பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 13, 2009

காதலர் தினம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை

காதலர் தினத்தன்று சட்டம்-ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உத்தரவு

கர்நாடகத்தில் ஸ்ரீராம் சேனை அமைப்பும் மற்றும் சங்க்பரிவார் அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை இந்த அமை�புகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. கர்நாடகத்தில் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை இன்று தொடர்பு கொண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை, இன்று ராம சேனைக்கு எச்சரிக்கை

7 Comments:

சங்கு மாமா said...

இ.வடை,
அது ஏன் "பாக்கிஸ்தான்" ன்னு கேப்டன் சொல்லுற மாதிரி அழுத்தி எழுதுறீங்க? அதே ஸ்டைல் ல்ல படிக்கணுமா?? அது சரி... பிங்க்கு ஜட்டி அனுப்பிடீங்களா??

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

காதலர் தினத்துலேயும் தொல்லயா... என்ன கொடுமை இட்லிவடை இது...

பா. ரெங்கதுரை said...

நடுவண் அரசின் அமைச்சர் என்பதாலேயே வைஸ்ய (செட்டியார்) வருண வெறியரான ப. சிதம்பரம், மாநில முதல்வரும் சூத்திர வருணத்தைச் சேர்ந்தவருமான எடியூரப்பாவுக்கு எந்த உத்தரவையும் பிறப்பித்துவிட முடியாது. அதற்கான அதிகாரம் அவருக்குக் கிடையாது.

தன்னுடைய கவலையைப் பகிர்ந்துகொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளலாமே (caution) தவிர எச்சரிக்க (warning)முடியாது.

சிதம்பரம் உண்மையிலேயே தைரியமுள்ளவர் என்றால் கர்நாடக அரசைக் கலைத்துப் பார்க்கட்டும். குறைந்தபட்சம், தம் சொந்த சமூகத்தாரால் ஒடுக்கப்படும் ஆச்சிகளின் பாம்படக் காதுகளையாவது மீட்டுத் தரட்டும்.

Anonymous said...

"நேற்று பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை, இன்று ராம சேனைக்கு எச்சரிக்கை"

There is no meaning in comparing both of these warnings.

Don't compare like fool and loose your (Idly Vadai) image.

கிரி said...

இவங்க நடவடிக்கை எடுக்குறதுக்குள்ள feb 14 நாளே முடிந்து விடும் :-)

Anonymous said...

// பா. ரெங்கதுரை said...
நடுவண் அரசின் அமைச்சர் என்பதாலேயே வைஸ்ய (செட்டியார்) வருண வெறியரான ப
//

I'm seeing his comments always mentioned each person's "Varunasiram" where this has nothing relations with main matter...Please try to stick with the subject we speak.

Regards

Subbu

R.Gopi said...

ஜிங்குச்சா, ஜிங்குச்சா
பிங்க் ஜட்டி ஜிங்குச்சா

நாட்டுல பேசறதுக்கும், எதிர்ப்பு காட்டறதுக்கும் எவ்வளவோ விஷயம் இருக்க, இந்த பிங்க் ஜட்டி ஜிங்குச்சா தேவையா??