பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 04, 2009

உங்கள் ஊருக்கு இன்டர்நெட் பஸ் எப்போ வரும் ?

நமது தமிழ்நாட்டில் , இன்டர்நெட் -யை பற்றிய விழிப்புணர்வு பேருந்து பயணத்தை , கூகிள் நிறுவனம் இன்று துவக்கி உள்ளது . இப்பயணம் Feb 3 தொடங்கி Mar 13 வரை நடைபெற உள்ளது.

நமது மாநிலத்தில் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு சென்று , இன்டர்நெட் -யை பற்றிய செயல் விளக்கங்களை கொடுக்க உள்ளது . உங்களது நண்பர்கள் அந்த ஊர்களில் இருந்தால் , இதனை பயன்படுத்தி கொள்ள சொல்லுங்கள் . மேலும் இந்த செய்தியை , இன்டர்நெட் -யை பற்றி அறிய விரும்பும் மக்களுக்கு அடைய செய்யுங்கள்.
அந்த பயணத்தின் அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்.

( படம்: பஸ்ஸின் கதவுக்கு மேல் “இன்டர்நெட்டின் உலகத்தை கண்டுகளியுங்கள் என்று எழுதியிருக்கிறது. கவனிக்கவும் )

12 Comments:

ரங்கதுரை said...

பார்ப்பனீய-இந்துத்துவ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முன்னெடுத்துச் செல்லும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் பஸ்ஸை எதிர்த்துப் போராட மார்க்ஸிய-பெரியாரிய-அம்பேத்காரிய-இஸ்லாமிய தோழர்களையும், ஞாநி போன்ற பத்திரிகையாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

Anonymous said...

தகவலுக்கு நன்றி

technicalsathish said...

மிக்க நன்றி அய்யா... நான் எல்லோருக்கும் பன்னிட்டேன்...

R.Gopi said...

இதன் உபயோகம் என்னன்னு சொன்னா, என்ன மாதிரி பாமரர்களுக்கும் புரியும்.

இலவச டி.வி. பொட்டி குடுத்த மாதிரி இத பாக்கறதுக்கு ஏதாவது பொட்டி குடுப்பீங்களா ??

இதுல மானாட மயிலாட பாக்க முடியுமா??

Kots said...

இந்த பஸ் செல்லும் ஊர்களின் பட்டியலை பார்த்தால் மாநகரம் மற்றும் நகரம் ஆகியவற்றின் பட்டியல் தான் உள்ளது . இன்று நகரம் மற்றும் மாநகரம் மக்களுக்கு இன்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு உள்ளது ஆனால் கிராமத்து மக்களுக்கு இன்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு இல்லை எனவே இந்த பேருந்து நம் தமிழக கிராமங்களுக்கு பயணித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாயவரத்தான்.... said...

:)

கொடும்பாவி-Kodumpavi said...

மொத பின்னூட்ட மிட்டவரே..
எப்படி உங்க அழகு தமிழில் இப்படி போட்டு தாக்கறீங்க..
மக்கள் இத பார்த்து முன்னேறிட்டா? அப்புறம் எங்கன போய் குளிர் காயறது..
ஏது எதுக்கேல்லாம் ஜாதி, மதத்த இழுக்கறதுன்னு வெவச்த்தயே இல்லாம போயிடுச்சு..
நீங்க ச்சும்மா ஒரு லுலுலாயிக்கு சொன்னேன்னு சொன்னாகூட நம்ப மக்கள் ரொம்ப சீரியஸா எடுத்துப்பாங்க.. பாத்து சொல்லுங்கண்ணா.. ரங்கண்ணா..!

Krish said...

ரொம்ப நல்ல விஷயம். இணையத்தின் பயன்பாடுகள் பற்றிய தெளிவு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் மட்டுமே உள்ளது. கிராமங்களுக்கு இது பரவுவதால் பல நன்மைகள் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உஅதவியாக இருக்கும். சிறு நகரங்களில், கிராமங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையம், ஈமெயில் போன்றவற்றின் பயன்பாடுகள் முழுவதும் தெரியாமல் இருப்பது மிகவும் வேதனையானது.

ரங்கதுரை சார்,
நீங்க மட்டும் இணையத்தைப் பயன்படுத்தலாம், பதிவுகள் மூலம் உங்கள் கருத்துக் களை தெரிவிக்கலாம். மற்றவர்கள் எல்லாம், அறிவு அற்றவர்களாக இருக்க வேண்டும்? என்ன நியாயம்? இல்ல..நீங்க கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அரசாங்கமும், கல்வியாளர்களும் செய்ய வேண்டிய விஷயம். பண்ணாததால், இவர்கள் செய்கிறார்கள்.

Anonymous said...

Dravidians like Rangadurai are in reality fearful of these awareness campaigns since they see it as a threat to their own ideologies and its falsehoods.

This campaign is not really about just spreading internet usage but to bring awareness of the volume of content available in Thamizh.

The fact that there is a world of blogs out there which is free from marxist/mullah/missionary/macaulayite propaganda is what is seen as the real threat.

The recent incident where NDTV/Barkha Dutt bullied a dissenting blogger into silence is just a sample.

-Murthy

MayVee said...

"ரங்கதுரை said...
பார்ப்பனீய-இந்துத்துவ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முன்னெடுத்துச் செல்லும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு "
சார் இன்னும் எத்தன நாளுக்கு இந்த காமெடி பண்ண போறீங்க....... சில நாடு வளர்ச்சி அடையுது ந அதுக்கு இன்டர்நெட்வும் ஒரு காரணமாய் இருக்கும்.....

மற்றபடி நல்ல தகவல்.

மேவி அந்தோணி விஸ்வநாத பிள்ளை

கிரி said...

உங்களோட கஜினி கார்ட்டூன் சூப்பர் :-)) ஹா ஹா ஹா

வாழவந்தான் said...

ரொம்ப நன்றி
எல்லாருக்கும் போன் போட்டு சொல்லியாச்சு.
அத்தோட நமக்கு தெரிஞ்ச டீச்சருங்கோ கிட்ட சொல்லி ஸ்கூலுல அறிவிக்க சொல்லியாச்சு