பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 24, 2009

ம்ஹும் பேசாதே!

”இலங்கை‌த் த‌மிழ‌ர் பிரச்சினைக்காகப் போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது” என்று கருணாநிதி சில வாரம் முன்பு புலம்பினார்.

சரியாக சட்டக்கல்லூரி மாணவர்களின் ரவுடியிஸம் முடிந்து 100-வது நாளில் உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் போலீஸ் அடிதடி, கல்வீச்சு, தடியடி, போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு என்று அரங்கேறியிருக்கிறது. சினிமாவுக்கு மட்டும்தான் 100வது நாள் விழாக் கொண்டாட்டம் நடத்த வேண்டுமா ?

சட்டத்தைப் படித்தவர்கள் சட்டதை மதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன? (வரலாறு படித்தவர்கள் எல்லாம் வரலாறு படைக்கிறார்களா? கணக்குப் படித்தவர்கள் எல்லாம் கணக்கு சரியாகக் காட்டுகிறார்களா?) அதனால் இவர்கள் சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு, ரவுடிகளும் மூக்கில் விரலைவைக்கும் அளவிற்கு ரவுடியிஸத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

பஸ்ஸைக் கடத்துகிறார்கள், கோர்ட்டைப் புறக்கணிக்கிறார்கள், பந்த் அன்று கடையை திறந்தவரை போட்டு அடிக்கிறார்கள், சு.சாமி மீது நீதிபதி முன்னாலேயே அழுகிய முட்டையை வீசுகிறார்கள், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கோஷம் போடுகிறார்கள், ரயிலை நிறுத்துகிறார்கள், இவர்கள் எல்லாம் Professionals; ரவுடியிஸத்தில் Professionals.

ஜனவரி முதல் தேதியிலிருந்து இன்றுவரை ஒன்பதே நாட்கள் தான் கோர்ட் நடந்திருக்கிறது. இத்தனைக்கும் 2003 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வக்கீல்கள் ஸ்டரைக் செய்ய கூடாது என்று சொல்லியுள்ளது. வாயில் விரலை வைத்துக்கொண்டு அரசு கையாலாகாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

வக்கீல் இனத்துக்கே இழுக்கைச் சேர்க்குமாறு போராட்டம் நடத்தும் இந்த வக்கீல்கள் எல்லாம் விடுதலைப் புலிகளின் கைக்கூலிகள். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களே அசிங்கமான மொழியில் திட்டுவதும், ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்துவதும், தேசியக் கொடியை அகற்றிவிட்டு கருப்பு கொடியை வைப்பதும்..., இவர்கள் செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை.

தமிழ் நாட்டில் அமைதியாக மின்வெட்டை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை, மனிதச் சங்கலி, ராஜினாமா, உண்ணா விரதம், சட்டசபையில் இறுதித் தீர்மாணம் என்று பல காமெடிகளை நிகழ்த்திய கருணாநிதியும், தீக்குளிப்பு, பஸ் எரிப்பு போன்ற ரவுடித்தனத்தை ஊக்குவித்து தமிழக மக்களின் அமைதியைக் குலைக்க நினைக்கும் திருமா, வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற தேச துரோகிகளும், கொட்டாவி விடக் கூட சோனியாவின் பர்மிஷனை கேட்கும் காங்கிரஸ் கட்சிக்கார்களும், தமிழுணர்வைத் தூண்டுவதான போர்வையில் அனைத்து வன்முறைகளையும் தூண்டும் தமிழ் பத்திரிகைத் துறையும் தான் இதற்குக் காரணம்.

யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஊர்வலமாகச் சென்று, தமிழ் மக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளை வற்புறுத்தியிருக்கின்றனர் என்ற செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் வரவில்லை.

இந்தச் சமயத்தில் பிரணாப் மற்றும் பா.சிதம்பரம் போன்றவர்கள் விடுதலை புலிகள் ஆயுதத்தை கீழே போடுவதானால் மட்டுமே போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தலாம் என்று மத்திய அரசின் நிலையை தைரியமாகச் சொன்னதற்காகவே பாராட்ட வேண்டும்.

கலவரத்தில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு என்று போலீஸ் சொல்லியிருக்கிறது. இவர்களைக் கண்டபடி சுட வேண்டும். பொதுஜனத்துக்கு சராசரி வாழ்க்கையில் அமைதியான வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த நினைக்கும் அரசு, ரவுடியிஸத்தை கடுமையான நடவடிக்கையிம் மூலமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

போலீஸ் எப்படி திருப்பி கல் எறியலாம் ? அவர்கள் எப்படி ரவுடி போல செயல்படலாம் ? என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். ஜெயா டிவி இந்த காட்சியையே தங்களின் செய்திகளில் ஏதோ போலீஸ் பெரிய தப்பு செய்துவிட்டது மாதிரி ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சாமி படத்தில் ரவுடிகள் ஆயுதங்களுடன் கலவரம் செய்ய வரும் காட்சியில் விக்ரம் போலீஸ் ஜீப்பிலிருந்து அவர்களை போலவே ஆயுதங்களை எடுத்து அடிக்க தயாராகி ”நான் போலீஸ் இல்லை பொறுக்கி” என்று சொல்லுவார். அப்போது எல்லாம் நாம் கைகொட்டி ரசித்துவிட்டு நிஜவாழ்க்கையில் நடக்கும் போது ஏதோ பெரிய குற்றம் போல அதை விமர்சனம் செய்வது தவறு. போலீஸை அசிங்கமாக பேசிவிட்டு, அவர்கள் மீது கல்லெரிந்தால் பதிலுக்கு அவர்களும் அதை செய்தார்கள். ஷாக் டிரிட்மெண்ட் சில சமயம் தேவைப்படுகிறது என்ன செய்ய ?


ஆஸ்பத்திரியில் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். போலீஸை தங்கள் கடமையை செய்யச் சொல்லிவிட்டு, இவர் தற்பொழுது இருக்க வேண்டியது ஒரே விரதம் -- மௌன விரதம்.32 Comments:

Anonymous said...

சட்டக் கல்லூரி மாணவர்கள் அதற்குள்ளாகவா வக்கீல் ஆகி விட்டார்கள்? அல்லது அவர்கள் வக்கீல்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்து விட்டார்களா?
நெத்தியடி என்பது இது தானா?
--டில்லி பல்லி

கொடும்பாவி-Kodumpavi said...

//இவர் தற்பொழுது இருக்க வேண்டியது ஒரே விரதம் -- மௌன விரதம்.
//

தினமணியின் தலையங்கத்தையும் படியுங்க. எல்லாரும் உண்ணாவிரதம்ன்னு சொன்னா இவரு மட்டும் சும்மா இருக்க முடியுமா? இவரும் தன் பங்குக்கு சொல்லிட்டாரு. இதுல என்ன தப்பு?
-கொடும்பாவி

Anonymous said...

சன் பிக்சர்ஸ் 'தீ' படத்தின் டிரெய்லர் வசனங்களை கவனித்தீர்களா ? இந்த வக்கீல்/போலீஸ் மோதல் பற்றி வசனங்களும் தீ பறக்கிறது. எப்படி சென்சார் செய்தார்கள் ?

Anonymous said...

பஸ்ஸைக் கடத்துகிறார்கள், கோர்ட்டைப் புறக்கணிக்கிறார்கள், பந்த் அன்று கடையை திறந்தவரை போட்டு அடிக்கிறார்கள், சு.சாமி மீது நீதிபதி முன்னாலேயே அழுகிய முட்டையை வீசுகிறார்கள், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கோஷம் போடுகிறார்கள், ரயிலை நிறுத்துகிறார்கள், இவர்கள் எல்லாம் Professionals; ரவுடியிஸத்தில் Professionals

"Excellent Post"

Anonymous said...

Absolutely correct!!! Advocates think they do not come under the law. There was no history of police went on strike or throwing egg on some one. The court and it's duties are controlled by advocates. If they decide the court will work otherwise it will not. This needs to be changed. A massive law change required to control the advocates.

Anonymous said...

Very well written!! I wish all the editors of various Tamil magazines would take a cue from your article and be honest.

Anonymous said...

//ஆஸ்பத்திரியில் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.//

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கருணாநிதியை டயட்டில் இருக்க சொல்லி இருப்பார்கள் ..
இவர் அதை வக்கீல்கள் மற்றும் போலீஸ் ஒற்றுமை ஏற்பட உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று வழக்கம் போல் அறிக்கை விட்டு இருக்கிறார் ....

அறிக்கை விடுவது பற்றி இவருக்கு என்ன சொல்லியா குடுக்க வேண்டும் ???

அப்பாவி தமிழன் said...

ஒரு காலத்தில் வக்கீல்கள் என்றால் ஒரு மதிப்பு இருந்தது . நமது சுதந்திரத்துக்கு போராட்டத்தில் பெரும்பான்மையோர் வக்கீல்காலாக இருந்தனர்.. ஆனால் இன்று வக்கீல்கள் செய்யும் காரியங்கள் இந்திய நாட்டையே அவமதிபபதாகும் . இந்திய சத்தத்தை மதிக்ாத இவர்களா வக்கீல்கள் .. என்ன கொடுமை சார் இது..

This is my first post in tamil so i appologise for any mistakes in the comment

திவா said...

நம்பிக்கையே போயிட்டு இருக்குப்பா!
தப்பு செய்யிறவன் என்னவோ தான்தான் பாதிச்சா மாதிரி பிலிம் காட்டறான், எல்லாரும் என்னமோ இவங்களையே நம்பிகிட்டு.
இதுலேயும் ஒரு நடவடிக்கையும் இல்லைனா இனி போலீஸை ஒரு குழந்தை கூட மதிக்காது.
:-((
வக்கீலுங்க பரவாயில்லை. முன்னேயெல்லாம் திங்கள் கிழமை ஸ்கூலுக்கு போக அடம் பிடிக்கிற குழந்தையாட்டம் எதுக்கெடுத்தாலும் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க. இப்ப தேரியாச்சு. கடவுளே காப்பாத்து!

அப்பாவி தமிழன் said...

தினமணியில் இன்று : " தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால் பதவியை துறக்க விருப்பம்மில்லை " என்று முதல்வர் கூறியுள்ளார்..

- அதான் பார்த்தோமே கோர்ட்‌ல் .. நீங்க தமிழர்களை காப்பாற்றும் லட்சனத்தை... .. சும்மா காமெடீ பண்ணததீங்க அய்யா ..

அமுதப்ரியன் said...

சன் பிக்சர்ஸ் 'தீ' படத்தின் டிரெய்லர் வசனங்களை கவனித்தீர்களா ? இந்த வக்கீல்/போலீஸ் மோதல் பற்றி வசனங்களும் தீ பறக்கிறது. எப்படி சென்சார் செய்தார்கள் ?

திருத்தம்: சென்சார் செய்த பின் தான் கலவரம் நடந்தது.....
-------------------------
கலவர விளைவுகள்:
[1] இதற்காகவே காத்திருந்த மாதிரி ஜெ. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுகோள்.
[2] திமுக, காங்கிரஸைத் தவிர்த்து அனைத்து கட்சிகளும் வக்கீல்கள் பக்கம்.
[3] காசு கொடுக்காமலே அனைத்து மக்களும் கலவர காட்சியை கண்டு இரசித்தது.
மேலும் பல....

பொறுமை இழந்தவன் said...

இட்லிவடை, அட்டகாசமான பதிவு.

"தமிழ் நாட்டில் அமைதியாக மின்வெட்டை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை, மனிதச் சங்கலி, ராஜினாமா, உண்ணா விரதம், சட்டசபையில் இறுதித் தீர்மாணம் என்று பல காமெடிகளை நிகழ்த்திய கருணாநிதியும், தீக்குளிப்பு, பஸ் எரிப்பு போன்ற ரவுடித்தனத்தை ஊக்குவித்து தமிழக மக்களின் அமைதியைக் குலைக்க நினைக்கும் திருமா, வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற தேச துரோகிகளும், கொட்டாவி விடக் கூட சோனியாவின் பர்மிஷனை கேட்கும் காங்கிரஸ் கட்சிக்கார்களும், தமிழுணர்வைத் தூண்டுவதான போர்வையில் அனைத்து வன்முறைகளையும் தூண்டும் தமிழ் பத்திரிகைத் துறையும் தான் இதற்குக் காரணம்".

----------------------------------
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

மக்கள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

விரைவில் அனைவருக்கும், வைக்க வேண்டிய இடத்தில் சுண்ணாம்பு டப்பா டப்பாவாக திணிக்கப்படும். அப்போது இவர்களின் கதறல் ஒலி, எங்கெங்கும் எதிரொலிக்கும்.

மக்களே, சரியான நேரம் பார்த்து, வையுங்கள் ஆப்பு.

Suja said...

Anonymous said "Very well written!! I wish all the editors of various Tamil magazines would take a cue from your article and be honest."

I wish for that too,I also wish for an honest Tamil news channel( It's not going to happen)

I agree with you on everything other than the last para. I think both the lawyers and the police are guilty.(I didn't like the film Samy either.)

Anonymous said...

யாரோ எழுதிய கவிதை

நீ உண்ணாமல் இருந்தால்
சட்டியில் சாப்பாடு குறையாது

நீ உண்டு கொழுத்தால்
எங்களுக்கு போட்டு மாளாது

நீ திறந்து விட்டது டாஸ்மாக்
பசங்க வாங்காம விட்டது பாஸ்மார்க்

கள்வர்கள் கவிதை எழுதுவார்கள்
டகால்டிகள் டாஸ்மாக் அடிப்பார்கள்

எங்கள் சங்கத்தமிழே - நீங்கள்
எங்களுக்கு ஊதுவது சங்கே

எங்கள் சங்கத்தின் முதல்முகமே
நீங்கள் அனைவருக்கும் அறிமுகமே

இளமையின் முதுமையே
முதுமையின் இளமையே

முத்தமிழ் வித்தகரே - எங்கள்
தமிழ்நாட்டை வித்தவரே

பொறாமையின் பிறப்பிடமே
வஞ்சகத்தின் இருப்பிடமே

தலைவா கொஞ்சம் அடக்கி வாசி
பேசுவதற்கு முன் சிறிது யோசி

Anonymous said...

IV's article has a punch to it without loosing the balance, awesome job.

I liked the kavithai too - dhool pa.

What happened in the court is just a trailer - They are saving the rest for the main movie. hint-hint: Title of the movie is going to be - 'Andru Tamilnadu - Indru Sudugadu'.

Intha tharuthaligalal ennudan tamil nattin manamum thalai-kunigarathu.

Anonymous said...

குண்டுச்சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டாதேயும்.. எழுதும் போது கொஞ்சம் உலக அறிவையும் சேத்துக்க..முட்டாள் பயல் என்பதை எழுதியா.. காட்டுவீர்..
ஈழத்தின் நிலையை எழுத உமக்கு யோக்கியதையே இல்லை

விஜி சுந்தரராஜன் said...

நான் கடவுள் 7/5/10 ???
did u mean 7.5 ??

Anonymous said...

\\"தமிழ் நாட்டில் அமைதியாக மின்வெட்டை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை//
நெத்தியடிங்கண்ணா...

Krish said...

இந்த வக்கீல்களை எல்லாம் ஏன் ஸ்ரீ லங்கா அனுப்பி போராட சொல்லக் கூடாது?
திரு.வைக்கோ, திருமா, ராமதாசு, இவர்கள் தலைமையில் மூன்று படைகளை அனுப்பி சண்டை இட சொல்லலாமே? கட்சிக் காரர்கள், வக்கீல்கள், இட்லிவடை மாதிரி யாராவது இப்படி பதிவு எழுதின "தமிழின துரோகி" என்று பின்னோட்டம் இடும் பதிவு நண்பர்கள், ஓர்குட் ல வந்து சண்டை போடும் நண்பர்கள், இவங்க எல்லாம் போராட பின்னால வருவாங்க!

Anonymous said...

குண்டுச்சட்டிக்குள் இருந்து குதிரை ஓட்டாதேயும்.. எழுதும் போது கொஞ்சம் உலக அறிவையும் சேத்துக்க..முட்டாள் பயல் என்பதை எழுதியா.. காட்டுவீர்..
ஈழத்தின் நிலையை எழுத உமக்கு யோக்கியதையே இல்லை

Repeatuuuuuuuuu

Arivu ketta IdlyVadiku ku
elutha matter kedaikalana muditu summa irukalam ippadi olaruvathuku pathila

ஸ்ரீனி said...

//தினமணியின் தலையங்கத்தையும் படியுங்க. எல்லாரும் உண்ணாவிரதம்ன்னு சொன்னா இவரு மட்டும் சும்மா இருக்க முடியுமா? இவரும் தன் பங்குக்கு சொல்லிட்டாரு. இதுல என்ன தப்பு?//

அதானே? அது மட்டும் இல்லை..கருணநிதி என்ன காந்தி மாதிரி உண்ணாவிரதமா இருப்பாரு..அவரு கச்சியோட கட்டுக்கோப்புக் கலையாம, காலை உணவை வெட்டிட்டு, மத்தியான சாப்பாடு சாப்புடறதுக்கும் நடுவுல தானே உண்ணாவிரதம் இருப்பாரு..

இப்படி தலீவரு சொல்றதையெல்லாம் தப்பு சொன்னா எப்டி...

Chithu said...

U have just expressed wats in the minds of law abiding citizens. Keep up the good work. Lets c how far these useless lawyers go.

Vedantha Desika Dasan said...

Each and every word of every sentence is good. You have reflected the minds of all the Tamil Nadu (except few "so-called" Tamil Ina Thalaivargal)

Anonymous said...

இப்படி தலீவரு சொல்றதையெல்லாம் தப்பு சொன்னா எப்டி.........கரீட்டுப

Anonymous said...

The conduct of TN lawyers is despicable and lowered the prestige of this noble profession. Your post is honest and straight forward in that respect.

However, TN police have also not acted professionally.Your suggestion that CM should keep quite so that Policeraj can be unleashed is also not acceptable. Sensationalism is the curse of Tamil/Indian media to which you are also not exempt.

Anonymous said...

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கலைமாமணியாமே ? அவருக்கு எதுக்குங்க ? தனுஷ் கூட குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதற்கும், யாத்ராவுக்கு பப்பு மம்மு ஊட்டுவதற்குமா ?

என்ன தமிழக அரசோ ? யார் இந்த செலக்சன் கமிட்டி தலைவரோ ?

சங்கு மாமா said...

//Anonymous said...
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு கலைமாமணியாமே ? அவருக்கு எதுக்குங்க ? தனுஷ் கூட குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதற்கும், யாத்ராவுக்கு பப்பு மம்மு ஊட்டுவதற்குமா ?//

அப்படி போடு...ங்கொய்யாலே....அனானி.. பப்பு மம்மு கடயுரவளுக்கும், மொண்ணை மூஞ்சிகளுக்கும் கலை மாமணி...சரோஜா தேவிக்கு இப்ப தான் குடுக்குராங்களாம் ...எடு செருப்பை.. திணி..இந்த கமிட்டி வாயில..

நாரத முனி said...

சுகன்யமா இருந்த ஒரு திமுக (முன்னாள் அதிமுக) எம் எல் எ ராஜினாமா பண்ணிடாராமே???

Anonymous said...

ஜல்லி அண்ணா ஜெகத்ரட்சகன் நம்ம "தலை"க்கு எழுதிய ஜல்லி கவிதை / அறிக்கை. அண்ணன் இந்த கவிதை எழுதினதுக்கு காரணம் "தலை" உண்ணாவிரதம் இருப்பேன்னு சொன்னதுதான். படிங்க. படிச்சுட்டு, சிரிங்க...... எல்லா வழியாகவும் .....
----------------------------------
ஒரு மாதமாக எங்கள் இதயம் ஓரிருமுறை துடிக்கவும் தவறுகிறது! பதைப்பு அலை எங்களைப் பரிதவிக்க வைக்கிறது!

எழுந்து வந்து எங்களைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள்? தம்பி என்ற அழைப்பில் என்னிடம் தாயன்பை காட்டிய தத்துவமே!

வருந்துவதா - வாடுவதா!

மகரந்தப் புன்னகையால் மற்றவர்களை வாழவைத்து மன்னிக்கும் கருணையினால் மாற்றார்க்கும் வாழ்வளித்த நடமாடும் பகுத்தறிவு நலிவடைந்து வருந்துவதா! நல்லோர்கள் உள்ளமெல்லாம் வேதனையில் வாடுவதா!

இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பதே நீங்கள்தான், சங்கத் தமிழ் இன்று மருத்துவ மனையில்! தவிக்கும் என் உள்ளமோ உங்கள் நினைவில்!

தலையணையில் சாய்ந்தபடியே உன் தமிழ் ஆணைகள் தங்குதடையில்லாமல் அன்றாடம் ஆட்சியை நடத்துகின்றன. சூது மதியினர் சுரண்டல் வாழ்வைச் சொந்த வாழ்வாக்கிக் கொண்டவர்கள், அந்தி வந்தால் ஆறலை கள்வர்கள் ஆட்டம் போடுவார்கள்!

வயதில் என்ன போராட்டம்

இந்த நேரத்தில் இது என்ன தாங்க முடியாத இடி! நீ உண்ணாமல் இருந்தால் உலகம் தாங்காது! எந்த வயதில் என்ன போராட்டம்! இருக்கின்ற நாங்கள் உன்னால்தான் உண்ணுகிறோம்! ஊர் நலத்தை எண்ணுகிறோம். எல்லாம் நலமாகும்! எங்கள் பணி உரமாகும்.

மன்றாடி வேண்டுகிறோம். மாமன்னன் உண்ணும் கவளம்தான் உங்கள் உயிர்மூச்சைத் தளிர்க்க வைக்கும்! பொங்கு தமிழ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்! மருத்துவ மனை உன்னை மகிழ்வோடு அனுப்பும் நாள், எங்கள் மனவயல்களில் இன்பமழை பொழியும் நன்னாள்

enpaarvaiyil said...

தமிழில் ஒரு பழமொழி உண்டு
கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

தினம் தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்ப்படையினரால் சுட்டு கொல்லப்படுவதும் படுகாயப்படுத்த படுவதும் சிறை பிடிக்கப்படுவதும்,அவர்களின் படகுகள் சேதப்படுத்த படுவதும் அவர்கள் உடைமைகள் கொள்ளையடிக்கபடுவதும் தடுக்கப்பட நடவடிக்கை எடுக்க எந்த ஆட்சிக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் துப்பில்லை.இவர்கள் இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த வெற்று கூச்சல்கள் போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இவர்கள் முதலில் இங்கிருக்கும் தமிழ் மீனவர்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யட்டும். பிறகு ஈழ தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகளின் துணை கொண்டு முயற்சி செய்தால் பலன். கிடைக்கும்.

Anonymous said...

இந்த வக்கீல்களும் போலீஸ்களும் நாட்டுக்கு நிஜமாகவே ஏதேனும் நல்லது செய்யணும் என்று நினைத்தால் அவர்கள் தங்கள் சண்டையை இது போலவே தொடர்ந்து நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுக்கு முன்னால நிஜமாகவே சாகும் வரை உண்ணாவிரதமா அல்லது திரைக்குப் பின்னால ஆப்பிள் ஜூசா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்

வாழவந்தான் said...

//இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பதே நீங்கள்தான்//

யோவ் தலீவரே ரெண்டு அவரு ஒக்காத்திவெச்சு பாராட்டுவிழா நடத்தினதுல முதுகுவலி வந்துதான் ஆஸ்பத்ரி போக ஆரம்பிச்சாரு. சும்மா புள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிகிட்டு. தூ