பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 03, 2009

திண்ணை காலியானால் படுத்துக்கொள்ள நினைக்கிறார் ஜெ - கலைஞர்

இன்று திமுக செயற்குழு கூட்டத்தில் கலைஞர் கொஞ்சம் ஓவராக புலம்பியுள்ளார்.

- போராட்டம் நடத்தி தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி
- தமிழ்நாட்டில் சிலர் திடீரென இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று "பாவ்லா'' காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
- இலங்ëகை பிரச்சினைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க ராமதாஸ், ஜெ சதி செய்கிறார்க்ள்
- திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்
மேலும் புலம்பல் கீழே...

தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசுகையில்,. தமிழ்நாட்டில் சிலர் திடீரென இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று "பாவ்லா'' காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


டாக்டர் ராமதாஸ் எல்லாம் முதல்- அமைச்சர் தான் சொல்ல வேண்டும் என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கிறார்.


இந்த ஆண்டுக்குள் தி.மு.க. முடிந்து எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார். இலங்ëகை பிரச்சினைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள். திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது என் பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஈழம் பற்றி பேச வெளி நாட்டு தமிழர்கள் பற்றி பேச, திராவிட இயக்கங்கள் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. தமிழர்களுக்காக போராடுவது போல சிலர் நாடகம் ஆடுகிறார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பொதுக் கூட்டம்: தி.மு.க. செயற்குழு தீர்மானம்

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும்-அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர் கள், மற்றும் அரசியல் கட்சி களைக் கொண்டு- "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'' என்ற அமைப்பின் பெயரால்-தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டு மென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்ம னத்தை, மக்கள் மன்றத்தில் விளக்கி, ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட, தமிழகம் முழுவதும் மாவட்டத்தலை நகரங்களிலும், முக்கிய நகரங் களிலும் பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் வருகிற 7-ந்தேதி சென்னையிலும், 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களி லும் நடத்துவதென்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.

கலைஞர் பேட்டி
தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்த பின்பு முதல்- அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கே:- ஆட்சிக்கு எதிராக சதி திட்டம் என்கிறீர்களே? எதை வைத்துச் சொல் கிறீர்கள்?
ப:- தேவையற்ற கருத்துக் களை சொல்வதால். முதலில் முதல்-அமைச்சர்தான் எல்லாம் சொல்வார் என்கிறார்கள். பிறகு பிரதான கட்சியான தி.மு.க.வுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை. இது ஒன்று போதாதா?

கே:- 4-ந்தேதி முழு அடைப்பு பற்றி?
ப:- நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. முதல்-அமைச்சர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதே போல் சேது சமுத்திர திட்ட பந்துக்கும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்

கே:- முழு அடைப்பு போராட்டத்தால் பயன் ஏற்படாது என்று கம்யூனிஸ்டு தலைவர் வரதராசன் கூறி உள்ளாரே?
ப:- அவரது கருத்து வரவேற்க தகுந்தது.

கே:- இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து குண்டு வீசப்படுகிறதே?
ப:- சிங்களர்கள் அநியாயம் செய்கிறார்கள். தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்பது என் கருத்து.

கே:- இலங்கை பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று வற்புறுத்து கிறார்களே?
ப:- ஐ.நா. தலையிட்டால் நல்லது. அதை வரவேற்கிறேன்.

கே:- போரை இந்திய ராணுவம் நடத்துவதாக சொல்கிறார்களே?
ப:- இது பொய்யான குற்றச்சாட்டு. இதற்கு இந்திய பாதுகாப்பு மந்திரி பதில் அளித்துள்ளார்

இந்த முறை அறப்போராட்டங்களில் ராஜினாமா நாடகம் மிஸ்ஸிங். இல்லை கனிமொழி முதலில் தன் அப்பாவிடம் தன் ராஜினாமாவை முதலில் கொடுத்திருப்பார்.

படங்கள்: துக்ளக்

24 Comments:

technicalsathish said...

எனக்கு இதுல பிடிச்சது அந்த 2 படங்கள் தான்... ரூம் போட்டு யோசிப்பிங்களோ இட்லிவடை...

We The People said...

"திண்ணை காலியானால் படுத்துக்கொள்ள நினைக்கிறார் ஜெ"

அட்சி போனா திரும்ப ஆட்சிக்கு வரமுடியாது என்று அவ்வளவு காண்ஃபிடெண்டா இருக்காரே! மக்கள் ஆதரவு போயிடுச்சுன்னு அவருக்கே நல்லா தெரியுதுபோல??!!! அரசியல் ராஜதந்திரி அல்லவா! அவர் சொன்ன சரியா தான் இருக்கும் ;)

We The People said...

அப்ப இந்த செயகுழு ஈழத்தமிழர் பிரச்சனைக்காக இல்லையா?? இவரோட ஆட்சி பிரச்சனைக்காகவா...சாரிபா உங்களையெல்லாம் தப்பா நினைச்சுட்டேன் :((((

சங்கர் said...

ரோம் = ஈழம்
நீரோ = தமிழினத் துரோகி கருணாநிதி
பிடில் = செயற்குழு, பேரணி

டன்மானடமிழன் said...

தன்மான தலைவர்
உலக தமிழர்களின் தலைவர்
செம்மொழி வேந்தன் இன்னா
சொல்ல வர்றாருனா

நான் திண்ணையில்
படுத்துக்கொள்கிறேன்
கோடனும் கோடி மதிப்புள்ள
என் குடும்பத்தினருக்காக

ஈழ தமிழர்களா
போய் சவுக்குழியில்
படுத்துக்கொள்ளுங்கள்

அதுதான்
உனக்கும் எனக்கும்
நிம்மதியை அளிக்கும்

Litmuszine said...

Though it is irrelevant to this post, I like to paste the introduction about an unsung hero, given by my friend in his blog.
-------------------------------
If you talk about the future of Tamil Movies…

Belive me…This is the man..SAM ANDERSON.

I have already become his die-hard fan…He’s one unsung hero, who’s debut film in 2008 was not marketed well

….Mark my words..He is the next Kamal Hassan..and has the potential to become the next Tom Hanks / Russel Crowe.

..He can very well be categorized under the genre of “Method actor”. (examples of method actors: Kamal Hassan, Robert De Niro, Al Pacino, Marlon Brando and many more.)

If you want to know the definition of “Method” acting check wikipedia, or look for “Sam Anderson” in Youtube.

You will find lots of his movie clippings in Youtube. Just search for “Sam Anderson” in Youtube.

One sample here…
http://in.youtube.com/watch?v=w0iXYpHXWIA

-------------------------------

I hope you all will not read the users comments under those videos!!.

kalaikovan said...

//"அண்ணனும் சாக மாட்டான்,
திண்ணையும் காலி ஆகாது"//

இதையெல்லாம் கேட்கும்போது ...
இன்னொரு சொலவடை ஞாபகத்திற்கு வருது
"எவ எவனோ சாவறான்
இவனுக்கெல்லாம் சாவே வராதா" .

ஆரம்பிச்சிட்டாரு .....
அறிக்கை விட
உருப்புட்டமாதிரி தான்.

உன் நிலை என்னன்னு சொல்லுயா .
அதை விட்டுட்டு
பழமொழி சொல்லரராம் பழமொழி

Anonymous said...

உண்மையில் சுவையான, சூடான, அண்ணா தி மு க இட்லி வடை

கொடும்பாவி-Kodumpavi said...

தமிழன் என்றொரு இனமுண்டு..
இப்படி சொல்லிச் சொல்லி
மக்கள் மூளையை சலவை செய்து
அதன் மூலம் இதர பிரச்சனைகளின் அர்ச்சனைகளை கொஞ்ச காலம் கிடப்பில் போட்டு..
ஸ்ஸ்... அப்பப்பா ரெம்ப கண்ண கட்ட வைக்றீங்களே..!
- கொடும்பாவி

R.Gopi said...

இவ்வுலகில் - அண்ணனும் நிரந்தரம் இல்லை, அண்ணனின் திண்ணையும் நிரந்தரம் இல்லை என்று அவருக்கு யாராவது புரிய வையுங்களேன்.

எனக்கு ஒரு சந்தேகம். அவரு ஒடம்பு சரியாயிடுச்சா?? அப்படின்னா, இந்த விஷயத்துக்கு ஒரு கவிதை ஏன் எழுதல?? இல்லேன்னா இந்நேரம் :

கடலில் தூக்கி போட்டால் கட்டமரம் தான் என் துணை
கட்டமரம் இல்லை என்றால் கள்ளத்தோணி கஜாவின் துணையோடு கரை சேர்வேன்

அப்படின்னு தத்து பித்து கவிதை எல்லாம் எழுதி ரொம்ப நாள் ஆச்சேன்னு கேக்கறேன்

IdlyVadai said...

கலைஞர் பேட்டி அப்டேட்

technicalsathish said...

/ படங்கள்: துக்ளக் /
அப்போ அது உங்க சொந்த படம் இல்லயா... நான் கூட நீங்கதான் உக்காந்து வரைஞ்சிங்களோ நு நினைச்சுடேன்...

IdlyVadai said...

//அப்போ அது உங்க சொந்த படம் இல்லயா... நான் கூட நீங்கதான் உக்காந்து வரைஞ்சிங்களோ நு நினைச்சுடேன்...//

அவ்வளவு அப்பாவியா நீங்க :-)

technicalsathish said...

ஆமா இட்லிவடை நீங்க ADMK வா இல்ல DMK வா...
(சும்மா கமல் பொல அப்படி இப்படி திரும்பி அழுகாதிங்க. நான் ஒன்னும் உங்கள நல்லவரா கெட்டவரா நு கேக்கல...)

R.Gopi said...

We The People said...
அப்ப இந்த செயகுழு ஈழத்தமிழர் பிரச்சனைக்காக இல்லையா?? இவரோட ஆட்சி பிரச்சனைக்காகவா...சாரிபா உங்களையெல்லாம் தப்பா நினைச்சுட்டேன் :((((
--------------------------------
அடிச்சார் பாருங்க சூப்பர் சிக்ஸர்

Sethu Raman said...

திண்ணை காலியானால் கூட ஒருத்தரும்
உள்ளே வர முடியாதபடி, எல்லா இடத்திலேயும், ஆளுங்களையும், சாமாங்களையும் போட்டுப் பரத்தி வச்சிருக்கிறாரே! யாரு
வர முடியும் இந்த வீட்டுக்குள்ளே, ஒரு கொம்பனாலேயும் நுழையக்கூட முடியாது!!
ஆமாம், இப்போ என்னதான் சொல்ல
வராரு?

அறிவிலி said...

இட்லி வடை பயங்கர சாமார்த்தியம்ப்பா..

நாங்கூட, என்னடா? இந்த போஸ்டுக்கு சம்பந்தமே இல்லாத "மெத்தட் ஆக்டர்" திரைத்துளி கமெண்ட் வந்திருக்கேன்னு பார்த்தேன்.

அப்றந்தான் உள்ளர்த்தம் புரிஞ்சுது.
சாம் ஆண்டர்ஸனால் எப்படி தமிழ் சினிமாவுக்கு எந்த பிரயயோஜனமும் இல்லையோ அதே மாதிரி அண்ணணால் ஈழத்தமிழர்களுக்கும் எந்த ........ இல்லை அப்படின்னு சொல்லாம சொல்லிட்டீங்க.

அந்த பட கேமரா மேனுக்கும் மற்ற டெக்னீசியன்களுக்கும் உலகளாவிய பொறுமைக்காக நோபெல் பரிசே கொடுக்கலாம். ஜேகே ரித்தீஷ் ஜாக்கிரதை!!!!.

neysamy said...

Karunanidhi has correctly under- stood the secret deal of Ramadoss with Jaya to topple DMK Govt.He has shown his maturity in the Srilanka issue ahas taken correct decision.

கிரி said...

//இதே போல் சேது சமுத்திர திட்ட பந்துக்கும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்//

ஹலோ! இதெல்லாம் மற்றவங்களுக்கு தான்.... சின்ன புள்ள தனமா கேட்குறீங்க ;-)

Anonymous said...

An Ettappan 'KARUNA' for Ealam.
An Ettappan 'KARUNA'NIDHI for TN.

Anonymous said...

// இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" //


ராஜ பக்ஷே , ரணில் , ஆனந்த சங்கரி, டக்ள்ஸ், இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்திரிப்பார்கள்(பிரபாகரன் கூட) !

முல்லைத் தீவில் எப்போது குண்டு விழுமோ என்ற நிலையில் தவிக்கும் தமிழரின் சாபம் சும்மா விடாது!

ஓட்டுப் போட்ட ஒகேனேக்கல் தமிழருக்கே எட்டாப்பன் வேலை செய்தவர்! ஈழத் தமிழனுக்கு....

Vedantha Desika Dasan said...

For Karunanidhi's statement(al)s, i think this blog need not give so much publicity. Even Karunanidhi won't give much seriousness to his statements nowadays!

vinayaga said...

aதமிழர்களே... தமிழர்களே... உங்களை தூக்கி யார் கடலில் போட்டாலும் கலங்க மாட்டேன். உங்கள் பிணத்தை கட்டு மரமாக்கி பயணம் செய்வேன். என் குடும்பமும் பயணம் செய்யலாம்.

Kots said...

கலைஞர் சொல்வதை எல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க அதை வடிவேல் காமெடி சீனாக நினைத்து சிரித்து மறந்து விடுங்க ... கலைஞருக்கு அவருடைய ஆட்சியும் குடும்பமும் தான் முக்கியம் ஈழ தமிழர்கள் பற்றியும் தமிழ் நாடு தமிழர்கள் பற்றியும் அவருக்கு அக்கறை இல்லை. இவர் ஆட்சிய கவிழ்க்க சதி பன்றங்கலாம் (கேட்கிறவன் எல்லாம் கேன பையான்னு நினைச்சிட்டார் போல ) அடுத்த தேர்தலில் மக்களே இவரை கவிழ்த்து விடுவாங்க ... இவர் கட்சி மந்திரிகள் ராஜினாமா செய்ய மாட்டார்களாம் ... (இதற்கு முன்னால் இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தால் இனியும் இந்த அரசு தேவையா என்று சொன்னவர் இவர் ) இவர் நாடகம் எத்தனை நாள் நீடிக்கும் என்று பார்க்கலாம்.