பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 25, 2009

கலைமாமணி 2009அடுத்த வருடம் விருது பெறும் கலைஞர்கள் பட்டியல் கீழே....

சிறந்த தெருக்கூத்துக் கலைஞர் - கவிஞர் கனிமொழி கருணாநிதி ( தெருக்கூத்தை நகரத்துக்கு கொண்டுவந்ததற்காக )
சிறந்த தொகுப்புரை(அரசியல்) : கயல்விழி அழகிரி
சிறந்த தொகுப்புரை(சின்னத்திரை) : சின்மையீ ( கடைசியில் புரியாமல் ’பை’ சொல்லுவதற்காக )
சிறந்த புது’பெரும்’நடிகை : நமிதா
சிறந்த பழம்’பெரும்’ திரைப்பட நடிகை: - ஷகிலா
சிறந்த நடிகர் : குறளரசன் ( சிம்புவின் தம்பி, இவரை எப்படி பாப்புலர் ஆக்குவது ? )
சிறந்த நீச்சல் திறன் கலைஞர் : கலைஞரின் டாக்டர் ( கண்ணீரில் நீந்தி வந்து ஆப்பரேஷன் செய்ததற்காக )
சிறந்த குழந்தை நட்சத்திரம் - யாத்ரா ( இவர் மட்டும் தான் பாக்கி )
சிறந்த (ஏடாகூட பேச்சுத்திறன்) இயக்குனர் : சீமான்
சிறந்த குதலைக் கவிஞர் - ஹரன் பிரசன்னா ( ’வேண்டாம்’ என்று 575758 க்கு SMS அனுப்பினால் கவிதை வரும் )
சிறந்த டப்பிங் கலைஞர் - கீ.வீரமணி ( முரசொலியில் வருவதை விடுதலையில் டப் செய்வதற்காக )
சிறந்த ஜால்ரா கலைஞர்கள் - தமிழ் படத்துக்கு வசனம் எழுதும் தமிழ் எழுத்தாளர்கள்.
சிறந்த திரைப்பட வசனகர்த்தா - சாரு நிவேதிதா ( ஏன் தமிழ் படத்துக்கு எழுதுவதில்லை என்று சொந்த வசனம் எழுதுவதால் )
சிறந்த ’புகைப்படக் கலைஞர்’ - தயாநிதி மாறன் ( எல்லா புகைப்படத்திலும் கலைஞர் பக்கத்தில் இருப்பதால் )
சிறந்த சினிமா பி.ஆர்.ஓ - ஜெயமோகன் ( படத்தை விட கேள்வி பதிலில் அதிகம் படம் காட்டுவதற்கு )

பொற்கிழி பெறுவோர் பட்டியல்
சிறந்த கலை குழு - மானாட மையிலாட குழுவினர் ( கலா இருக்கும் குழு கலைக்குழு )
சிறந்த நாடகக் குழு - வைகோ, ராமதாஸ், திருமா.

மேலும் சிபாரிசுகள் இருந்தால் வாசகர்கள் ’தாராளமாக’ சொல்லலாம். சிறந்த சிபாரிசுக்கு பரிசு உண்டு :-)

46 Comments:

Nilofer Anbarasu said...

//சிறந்த தொகுப்புரை(அரசியல்) : தேன்மொழி அழகிரி//
கயல்விழி அழகிரி?

அப்பாவி மனிதன் said...

" அடுத்த தேர்தல் தி மு க .. பிரச்சாரம் : நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கலைமாமாமாணி பட்டம் இலவசம் ."

பி.கு : இந்த மாதிரி கண்டவங்களுக்கும் குடுத்து உண்மையான ஞானிகளை கேவல படுத்ததீர்கள்

IdlyVadai said...

//கயல்விழி அழகிரி?//

நன்றி. இல்லை இதற்கு வேற திட்டுவாங்க

கிஷோர் said...

சிறந்த சத்திரம்: கிழக்கு மொட்டை மாடிக்கூட்டம் :)

M Arunachalam said...

IV,

Forget about Kalaimaamani award. It seems anyone can purcahse the same from Govt.'s Trade Fair in Island Grounds.

If we have to give a "KALLA MAAMANI 2009" award, who will be getting it?

அப்பாவி மனிதன் said...

சிறந்த தயாரிப்பாளர் : உதயநிதி ( தயாநிதி அழகிரி கவனிக்கவும் )
சிறந்த எழுத்தாளர் : அது நம்ம யெல்லொ கவிங்கர் தான் ( ஊழியின் ஊசை )
சிறந்த பேச்சாளர் : திரு சீமான் அவர்கள்
சிறந்த ஸர்கஸ் வீரர் : ராமாதாசு அய்யா அவர்கள்
அமைதிக்காண விருது : உங்களுக்கே தெரியும்
சிறந்த மொழிபெயர்ப்பாளர் : திரு தங்க பாலு ( காரணம் அனைவருக்கும் தெரியும் )

சிவா said...

மிகவும் வில்லங்கமான இடத்தில் இட்லிவடை கைவைத்து விட்டார், இதுல நாங்க வேற சிபாரிசு செய்யனுமாம்...

ஆளைவிடுங்க... (ஏன்னா நாங்க பேச்சுலர் இல்ல)

இந்த தைரியம் இட்லிவடைக்கு மட்டும்தான் வரும்... சாம்பார்வடை ஆகாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்..

சும்மா தமாஷ்தான் இட்லிவடை..
இதுக்கெல்லாம் பயப்படகூடாது..

சிவா said...

//( காரணம் அனைவருக்கும் தெரியும் )//

காரணத்த சொல்லுங்கப்பா, அப்பதானே நாலுபேருக்கு பளிச்சுன்னு தெரியும்..

ஏன்னா அந்த நாலு பேருல நானும் ஒருத்தன்!!!

R.Gopi said...

சிறந்த பிலிம் காட்டுபவர் - தங்கர் பச்சான்

சிறந்த முன்னாள் நடிகர் - மு.க.முத்து

சிறந்த ஜல்லி கவிஞர் - ஜெகத்ரட்சகன் (கலைஞரை பற்றி சிறந்த கவிதை நடை அறிக்கை எழுதியவர்)

சிறந்த உடன்பாடு - காடு வெட்டி குரு விடுதலை

முழுசா யாருமே பாக்காத படம் - உளியின் ஓசை (சிறப்பு விருது)

சிறந்த பகுத்தறிவு ஆடை - மஞ்சள் துண்டு

சிறந்த வாகனம் - கட்டுமரம் மற்றும் தோணி

புது பட்டம் - முத்தமிழ் வித்தகர், தமிழ்நாட்டை வித்தவர்

சந்திரமௌளீஸ்வரன் said...

சிறந்த தைரியசாலி: இட்லிவடை

சிறந்த புலம்பலாளர்: சாரு நிவேதிதா

சிறந்த பயணி: ப்ரணாப் முகர்ஜி

சிறந்த ஏமாளி: எல்லா இந்தியர்களும் (அரசியல் வாதிகள் நீங்கலாக)

நாரத முனி said...

Hahahahah Vaalikki award illayaa?????

சிவா said...

சீட்டு வாங்க கியூவுல நிக்கிராங்கய்யா!!! "பூச்சோங்" தொகுதிக்கு தேர்தல் வரப்ப நான் வந்து சீட்டு வாங்கிக்கிறேன், இப்ப இங்கிருந்து ஜகா வாங்கிக்கிறேன்...

R.Gopi said...

M Arunachalam said...

"If we have to give a "KALLA MAAMANI 2009" award, who will be getting it?"
---------------------------------

முத்தமிழ் கவியே வருக
வந்து இந்த விருதை பெறுக

அப்பாவி மனிதன் said...

//( காரணம் அனைவருக்கும் தெரியும் )//

காரணத்த சொல்லுங்கப்பா, அப்பதானே நாலுபேருக்கு பளிச்சுன்னு தெரியும்..

ஏன்னா அந்த நாலு பேருல நானும் ஒருத்தன்!!!
//
எது சொன்னாலும் தலைமையை கேட்டு அப்படியே மொழிபெயர்பதுக்கு

R.Gopi said...

நாரத முனி said...
Hahahahah Vaalikki award illayaa?????
--------------------------------
நாரதமுனி

நல்ல நேரத்துல ஞாபகப்படுத்துனீங்க தல. வாலி எழுதுனாரு பாருங்க .......

"தலைவா உன் வருகை, கண்டதும் தூக்கினேன் என் இருகை"

இதுக்காகவே 50 ஆஸ்கர் குடுக்கலாமே!!

அப்பாவி மனிதன் said...

நாரத முனி said...
Hahahahah Vaalikki award illayaa?????

வாலி , வைரமுத்து & ப.விஜய் " சிறந்த காவியரங்க ஜால்ராக்கள் ( தனித்து யாரையும் கூறமுடியவில்லை )

Anonymous said...

சிறந்த அறிக்கை (சிறப்பு விருது) : கலைஞர்
----------------------------------
வழ‌க்க‌‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், கா‌வ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் மோதல் உருவாகாதா, அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Anonymous said...

எப்பிடியும் ஆட்டோ வருவது நிச்சயம்:)
லிஸ்டில் வைரமுத்து,வாலி எல்லாம் காணும்?...பாவமில்லையா?

மணிகண்டன் said...

2007 ல சிலம்பரசன் வாங்கிட்டாரு !

அந்த வருஷம் பார்த்திபன் பேசினது :-

நடிகர் பார்த்திபன், விருது பெற்றோர் சார்பில் நன்றி உரை வழங்கினார். அவர் பேசுகையில், இந்த விருது தாய்ப்பாலை விட சுத்தமானது. இதைப் போன்ற பொருள் வேறு எதுவும் இருக்க முடியாது.

Anonymous said...

ஒரே ஒரு டான்ஸ் புரோகிராம் கொடுத்தர் ஐஸ்வ்ர்யா ரஜினி தனுஷ்.
அதுக்கே கலைமாமணி விருது!
நல்ல காலம், அவர் இன்னொரு டான்ஸ் புரோகிராம் கொடுக்கவில்லை.
கொடுத்து இருந்தால் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைச்சிருக்கும்.

Anonymous said...

அவ்வை நடராஜன் போன்ற அறிஞர் இருப்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்தது.
குட்டி ரேவதி ஞாபகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.வந்திருந்தால் அவ்வைக்கு கிடைச்சிருக்காது.

Anonymous said...

தகுதி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது கேவலம். அதை விடக் கேவலம் வெட்கமில்லாமல் விருது வாங்கிக்கொள்வ்துதான்.

Anonymous said...

Now Aishwarya Dhanush, next Dhanush.

Then,

Sowntharya XXX, next XXX

Vedantha Desika Dasan said...

Regarding Awards, you please find my comments in "Tributes to Nagesh". I repeat them for the sake of ready reference.

"Awards" are bought or given on political grounds.

So, don't care about these awards.

ஜீவா said...

:)

ஜீவா said...

nice one :))

MiniLorry said...

சிறந்த நோயாளி(முதுகுவலி இல்லை):...
சிறந்த வாசிப்பாளர்: மின்சார...
சிறந்த புதுவரவு(யாருக்கும் பிடிக்காத): சிரிபொலி...
சிறந்த மொழிபெயர்ப்பாளர்: தயா...

Anonymous said...

For " IDLY VADAI " as the best copy cat -
Suppamani

Anonymous said...

For " IDLY VADAI " as the best copy cat -
Suppamani

சோம்பேறி said...

இந்த வருஷம் தான் நமீதாக்கு தரலை. அடுத்த வருஷமும் கிடையாதா?
ஷகிலாவுக்கு எந்த விதத்துல அவுங்க குறைஞ்சு போயிட்டாங்க?

வாழ் நாள் சாதனை விருதை ஷகிலாவுக்கு குடுத்துட்டு, எங்க நமீ க்கு ஏதாவது குடுங்க..

Prabhu Swaminathan said...

really funny :)

Anonymous said...

அற்புத கலைஞர் சிபிராஜுக்கு கொடுக்கலை. இலக்கிய பேச்சாளர் வெற்றிகொண்டானுக்கு கொடுக்கலை.

ராம கிருஷ்ணன் said...

அறுவை தாங்கமுடியலீங்கன்னா. டைமிங் தவிர வேறொன்றும் இல்லை. வரவர து..த்தூ..துக்ளக் மாதிரி ஆயிட்டே வரீங்கன்னா!

Anonymous said...

தமிழச்சியை மறந்து போய்ட்டாங்களா, தலீவா?

கிரி said...

ஹா ஹா ஹா செம காமெடி :-)))

இவங்களும் இவங்க விருதுகளும்.. மனுசன டெர்ரர் ஆக்காம விட மாட்டாங்க போல

யாருக்கு வேணா விருது! வாங்கோ! வாங்கோ!!

இது கலைமாமணியா! இல்ல கலை"மாங்கா"மணியா!

சங்கு மாமா said...

நம்ம திருமாவளவனை (அதாங்க..வி.சிறுத்தைகள்) மறந்துட்டீங்களே..?? சென்னை பூரா அவரை சேகுவேரா வுக்கு சமமா போஸ்டர் அடிச்சி ஒட்டி இருக்காங்களே....சேகுவேரா பாத்தாக்க நாண்டுகிட்டு .... பேசாம தெருமா..ம்மன்னிக்கணும்., திருமாவளவனுக்கு ஏதாவது கேட்டகரில கலை மாமணி விருது குடுங்கய்யா...

நேசன்..., said...

சிறந்த தமிழக விருது : கலைமாமணி
சிறந்த வசனம் விருது : கண்கள் பனித்தது : இதயம் இனித்தது
சிறந்த வீரச் செயல் விருது : ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டே பாலம் திறப்பது.

lakshmi said...

its very worst to give kalaimamani like nayanthara and iswarya thanush, i dont know where is this world going on, anybody knows?

R.Gopi said...

சிறந்த காமெடி வசனம் / வசனகர்த்தா : வீரபாண்டி ஆறுமுகம்

வசனம் : முதல் அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

R.Gopi said...

"மானாட மயிலாட" புகழ் நமீதாவுக்கு பத்மவிபூஷன் எப்போ??

நமீதா மச்சான்ஸ்.. said...

ஹை மச்சான்ஸ்...ரொம்ப அலையாதீங்க மச்சான்ஸ்.... ஒரே ஒரு படம் இட்லி வடே கூட பண்ணிடறேன்..குத்தாட்டம் போடுறேன் மச்சான்ஸ்..அப்பறமா எனக்கு கலைஞர்ஜி கையிலே கலைமாமுனி விர்ர்து குடுங்கோ மச்சான்ஸ்....இப்போ ஆஸ்பத்திரிலே இருந்து ஜெகன் மோகினி பாருங்கோ ஜி..

Arun said...

hahaha.. superappu..

Anonymous said...

மிக சிறந்த பாடல் : நாக்க முக்க நாக்க முக்க

Anonymous said...

Nachchu nu oru podu pottinga..........oru padathukku 43 comment............ivangathan kodukkaranga na vangikkaravangalum eppadi koosama vangikkaranga..........

Anonymous said...

perumaal padathula paattu paadiya karunanidhi vaarisukku sirantha paadagar viruthu?

rksrini said...

best actor -dr.kalaignar
best supporting actor -veeramani
best public service -(nayan)thara
best sound - also kalaingnar
best singer - arivu nidhi
best stunt director -alagiri
best stunt artists -b&W dmk members
best politician -j.j
best free - 10000 per head in tirumanagalam
best election-also tirumangalam
best press - nakkheran
best news paper -murasoli(for non selling)
best weekly- ananda vikatan(full advertisement)
best freedom fighter -tiruma valavan
best chorus -also
to be continued