பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 04, 2009

குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த எம்.பி


விழுப்புரத்தில் பல பகுதிகளில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் உலா வந்த திண்டிவனம் எம்.பி. கோ.தன்ராஜ்.

திண்டிவனம் பாமக எம்.பி. கோ.தன்ராஜ் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

திண்டிவனம் எம்.பி. தன்ராஜ், மக்களிடம் நெருங்கிப் பழகி தொகுதி மக்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்கேற்பார்.

இவர் தன்னைப் பற்றியும், தமது கட்சியைப் பற்றியும் தொகுதி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறியவும், தங்கள் கட்சியினரின் செயல்பாட்டை கண்காணிக்கவும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் சென்றார்.

இவ் வேடத்தில் விழுப்புரம் மாவட்ட பாமக அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்தவர்களுக்கு இவரை அடையாளம் தெரியவில்லை.

அப்போது "நல்லகாலம் பொறக்குது, உங்கள் கட்சிக்கு நல்ல காலம் பொறக்குது' என்றவாறு வந்தவர், பாமக இளைஞர் அணி மாநாடு குறித்து விசாரித்தார்.

அதன் பின்னரே அடையாளம் கண்டு கொண்ட அவரது கட்சியினர் அவரிடம் சகஜமாக பேசினர்.

இதேபோல் இவர் விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

எசாலம் கிராமத்துக்கு குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் எம்.பி. வந்ததை அறிந்து அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இட்லிவடை மாதிரி இப்ப எம்.பிக்களும் முகமூடி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். போட்டோவுக்கு நல்லா போஸ் கொடுத்திருக்கிறார்.

( செய்தி: தினமணி )

16 Comments:

Raj said...

இது வரை நடந்த தேர்தல்களில் ஓட்டுக்காக பிச்சைகாரர்களாக உலா வந்தவர்கள் இப்போது குடுகுடுப்பையாக வலம் வருகிறார்களோ ?????

எது எப்படியோ தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறந்தால் சரி .....

Anonymous said...

paa ma ka virku nalla edirkaalam endru Kudukudupaikaarar koorinal, Tamizh naatirku ....?

Anonymous said...

தேர்தலில் தோற்றாலும் கைவசம் ஒரு தொழில் வைத்திருக்கிறார்:).

சங்கு மாமா said...

அந்தாளு என்ன லுங்கி கட்டி இருக்கிறாரா இல்ல புடவையை கட்டி இருக்கிறாரா?? ஓவர் மேக் அப் ஆ தெரியுதே?? டாக்டர் பாத்தா தெரிச்சிகிட்டு ஓடிடுவாரு போல..

கொடும்பாவி-Kodumpavi said...

சில சமயம் இப்படி எல்லாம் வேஷம் போட்டுகிட்டு போனாதான் தொகுதிக்குள் போக முடியும் இல்லை என்றால் மக்கள் போர்வையை போர்த்தி கும்மி விடுவார்கள்.

கொடும்பாவி-Kodumpavi said...

சில சமயம் இப்படி எல்லாம் வேஷம் போட்டுகிட்டு போனாதான் தொகுதிக்குள் போக முடியும் இல்லை என்றால் மக்கள் போர்வையை போர்த்தி கும்மி விடுவார்கள்.

Anonymous said...

Thokuthip pakkame varaatha MPkkaL naduvil ivar vararee, paaraattungkappaa :)

greatlover said...

சிரமம் தேவை இல்லை இவர் சாதரணமாகவே வரலாம் யாருக்கும் இவரை அடையாளம் தெரியாது.

அமுதப்ரியன் said...

இட்லிவடை மாதிரி இப்ப எம்.பிக்களும் முகமூடி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். போட்டோவுக்கு நல்லா போஸ் கொடுத்திருக்கிறார்.
------------
அப்படீன்னா இட்லிவடையும் ஒரு குடுகுடுப்பைக் காரரா?. சொல்லவேயில்லை....

IdlyVadai said...

//greatlover
சிரமம் தேவை இல்லை இவர் சாதரணமாகவே வரலாம் யாருக்கும் இவரை அடையாளம் தெரியாது.//

நல்ல கமெண்ட். உங்க அட்ரஸ் சொல்லுங்க உங்களுக்கு புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பிவைக்கிறேன்.

வாழவந்தான் said...

திருவிழா அரம்பிச்சாசுல, இனிமே தினம் வேஷம், கூத்து எல்லாம் களைகட்டிடும்.

//
சிரமம் தேவை இல்லை இவர் சாதரணமாகவே வரலாம் யாருக்கும் இவரை அடையாளம் தெரியாது.
//
இட்லிவடை, எனக்கும் புத்தகத்தின் ஒரு பிரதி உண்டுதானே?? ;-)

R.Gopi said...

இவன் அப்படியே போனாவே யாருக்கும் அடையாளம் தெரியப்போறதில்ல. இதுல, வேஷம் வேறயா.......... நல்லா போட்டான்யா வேஷம். ஆனா, நெசமாலுமே நல்லாதான்யா இருக்கான்....... அச்சு அசலா .......... ஜக்கம்மா பேரன் மாதிரியே ..........

கைவசம் தொழில் இருக்கு, சரிதான், அங்க வருமானம் இங்க வர மாதிரி வருமா. எத்தனை குப்பி மை வித்தாலும் இங்க கெடைக்கற வசூல் /கலெக்ஷன் அங்க வராதே .......

வர வர இட்லிவடை ரொம்ப கெட்டு போயிட்டாரோன்னு சந்தேகமா இருக்கு. "தல" ஸ்டைல்ல புக் எல்லாம் குடுக்கறேன்னு சொல்றாரே. தொல்காப்பிய பூங்காவா??? நடத்துங்க நடத்துங்க தல ............

Anonymous said...

/greatlover
சிரமம் தேவை இல்லை இவர் சாதரணமாகவே வரலாம் யாருக்கும் இவரை அடையாளம் தெரியாது.//

நல்ல கமெண்ட். உங்க அட்ரஸ் சொல்லுங்க உங்களுக்கு புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பிவைக்கிறேன்.

Super comment

Anonymous said...

அடப்பாவமே! நீஙகளும் ஏமாந்துட்டீங்களாண்ணா?
அவர் நிஜ எம். பி.யும் இல்லை: நிஜ குடுகுடுப்பைக்காரரும் இல்லை. செட் அப்புக்குள்ளே செட் அப்பு, சித்தப்பு!
-- டில்லி பல்லி

அப்பாவி மனிதன் said...

காமெடி ஆரம்பம் .. திரு கமலஹசனை எல்லாம் தாண்டி அதிக பிண்னோட்டம் இட்டு .. இந்த ஆளை எல்லாம் பெரிய மனிதன் ஆக்கிவிடாதீர்கள்.. பிறகு மருத்துவர் அய்யா ... கட்சியில் இருந்து நீக்கி விட போகிறார் ( நடிப்பு என்பது மருத்துவர் அய்யா மற்றும் சின்ன அய்யா அவர்களின் சொத்து ..அதனால தான் நடிகர்களை அவர்கல்லுக்கு பிடிக்காது )விட்டார்கள் நம்ம அரசியல்வாதிகள் ..

Anonymous said...

திரு வெண்ணை அவர்களே,இப்படி மாறு வேடத்தில் போய் தான் மக்கள் குறை அறிய வேண்டும் என்று இல்லை. அப்படி தேட குறை கடுகளவு இல்லை. நீங்கள் காலை எழுவதே மின்சாரம் இல்லாம தான். இத போய் வெட்டியா வேலைய கெடுத்துட்டு வேஷம் கட்டி தேடறாரு... தேர்தல் ரிலீஸ் மாதிரி ...