பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 19, 2009

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. நீதிமன்றங்களில் தான் சரியில்லை

சு.சாமி மீது முட்டைவீச்சு....ஐகோர்ட்டில் கலவரம்

# ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
# ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
# ஐகோர்ட் கலவரம்: பத்திரிக்கையாளரின் கார் எரிப்பு
# வழக்கறிஞர்கள் ஆவேசம்:ஐகோர்ட் வளாக போலீஸ் நிலையம் தீயிட்டு எரிப்பு
# சு.சாமி வழக்கு எதிரொலி:போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதல்:போர்க்களமான ஐகோர்ட் வளாகம்

விரிவான செய்திகள் கீழே...

சு.சாமி மீது முட்டைவீச்சு : 2 வக்கீல்கள் கைது

ஐகோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை போலீஸ் கைது செய்துள்ளது.

கலைஞர் வேதனை

நீதிமன்றத்துக்கு உள்ளேயே வழக்கறிஞர்களில் சிலர் சுப்பிரமணிய சாமி போன்றவர்களிடம் நடந்து கொண்ட விதமும் (இது தொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.) பொதுக் கூட்டங் களில் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக சிலர் பேசியதும் முதல்வருக்கு மனச்சங்கடத்தை கொடுத்துள்ளன. - கலைஞர்

சு.சாமி ஆவேசம்

என் மீது முட்டை வீசுவதால் இலங்கையில் விடுதலைப்புலிகளை காப்பாற்றலாம் என இங்குள்ள கைக்கூலிகள் நினைப்பது பைத்தியக்காரத்தனம் - சுப்பிரமணியசாமி


செய்தி-1:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

செய்தி-2
சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.

பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பத்திரிக்கையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.

செய்தி-3
ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

செய்தி - 4
வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்.

40 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

சிலபஸ்ஸில் இல்லாத போதே இப்படின்னா சிலபஸ்ஸில் இருந்தால் எப்படியோ

Inba said...

Gangwar between Mafias is better then
Law(Breakers)er vs Police..

whats wrong?
Lawers are doing roudism because they r belong to 'Bar' counsil

I kindly request TN Govt to close all the so called law colleges pls

திவா said...

//வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்.//

எதுக்குங்க? அவங்க பி.ஜி பாடம் எடுக்க லெவல்லே இருக்காங்களே?

Anonymous said...

முன்பு....

ரெளடி: வக்கீல் ஐயா, இந்த போலீஸ்காரங்க கிட்டேயிருந்து காப்பாத்துங்க‌

இப்பொழுது...

போலீஸ்: ரெளடி ஐயா, இந்த வக்கீல்ங்க கிட்டேயிருந்து காப்பாத்துங்க‌

ரெளடி: அட போங்க சார், எங்களுக்கே போட்டியா வந்துட்டாங்க..

Anonymous said...

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

thirunaavu said...

//வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்.//

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்த வக்கீல்களை கேவலமாக பேசி சண்டையைத் துவக்கி வைத்ததே சு.சாமி தான் என்கிறது வக்கீல் தரப்பு.

சண்டையை தொடங்கி வைப்பது எப்படி? தமிழனின் ஆட்சியைக் கலைப்பது எப்படி என்பதிலும், தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் தங்கப் பதக்கமும்,டாக்டர் பட்டம் பெற்று இருப்பவர் சு.சாமி என்கிரது வக்கீல் தரப்பு.

Anonymous said...

இட்லி வடை(கறீ?)..நான் விளம்பரக்காரன்...உங்கள் பின் தொடர்பவன்..(தண்டோரா).கொஞ்சம் என்னை ...(vilambarakkaaran.blogspot.com)

Krish said...

இவனுகளுக்கு எல்லன் 'ஜெ' தான் சரிப்படும். போலீஸ் சையே அடிக்கிற அளவுக்கு இவங்களுக்கு தைரியம் யார் கொடுத்து?

விஜி சுந்தரராஜன் said...

//
வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்.
//

நீங்க நல்லா காமெடி பண்றீங்க !!
திருநெல்வேலி கே அல்வா வா ?
அவங்களுக்கு ரவுடியிசம் பாடமா ?

டன்மானடமிழன் said...

ராவணன்
குரங்குதானே என்று நினைத்து
அனுமார் வாலில் வைத்த தீ
இலங்கையே எறித்தது...

அதுபோல்தான் சு.சுவாமி மீது
நீங்கள் முட்டையடித்தது தக்காளி வீசியது

சும்மா கிடந்த ஊதிகேடுத்தானா
ஆண்டிங்கற கதைக்கு நீங்கதான்
நல்ல உதாரணம்

சனியை பார்த்தாலே
கெடுதல்னு சொல்லுவாங்க
சனியை அடித்துள்ளீர்கள்
விளங்கிடும் இனி தமிழ்நாடு

ஒரு தலைமுறையே
எந்த ஒரு அரசாங்க சலுகையும் இல்லாமால்
ஒரு இனம் அனைத்தையும்
தாக்குபிடித்து
நல்ல நிலையில் இருக்கிறது என்றால்
அதற்குகாரணம் கடினஉழைப்பு

துப்பாக்கி தூக்கிற அளவுக்கு
பலம் இருந்தா போதும்
நீ நான் யார் வேணும்நாளும்
தூக்கிடலாம்
இதில் ஒரு கஸ்டமும் இல்லை
விவேகமும் இல்லை

ஆனா
ஒரு அல்ஜிப்ரா கணக்கையோ
ஒரு கெமஸ்டீரி தியாரியையோ
மெம்மரி பண்ணி தப்பில்லாமல்
எழுதி காண்பி அப்ப தெரியும் உனக்கு

கடினஉழைப்பு என்றால்
என்ன என்று

இதுபோன்ற விசியத்தில் காண்பி
உனது விவேகத்தை வேகத்தை
கடினஉழைப்பை

அசிங்கபட்டாலும் கவலையில்லை
எல்லாவகையான கீழ்தரமான
வேலைகளையும் செய்வேன்
என்கிற எண்ணம் வந்துவிட்டால்

இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும்
இன்னும் எத்தனை ஆயிரம் சலுகைகள் தந்தாலும்
உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளமுடியாது

தன்மானவீரர்கள் விவேகிகள் என்று
பேசிகொண்டு இருக்கும்
பகுத்தறிவு பரதேசிகளுக்கு
ஒரு சவால்

இன்று இலங்கை
இந்த அளவுக்கு
உக்கிரமாக போர் செய்வதற்குகாரணம்
காங்கிரசனின் உதவிதான்
இது அனைவருக்கும் தெரியும்
இதுதான் "உண்மை"

சுவாமி மீது முட்டையையும்
தக்காளியையும் வீசியதுபோல்
உங்களால்
சிதம்பரத்தின் மீது வீசமுடியுமா?

பார்பானை இந்தஅளவுக்கு
திட்டுகிறிர்களே
இதுபோல் உங்களால்
ஒரு தேவர்களையோ
ஒரு வன்னியர்களையோ
ஒரு கவுண்டர்களையோ
ஒரு நாடர்களையோ
திட்டமுடியுமா சொல்லுங்கள்?

Anonymous said...

// பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்//

தலைவனங்குகிறேன்....

Anonymous said...

Rowdies of the highest order.
shoot at sight should be given to the police.Shame on the part of madras high court and supreme court if they cant get these rowdies(lawyers) back on track.

Still worst is the total break down of law and order situation. dont be surprised if there is TN State election along with lok sabha polls

கவுண்டமணி said...

///தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் தங்கப் பதக்கமும்,டாக்டர் பட்டம் பெற்று இருப்பவர் சு.சாமி என்கிரது வக்கீல் தரப்பு.///

சுப்பரமணிய சாமிக்குதான்
மத்திய அரசையே கலைக்ககூடிய அளவுக்கு
எம்.பி கள் இருக்கிறார்கள்
அதனால்தான் இலங்கைக்கு
இந்தியா இந்தளவுக்கு உதவி செய்யமுடிகிறது
மாநில அரசையே
அவர்கட்சிதான் ஆள்கிறது பாரு

நாராயணா
இந்த கொசு தொல்லை தாங்கமுடியலையடா

Anonymous said...

பத்த வச்சிடியே பர டே...
கலைஞரே lok sabha election கூட சட்ட சபை தேர்தல் கூட வர எல்லாம் அறிகுறியும் தெரியுது ....
பாத்து கோங்க தன்மான தமிழ் சமுதாயம் பண்ற வேலய..

Vedantha Desika Dasan said...

//வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்//

Reccommendation is rejected. Because only if you pass with Distinction in "Rowdyism" you are going to be admitted in BL Course in future

M Arunachalam said...

Thiru(ttu)Nayee,

//ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்த வக்கீல்களை கேவலமாக பேசி சண்டையைத் துவக்கி வைத்ததே சு.சாமி தான் என்கிறது வக்கீல் தரப்பு.

சண்டையை தொடங்கி வைப்பது எப்படி? தமிழனின் ஆட்சியைக் கலைப்பது எப்படி என்பதிலும், தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் தங்கப் பதக்கமும்,டாக்டர் பட்டம் பெற்று இருப்பவர் சு.சாமி என்கிரது வக்கீல் தரப்பு.//

Don't you have any shame to say the above words? If assuming Subramanya Swamy has "said" something like that, what is wrong in it? After all, he has expressed his opinion. If those "liers" can't agree with that, then they should have countered it with their own opinion/argument, right? Instead how can they start beating him or throw rubbish at him?

On one side you impotents are saying Swamy is a joker. On the other side, you can't even tolerate what he says and start beating him in front of HC judges? So, you fools are indirectly admitting that Swamy or what he says is not to be laughed at but seriously taken - right? Your actions speak for that and more.

THE FACT OF THE MATTER IS ALL YOU ROWDIES & THEIR SUPPORTERS WHO CALL THEMSLEVES THAMIZHANS ARE AFRAID OF SUBRAMANYA SWAMY.

That is why you can't even tolerate what he says and instead of countering him with civility you want to beat or kill him & just to beat an unarmed person, so many lier goondas are sent by the LTTE's benamis in TN.

I challenge these Poruuki Makkal Katchis, Kuruma Kelavans & Veeram Illadha Manoeybags, etc. if you guys have GUTS - REAL GUTS - contest without any alliance with either DMK or AIADMK in the coming LS elections in TN ON THE ISSUE OF LTTE support. Let us see, where are you being thrown out - to Bay of Bengal or Cooum?

If you guys possess at least one of VEKKAM, MAANAM, SOODU, SORANAI, you anonys tell these rowdy parties in TN to show some real MANLINESS where it matters instead of acting like POTTAI NAIs.

பாட்டாளி said...

அழுகிப்போன ஒருவன் மீது வீசப்பட்டதால்
அழகிய முட்டை அழுகிய முட்டையானது!

Kots said...

ஆளுகின்ற ஆட்சியாளர்களும் சரியில்லை. அவர்களின் கையில் இருக்கின்ற காவல் துறையும்
சரி இல்லை. ஒருவரின் அறிக்கைக்கு பதில் அறிக்கை விடுவது மட்டுமே முதல்வருக்கு தெரியும்.
வக்கீல் களுக்கு பாதுகாப்பு இல்லாத் போது பொது மக்களை பற்றி சொல்ல தேவை இல்லை.

முதல்வாருக்கு அவர் குடும்பம் நன்றாக இருந்தால் போதும். மக்களை பற்றி கவலை இல்லை.

மாறன் said...

சு.சாமி எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்… இவன் ரொம்ப…. நல்லவன்’

வாழவந்தான் said...

//
வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்
//
தோடா.. மீன்குஞ்சுக்கு நீந்த சொல்லிதரனுமா?
என்ன இ.வ. அதுக்குள்ள அம்பேத்கர் சட்ட கல்லூரி அடிதடி எல்லாம் மறந்துபோச்சா?

Bala said...

//If you guys possess at least one of VEKKAM, MAANAM, SOODU, SORANAI, you anonys tell these rowdy parties in TN to show some real MANLINESS where it matters instead of acting like POTTAI NAIs.//

If you possess guts and if you are real 'male' dog, come, let us face straight one to one. You are an asshole who keep you identity closed and bark like a coward dog.

Your comments are not fit to be published in this forum. I don't know how 'idlyvadai allows this.

I think you are one of those 'Gaand jalus' who can't tolerate that you are loosing your hold to these 'PMK', DPI etc.

If all parties in India contest alone, these parties will also do. If you think DMK, ADMK are big players, then when they long for others alliance. Let the parties be alloted MPs and MLAs on percentage of votes they score. Then see.

Anonymous said...

the incident is real shame. how people will believe the court and advocates. how the common people will believe these rowdies in the name of advocates. any body can explain for the following :
(1) all the medias are blaming only the police not on advocates
(2)even the acting judge requested to move out the police from the court and he has not even ordered the rowdies (advocates) to keep quite.
ragu

charmlee said...

இந்த பொருக்கிகளில் இருந்துதான் நாளைய ஜட்ஜுகளை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் !

நினைக்கவே பயமாய் இருக்கிறது !

Anonymous said...

// சு.சாமி மீது முட்டைவீச்சு....ஐகோர்ட்டில் கலவரம் //


கருமம் .... கருமம் .... இந்த பன்னாடிய முட்டயாள அடுச்சு பெரியாலாகிட்டாங்க .......

இனி ... சனி தலைய விருச்சுபோட்டு ஆடபோகுது..... இந்த பக்கி ' க்கு ் தமிழே வராதுல்ல .... அப்புறம் தமிழ்நாட்டுல இவுனுக்கு என்ன வேல ........

Nilofer Anbarasu said...

Video pls....

IdlyVadai said...

//Video pls....//

trying to upload from yesterday night. Once done I will give an update.

M Arunachalam said...

//If all parties in India contest alone, these parties will also do.//

I know someone like you will answer like this only. After all, when a challenge is thrown at you, you know how to "escape" - in typical Kazhagam style.

Obviously, you can't be expected to answer my straight forward question:

If you guys are really not AFRAID of Subramaniam Swamy, then why was he attacked for his oral utterances against LTTE?

Because you know you can't tackle him in legal ways, you are trying to attack him, right?

Are these attacks not desperate acts against a so-called politician who, according to you guys a joker, who does not even have followers?

I reiterate that attacking a person who has no intention to attack you is AN ACT OF COWARDICE & THE PERSONS WHO HAVE DONE THE SAME ARE SHAMELESS ROWDIES.

//Your comments are not fit to be published in this forum//

When you don't have any decency & civility to condemn such acts, YOU DON'T HAVE ANY MORAL RIGHT TO PREACH TO ME OR IDLYVADAI OR ANYONE ELSE ABOUT WHAT COMMENTS ARE FIT TO BE PUBLISHED & WHERE.

//You are an asshole who keep you identity closed and bark like a coward dog.//

As far as your above comment goes, suffice it to say, "who is a coward" will be known to anyone who browses both our profiles.

Finally, I realise I should not have used "Dogs" or 'Nais". For this, I apologise to all the dogs.

Vartta!!!!

Anonymous said...

"I think you are one of those 'Gaand jalus' who can't tolerate that you are loosing your hold to these 'PMK', DPI etc."

what exactly is the 'hold' that these PMK and DPI have? shameless fascist animals, continue to enjoy union ministry for their sons and family and shout racist anti-brahmin slogans too. Forget any other hold, can these shameless guys get any hold on their private parts?

get a life. quit using the net for supporting such low lifes. there are other things you can do on the net.

Evano Oruvan... said...

பிராமின் வேண்டாம் என்றால் சுதந்திரம் வாங்கி தந்தவர்களில் அதிகம் பேர் அவர்கள் தான் அதை நினைத்து பாருங்கள் , வன்கொடுமை சட்டம் தவறாக பயன் பயன்படுத்துகிறார்கள் , அது தவறு. நீதி மன்றத்தில் நீதியை காக்க வேண்டியவர்கள் இப்படி செய்தது தவறு தான். தர்மத்தை பாருங்கள் ஜாதியை பார்க்காதீர்கள் ...

பாட்டாளி said...

அவர்களை அவர்களின் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ வைத்து கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமே? பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் இரவோடு இரவாக கைது செய்த போலீசாருக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரிய வில்லை

பாட்டாளி said...

காஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு.

பாட்டாளி said...

ஒரு நாட்டின் அரசு அதன் மக்களுக்கு பெற்றோரை ஒத்தது. குழந்தைகள் தவறு செய்யலாம். பெற்றோர் கண்டிக்கலாம். ஆனால், குழந்தைகளை திருத்துவதைத் தவிர்த்து, பெற்றோரே குழந்தைகளை தாக்க ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்பதே என் கருத்து. பல சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்கிறோம் என்று அதிகப் படுத்தும் போக்கையே நம்மால் பார்க்க முடிகிறது.

arumugam said...

law keepers turned law breakers..!

an act of disgraceful...!

Now the EALAM issue is pushed to
the second row...

thanks to the " LAW KEEPERS " (should it be LAW BREAKERS )....!

கொடும்பாவி-Kodumpavi said...

பாவம் போலீஸ்.. எது சொன்னாலும் தாங்கறாங்க.. ரொம்ப நல்லவங்க.. அவுங்களுக்குன்னு ஒரு சங்கம் உண்டா.. அவுங்களுக்குன்னு ஏதாவது விடுமுறை உண்டா.. 'கடமை', 'கண்ணியம்', 'கட்டுப்பாடு' .. இதுதான்டா போலீஸுன்னு வால்டர் வெற்றிவேல் சொன்னாரு.

Anonymous said...

ஒரு தலைமுறையே
எந்த ஒரு அரசாங்க சலுகையும் இல்லாமால்
ஒரு இனம் அனைத்தையும்
தாக்குபிடித்து
நல்ல நிலையில் இருக்கிறது என்றால்
அதற்குகாரணம் கடினஉழைப்பு

WELL SAID..

Anonymous said...

வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்.this true

R.Gopi said...

இது டிரைலர்தான் ராசா........ தமிழ்நாட்டுக்கு இன்னும் என்னென்ன இருக்கு, பாக்கத்தானே போறீங்க ........

அவன அடி, இவன அடி, பாதுகாப்புக்கு வந்த போலீசை அடி. எதிர்த்து கேட்டா ஜட்ஜையும் அடி.

எல்லாரையும் அடிச்சுட்டு, அடி வாங்குனவன மொதல்ல புடிச்சு உள்ள போடுன்னு கலாட்டா, கலவரம் பண்ணு.

அந்த சாக்குல பஸ் கொளுத்து, கடைய எல்லாம் அடிச்சு உடை.

எங்கோ அமைதி ஏற்பட இங்கே அராஜகம் நடத்தும் இவர்களை பார்த்தால் .......

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.

chitharanjan said...

The so called lawyers will do any sort of illegal activity, but no one should question them or arrest them. Then y the f**k is the judicial system for?? TN is getting back to stone age. Y should all the lawyers be released?? As per you even if Swamy started the problem then y u taking the law into your hand?? shame on India.

Anonymous said...

சட்டக் கல்லூரியில் படிக்கும் போதே தொடங்கி விடுகிறது இந்த காவாலிகளின் அடிதடி. இவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது ? இவர்கள் சிறிதாக போலீஸ் தாக்கினால் கூட் பெரிய அளவில் போலீஸ் திருப்பி தாக்க வேண்டும். அரசும் அதைக் கண்டுகொள்ளாது இருக்க வேண்டும். மனித உரிமை மண்ணாங்கட்டிகளையும் இலவசமாக அப்போ அப்போ உதைத்து வைக்கனும். இல்லன்னா நாடை இரண்டாக்கிடுவானுக.

வக்கீல்களை (தமிழ்) வெறுப்பவன்.

കെ.പി.സുകുമാരന്‍ അഞ്ചരക്കണ്ടി said...

இந்த பொருக்கிகளில் இருந்துதான் நாளைய ஜட்ஜுகளை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் !

நினைக்கவே பயமாய் இருக்கிறது !


Well said!