பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 03, 2009

தாம்பரம் வந்த இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்திற்கு வந்த இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.


தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இலங்கை விமானப்படை வீரர்கள் சிலர் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி கூடத்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிவு வழங்குமாறும் தாம்பரம் விமானப்படையினர் சேலையூர் போலீஸ் நிலையத்தை கேட்டுக்கொண்ட செய்தி முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவரது அறிவுரையின்படி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மத்திய அரசின் பாதுகாப்பு துறையுடன் தொடர்புகொண்டு, அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அந்த இலங்கை விமானப்படை வீரர்களை தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்ப உத்தரவிட்டதுடன் அந்த செய்தியையும் முதல்-அமைச்சருக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

இது என்ன கூத்து ?


18 Comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லா படியுங்க. அவங்க தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இருக்காங்க. ஆனா எங்க? டெல்லியில் போய் இதே பயிற்சி எடுக்கறாங்களா?

cool said...

I think this incident is

Story,
screenplay,
dialogue,
direction,
by
Mr.M.karunathini

Balaji Manoharan said...

I think this incident is

Story,
screenplay,
dialogue,
direction,
by
Mr.M.karunathini

Anonymous said...

dei pannadai... onakku ellame koothu thaan..

சங்கு மாமா said...

எரியுற வீட்டுக்குள்ளே உட்கார்ந்து கேசரி தின்ன பார்க்கிறார் கலைஞர்.... கிறுக்கு பிடிச்ச குரங்கு போல சேட்டை தான் இது...

டன்மானடமிழன said...

70 வருடம் தமிழுக்கு
சேவை செய்தார்
தமிழ் மொழி டமிழனாது

இப்போதுதான்
தமிழினத்திற்கு சேவை
செய்ய துவங்கியுள்ளார்

இனி தமிழனின்
தமிழினத்தின்
தலையெழுத்தை பார்க்கபோகிறீர்கள்

கலைஞர் வாழ்க கலைஞர் வாழ்க
மஞ்சகலர் துண்டு போட்ட கலைஞர் வாழ்க

அவரின்
அரைவேக்காடு தொண்டர்கள் வாழ்க

R.Gopi said...

வந்தாரை வரவேற்கும் நல்லெண்ணம் எனக்கு அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் சொல்லி கொடுத்தது. நான் அதைத்தான் செய்தேன். ஆனால், என் மேல் காழ்ப்பு கொண்ட ஊடகங்கள் அதை திரித்து எழுதி விட்டன.

வந்தார்களாம், நான் அவர்களை விரட்டினேனாம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் ஊடக புரட்டு. இது போன்ற புரட்டுகளை செய்யும் ஒரே ஏடு கூட நானல்லவோ உரிமை கொண்டுள்ளேன் (முரசொலி). இதில் என்னோடு போட்டி ஏன்??

கப்பித்தனத்தின் ஏகபோக உரிமை இனி, எனக்கே எனக்கு என்பது இல்லையா?? இது நீதியா, தர்மமா??

வந்தாரை வரவேற்போம், கைநிறைய பொருளோடு வந்தால்
அவர்களை விரட்டி அடிப்போம், கை வெறுமையாக இருந்தால்
இது வாழும் வள்ளுவன் வாக்கு

kallu odikaravan said...

nalla kelapuraingaya peethiya

அமுதப்ரியன் said...

இருதலைக் கொள்ளி எரும்பாகத் துடிக்கிறார்...மைனாரிட்டி அரசின் முதல்வர்...

-- அமுதப்ரியன்

Kots said...

கலைஞர் ஏதேதோ drama பண்ணி மக்களை கவர பார்க்கிறார் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யும் வரை அவரின் drama எதுவும் மக்களிடம் எடுபடாது . எதுக்கு கவலை படுகிறார் கலைஞர் , திருமங்கலம் ல ஒரு ஓட்டுக்கு ஐந்து ஆயிரம் கொடுத்த மாதிரி பாராளுமன்ற தேர்தலில் பத்தாயிரம் ஒரு ஓட்டுக்கு கொடுத்திட்டால் போகுது அதுக்கு தான் அண்ணன் அழகிரி இருக்காரே நீங்க எதுக்கு தேவை இல்லாம செயற்குழு பொதுகுழு எல்லாம் கூட்டிகிட்டு பேசாம ரெஸ்ட் எடுங்க

Anonymous said...

இப்போதாவது இந்திய அரசு இலங்கைக்கு உதவுவது தனக்குத் தெரிந்தே நடக்கிறது என ஒப்புக் கொள்வாரா ?

அறிவிலி said...

ஈழத்தமிழர்களை, ஏன் தமிழ் கூறும் நல்லுலகத்தையே காப்பாற்றி விட்டார்.

அறிவிலி said...

ஈழத்தமிழர்களை, ஏன் தமிழ் கூறும் நல்லுலகத்தையே காப்பாற்றி விட்டார்.

Anonymous said...

this was done for the safety of the srilankan armed forces.it is simple to understand that their movements outside tambaram air force station will be closely watched by anti social elements(i mean vck,pmk etc) and if they are attacked,it will become a big political and diplomatic issue..so why rake up unwanted controversy....good job CM

Anonymous said...

Training of men and officers from underdeveloped countries by Indian military services has been happening for decades. It is only a mockery by politicians.
-An Ex serviceman from Indian Air Force

இலவசக்கொத்தனார் said...

http://www.nankooram.com/srilanka-airforce-in-bankaloru

இப்போ நான் முதலில் போட்ட பின்னூட்டத்தைப் படியுங்க.

யாரு யாரை முட்டாளாக்கப் பார்க்கறாங்க? ஒரே கன்பியூசனா இருக்குப்பா!

palz said...

நண்பர்களே! தமிழ் ஆதரவு கருத்துக்களை நமது அண்டை(Telugu, Malayalam, Kannada) மொழிகளிலும் வெளியிடலாமே! இது ஒருவேளை கை கொடுக்கலாம்.

observer said...

நன்றி நண்பரே