பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 11, 2009

தேர்தலுக்கு முன் பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் நாளை கூடுகிறது!.

நாளை முதல் 10 நாட்களுக்கு இது நடைபெறும்.

இது கடைசி கூட்டத் தொடர் அதனால் வழக்கத்துக்கு மாறாக பல காமெடி நடைபெறலாம்.

முதலில் ஜனாதிபதி பிரதீபா பட் டீல் அரசின் சாதனைகள் சொல்லி உரையாற்றுவார்.

வழக்கம் போல் பாரதீய ஜனதாவும், இடது சாரிக்கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மக்களின் கவனத்தையும், மீடியாவின் கவனத்தையும் கவர முயற்சி செய்வார்கள்.

- தீவிரவாதம்,
- பொருளாதார பிரச்சினை,
- பணவீக்கம்,
- நவீன் சாவ்லா பதவி நீக்கம்

காங்கிரஸ் வழக்கம் போல் ராமர் கோவில் பிரச்சனை கையில் எடுக்கும்.

இடது சாரி கட்சிகளுக்கு இருக்கவே இருக்கு ரெடிமேட் பிரச்சனைகள்

- விலைவாசி உயர்வு
- வேலை இழப்பு

இந்த முறை இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததால் புதுசாக ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றி பேசுவார்கள் என்று தெரிகிறது. பா.ம.க, மதிமுக கடைசி வரிசையில் உட்கார்ந்து குரல் கொடுப்பார்கள். திமுக, காங்கிரஸ் என்ன செய்கிறது என்று வேடிக்கை பார்க்கும்.

இருதய சிகிச்சை செய்துள்ளதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

----------------oOo--------------oOo-----------------oOo-------------------
தேர்தல் பற்றி சிறப்பு பதிவுகள் இட்லிவடையில் போடலாம் என்று இருக்கிறேன். ( நாராயணன், மாலன் போன்ற பெரியவர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்க விரும்புகிறேன். )

தமிழ்நாட்டில் இருக்கும் பாராளுமன்ற தொகுதிகளில் இருக்கும் வாசகர்களை கொண்டு ஒரு தேர்தல் குழு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அந்ததந்த தொகுதியில் நடக்கும் கூத்துக்களை ( செய்திகள், படங்கள் ) எனக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்.

என்ன என்ன தொகுதிகள் என்ற விவரம் கீழே

1. திருவள்ளூர் (SC)
2. சென்னை - வடக்கு
3. சென்னை - மத்தி
4. சென்னை - தெற்கு
5. திருபெரும்புதூர்
6. காஞ்சிபுரம் (SC)
7. அரக்கோணம்
8. வேலூர்
9. கிருஷ்ணகிரி
10. தர்மபுரி
11. திருவண்ணாமலை
12. ஆரணி
13. விழுப்புரம் (SC)
14. கள்ளக்குறிச்சி
15. சேலம்
16. நாமக்கல்
17. ஈரோடு
18. திருப்பூர்
19. நீலகிரி (SC)
20. கோயமுத்தூர்
21. பொள்ளாச்சி
22. திண்டுக்கல்
23. கரூர்
24. திருச்சிராப்பள்ளி
25. பெரமலூர்
26. கடலூர்
27. சிதம்பரம்
28. மயிலாடுதுறை
29. நாகப்பட்டினம் (SC)
30. தஞ்சாவூர்
31. சிவகங்கை
32. மதுரை
33. தேனி
34. விருதுநகர்
35. ராமநாதபுரம்
36. தூத்துக்குடி
37. தென்காசி (SC)
38. திருநெல்வேலி
39. கன்னியாகுமரி


இந்த தொகுதியில் நீங்கள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், ஒரே தொகுதிக்கு பலர் இருந்தாலும் பரவாயில்லை.


பிகு:
இந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 13 தொகுதிகள் புதிய பெயர்களுடன் முதல்முறையாக களத்தில் குதிக்கின்றன. அந்த விவரம்

மறுசீராய்வின்படி

செங்கல்பட்டு,
திருப்பத்தூர்,
வந்தவாசி,
திண்டிவனம்,
ராசிபுரம் (தனி),
திருச்செங்கோடு,
கோபிச்செட்டிபாளையம்,
பழனி,
பெரியகுளம்,
புதுக்கோட்டை,
சிவகாசி,
திருச்செந்தூர்
நாகர்கோவில்

ஆகிய 13 தொகுதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, 13 புதிய பெயர்களில் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் (தனி),
காஞ்சீபுரம் (தனி),
திருவண்ணாமலை,
ஆரணி,
விழுப்புரம் (தனி),
கள்ளக்குறிச்சி,
நாமக்கல்,
ஈரோடு,
திருப்பூர்,
தேனி,
விருதுநகர்,
தூத்துக்குடி
கன்னியாகுமரி
ஆகியவை புதிய பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள் ஆகும்.


அத்வானிவலைத்தளத்தின் விளம்பரம் இட்லிவடையில் வருவதற்கு காரணம் கூகிள் ஆட்ஸ். இட்லிவடையின் நடுநிலமை பற்றி சந்தேகம் வேண்டாம் :-)

92 Comments:

ராரா said...

எங்க பாண்டிச்சேரி கிடையாதா. இது அதர்மம்.

Subbu said...

நாந்தான் முதலா :))

பா. ரெங்கதுரை said...

சிவகாசி, திருச்செந்தூர், நாகர்கோயில் - ஆகிய இந்துத்துவப் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழர்களின் மனதைப் பார்ப்பனீய-இந்திய தேசியத்தின் கொடும் பிடியிலிருந்து விடுவிக்கும் பாராட்டத்தக்க முயற்சி.

தென்காசி, சிவகங்கை போன்ற, இந்துத்துவத்தைத் தமிழர்களின் மனதில் நிலைநிறுத்தும் சூழ்ச்சி கொண்ட பெயர்களையும் நீக்கி, இஸ்லாமிய-கிறிஸ்தவ-மாவோவிசப் புத்தொளியைத் தமிழர்களின் தூல அறிவில் பாய்ச்சும் புதிய பெயர்களை விரைவில் சூட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கிரி said...

// நடுநிலமை //

:-))))

தமிழ் ஸ்டுடியோ said...

Hi.. i want to talk with you something.. can you give your mobile no. to thamizhstudio.com

thanks,
thamizhstudio.com

IdlyVadai said...

//Hi.. i want to talk with you something.. can you give your mobile no. to thamizhstudio.com//

You can contact me in Gtalk or gmail only as I dont have a mobile :-)

Kinathumedu said...

இதனால் என்ன லாபம் ??

கொடும்பாவி-Kodumpavi said...

தேர்தல் ஜுரம் இட்லி வடைக்கு பிடித்துவிட்டது. தன்னிடம் செல்பேசி இல்லை என்பதை இப்படி வெளியில் சொல்லி இருக்க வேண்டாம். அல்லது கூகுள் டாக்கில் மட்டுமே தொடர்பு கொள்ளவும் என்று சொல்லி இருக்கலாம். முழு பூசிணிக்காயை ஒரு சோத்து பருக்கையில் மறைத்த பெருமை இட்லி வடையரையே சாரும்.

K said...

Reg Advani advt, even a small computer algorithm is picking up your bias so easily.... he he he...

paarvai said...

நடுநிலமை என்றால் ஏதோ தவறானவற்றிற்கும், சரியானவற்றிற்கும் நடுவில் நிற்பது என்று பகுத்தறிவாளர்கள் கருத்து (இட்லிவடை உட்பட). நடுநிலமை என்பது தர்மத்தின் பக்கம் நிற்பதே. உங்கள் சமீபத்திய பதிவுகளைப் பார்க்கும் போது இட்லிவடை , பிற ஊடகங்கள் போல் கைமாறிவிட்டதோ என்ற எனது சந்தேகம் மிகவும் வலுப்பெறுகிறது,

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

அய்ய இட்லிவடையரே எனக்கு உங்களுக்கு உதவ விருப்பம் ஆனா என்ன பன்னனும் நு தெரியல... நான் எந்த விதத்துல உங்களுக்கு உதவ முடியும்... தயவு செய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...

Nithya A.C.Palayam said...

நான் பொள்ளாச்சி தொகுதி.
எந்த விதத்துல உங்களுக்கு உதவ முடியும் ? தெளிவா சொல்லுங்க

IdlyVadai said...

//அய்ய இட்லிவடையரே எனக்கு உங்களுக்கு உதவ விருப்பம் ஆனா என்ன பன்னனும் நு தெரியல... நான் எந்த விதத்துல உங்களுக்கு உதவ முடியும்... தயவு செய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.//

உங்க தொகுதி எது என்று சொல்லி எனக்கு பின்னூட்டம், அல்லது மெயில் அனுப்பவும். உங்க தொகுதியில் என்ன நடைபெறுகிறது என்று சொன்னால் இட்லிவடையில் அதை போடுவேன். அவ்வளவு தான்.

IdlyVadai said...

//நான் பொள்ளாச்சி தொகுதி.
எந்த விதத்துல உங்களுக்கு உதவ முடியும் ? தெளிவா சொல்லுங்க//

உங்க தொகுதில் என்ன நடக்கிறது என்று எனக்கு சொன்னால் போறும்.

வால்பையன் - நன்றி.

உங்க இரண்டு பேரையும் சைடு பாரில் போட்டிருக்கிறேன்.

R.Gopi said...

இட்லிவடையின் நடுநிலமை பற்றி சந்தேகம் வேண்டாம் :-)
--------------------------------
என்னை மாதிரி பேசினாலோ/பேச முயற்சித்தாலோ, மஞ்சள் துண்டுக்கு பதில், மஞ்சள் பெயிண்ட் அடிச்சாலோ, நீங்கள் நானாக முடியாது. நீங்கள் நீங்கள் தான். நான் நான்தான்.

மற்றபடி, உங்கள் நடுநிலைமையை பற்றி செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடும்போது முடிவெடுத்து, அறிவிப்போம்.

Thandavakone said...

நான் திண்டிவனம்- விழுப்புரம பாராளுமன்ற தொகுதி. இந்த தொகுதியை பற்றி எழுதுகிறேன்

IdlyVadai said...

//நான் திண்டிவனம்- விழுப்புரம பாராளுமன்ற தொகுதி. இந்த தொகுதியை பற்றி எழுதுகிறேன்//

மிக்க நன்றி

ஹரன்பிரசன்னா said...

ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கோ?

வாய்ப்பாடி குமார் said...

நம்மளையும் சேர்த்துங்க ,

நாம திருப்பூர் தொகுதி.

Amuthapriyan said...

நம்மளையும் சேர்த்துங்க ,

நாம Thoothukudy தொகுதி.

Amuthapriyan.

IdlyVadai said...

வாய்ப்பாடி குமார், Amuthapriyan,

Welcome !. நன்றி.

வெயிலான் said...

விருதுநகர் தொகுதிக்கு நான் இருக்கேன்.

மைக் முனுசாமி said...

இட்லி வடை மாதிரி இல்லைன்னாலும் ஊறுகாய் மாதிரியாவது நான் இருப்பேன். ஐயா நாமக்கல், ஈரோடு லிஸ்ட்ல என்னையும் சேத்துக்குங்க...

அறிவிலி said...

எங்கள மாதிரி வெளியூர் காரங்களுக்கெல்லாம் நல்ல வேட்டைதான். சுட..சுட உள் விஷயமெல்லாம் நெறைய வெளில வரும்னு ஜொள்ளு வுட்டுட்டு உக்காந்துருக்கேன்...

மாயவரத்தான்.... said...

Enga oorila naan!

Dhanasekaran said...

Ennai Chennai(north) and Cuddalore la add pannikonga........

IdlyVadai said...

மைக் முனுசாமி, அறிவிலி, தனசேகரன்
நன்றி.

மாயவரத்தான் நீங்க எந்த தொகுதி என்று சொல்லுங்க

மாயவரத்தான்.... said...

என்ன கொடும சார் இது? 'மாயவரத்தான்' எந்த தொகுதியா இருப்பான்?

மாயவரத்தான்.... said...

Mayiladuthuraiyila perai podunga sir(s)!

வாய்ப்பாடி குமார் said...

நன்றிகள் நண்பரே ...

Boston Bala said...

அகில இந்தியாவுக்குமாக இந்தப் பட்டியலை விரிக்கலாமே?

மாயவரத்தான்.... said...

பா.பா. இப்போ இட்லி வடை டீமில இல்லையா? அத கவுக்க ஆசைப்படுறாரு?!

Baski said...

Please Pondicherry Also.Anga than Kuthu Romba Nadakum.

kalaikovan said...

Add my name to Cuddalore

IdlyVadai said...

// அகில இந்தியாவுக்குமாக இந்தப் பட்டியலை விரிக்கலாமே?
//

நல்லா தான் இருக்கும்...செய்யலாம் மும்பையில் மாமி டெல்லியில் மாமா என்று இருவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?.

// பா.பா. இப்போ இட்லி வடை டீமில இல்லையா? அத கவுக்க ஆசைப்படுறாரு?!
//

பாபா தான் கேப்டன் இப்படி கேட்கறீங்களே :-)

//Please Pondicherry Also.Anga than Kuthu Romba Nadakum.//

யாராவது முன்வந்தால் செய்யலாம்.

Kalyan said...

Bangalore kadiyatha?

IdlyVadai said...

கல்யாண் - பொங்களூர் நிலவரம் பற்றி யாராவது சொன்னால் இட்லிவடையில் அப்டேட் செய்கிறேன். நன்றி

thagavalkaran said...

i am from tenkasi

அ.மு.செய்யது said...

வடசென்னையிலிருந்து ( வியாசர்பாடி ) நான் அனுப்புறேங்கண்ணோவ்..)

MURALIDHARAN said...

மறு சீரமைப்புக்குப் பின் எங்கள் ஊர் இலால்குடி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது.எந்த விதத்தில் நான் உங்களுக்கு உதவ வேண்டும் என்று வழிகாட்டினால் நான் ரெடி.

IdlyVadai said...

//MURALIDHARAN

மறு சீரமைப்புக்குப் பின் எங்கள் ஊர் இலால்குடி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது.எந்த விதத்தில் நான் உங்களுக்கு உதவ வேண்டும் என்று வழிகாட்டினால் நான் ரெடி.//

உங்க ஊர் பற்றி எழுதுங்கள். உங்கள் நண்பர்கள், பக்கத்து வீட்டுகாரர்கள் என்ன நினைக்கிறார்கள் இப்படி என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம் :-)

Silky woven said...

திருச்சிராப்பள்ளி, Eswar. can you send a test mail

SanJai காந்தி said...

தர்மபுரி, கிருஷ்ணகிரி. கோவை நமக்கு கெடைக்குமுங்களா? :)

IdlyVadai said...

//திருச்சிராப்பள்ளி, Eswar. can you send a test mail//

என் மெயில் ஐடி idlyvadai2007@gmail நீங்க அனுப்புங்க.

//தர்மபுரி, கிருஷ்ணகிரி. கோவை நமக்கு கெடைக்குமுங்களா? :)//

தர்மபுரிக்கு உங்களை போட்டிருக்கிறேன். நன்றி

புதுகை.அப்துல்லா said...

எங்க புதுக்கோட்டை இப்ப திருச்சியோட சேர்ந்திருச்சு...நம்ப மெயின் கடையில தேர்தல் பற்றி எழுதலாம்னு முதல்ல நினைச்சேன். ஆள் வராக் கடையில யாவாரம் பண்றதவிட இங்க சர்வீஸ் பண்றதே பெட்டர். நம்ப பேர திருச்சில சேத்துக்கங்க :)

Inba said...

Thanks to Idlyvadai..

im working in sharjah.. egarly awaiting for my home town Chidambaram news..

Anonymous said...

though i am away i can supply all the details of arunai (tiruvannamalai)


kanjian

கால்கரி சிவா said...

கால்கரியில் தேர்தல் நடந்தால் நான் தான் ஏகபோக பிரதிநிதி :)

ஆதவா said...

நான் புது ஆளு!!! திருப்பூர் காரன்.

ஏதாச்சும் கிடைக்குமுங்களா?

ஆதவா said...

நான் புது ஆளு!!! திருப்பூர் காரன்.

ஏதாச்சும் கிடைக்குமுங்களா?

Heam said...

I am there for Krishnagiri

Venkateshan.G said...

நான் உடுமலைபேட்டை (தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ) பகுதியை சேர்த்தவன் .பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி எங்கள் பகுதி உட்பட்டது .நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் . வீடயோ அனுப்பலாமா ?.
வெங்கடேஷன் ,
முருங்கப்பப்பட்டி ,உடுமலைபேட்டை .

IdlyVadai said...

//நான் உடுமலைபேட்டை (தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ) பகுதியை சேர்த்தவன் .பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி எங்கள் பகுதி உட்பட்டது .நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் . வீடயோ அனுப்பலாமா ?.
வெங்கடேஷன் ,//

மிக்க நன்றி. எது வேண்டும் என்றாலும் அனுப்பலாம்.

Anonymous said...

நாகப்பட்டினம் (SC) ?

why dont u write Thani in Tamil ?

Sathi Veri Pisasu.

Vivek said...

My home town is chidambaram.Though I am not located at this moment,I can share political information about chidambaram.

sabavivek@gmail.com

KaveriGanesh said...

அண்ணே நம்மள மதுரயில போட்டுக்ங்க‌

geeyar said...

குட்டி மேலப்பாளையமாம் சாரல் வீசும் தென்காசியின் தேர்தல் அசிங்கங்களை அள்ளி வீச நானும் வருகிறேன். முதலில் எங்க சிட்டிங் எம.பி தோழர் அப்பாத்துரையை 5 வருடமா காணவில்லை. முடிந்தால் கண்டுபிடிச்சி கொடுங்கோ. ஐடி அமைச்சர் ச.ம. தொகுதியில் ஆரம்பிச்சாச்சி.....

Dr.P.Kandaswamy said...

ப.கந்தசாமி,
என்னை உபயோகித்துக்கொள்ளலாம்.
drpkandaswamyphd@sancharnet.in

Dr.P.Kandaswamy said...

என்னை உபயோகித்துக்கொள்ளலாம்
ப.கந்தசாமி

Lenin said...

ஐயா, கன்னியாகுமாp தொகுதி காலியாவே இருக்கு, நமக்கு தாங்களேன். எழுதித்தான் பார்க்கலாம். சந்தேகம் வேண்டாம் நடுநிலை கண்டிப்பா இருக்கும்

Seenu said...

நான் Vellore & Arakkonam தொகுதி

Anonymous said...

தஞ்சாவூர்ல நான் நிக்கிறேன்

Saravanan said...

தஞ்சாவூர்ல நான் நிக்கிறேன்

வசந்த். said...

வணக்கம் நண்பரே, திருநெல்வேலி தொகுதி பற்றிய எனது கண்ணோட்டத்தை அனுப்புகிறேன். பரிசீலனைக்கு எடுத்து கொள்ளவும்.
நன்றி.
வசந்த்.

Rohajet said...

i am from villupuram and i can contibute some news from here.

IdlyVadai said...

நன்றி நண்பர்களே, உங்கள் பெயர்களை சேர்த்துவிட்டேன். விடுபட்டிருந்தால் சொல்லவும்.

Dr.P.Kandaswamy said...

என் பெயர் ப.கந்தசாமி. ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன். Ph.D.வரை கோயமுத்தூர் தொகுதியில் என்னை சேர்க்கவும்.

அகநாழிகை said...

நண்பரே, வணக்கம். நான் செங்கல்பட்டு (காஞ்சிபுரம் – தனி) தொகுதி. எனக்கும் விருப்பம்தான்.

- பொன். வாசுதேவன்

PNS PANDIAN said...

பாண்டிச்சேரி naan ezuthuren

ந. லோகநாதன், logudotcom said...

நான் போளுர் ...எங்க தொகுதி, ஆரணி...

இலால்குடி பினாத்தல்கள் said...

அண்ணே, இன்னும் என்னை நீங்க பெரம்பலூருக்கு போடலியே.அப்படியே பெரம்பலூர் ஸ்பெல்லிங் தப்பா இருக்கு.மாத்திடுங்க.

மரைக்காயர் said...

ராமநாதபுரம் மாவட்டத்தை நான் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறேன்.

Rajkamal said...

மயிலாடுதுறை தொகுதி எனக்கு...

Karthik said...
This comment has been removed by the author.
Karthik said...

சேலம் வாக்காளர்கள் சார்பில் இந்த மக்களவை தேர்தலில் குரல் குடுக்க வாய்ப்பளித்தால் எனது பணியை செவ்வனே செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

மக்கள் நலம் விரும்பும், சேலத்து சிங்கம்.

Karthik said...

சேலம் வாக்காளர்கள் சார்பில் இந்த மக்களவை தேர்தலில் குரல் குடுக்க வாய்ப்பளித்தால் எனது பணியை செவ்வனே செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

மக்கள் நலம் விரும்பும், சேலத்து சிங்கம்.

Ghani said...

தலைவா ரெங்கதுரை உங்களைப் போல பொதுநலவாதியின் சேவை நம் நாட்டிற்குத் தேவை.

Balaji Manoharan said...

hi idlyvadai..

add my name for vellore constituency
i father was a politician i know something about politics in vellore district.i will give the updates and happenings in vellore constituency.
tell me in which way i have to give.

IdlyVadai said...

//Balaji Manoharan said...
add my name for vellore constituency
i father was a politician i know something about politics in vellore district.i will give the updates and happenings in vellore constituency.
tell me in which way i have to give.//

பாலாஜி நன்றி. இது தான் எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை எது வேண்டும் என்றாலும் எழுதலாம். வேலூர் பற்றி ஒரு ரவுண்டப், மக்களின் பிரச்சனைகள், யார் வெற்றி பெறுவார்கள்.. இப்படி எது வேண்டும் என்றாலும் எழுதலாம். அதை தவிர உங்க தொகுதியில் உள்ள போஸ்டர், படங்கள் என்று படம் எடுத்து கூட அனுப்பலாம்.

★кєттαναη ιѕ вα¢к★ said...

வணக்கம்.

நான் சிவகங்கை தொகுதி திருமயம் பகுதியை சார்ந்தவன். எங்கள் தொகுதி ஒரு வி.ஐ.பி தொகுதி. அவர் வேரு யாரும் இல்லை ‘இந்திய தேசத்தின் உள்துறை’ அமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் தான்.

அவர் செட்டியார் இனத்தை சார்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மத்தியில் கூட அவருக்கு செல்வாக்கு இல்லை.

6 MLA தொகுதியில் திருமயம், காரைக்குடி மட்டுமே ’கை’ சின்னம் வெனற தொகுதிகள். திருமயத்தை பொருத்தவரை இந்த முறை ADMK க்கு தான் வாய்ப்பு அதிகம்.
[காரணம்]: கு.ப.கிருஷ்ணன் ADMK-க்கு தாவிவிட்டார். மா.செ கு.வைரமுத்துவின் சொந்த தொகுதியும் கூட..

காரைக்குடி மட்டுமே ப.சி-யின் நம்பிக்’கை’. ஏனெனில் MLA சுந்தரம் செல்வாக்கு உள்ளவர்.
[காரணம்]: வல்லம்பர் இன வாக்குகளே பலம்.

ஆலங்குடி: CPI தொகுதி. ‘கை’யையே தெரியாத பலர் உள்ளனர். தமிழின உணர்வு மிக்கவர்கள். எப்படியும் வாக்கு கேட்டு செல்லும் போது ப.சி-க்கு அடி கூட விழலாம்!

சிவகங்கை: ADMK வாக்குகளே பலம்.

மொத்தத்தில் அண்ணா தி.மு.க “சரியான வேட்பாளரை” நிருத்தினால் வெற்றிக்கனி நிச்சயம் -- அதிக வாக்கு வித்தியாசத்துடுடன்.

** முக்குலத்தோர், முத்தரையரை வேட்பாளராக அரிவித்தால் “பிரச்சாரத்துக்கு கூட” போக வேண்டாம்

[கொசுறு] ஆதலால் தோல்வி பயத்தால் இந்த முறை ’கார்த்திக்’ சிதம்பரம் களம் இறங்கலாம்.

நன்றியுடன் # அன்பு பிரபாகரன்

saamakodanki said...

அண்ணர்..இட்லிவடை..நாம மதுரையில சும்மா........ரவுண்டு கட்டி சுத்துவோம்ல...எந்த நாய் தொரத்துனாலும் வாயக்கடட மந்திரம் வெச்சுருக்கோம்ல....என்னைய விட்டு புடாதீங்கண்ணா....நைட்ல சொன்ன குறிக்கு காலயில காசெல்லாம் கேக்காத சாமகோடாங்கின்னா.........மதுர தொகுதிக்கு நாம கணேஷோட ...சேத்துக்கலாம்னா..

saamakodanki said...

இட்லிவடையாரே...என்ன இது மதுரை தொகுதியில இருந்து உங்களுக்கு செய்தி கொடுக்கணும்னா..ஆட்டுக் கிடா பிரியாணியும், காந்தி தாத்தா நோட்டும் கொடுத்தா தான் என்னய தேர்தல் டீம் பட்டியல்ல சேர்ப்பீங்களோ?

ezhil said...

I am from Tenkasi , can you add my name to ur list

chandra mouhli said...

hii everybody...it's me karthee frm madurai...may i knw wht's going on here...anyone brief explain meee.....

Baski said...

தேர்தல்கமிசன் தான் இந்த மாறி கருத்துக்கணிப்பு எடுக்க கூடாதென சொல்லியிருகிறதே, உங்களுக்கு அதை மதிக்க தெரியாதா ??

"உங்கள் வழி தனி வழி" யோ

ஊருக்கு தான் உபதேசமா ?

சோழன் said...

all chennai / sivagankai in confussion .All remaining with ADMK allainces

சூரியன் said...

ராமாநாதபுரத்தில் என்னை சேர்த்துக்கொல்லுங்கள்

Inba said...

Mr.idlyvadai,

ஷார்ஜாவில் இருந்தாலும்
எங்கள் ஊர் சிதம்பரம் பற்றிய தகவலகளை
தரத்தயார்

பட்டியலில் என்னையும்
சேர்க்கவும்

Inba said...

can I send details abt Chidambaram to your gmail ID????

still my name not included in your list??

IdlyVadai said...

Inba,

அனுப்புங்கள். சேர்த்துவிட்டேன். நன்றி

"அகநாழிகை" said...

அகநாழிகை said...
நண்பரே, வணக்கம்.
நான் செங்கல்பட்டு (காஞ்சிபுரம் – தனி) தொகுதி.

அரக்கோணம் பகுதியில் என் பெயர் உள்ளது. மாற்றிவிடுங்கள்

‘அகநாழிகை‘
பொன். வாசுதேவன்

ஜீவன் said...

நான் சென்னைல இருந்தாலும் தஞ்சாவூர் தொகுதில சேர்த்து கொள்ளுங்கோ!

குறிப்பு ;- திமுக பழனி மாணிக்கம் முந்துகிறார் அங்க!!