புரிந்து விடும், இப்பொழுது இந்தக் கேள்விகளுக்கான நியாயமான பதில்களைக் காணலாம்:

1. ஏன் அத்வானி இவ்வளவு நாட்களாக இந்த பிரச்சினையை எழுப்பாமல் இப்பொழுது தேர்தல் தருணத்தில் எழுப்புகிறார்?

உண்மை என்னவென்றால் அத்வானி இந்த பிரச்சினையைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இப்பொழுது அவர் புதிதாக இந்த பிரச்சினையைக் கிளப்பவில்லை. இப்பொழுதுதான் தேர்தலுக்காகப் புதிதாகக் கிளப்புகிறார் என்று காங்கிரஸ் பொய் சொல்கிறது. அத்வானி சென்ற வருடமே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் எல் ஜி டி என்னும் வங்கியில் முறைகேடாக தத்தம் நாடுகளை ஏய்த்து கோடிக்கணக்கான டாலர்கள் கருப்புப் பணத்தை ஒளித்து வைத்திருப்பவர்களின் பட்டியலை ஜெர்மனி அரசாங்கம் வைத்திருக்கிறது என்றும், அதில் உள்ள இந்தியர்களின் பெயர்களை இந்திய அரசு கேட்டுப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்மோகனுக்கு அத்வானி சென்ற வருடம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு மழுப்பலான பதில் ஒன்றை அளித்த சிதம்பரம் எந்தவித உருப்படியான நடவடிக்கைகளையும் இன்று வரை எடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசின் மூத்த நிதித்துறைச் செயலாளர் ஒருவர் ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதருக்கு அப்படி ஜெர்மனிய அரசை வற்புறுத்தி அந்தப் பெயர்களை வாங்க வேண்டாம் என்றும் கோரிக்கையை வைக்காமல் பிரச்சினையை ஊறப் போடுங்கள் என்றும் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். இந்த விஷயம் அமிதாப் ரஞ்சன் அவர்களின் இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 31 தேதியிட்ட கட்டுரையில் அம்பலப் படுத்தப் பட்டு விட்டது. இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திலும் பா ஜ க உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள். இவ்வளவு தூரம் வெளிப்படையாக கடந்த ஒரு வருடங்களாக அரசை பா ஜ க வற்புறுத்தி வந்த பொழுதும் “இப்பொழுதுதான் புதிதாகக் கிளப்புவதாக” அபாண்டமான ஒரு பொய்யை காங்கிரஸ் கட்சி அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்புகிறது.

2. ஜி 20 அமைப்பு இந்த பிரச்சினையை எழுப்புவதற்கு சரியான அமைப்பு கிடையாது

இப்படிப் பட்ட ஒரு வழக்கமாக தங்களுக்கு வசதியான ஒரு கேள்வியை காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞரும், அதிகாரபூர்வ பேச்சாளரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்சினையை பிரதமர் மன்மோகன் ஜி20 கூட்டத்தில் எழுப்பியதாகவும் அதே பேச்சாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஜி20 முறையான அமைப்பு இல்லையென்றால் அதில் ஏன் போய் மன்மோகன் பேச வேண்டும். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே? ஏப்ரல் 2ம் தேதி பிரிட்டன் பிரதமர் கார்டன் ப்ரவுன் அளித்த விருந்தில் போகிற போக்கில் பிரதமர் மன்மோகன் இந்த பிரச்சினை பற்றி குறிப்பிட்டதாக காங்கிரஸ் கட்சியின் குறிப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஏப்ரல் 2, 2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் பாரா 15ல் மிகத் தெளிவாக உலக நாடுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கள்ளத்தனமான கருப்புப் பணத்தை வைத்திருக்க அனுமதித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதி எடுத்திருக்கிறார்கள். அப்படி கள்ளப் பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய முறையான தகவல்களைத் தர மறுக்கும் வரி ஏய்ப்பு வங்கிகளை வைத்திருக்கும் நாடுகள் மீது வியாபாரத் தடை உட்பட பல கடுமையான தண்டனைகளை அமுல் படுத்தப் போவதாகவும் ஜி20 நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக முடிவெடுத்திருக்கின்றன. வரி ஏய்த்து கள்ளப் பணத்தைப் பிற நாடுகளில் பதுக்கும் வழக்கத்திற்கு ஒரு முடிவு கட்டப் போவதாகவும் அந்தக் காலம் முடிந்து விட்டது என்றும் ஜி 20 நாட்டுத் தலைவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள். ஒ இ சி டி அமைப்பு அப்படி கள்ள வங்கிகளைத் தங்கள் நாட்டில் வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதை விட வேறு எந்த அமைப்பு இந்த விஷயத்தைப் பற்றி பேச தகுதியானது. இவ்வளவு உறுதியான முடிவுகள் எடுக்கப் பட்ட அமைப்பை விட வேறு எந்த அமைப்பு சரியானது? இந்த ஜி20 அமைப்பு சரியில்லை என்றால் வேறு எந்த அமைப்பில் இந்த பிரச்சினையை இந்தியா எழுப்பப் போகிறது? யாரை ஏமாற்ற மழுப்புகிறது காங்கிரஸ் கட்சி? ஜி20 தான் இந்தப் பிரச்சினையை இரும்புக் கரம் கொண்டு தீர்க்க இருக்கும் அமைப்பு. இங்குதான் இந்தியப் பிரதமரும் தன் உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்க வேண்டும். இந்த அமைப்பில் இந்த விஷயத்தையே பேச மறுத்து விட்டு இப்பொழுது இந்த அமைப்பே சரியில்லை என்று நொண்டிச் சாக்கு சொல்கிறது காங்கிரஸ் கட்சி.

- விஸ்வாமித்ரா
தொடரும்.......... ( நாளை )

English Essay source : Indian Express

17 Comments:

வலைஞன் said...

ஸ்விஸ் வங்கிகளில் பணம் போடுவதெல்லாம் கி.பி.2004 க்கு பிறகு தன் ஆரம்பிச்சது போல!
யாருக்கையா பூ சுத்தறீங்க?

Anonymous said...

"ஐம்பது லக்ஷம் கோடி கறுப்புபணத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை"
நன்றி : "குடும்பத்" தொலைக்காட்சி - இரவு செய்திகள் (22.04.2009).

நேற்று ஒரு பொது நல வழக்கில் மத்திய அரசு வக்கீல் கீழ்கண்ட கருத்தைத் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு கடந்த "நான்கு" ஆண்டுகளாக வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புபணத்தை வெளிக்கொணர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இது குறித்த விரிவான அறிக்கை நாளை (24.04.2009) அன்று உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பாக சமர்ப்பிக்கப்படும்.


நாலு வருஷமா நடவடிக்கையாம்! யாரடா ஏமாத்தறீங்க?

M Arunachalam said...

Mahesh Jethmalani, SC Lawyer along with other citizens has filed a PIL in SC to direct the UPA Govt. to stop its lethargic attitude to the issue of bringing black money stashed abroad to India & start taking meaningful action immediately. The Solicitor General representing the GoI has, instead of staright forward reply, has questioned the timing of the PIL coinciding with elections. Finally he has taken 48 hours time from SC to table the actions already taken by GoI to bring back black money stashed away in tax havens & banks abroad.

If this is the attitude of Sonia Cong & its UPA allies like DMK, who have all amassed several thousands crores of corruption & illicit money & stashed it away in Swisss & other tax havens, how can they be expected to bring it out in public? So, the only choice for all right thinking & nationalist-minded citizens of India is to THROW OUT THIS CORRUPT SONIA CONG & DMK UPA REGIME & BRING TO POWER BJP & THEIR ALLIES in the Lok Sabha elections.

Let us hope good sense will prevail on general public.

R.Gopi said...

திருடனுக்கு தேள் கொட்டிடுச்சு...........

இப்போ திருடனும், அவனை சேர்ந்த மற்றவர்களும் என்ன செய்ய போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, கூடிய சீக்கிரம் கொண்டு வந்து கிடப்புல போட்டு இருக்குற நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்துங்கப்பா......

(லேட்டஸ்ட் டகால்டி செய்தி - சுவிஸ் நாட்டு குடியுரிமை கேட்டு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இந்தியாவிலிருந்து குவிந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது).

டன்மானடமிழன் said...

திராவிட திருடர்களால்
தமிழ்நாடு சீரழிகிறது

கள்ள (காங்கிரஸ்) காந்திகளால்
இந்தியா சீரழிகிறது


பாதி விவேகானந்தர்
பாதி வீரசிவாஜி
இருவரும் சேர்ந்த
ஒரு ருத்ரன் வந்தால்தான்
இந்தியாவிற்கு விடிவு கிடைக்கும்

நாகு (Nagu) said...

இந்தியா கேட்டால் ஜெர்மனி அரசு பட்டியலைக் கொடுக்கும். அவ்வளவுதான் விஷயம். அந்த பட்டியலை வைத்துக் கொண்டு எல்லோரையும் ப்ளாக்மெய்ல் பண்ணலாம் - சும்மா அதிருதில்ல ஸ்டைல்ல...

R.Gopi said...

"தல" - அதிரடி கேள்வி பதில்கள்

கேள்வி : நேற்றைய மற்றும் இன்றைய இசை

பதில் : நேற்றைய இசை மெல்லிசையும், தேன் வரிகளும் இணைந்து நந்தவனத்தில் நடந்த தென்றல்
இன்றைய இசை வல்லிசையும் தென்படாத வரிகளும் இணைந்து பாலைவனத்தில் நடக்கும் சுனாமி.

கேள்வி : இன்றைய இந்தியா பொருளாதாரம்

பதில் : நேற்றைய விலைவாசியை விட இன்று குறைவு என்று யாராவது கூறினால் அதைக்கேட்டு சந்தோஷப்படும் முதல் ஆளாக நான் இருப்பேன். ரேஷன் கடையில் கூட குறைவு என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு தான் தெரிந்தது, குறைந்தது விலை அல்ல, எடை என்று ..............

கேள்வி : எந்தப்பால் பிடிக்கும் ??

பதில் : குடிப்பதற்கு பசுவின் பாலும், படிப்பதற்கு திருக்குறளின் காமத்துப்பாலும்

கேள்வி : சாதனையாக நீங்கள் நினைப்பது என்ன ?

பதில் : இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதை

கேள்வி : வேதனை என்றால் ??

பதில் : பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்படும்போது ஏற்படுவது ....

கேள்வி : சோதனை என்றால் ??

பதில் : கேட்டால் பதில் கிடைக்கும் என்பதற்காக என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பது ...........

கேள்வி : போதனை என்பது ??

பதில் : நாம் அடுத்தவருக்கு மட்டும் கொடுப்பது

கேள்வி : தானம் என்பது !!!

பதில் : வாங்குவதில் தான் தனி சுகம்

கேள்வி : லஞ்சம் என்பது ??

பதில் : அப்படி என்று ஒரு வார்த்தை தமிழில் உள்ளதா ??

கேள்வி : சரி, கையூட்டு என்பது ??

பதில் : தன் மகவுக்கு, தாய் தன் கையால் சோறு ஊட்டுவது

கேள்வி : ஆசை என்பது ??

பதில் : அது அளவற்றது .....

கேள்வி : உங்களின் எல்லை !!!

பதில் : அது என்னிடம் இல்லை

கேள்வி : ஒரு தத்துவம் !!!

பதில் : மீசை வைத்தவன் எல்லாம் வீரன் இல்லை ....... ஆசை வைக்காதவன் எவனும் மனிதன் இல்லை ......

கேள்வி : பூ மற்றும் பூவையர் !!

பதில் : செடி கொடியில் பூப்பது, மஞ்சத்தில் மலர்வது

கேள்வி : பட்டம், பதவி, புகழ், செல்வம் !!!

பதில் : படிக்காமலே எனக்கு கிடைத்தது, தேடாமலே என்னை அடைந்தது, தானாகவே எனக்கு கிடைத்தது, தேடி வந்து சேர்ந்தது

Krish said...

நல்ல பதிவு! அத்வானி தவிர இதுபற்றி யாரும் பெருசாக பேசுவதில்லை. ஜெயலலிதா, லல்லு, மாயாவதி, கருணாநிதி யாரும் வாய் திறக்கவில்லை. சாதரண குடும்பத்தை சேர்ந்த தங்கபாலு கூட ஆயிரம் கோடிக்கு சொத்து வைத்திருப்பதாக ஜு.வீ யில் செய்தி.

Anonymous said...

Jayalalitha spoke today in Sivakasi - campaigning for VaiKo - about Dayanithi maran having setup BRI/PRI exchange at home and using that for suntv pictures and files transfer to international suntv transmissions. Not sure why she is raking up Dayanithi now when Dinakaran and Suntv is giving more than adequate coverage of her speeches.

she also spoke a lot about karunanidhi kudumbam and corruption. Vaiko was pleased.

Anonymous said...

" இந்தியா கேட்டால் ஜெர்மனி அரசு பட்டியலைக் கொடுக்கும். அவ்வளவுதான் விஷயம். அந்த பட்டியலை வைத்துக் கொண்டு எல்லோரையும் ப்ளாக்மெய்ல் பண்ணலாம் - சும்மா அதிருதில்ல ஸ்டைல்ல..."

Advani rajni madhiri phone pannuvara

Tring Tring..

AAAAARRRUUUUUUU

Advani: aaan MORUUUUU

Vazgha valamudan
Advani: Vazgha padhi valamudan

Kaun hai
Advani: BAASU DA KENAI....

Ore damas than ponga...

Congressum oorai ematharan bjp um oorai ematharan...

Anonymous said...

60 years of Congi Money has to come back.

This is the right time to do this, when the whole International community is also positive to co-operate on this.

Anonymous said...

"ஸ்விஸ் வங்கிகளில் பணம் போடுவதெல்லாம் கி.பி.2004 க்கு பிறகு தன் ஆரம்பிச்சது போல!
யாருக்கையா பூ சுத்தறீங்க?"

Typical Manja thundu's modus operandi in misguiding People.

1. LKA is talking about the entire 60 years of Stashed money, not only this term's.

2. Are people so dumb and stupid to believe that Congress ruled only from 2004.

Anonymous said...

One and Only BJP can do this.

What a Vision...
What a Leadership...

BJP has to come back for the very survival of the Nation from the hands of evil Congis and it's cronies

Anonymous said...

I am not sure whether this is right. I am not in India. Is it possible to file an RTI @ the right place to find out - whether the Government - had taken steps to get details of Money in Swiss Bank - with Germany Govt? Germany seems to have offered the this free infact..

The correct form of question should be made through RTI which is powerful. This is the right time too....

மஞ்சள் ஜட்டி said...

இ.வ,

பா.ம.க எதோ சி.டி வெளியாக்கி உள்ளதாக கேள்வி பட்டேன்..(நம்ம நாக்க மு.க வை செம்மையா வாரி..) அதோட யு டியூப் லிங்க் கிடைச்சா ஒரு வீடியோ பதிவு போடுங்களேன்??

லவ்டேல் மேடி said...

நம்ம நாட்டுல இருக்குற வார்ட் கவுன்சிலர் கூட சுவிஸ் பேங்குல அக்கவுன்ட்டு வெச்சுருக்காங்க....... இதுல பெரிய பெரிய அரசியல் வியாதிங்க எல்லார்த்தையும் சொல்லவா வேணும் ......

ஒரு வேல.... அத்வானி ஆஸ்திரேலியா பங்குக்கு அவரோட அச்காவுன்ன்ட்ட மாத்தியிருப்பாரோ ............???எப்புடியோ .. இவிங்களுக்கு மக்களை முட்டாலாக்குனா போதும்....... அப்புறம் ஒரு குஜால்தான்..............

வலைஞன் said...

//Typical Manja thundu's modus operandi in misguiding People.//

Hello Mr.Anony!

I neither support Cong nor BJP.
Nor I try to mislead others.My question was what Mr.LKA was doing between 1999 to 2004 when he was in power?
We shout from ear to ear when MK supports Prabhakaran.But why should Ms.Sonia ally with MK?
Why can't ND TV ask her this question?
Why Mr.LKA keeps mum on Spectrum scandal?
All Indian politicians are corrupt and cunning.That is our fate.

Thanks