பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 10, 2009

ந-வீண் சாவு-Law

நவீன் சாவ்லா பற்றி இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பலர் பல விதமாக இவரை பற்றி பேசலாம்.

ஆனால் இவர் எவ்வளவு நல்லவர் என்று எடுத்தக்காட்டவே இந்த பதிவு.


பா.ஜ.க அரசியல் காரணங்களுக்காக அவர் மீது குற்றச்சாட்டை கூறியது, அந்த குற்றச்சாட்டுகளை இன்று வரை நவீன் சாவ்லா மறுக்கவில்லை. அடுத்த தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்க போகிறவருக்கு இந்த நேர்மை போதாதா ?

தலைமைத் தேர்தல் ஆணையரையும், மற்ற தேர்தல் ஆணையர்களையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது. நடைமுறையில் பிரதமரும் அவரது அமைச்சரவையும் எடுக்கும் முடிவை நிறைவேற்றுகிறார் குடியரசுத் தலைவர். நம் நாட்டுக்கு யார் பிரதமர் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்க இவர்களால் நியமித்த நவீன் சால்வா எப்படி தப்பு செய்வார் ? தலமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி "கடைசி காலத்தில் தரப்படும் பரிந்துரை, இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் என்று (பா.ஜ.க தவிர) எல்லோரும் சொல்லுகிறார்கள் இதிலிருந்து தெரியவில்லையா சால்வா எவ்வளவு நல்லவர் என்று ?

கோபாலசுவாமி குடியரசுத் தலைவருக்கு சாவ்லா பற்றி 93 பக்க கடிதம், 500 பிற்சேர்க்கை, 150 பக்கம் சாவ்லாவின் பதில் என்று அனுப்பியுள்ளார். கோபாலசாமி ஓய்வு பெறும் 2009 ஏப்ரல் 20-ம் தேதிக்குள் இவ்வளவையும் எப்படி குடியரசு தலைவர் படிப்பார். அதனால் அவர் பிரதமருக்கு அனுப்பிவிட்டார். பிரதமர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். மீடியாவிற்கு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக தெரியாது. மீடியாவிற்கே என்ன என்று தெரியாத போது, சாவ்லாவிற்கு எப்படி தெரியும் ?

எமர்ஜென்ஸி காலத்தில் பெயர் எடுத்தவர் சாவ்லா. ”மனித நேயமற்ற, அதிகார மமதையுடன் கூடிய” அவரது நடத்தையை பார்த்த ஷா கமிஷன் இவருக்கு எந்தவித அரசுப் பதவியும் வகிக்கத் தகுதியற்றவர் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறது. 1980-ல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி ஷா கமிஷன் அறிக்கை குப்பையில் போட்டார். இப்படி இருக்க இவரை பற்றி எப்படி அவதூறு சொல்லலாம் ? இவருக்கு ‘பத்ம’ விருது அல்லவா கொடுக்க வேண்டும்!

மத்திய அரசாங்க அதிகாரியாக இருந்தபோது நவீன் சாவ்லா, "லாலா சமன் லால் மாணவர்களுக்கான கல்வி அறக்கட்டளை', "திருமதி பகவான் தேவி மாணவிகளுக்கான அறக்கட்டளை' என்ற இரு அறக்கட்டளைகளை உண்டாக்கி, அவற்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏ.ஏ. கான் (10 லட்சம்), ஆர்.பி. கோயங்கா (15 லட்சம் அவருடைய மனைவியின் பெயருல் "லெப்ரா இந்தியா அறக்கட்டளை' என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏ.ஆர். கித்வாய் (45 லட்சம்), அமைச்சர் அம்பிகா சோனி (15 லட்சம்), கரண் சிங் (10 லட்சம்). ஆக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடமிருந்து 95 லட்சம் ரூபாய் நிதி பெற்றுள்ளார். காங்கிரஸ் எம்பிக்களின் செல்வாக்கு பெற்றவர் எப்படி தப்பு செய்வார். மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஓர் அறக்கட்டளைக்கு 25 லட்ச ரூபாய்க்கு மேம்படாமல்தான் நிதி வழங்க வேண்டும் என்று திட்டத்தின் விதிமுறை ௬றுகிறது. இது எம்.பிக்கள் செய்த குற்றமே தவிர எப்படி சாவ்லா செய்த குற்றமாக இதை கருத முடியும் ? எம்.பிக்கள் தங்களது தொகுதிக்கு ஏதாவது செய்தால் தான் குற்றம் என்று நமக்கு தெரியாதா ?

அரசாங்க அதிகாரிகள் அறக்கட்டளைகளில் சம்பந்தப்பட்டிருந்தால் அதற்கு அரசாங்க அனுமதி முன்னதாகப் பெற்றிருக்க வேண்டும். 1994 ஆம் ஆண்டு 14034694 எண்ணுள்ள கோப்பு, 12-4-1994 அன்று அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளார். ஆனால் 2006 ஏப்ரல் 8, "டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் "தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா பற்றிய காணாமல் போன முக்கியமான அரசாங்கக் கோப்பு' என்ற தலைப்பில் பின்வரும் செய்தி தரப்பட்டுள்ளது. ""ஐ.ஏ.எஸ். அதிகாரி சாவ்லா கோப்பு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று 29-3-2006 தேதியிட்ட கடிதத்தில் உள்துறை அமைச்சரகம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக் கோப்பு அனுப்பப்பட்டதற்கான ரசீதின் நகல் இத்துடன் அனுப்பப்படுகிறது. உள்துறை அமைச்சகத்திலிருக்கும் விவரப்படி அந்தக் கோப்பு திரும்பவும் அமைச்சரகத்துக்கு வரவில்லை.

கோப்பை தொலைத்தது அரசாங்கம் செய்த தப்பு, இதற்கு எப்படி சாவ்லா பொறுப்பாக முடியும் ?

மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் ”ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் ஆணையராக ஆவார் ” என்று சொல்லிவிட்டார். நமக்கு என்ன சட்டம் தெரியும் ? சட்ட அமைச்சர் சொன்னால் சரியாக தான் இருக்கும். அதனால் கோபாலசாமி சொல்லுவதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

பா.ஜ.க. அளித்த புகாரின் அடிப்படையில், சாவ்லாவிடம் ஜூலை 2008ல் விளக்கம் கேட்டிருக்கிறார் கோபாலசாமி. எட்டுமுறை நினைவூட்டிய பிறகு, மிகத் தாமதமாக, கடந்த டிசம்பர் 10ம் தேதிதான் பதில் அளித்துள்ளார் சாவ்லா( இதில் ஒரு மாதம் லீவும் அடங்கும்). இதிலிருந்து தெரியவில்லையா சாவ்லா எவ்வளாவு பிஸியாக இருக்கிறார் என்று ?

முக்கியமான மீட்டிங் போது சூச்சு போக வெளியே சென்று காங்கிரஸ் காரர்களுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்.. இதில் என்ன தப்பு ? ஆபீஸில் இருக்கும் போது நம் நண்பர்கள் நமக்கு கிரிக்கேட் ஸ்கோர் சொல்லுவதில்லையா ? அது போல் தான் இதுவும் எப்படி இதை தப்பு என்று சொல்ல முடியும் ?

எல்.கே.அத்வானி மத்திய அமைச்சராக இருந்தபோது உள்துறைச் செயலராக இருந்த கோபாலசுவாமியை தேர்தல் ஆணையகப் பணிக்கு மாற்றப்பட்டார். அதனால் நிச்சயம் இவர் நேர்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது கோபாலசாமி செய்தது அத்துமீறல் என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட இப்படி அத்துமீறல் செய்யலாமா ?
கோபாலசாமி போகும் திருப்பதி பெருமாளுக்கே வெளிச்சம்.


தேவையில்லாத பின்குறிப்பு: சாவ்லாவின் அம்மா ஒரு மகப்பேறு மருத்துவர். பிரியங்கா காந்தி பிரசவத்தின் போது இவர் தான் மேற்பார்வை பார்த்திருக்கிறார்.

கதை, : rediff, dinamani, hindu, times of India
திரைக்கதை, வசனம்: இட்லிவடை
டைட்டில் : நாகராஜன்


20 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

உள்குத்து அதிகம் உள்ள மற்றொரு இட்லி வடை பதிவு.
சாவ்லா தப்பே செய்யவில்லை என்பதற்கு வக்கீல் இட்லி வடை எடுத்து கொடுத்திருக்கும் சில முக்கிய விவரங்கள்.

Krish said...

இந்தியா உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறோம். ஆனால் இனிமேல் தேர்தல் கூட ஒழுங்காக நடக்காது போலிருக்கிறது.

அமர் said...

கோபால்சாமி ஒரு பக்கம். சாவ்லா இன்னொரு பக்கம். இந்தியாவில் நடுநிலை நிர்வாகிகளே கிடைக்க மாட்டார்களா

அறிவிலி said...

நியாயம், அநியாயம் என்பது அவரவர் பார்வையில் இருக்கிறது.
இதோ... நவீன் சாவ்லாவின் நேர்மையை எவ்வளவு அழகாக எடுத்துரைத்தீர்கள்????????

ஆதி said...

உங்களுக்கென்ன உட்கார்ந்த இடத்துல இருந்தே சுலபமா எழுதிடுவீங்க, இவ்வளவும் செய்யறதுக்கு அவர் எவ்வளவு சிரமபட்டுருப்பர்,

மடல்காரன்_MadalKaran said...

நவீன் 'சால்வா'ன்னு எழுதியிருக்கீங்க? சாவ்லா பிரச்சனை சால்வாகுமான்னு நினைச்சு எழுதினீங்களா? முதல் வரியை கவனிக்கவும் உங்க பதிவில்.
அன்புடன், கி.பாலு.

Boston Bala said...

:)

Anonymous said...

Masterstroke by Congress.

They delayed too much in this 60 years in turning India into an Africa. Hereafter no problem with that. We will reach Zimbabwe quite faster with Gandhi family ruling us for another n years

RAMASUBRAMANIA SHARMA said...

ஒண்னியும் பீரியல்ல சார்....என்னாவோ ப்ண்ணிட்ட்டு போறான்ய்ங்க போங்க....அவ்ளோ தான்...

RAMASUBRAMANIA SHARMA said...

சரி...சரி..

Anonymous said...

தன் "இன" "மானவருக்கு" இன்னொரு "இன" "மாணவரின்" பதிவு..

seetha said...

http://www.nature.com/news/2009/090204/full/457640a.html.



idlyvadai, this has nothing to do with chawla. I thot one more area of frustration can be shared,coz troubles shared are troubles halved or soemthing like that.the most interesting part is the readers response!!!!

அமுதப்ரியன் said...

பகவானே நாட்டைக் காப்பாற்று...

venki (a) baba said...

//தேவையில்லாத பின்குறிப்பு: சாவ்லாவின் அம்மா ஒரு மகப்பேறு மருத்துவர். பிரியங்கா காந்தி பிரசவத்தின் போது இவர் தான் மேற்பார்வை பார்த்திருக்கிறார்//

பிரதிபா பாட்டில், 70 களில் இந்திரா காந்தி அம்மையாரின் மூத்த சமையல் பொறுப்பாளராக இருந்தார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

Anonymous said...

Awards

In March 2005, he was presented the Mazzini award by the Government of Italy "in recognition of his efforts to forge a new relationship with Italy and strengthening existing bonds". 2005 : The Mazzini Award from the Government of Italy. 2005 : Award from the Institution of Directors, New Delhi on the 20th of August 2004.

COURTESY:wikipedia

Anonymous said...

நம்மாள பத்தி இங்க ஒரு மேடம் ஒரு வாரம் முன்னாடியே போட்டு தாக்கிட்டாங்க.. இதப் படிங்க முதல்ல..


http://allaboutpolitics.blogspot.com/2009/02/cec-vs-ec.html

வாழவந்தான் said...

////
இப்படி அத்துமீறல் செய்யலாமா ?
கோபாலசாமி போகும் திருப்பதி பெருமாளுக்கே வெளிச்சம்.
////
மகர நெடுங்குழை காதன் போட்டிருக்கலாமோனோ!!!!

////
தேவையில்லாத பின்குறிப்பு: சாவ்லாவின் அம்மா ஒரு மகப்பேறு மருத்துவர். பிரியங்கா காந்தி பிரசவத்தின் போது இவர் தான் மேற்பார்வை பார்த்திருக்கிறார்.
////
இதுக்கு மஞ்ச கலர் அடிக்க மறந்துடீங்களா??

மிஸ்டர் அரட்டை said...

Hi Idly vadai..

Did u notice ....we in tamilnadu are becoming a laughing stock..and as if this is not enough ... we are having new channel ADHITHYA...( is it a tamil word??? ) and soon to be launched "Sirippoli"....Dr.Ramdoss himself is a great comedian and he does not need another channel...

Vedantha Desika Dasan said...

There can only be one golden era in every case, like Gupta era. Likewise the Seshan era has ended with Gopalasamy and we will be back to same old era prior to Seshan in respect of Election Commission. Also please read this week's Thuglak to know more about this Chawla.

Anonymous said...

அட போங்கப்பா....எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டைங்க தான்........கோவாலு BJP'க்கு சால்ரா போடுறாரு...சாவ்லா Congress'க்கு சால்ரா போடுறாரு.