பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 18, 2009

ரஜினியை மோடியாக்க முயல்கிறேன்-சோ

நரேந்திர மோடியின் பொதுமேடை பிரச்சார தொகுப்பை அலையன்ஸ் நிறுவனம் 'கல்வியே கற்பகத் தரு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதற்கான விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது. அதில் சோவின் பேச்சு...இங்கே பேசியவர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றார். அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன். இது தான் பெட்டராக இருக்கும். மோடியின் சாதனைகள் குஜராத்துடன் நின்றுவிடக் கூடாது. தேசிய அளவில் வளர வேண்டும், வளரும்.

இப்போது பாரதீய ஜனதா கட்சிக்கு கூட இலங்கை தமிழர்கள் மீது காதல் வந்திருக்கிறது. விடுதலைப்புலிகள் மீது நடத்தி வரும் போரை, விடுதலை புலிகள் வாழ்ந்தாலும் பரவாயில்லை, போரை நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்திருக்கிறது. இலங்கை அரசு அங்குள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதை எப்படி நிறுத்தச் சொல்ல முடியும்.

(சோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கோஷ்டியினர் தமிழில் பேசுங்கள் என்று தொடர்ந்து கூச்சல் போட்டனர். சோ பேச்சை நிறுத்திவிட்டு, ``என்ன மிரட்டுகிறீர்களா, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், இந்த மாதிரியான ஒரு வெறித்தனத்தை கிளப்பிவிடத் தான் இது உதவும்'' என்றார்.)

காஷ்மீரில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறினால் ஏற்க முடியுமா? எனது இந்த கருத்தை எந்த மேடையிலும் கூற எனக்கு உரிமை இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் என்னை பேசச் சொன்னாலும் இந்த கருத்தை தைரியமாக வலியுறுத்துவேன். இந்த பிரச்சினையில் தெளிவான முடிவை எடுத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா தான்.


போஸ்டரில் ஒபாமாவை ரஜினியாக்க முயற்சி செய்கிறார்கள். சோ ரஜினியை மோடியாக்க முயற்சி செய்கிறார். ரஜினியை ரஜினியாக இருக்க விடுங்கள்

5 Comments:

மடல்காரன்_MadalKaran said...

//ரஜினியை ரஜினியாக இருக்கவிடுங்கள்//

ஒரு வரி சொன்னாலும் சரியா சொன்னீங்க.

அன்புடன், கி.பாலு

R.Gopi said...

போஸ்டரில் ஒபாமாவை ரஜினியாக்க முயற்சி செய்கிறார்கள். சோ ரஜினியை மோடியாக்க முயற்சி செய்கிறார். ரஜினியை ரஜினியாக இருக்க விடுங்கள்.
----------------------------------
தல

இதே மாதிரி ஒரு போஸ்டர்ல வில்லு விஜய்-ய தென்னாட்டின் ஒபாமா என்று போட்டு இருந்ததை விடவா??

Inba said...

AcheCHO..

Cho becomes another Su.Samy now...

arun kumar said...

rajni is a confused man.he spoke politics to earn money only.rajni should not came into politics

Anonymous said...

//ரஜினியை ரஜினியாக இருக்கவிடுங்கள்

Rajini Rajiniaga irunthal aathu nattukum avarukum nallathu. As Arun mentioned he is a confused, coward and selfish man.