பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 26, 2009

பூங்கோதை - நேற்று - இன்று

நேற்று:
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியுடன் அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய விவரங்களும் பத்திரிகைகளில் வெளியாகின. அதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.
என்ன என்று தெரியாதவர்களுக்கு முன் கதை :
மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ஜவஹர் என்ற தனது உறவினரை, லஞ்ச வழக்கு தொடர்பாக கடினமாக நடத்தாமல் மென்மையாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனர் உபாத்யாயாவிடம் வற்புறுத்தினார்.
ராஜினாமா கடிதத்தில்
"எனது உறவினர் ஜவஹர் விவகாரத்தில் நான் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. என் செல்வாக்கை பயன்படுத்தும் எண்ணமும் கிஞ்சித்தும் கிடையாது. ஒரு கோரிக்கை என்ற முறையில்தான் அதை நான் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் இது தவறு என்று உணருகிறேன். இதற்கு பரிகாரமாக நான் ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்
( தொடர்புடைய பழைய பதிவு - 1, பதிவு - 2 பதிவு - 3)

இன்று
டாக்டர் பூங்கோதை, தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைச்சராகிறார். ராஜ்பவனில் நாளை பதவி ஏற்கிறார்.

நாளை ?

17 Comments:

அப்பாவி மனிதன் said...

அம்மணி தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆகிவிட்டால் .. அப்புறம் யாரும் ஒட்டு கேட்க முடியதில்ல .. என்னே இவர்களின் அறிவு திறன் .. இதுக்கே இவங்களுக்கு எல்லாம் நொபெல் விருது குடுக்க வேண்டும் ..

நடந்தது என்ன ?

அம்மணி : அய்யா .. அமைச்சர் படவிழ இருந்து தூக்கி மூணு மாசத்துக்கு மேல அச்சு .. ஏதாவது ஒரு பதவி போட்டு குடுங்க ..
அய்யா : அத் அத்தனை நாள் ஆயிடுச்சா ? வழக்கம் போல மக்கள் தான் மறந்து இருப்பாங்க .. அதனால உமக்கு தகவல் தொடர்பு துறை எடுத்துக்கோ .. இல்லை என்றால் வீட்டில பிரச்னை வந்துடும் .( பாவம் அவரும் எத்தன பிரச்சனையை தான் சமாளிப்பார் )

சிவகுமார் said...

அவர்கள் அரசியல்வாதிகள் எப்படியும் பேசலாம், ராஜினாமா பண்ணலாம், மீண்டும் சேரலாம்...
நாம் பொதுமக்கள் செய்யவேண்டியது ஒன்றுதான் - வேடிக்கை மட்டும் பார்ப்பது, இட்லிவடை புண்ணியத்தில் ஒரு பின்னூட்டம் இடுவது வேறு என்ன செய்யமுடியும்...

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா:

இந்த ஜனநாயகம் ஒழிந்து சாக்கடை அரசியல்வாதிகள் அழிந்தால்தான் நாடு வளம்பெறும்.

விஜி சுந்தரராஜன் said...

இன்னும் இரண்டு இதே மாதிரி (அதிகார துஷ்ப்ரயோகம்) பண்ணினா, கண்டிப்பா அடுத்து சென்ட்ரல் மினிச்டெர் promotion தான் :-)

Anonymous said...

இந்த வெட்கம் கெட்ட நாய்களை பற்றி பேசுவதை காட்டிலும் வேறு உருப்படியாய் எதையாவது செய்யலாம்.

கார்த்தி

Anonymous said...

நான் கடவுளில் சொன்னது போல, பொது கழிப்பறையில் போய், நல்லா வித விதமாக அள்ளி திங்கலாமே !!!

charmlee said...

சாக்கடை அரசியல் வாதிகள் மட்டும் ஒழிந்தால் போதுமானது.


ஜனநாயகம் ஒழியவேண்டியதில்லை

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இது என்ன உலகம் நு எனக்கு புரியல... அட போங்கயா...

Anonymous said...

அண்ணன் பிரேம்ஸ்க்கு உள்துறை, வெளித்துறை எல்லாம் கொடுக்க எல்லாம் வல்ல முனாகணாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

Now that Poongothai has become minister for IT ( in TN) next we can expect her to speak to CBI director requesting for lighter punishment for Satyam Chief RAju. our CM is really great. This is a victory for Kanimozhi and her Mother and a set back for stalin posted by - ravi chennai

Dr.P.Kandaswamy said...

நல்ல செய்தி.
ப.கந்தசாமி

ப.கந்தசாமி said...

நல்ல செய்தி
ப.கந்தசாமி

enpaarvaiyil said...

ஏதாவது உருப்படியான செய்தியாக போட்டால் நல்லது.
யார் மந்திரி பதவியில் இருந்தால் என்ன ? யார் போனால் என்ன?
இதையெல்லாம் மறக்கத்தான் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

Anonymous said...

ஆலிவர் ரோட்டு அரசியும் இளவரசியும் போட்ட போடு தாங்காம ஐயா ஆஸ்பத்திரியில போய் சரண்டர் ஆயிருக்காரு. எங்க ஜாதி பொம்பளைய மந்திரியா போடலன்னா நடக்கறதே வேற என்று மிரட்டல் வந்த பின்னால் மந்திரியாக்காமல் இருக்க முடியுமா? ஊழல் செய்தால் என்ன ஏன் கொலையே செய்தால்தான் என்ன, நீங்களா போய் ஆலிவர் ரோட்டு வீட்டில அடி வாஙக்ப் போறீங்க ? மூன்று பேர்களை உயிரோடு எரித்துக் கொன்ற கொலைகாரன் நாளைக்கு முதல்வர் ஆகும் பொழுது என்ன செய்வீர்கள்? அடப் போங்கையா? இவனுங்கதான் மானம் மரியாதை சுய மரியாதை புண்ணாக்கு எல்லாம் வாங்கிக் கொடுத்தான் என்று நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டில ஒரு 30 சதவிகித முட்டாள் மூர்க்க ஜனம் ஓட்டுப் போட்டுத் திரியும் வரை இப்படி காட்டாட்ச்சியும் பேய் ஆட்சியும்தான் நடக்கும் இஷ்டம் இருந்தால் தமிழ்நாட்டில் இருங்கள் இல்லா விட்டால் தீக்குளித்துச் செத்துப் போங்கள்.

வன்முறையை மட்டுமே அறிந்த வக்கீல்கள்

ஊழலை மட்டுமே அறிந்த கட்சிக்காரர்கள்

ஜாதி வெறி படைத்த மக்கள்கள்

பிரிவினைவாதம் பேசும் அரசியல் கட்சிகள்

நாடு எப்படி உருப்படும்? சுனாமி வந்து ஒட்டு மொத்தமா அழிக்கட்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமா இவனுங்க கிட்ட சித்திரவதை பட்டு சாவதற்கு அது எவ்வளவோ மேல்

Kots said...

அப்போ ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் N.K.P.P.ராஜாவிற்கும் மந்திரி பதவி மீண்டும் கிடைக்கும் போல

Kamal said...

as it a apparaisal time....she got the performance hike from MLA to MInister :))))))))

கொடும்பாவி-Kodumpavi said...

ஒரு பெண் அமைச்சர் ஆவதையும், ஊழல் செய்வதையும், ஊழல் செய்ததை தடுக்க, மறைக்க நினைப்பதையும் இந்த உலகம் ஏன் கேள்வி கேட்கிறது.? முன்னாள் முதலமைச்சர்கள் கூட ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்து அதன் பின் 5 வருடம் ‘நல்லாட்சி' செய்யவில்லையா? மக்களின் மறதிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.. ஆண்கள் மட்டுமே ஊழல் செய்யலாம் என்ற போக்கை மாற்றி 'புரட்சி' செய்யும் பெண்களை ஊக்குவிக்க கற்று கொள்ள வேண்டும். பெண்ணீயம் பேசுபவர்கள் மௌனிப்பது ஏன்? ஆணாதிக்க போக்குதானே?
அறுபது ஆயிரம் கோடி ஆறிப்போய்விட்டது..
ஆட்சி இருக்கப் போவது ஆறு வாரம்..
அதற்குள் அமைச்சர் மாற்றம்..
ஜனநாயகத்தின் அர்த்ததை நன்கு உணர்ந்தவர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.

Anonymous said...

Arasiyalla idhellam sagajham appu