பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 18, 2009

நூல்கள் நாட்டுடமை - எதிர்ப்பு, பதில்

தமிழக பட்ஜெட்டில் 28 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் மற்றும், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அப்டேட்: அரசு பதில்

காந்தி கண்ணதாசன் அறிக்கை

"தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ்அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரதுடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.

இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம்.

இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும்.

இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்"
காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன்

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்பு வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.

சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகள் வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்க அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.

காலச்சுவடு இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து காலச்சுவடு பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது"

அரசு பதில்:

"இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமுமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது. நாட்டுடைமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்துவரும் ‘ராயல்டி’ தொகை கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில், தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.

உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா, அகிலன், கவிஅயாகி சுத்தானந்த பாரதியார், கிருபானந்த வாரியார் ஆகியோரது நூல்களை நாட்டுடைமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடைமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

எனவே தற்போது நிதி நிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையர் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போது பொருந்தும்"


அடுத்த வருடம் அரசு சாருவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்து, அவரும் மறுப்பு தெரிவிக்காவிட்டால், மக்கள் நிலைமை என்னாவது?

12 Comments:

பா. ரெங்கதுரை said...

நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர் அவர்கள் நாட்டுடமை ஆக்கப்படும் எழுத்தாளர்களின் பட்டியலைப் படித்தபோது, சுந்தர ராமசாமியின் பெயரை 'சுந்தரி' ராமசாமி என்று உச்சரித்துள்ளாராம். இத்தகவல் காலச்சுவடு கண்ணனுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.

IdlyVadai said...

அப்டேட்: அரசு பதில்

Anonymous said...

ஏன் பெரியார் எழுத்துக்கள் நாட்டுடமை லிஸ்ட்ல் எல்லை ?

சுதர்சன்

தவநெறிச்செல்வன் said...

சாருவை வம்புக்கு இழுக்க வேண்டுமோ. நான் எதிர்பார்த்தது பெரியார் நூல்கள் பற்றிய வம்பை

அறிவிலி said...

\\ பா. ரெங்கதுரை said...
நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர் அவர்கள் நாட்டுடமை ஆக்கப்படும் எழுத்தாளர்களின் பட்டியலைப் படித்தபோது, சுந்தர ராமசாமியின் பெயரை 'சுந்தரி' ராமசாமி என்று உச்சரித்துள்ளாராம். இத்தகவல் காலச்சுவடு கண்ணனுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.\\


இவங்களுக்கெல்லாம் சுந்தர ராமசாமி பேர் தெரிஞ்சுருக்கறதே உலக அதிசயம்.

யாரையோ கூப்பிட்டு பத்மஸ்ரீ குடுத்தா மாதிரி, உண்மையிலியே யாராவது
"சுந்தரி ராமசாமி"ன்னு இருக்கப் போறாங்க.

R.Gopi said...

அடுத்த வருடம் அரசு சாருவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்து, அவரும் மறுப்பு தெரிவிக்காவிட்டால், மக்கள் நிலைமை என்னாவது?
----------------------------------
சும்மா நச்சுன்னு இருக்கு உங்க மஞ்சள் பெயிண்டு வார்த்தை.

சரி, விஷயத்துக்கு வாங்க. தலையோட தொல்காப்பிய பூங்கா புத்தகம் அரசுடமையாக்கப்பட்டு விட்டதா??

மஞ்சள் கவியின் மற்ற புத்தகங்கள்???

P N A Prasanna said...

நல்ல பதிவு
தளம் சிறக்க
வாழ்த்துக்கள்.
http://pnaptamil.blogspot.com/2009/02/blog-post_5396.html

மணிகண்டன் said...

இது என்னங்க சின்னபுள்ளதனமா இருக்கு ! முதல்ல இவங்க அனவுன்ஸ் பண்ணுவாங்களாம். அதுக்கு அப்புறம், வேண்டாம்னா சொல்லனுமாம் ! சிரிப்பா தான் இருக்கு. என்னத்த சொல்லறது !

Anonymous said...

ஜெயமோகன், சாரு நூல்களை நாட்டுடமையாக்கினால் அதை எதிர்க்க இருவரும் ஒரே மேடையில் தோன்றி
கூட்டாக குரல் கொடுப்பார்கள்.

Anonymous said...

அடுத்த ஆண்டு இட்லிவடை வலைப்பதிவு நாட்டுமையாக்கப்படும் :)

ஹரன்பிரசன்னா said...

//அடுத்த ஆண்டு இட்லிவடை வலைப்பதிவு நாட்டுமையாக்கப்படும் :)//

:))))

சுழியம் said...

//ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாமே?!//

1. யாரும் பதிப்பிக்க முன்வரமாட்டார்கள்.

2. ஏனென்றால் யாரும் படிக்க விரும்புவதில்லை.

3. அரசு செலவில் பிரச்சாரம் செய்ய முடியாது.

4. ஈவேரா உளறிய அனைத்தும் தணிக்கை செய்யப்படாமல் வெளிவரும். இது கெட்டவர்களுக்கு ஆபத்து.

5. கருநாநிதி பூட்டபின் வாரிசுகள் யாராவது ஆட்சிக்கு வரமுடிந்தால் அந்தப் புத்தகங்களை ”வாங்க வைத்து” லாபம் பார்க்கலாம். அரசுடமையாக்கிவிட்டால் அது நடக்காது.

6. தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கவுக்க கருநாநிதி & கோ பயன்படுத்தும் இந்த கீழ்த்தர தந்திரத்தை வேறு யாரும் பயன்படுத்த தீராவிடக் கழகங்கள் விரும்புவதில்லை.