பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 17, 2009

காதலர் தினம் -வலைப்பதிவு கலாட்டா!

இந்த வாரம் ஜூனியர் விகடனில் வந்த நம்ம பரிசல்காரனின் பதிவு.

கலாசாரத்தைக் காப்பாத்த சில அமைப்புகள் ஜரூராக் கௌம்பீட்டாங்கப்பா. காதலர் தினத்தன்னிக்கு ஜோடியாச் சுத்தற காதலர்களுக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.

இதுக்கு பதிலா பொதுஇடத்துல சிகரெட் பிடிக்க றவங்க, குப்பை போடறவங்களை தண்டிப்போம்னு கிளம்பினாக்கூட ஒரு அர்த்தம் இருக்கு!

கர்நாடகாவில் ராமசேனா அமைப்பு அறிவித்ததும், கோவையிலும் இந்து அமைப்புகள் சில, காதலர் தினத்தன்று தனிமையில் ஜோடியாகச் சுற்றும் (அதெப் படிடா... தனிமைல, ஜோடியா சுத்த முடியும்னு கேட்கப் படாது!) காதலர்களுக்குக் கட்டாயத்திருமணம் செய்துவைக்கப் போகிறார்களாம்.

இவங்களை எப்படி சமாளிக்க?வீட்டில் சம்மதமும் வாங்கி எளிமையாகத் திருமணம் நடக்கவேண்டும், அதே சமயம் ஊரில் எல்லாருக்கும் தெரியப்படுத்தவும் வேண்டும் என்று நினைப்பவர்கள்

இந்த அமைப்பினர் சுற்றும் இடங்களுக்கு ஜோடி ஜோடியாகப் போய் நின்றுகொண்டு, தங்கள் திருமணத்துக்கு அழைத்திருக்கும் 25, 30 பேரை அங்கங்கே ஒளிந்திருக்கச் சொல்லலாம். அமைப்பினர் வந்து திருமணத்தை நடத்திக் கொடுத்ததும் எல்லாரும் ஓடி வந்து கைகுலுக்கிப் பரிசளித்துவிட்டுப் போகச் செய்ய லாம்! அவங்க மூஞ்சில ஈ ஆடாது!

இந்த அமைப்பினரின் வீட்டிலிருக்கும், காதலித்து அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர், இளைஞிகள் அன்றைக்கு தைரியமாக ஜோடியாகச் சுற்றலாம். அப்ரூவல் வித் இம்மீடியட் ஆக்ஷன்!

'வெறும் மஞ்சச் சரடு தாலியைக் குடுத்தா கட்ட மாட்டேன். ஒரு கிராம் தங்கமாவது இருக்கணும்'னு ரகளை பண்ணணும் பையன். அப்படி, ஒரு கிராமோட குடுத்தா, கட்டீட்டு அதே மாதிரி ஊர்ல எட்டு இடத்துக்கு போய் ஒரு பவுனைத் தேத்திடுங்க...

பொண்ணு பார்த்து ரிஜக்ட் ஆன பசங்களுக்கும், பசங்க வேணாம்னு சொன்ன பொண்ணுங்களுக்கும் இது பம்பர் சான்ஸ். ஓரளவு உங்களுக்கு ஏத்த மாதிரி பொண்ணு/பையன்கிட்ட அவங்க வர்ற நேரம் பார்த்து டபக்னு போய் ஒக்கார்ந்துக்கோங்க. மத்தத அவங்க பார்த்துப்பாங்க!

ஜோடியா உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும். அவங்க பக்கத்துல வந்ததும் கடுமையா ஜோடிகளுக்குள்ள சண்டை போட்டுக்கணும். மறுபடி அவங்க குழம்பி அந்தப் பக்கம் போனப்பறம் பேசணும்... இப்படியேகடுப்படிக்கணும்...

ஜோடியா இருக்கறப்போ வந்து தாலி கட்டுன்னு சொன்னா 'மாங்கல்ய தாரண மந்திரத்தை யாரு ஓதுவாங்க?'னு கேட்டு முழுசா எல்லா மந்திரத்தையும் சொல்லச் சொல்லணும். சொல்லலேன்னா விடாம 'சொல்லு, சொல்லு'ன்னு ராவடி பண்ணணும்.

என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க...), இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து ''ஹை! அப்பா--அம்மா கல்யாணத்தைப் பார்த்துட்டேனே''னு கைதட்டிக் குதிச்சுக் கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையை தீர்த்த மாதிரியும் ஆச்சு! இது எப்படி இருக்கு?
- பரிசல்காரன்
www.parisalkaaran.com

நன்றி: ஜூனியர் விகடன்.
வாழ்த்துகள் பரிசல்காரன்!

12 Comments:

விஜி சுந்தரராஜன் said...

வாழ்த்துகள் பரிசல்காரன்
ரொம்ப நல்லா இருக்கு :-)

ரங்கன் said...

:)
me the first

Inba said...

Ramsena becomes headache sena for lovers

all true lovers can start SeethaSena against Ramsena..

For romeos, they can start Krishnasena..

Baski said...

1.last idea romba super :)
2.Cigratte matter kuda nalla than irruku

Vedantha Desika Dasan said...

Ok, i endjoyed reading the message. But how many viewers of this blog approve this "Valentine Day" mania in India? The people who feel they are the preservators of "Tamil Culture" are silent about this. For me, I personally don't approve this Foreign Culture being followed in India.

Krish said...

ராம் சேனா? லட்சுமன் சேனா? இவனுகளுக்கு வேற வேலையே இல்லையா? பரிசல் காரர் சொன்னது போல், சிகரட் புடிகறவன், ஈவ் டீசிங் பண்றவன், குப்ப போடரவன தடுத்து நிறுத்தின நாடு நல்ல இருக்கும்!

பரிசல்காரன் said...

மிக்க நன்றி இட்லிவடையாரே..!

வசிஷ்டர் வாயால் வாழ்த்துப்பெற்றதாய் உணர்ந்தேன்!

R.Gopi said...

பரிசல்காரன் பதிவு சூப்பர்

IdlyVadai said...

//மிக்க நன்றி இட்லிவடையாரே..!

வசிஷ்டர் வாயால் வாழ்த்துப்பெற்றதாய் உணர்ந்தேன்!//

இதெல்லாம் ரொம்ப ஓவர்.

சமிபத்தில் படித்த நல்ல நகைச்சுவை பதிவு. இப்படி படித்து எவ்வளாவு நாள் ஆச்சு :-)

R.Gopi said...

சமிபத்தில் படித்த நல்ல நகைச்சுவை பதிவு. இப்படி படித்து எவ்வளாவு நாள் ஆச்சு :-)
----------------------------------
இட்லிவடை

இதே மாதிரி ஒரு காமெடி இங்க கூட இருக்கு. போய் பாருங்க தல. பாத்து ரிலாக்ஸ் ஆகுங்க.

நாங்களும் காமெடி எல்லாம் எழுதுவோம்பா.......

http://jokkiri.blogspot.com/2009/02/blog-post.html

Namakkal Shibi said...

//என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க...), இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து ''ஹை! அப்பா--அம்மா கல்யாணத்தைப் பார்த்துட்டேனே''னு கைதட்டிக் குதிச்சுக் கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையை தீர்த்த மாதிரியும் ஆச்சு! இது எப்படி இருக்கு?//

60 ம் கல்யாணத்தை செலவில்லாம இப்படி பண்ணிடலாம்னு சொல்லுறீங்க?

கிரி said...

:-)))