பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 03, 2009

பந்த்திற்கு நோ தடை - உச்சநீதிமன்றம்

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள பந்த்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இது மோசமான முன் உதாரணம்

26 Comments:

இலவசக்கொத்தனார் said...

இவங்களோ முன்னாடி பந்த் நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என தீர்ப்பளித்தார்கள் அல்லவா?

Narayanan said...

Idly, i think it is fine to conduct Bandhs. Supreme court will object if Govt itself conducts the bandh :)

அரவிந்தன் said...

//இது மோசமான முன் உதாரணம்//

முந்தைய காலங்களில் அரசாங்கமே பலமுறை பந்த நடத்தியதே இட்லி வடை அப்பொழுதெல்லாம் அது சரியான முன் உதாரணமா.?

இலவசக்கொத்தனார் said...

http://thatstamil.oneindia.in/news/2009/02/02/tn-we-are-holding-hartal-not-bandh-ramadoss.html

இது என்ன கொடுமை?

பாட்டாளி said...

உங்களுக்கு சாதகமா இருந்தா,நீதித்துறையை புகழ்வீர்கள்,எய்ம்ஸ் வேணுகோபால் விவகாரம் ,இட ஒதுக்கீடு விவகாரத்தில் இனித்த தீர்ப்பு இப்போது கசக்குதா .இது உணர்வு பூர்வ விஷயம் ,ஆரியர்களுக்கு புரியாது .இதுநாள் வரையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றால், “புலி என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள்” என்ற அபத்தமான அச்சம் தமிழக மக்களிடம் இருந்தது. ஆனால், இப்போது மக்கள் அந்தக் கட்டத்தைக் கடந்துவிட்டார்கள்.இந்த தீர்ப்பு தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி .

Anonymous said...

//இது மோசமான முன் உதாரணம்//

Civil disobedience is what Gandhi taught us and MLK & NM followed it successfully. அந்த உரிமையை எக்காரணம் கொண்டும் பறிக்கக்கூடாது. அந்த உரிமையை இந்த மாதிரி காரணங்களுக்குத்தான் பயன்படுத்தலாம் என்று வ்ரையறுப்பத்து உரிமையை பறிப்பதற்கு சமம்.

-முக

வலைஞன் said...

ஏன் இத்தனை குழப்பம்?

தடை,அரசாங்கம் பந்த் நடத்துவதற்குத்தான்
குடிமக்களுக்கு அல்ல

Balaji Manoharan said...

Mr.Idly....

Democracy has given rights to show our decent in Democratic way.Tell me, Then how should i show my feelings against an issue.Apart from that the reason behind this bandh is for good one.

திவா said...

வர வர கோர்ட் மேலே இருக்கிற நம்பிக்கையும் போய்கிட்டு இருக்கு.
இனிமே கடவுள் மட்டுமே நாட்டை காப்பாத்த முடியும்.,

Anonymous said...

Why not go on fasting, that is a better way to show the solidarity. Bandh will hurt the Economy and lot of peoples daily lives (eg: Auto drivers, daily coolies, etc..).

Bunch of political goondas and their followers shouldn't take the innocent daily coolies lives in their hands.

STOP THIS BANDH FOR EVER!!!!

IdlyVadai said...

பந்த நடத்துவது, பொது சொத்த்துக்கு சேதம் விளைவிப்பது எல்லாம் மக்களுக்கு இடையூறு தான்.

பந்த நடத்துவதால் ஒரு பயனும் இல்லை. அன்று கே.டிவி பார்ப்பதை தவிற.

Seetha said...

The hindu......4/2/09
PMK leader is trying to usurp DMK’s position: Karunanidhi..........

Recalling the fratricidal war in Sri Lanka, he said the freedom movement in Sri Lanka did not grow as one movement.

“If only it had grown as a unified, inclusive movement, by now they would have got what they yearn for – Tamil Eelam. The reason they did not get it is that they did not have unity. You have often heard me say. They waged a fratricidal war and hacked each other to death,” he said.


idlyvadai do you remember a guy called padmanabha and how he died????!!!!!


Also worth reading........

iNDIA AND SRI LANKA

India as a safe haven?
Pro-LTTE forces in the country are regrouping and strengthening themselves as the assassination of former Prime Minister Rajiv Gandhi has started fading away from public memory.

Volume 17 - Issue 26, Dec. 23, 2000 - Jan. 05, 2001
India's National Magazine
from the publishers of THE HINDU

Copyrights © 2000, Frontline. ,...


sadly anything said now will be misconstrued and deliberatley misunderstood.The sad plight of ordinary poor people of Jaffna has a long and complicated history, and as we all know history keeps coming back to bite us.
I am quoting the above referrences coz Mr.Mk has quoted history.But then for us it is convenient to address selective history that suits us ,right?

R.Gopi said...

இது பந்த் அல்ல - ஹர்த்தால் (மருத்துவர் கொய்யா).

இந்த பந்த் கண்டிப்பாக தேவைதான் - மருத்துவர் கொய்யா, குருமா, நெடுமாறன், வீரமணி. அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழையுங்கள் (அப்படின்னாலே கண்டிப்பாக பத்து, இருபது பேருந்துகளை கொளுத்தணும்னு அர்த்தம்).

பந்த் அல்லது ஹர்த்தால் - இதற்கு அரசு அனுமதி இல்லை. வேண்டுமானால் அவர்கள் நடத்தி கொள்ளட்டும், அதில் அரசு தலையிடாது. பேருந்துகளை கொளுத்தினால், பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம், எரிந்து முடிந்தவுடன், காவலர்களை வைத்து, அணைத்துவிடுவோம். நாட்டு மக்களும் கிடைக்கும் இந்த விடுமுறையை நல்ல முறையில் (மானாட மயிலாட போன்ற உபயோகமான நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்) - மஞ்சள் கவி மு.க.

ஹரன்பிரசன்னா said...

இது மோசமான முன்னுதாரணமெல்லாம் இல்லை. எந்த ஒரு அமைப்பிற்கும், கட்சிக்கும் அமைதியான முறையில் கடையடைப்பு, பந்திற்கு அழைப்பு விடுக்கவும், நடத்தவும் உரிமை உண்டு. ஆனால் ஆளும் கட்சியாக இருந்துகொண்டு, அதை நடத்தக்கூடாது. இதுதான் சரியானது.

IdlyVadai said...

பிரசன்னா

In the 1997 judgment, HC had said: “No political party or organisation can claim that it is entitled to paralyse industry and commerce in the entire state or nation and is entitled to prevent the citizens not in sympathy with its viewpoint from exercising their fundamental right or from performing their duties for their own benefits or for the benefit of the state or the nation.”
It added, “Such a claim would be unreasonable and could not be accepted as a legitimate exercise of a fundamental right by a political party or those comprising it. This was upheld by Supreme court."

M Arunachalam said...

IV,

//In the 1997 judgment, HC had said: “No political party or organisation can claim that it is entitled to paralyse industry and commerce in the entire state or nation and is entitled to prevent the citizens not in sympathy with its viewpoint from exercising their fundamental right or from performing their duties for their own benefits or for the benefit of the state or the nation.”
It added, “Such a claim would be unreasonable and could not be accepted as a legitimate exercise of a fundamental right by a political party or those comprising it. This was upheld by Supreme court."//

These things can be understood only by Aryans. It can't be understood by Porukki Makkal Katchi gundargal because they don't have human brains. They have only animal instincts & can only act according to the orders of their ring masters.

lakshmi said...

I think continuously You are against, tamil people, morever you are think your are intellegent to comment about this kind of issue.People always trust only Supreme court and, court said took right decision, becoz this is human violations issue. This is enough,dont comment like this. I think You dont know about 'shaguvara' HE SAID PEOPLE WHO SUFFER FOR THEM LIFE IN ANY PART OF THE WORLD THEY ARE ALL MY PEOPLE. I ALWAYS SUPPORT THEM TO GET THEIR FREEDOM.FIRST READ HIS BOOK AND BEHAVE HAS A HUMAN BEING

amar said...

இது மோசமான முன் உதாரணம் என்று சொன்ன இட்லி வடைக்கு கண்டனம். மோசமான முன் உதாரணம் என்றால் காரணத்தோடு சொல்ல வேண்டும்.

IdlyVadai said...

amar,

சேலத்தில் 5 பேருந்துகளும், தர்மபுரியில் 5 பேருந்துகளும், கடலூரில் 3 பேருந்துகள் உள்பட தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ ?

Vedantha Desika Dasan said...

What happened to my earlier comment (sent y/nite)
However, i repeat mine.

First of all, Bandh is only partially conducted. Most of the people are fed up with these type of protests as they are not protests but preventing normal life of people.
Further more, when the opinion against Bandh is expressed, why people take it as Aryan-Tamil issue? Until all realise that the so called Arya-coming from Kyber Pass etc. are all generated by British to confuse our people, this sort of branding Brahmins as Anti-Tamils will not end and that will not solve the purpose. These people must understand that Brahmins are also Tamilians. You can not find fine Tamil anywhere else than in the Nalayira Divya Prabhandam, Periya Puranam, Thevaram, Thiruvasagam etc.

கிரி said...

//IdlyVadai said...
amar,
சேலத்தில் 5 பேருந்துகளும், தர்மபுரியில் 5 பேருந்துகளும், கடலூரில் 3 பேருந்துகள் உள்பட தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ ?//

இது தவிர்க்க முடியாதது தான் மற்றும் இதை நியாயப்படுத்தவில்லை.

அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை காக்க எந்த முயற்சியும் எடுக்காத போது, மக்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி காட்டுவார்கள்? அல்லது அங்கு அல்லல் படுபவர்களுக்கு தங்களது ஆதரவை எந்த வழியில் தெரிவிக்க முடியும்.

இது அனைவரும் விருப்பபட்டு நடத்தும் பந்த், அரசியல் கட்சிகளின் கட்டாய மிரட்டல் இல்லை.


கல்வீச்சு நடப்பதை பற்றி கவலை படுகிறீர்கள், அதே போல ஈழத்தில் மக்கள் படும் வேதனை பற்றியும் கவலை பட்டீர்கள் என்றால் மன நிறைவு அடைவோம்.

vinayaga said...

Idlyvadai
Yesterday 9 th anniversary of Darmapuri Bus fire incident.. 5 Salem college girls were dead by your political party when the court judgement was announced

Anonymous said...

are samyukta and sangamitra paricipating in the bandh (hartal)

will the pmk and mdmk mp's and mla's return today's salary to the govt?

Anonymous said...

இங்கே பந்த் என்பது எப்படி நடக்கும் என்பது தெரியாதா?

வன்முறைக்குப் பயந்தே மக்கள் கடைகளை மூடி வைத்திருக்கிறார்கள். வன்முறைக்குப் பயந்தே பஸ்கள் ஓடாமல் நிற்கின்றன.

என்றாவது பந்த் நடக்கும்போது கடையைத் திறந்து வைக்கும் சுதந்திரம் கடைக்காரர்களுக்கு இருந்திருக்கிறதா?

வன்முறையை இந்த கோர்ட் உத்தரவு நியாயப்படுத்துகிறது.

ஒரு மொள்ளமாறியை ப்ரெசிடெண்டாகவும், முடிச்சவிழ்ப்பவரை எலக்சன் கமிசனின் தலைவராகவும் ஆக்கும் சோனிய மெய்னோவின் ஆட்சியில், நீதிபதிகள் வேறு எப்படித் தீர்ப்புச் சொல்லுவார்கள்?

மடல்காரன்_MadalKaran said...

பாடிகாட் முனீஸ்வரனை மறந்துவிட்டீர்களா? அல்லது அவரின் அலுவலக வேலை பளுவில் உங்களுக்கு மடல் அனுப்புவதை மறந்துவிட்டாரா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்க..
அடிக்கடி 'உள்ளேன் ஐயா' சொன்னாதான் அவருக்கும் ஞாபகம் இருக்கும். உங்களுக்கும்தான்.

அன்புடன், கி.பாலு

கொடும்பாவி-Kodumpavi said...

இந்திய 'வல்லரசால்' இலங்கைத் தமிழர் படுகொலையை தடுக்கமுடியவில்லை என்றால் வேறு எந்த 'வல்லரசால்' முடியும். சுய பகையும், அரசியல் காழ்புணர்ச்சியும், பதவி மோகமும் கொண்டவர்களின் பிடியில் பாரத மாதா தவிக்கும் போது. இலங்கை பிரச்சனைக்கு எங்கனம் இந்தியா தீர்வு காணப் போகிறது. தன்னை சுற்றியுள்ள நாடுகளில் அமைதி நிலவ முயற்சி செய்யாமல், சுமூகமான உறவு மேம்பட வழி செய்யாமல் காலம் கடத்தினால். . இந்தியா 2020யில் வல்லரசு என்பது ஏட்டில் மட்டுமே பார்த்து மகிழும் வாசகமாக இருக்கும்.