பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 15, 2009

தேர்தல் 2009 - சென்னை (தெற்கு) குறிப்புகள்

சென்னை (தெற்கு) நாடாளுமன்றத் தொகுதி குறிப்புகள்

சென்னை சென்னை (தெற்கு) நாடாளுமன்றத் தொகுதி இத்தனை ஆண்டுகால குடியரசு வரலாற்றில் மிக முக்கிய தொகுதி இந்தியாவின் இரண்டாவது நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாஞ்சில் மனோகரன் , அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், முன்னாள் ராஷடிரபதி ஆர். வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா போன்ற விஐபிகளின் தொகுதி.

இந்த்த் தொகுதியின் இப்போதைய உறுப்பினர் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு. இவர் 1996 லிருந்து இந்த்த் தொகுதியை தன் கோட்டையாக வைத்திருக்கிறார்
தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர்,தாம்பரம் சட்ட மன்றத் தொகுதிகள் இதிலே 2004ல் நடந்த தேர்தலில் டிஆர் பாலு அதிமுகவின் பதர் சையீதை 220740 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்
இதோ தேர்தல் நெருங்குகிறது....விரைவில் மக்களிடம் பேசி அவர்கள் என்ன நினைகிறார்கள் என்று சொல்லுகிறேன்.
- சந்தரசேகர்
கோட்டையாக வைத்திருப்பவர் கோட்டைவிடுவாரா ?

14 Comments:

R.Gopi said...

கோட்டையாக வைத்திருப்பவர் கோட்டைவிடுவாரா ?
---------------------------------
இந்த தடவ கோட்ட (கோட்) கழட்டிடுவாங்கன்னு நெனக்கறேன்.

வந்துட்டான்யா said...

கிண்டி மேம்பாலம், குரோம்பேட்டை பாலம் என்று சிறியதும் பெரியதுமாக பாலு என்னென்னமோ செய்திருக்கிறார் (ஊழலையும் சேர்த்து தான்!!). இந்த முறை தனது சொந்த செல்வாக்கால் எதையும் செய்ய முடியும் என்று தோணவில்லை - தமிழ் நாட்டில் எந்த கட்சி பெருவாரியான தொகுதிகளை ஜெயிக்கிறதோ, அந்த கட்சி தான் தென் சென்னை தொகுதியையும் வெல்லும்.

vasans valaipookkal said...

நிச்சயம் இந்த முறையும் ஜெயம் பாலுவுக்குத்தான்

கத்திபாராவா? கொக்கா?

அமர் said...

இந்த தடவ கோட்ட (கோட்) கழட்டிடுவாங்கன்னு நெனக்கறேன் என்று சொல்பவர்கள் பொதுவாக தங்கள் ஆசைகளை தெரிவிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் தொகுதிகளின் உண்மை நிலையை அறிய முடியாது. உங்கள் தொகுதி முகவர்களும் விமர்சனம் செயபவர்களும் நடுவு நிலைமையோடு செயல்பட்டால்தான் நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த செயலை சரியாகவும் வெற்றிகரமாகவும் செய்ய முடியும்.

Krish said...

எத்தனை முறை தொகுதிக்கு வந்துருப்பருங்கோ? முக்கால் வாசி நேரம் டெல்லி இலே தானா ஜாகை அவருக்கு!

Anonymous said...

What has been the contribution of aiadmk and jayalalitha to chennai.

nothing......

atleast these guys do something and make the life of chennaities comfortable..

iam sure dmk will win all seats in chennai

they deserve atleast for the flyovers they have built

Ravikumar, T Nagar said...

I think Baalu will win this time too. THere are no strong anti incumbency as far as i know against TRB in this area, more over JJ has has strong anti Hindu sentiment in this area esp after Kanchi Sankaracharya arrest. You can test it for yourself ,Infact if not S Ve Shekar who was a localite they would have not won Mylapore also. Regardin T.Nagar the current M.L.A kalaiselvan of ADMK seems to be missing man in his constituency despite being a non M.L.A Pazhakadai Anbazhagan seems to have better say in the constituency...
The development in Velachery,Saida pet till Tambaram is seen as n TRB's contribution. He has a another advantage of being close to people i myself has seen him in the constituency on the other hand we have never seen any of the other political personalites on the ground.
Bottom Line, my view is TRB will win with a considerable majaority may not be like what he won in the previous elections

Rgds
Ravikumar

arun kumar said...

baalu will win.... now he is an well known person to tamilnadu...
he allocated more highway plans to tn..that plans will give succes to him..

Sethu Raman said...

சேது சமுத்திரத்திட்ட ஆணவப் பேச்சுகளும் விஷயம் உச்ச நீதி மன்றத்தில் இருக்கும்போதே
அவர் ஏதோ இது தீர்ந்து போன விஷயம் என்ற மாதிரி நடப்பதும் அவருக்கு எமனாக அமையும்
என்று தெரிகிறது! சரியான எதிராளி நிறுத்தப்பட்டால் கஷ்டம் தான்!

M Arunachalam said...

//What has been the contribution of aiadmk and jayalalitha to chennai.//

But for Jaya & her Govt.'s strict implementation of rain harvesting scheme, Chennai would have been reeling under water scarcity for the past five or six years. Because of their good administration - at least in Chennai, by AIADMK during their last rule, Chennaites voted for AIADMK in large numbers in 2006 Assembly elections & helping them to win, I think, half the Chennai constituencies last time. Till then Chennai was considered as DMK's fort, which was broken by AIADMK during 2006 assembly elections.

I think people should not forget the fact that DMK, in spite of its strong alliances in 2006 elections, has NOT won majority seats in TN Assembly & as of today, DMK is a minority Govt. whether Karunanidhi likes it or not.

Incidentally, 2006 election also came "after" the arrest episode of Kanchi Sankaracharyars in Nov.'04. So, there seems to be no connection between that arrest & how the South Chennai voters have voted for AIADMK in 2006.

Even though T.R.Baalu has done some activities like fly-overs construction etc., I think Chennai South will also be voting with the rest of the country on issues like National Security, Price Rice, etc.

SathyaRam said...

I think Baalu will lose. The bridges in T.Nagar are a disaster. It also depends on which way BJP votes go. Again, you have to take in mind, that people in this constituency may feel more irritated with dynasty style politics of Karuna & co.

Anbezhilan said...

உண்மையான சர்வே என்பது மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.
சர்வே எடுப்பவரின் ஆசைகளை மக்களின் மனதில் திணித்து பதில் வரவழைக்கக் கூடாது.
இட்லிவடை குழு சர்வே எடுக்கிறது என்றால் நேர்மையை எதிர்பார்ப்பதில் நெருடல் இருக்கத்தான் செய்கிறது.
ஏன் எனில் இட்லிவடை பதிவுகள் எப்பொழுதும் ஒருதலை பட்சமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒத்த மனம் கொண்ட ஒரு குழுவினர் பதிவுகள் இடுவதும் அதற்கு, அதே விஷயங்களில் ஒத்த மனம் கொண்ட ஒரு சிலர் பாராட்டி பின்னூட்டம் இடுவதும் தான் இங்கு நடந்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடுநிலைமையோடு ஒரு சர்வே வருமானால்.விஷ்ணு பரமாத்மாவே எனக்கு நேரில்வந்து தரிசனம் தந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அந்த அளவு மகிழ்ச்சி அடைவேன்.
சர்வே எடுப்பவர் இரண்டு விதமாக மக்களிடம் கேள்வி கேட்கலாம்.
ஒரு வேட்பாளர் பிடிக்கவில்லைஎன்றால் அவர் தொகுதிக்கு செய்த பல நல்ல விஷயங்களை மூடி மறைத்துவிட்டு அவர் பலவீனங்களை மட்டும் எடுத்துசொல்லி, "இப்படிப்பட்டவர் இந்தமுறை ஜெயிக்க மாட்டார் தானே?" என்று கேட்கலாம்.
அல்லது ஒரு வேட்பாளர் தனக்கு பிடித்த கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் பலவீனங்களையெல்லாம் மூடிமறைத்துவிட்டு, எதிர்கட்சியைப் பற்றி மட்டமாக சொல்லி "அதனால் இந்த முறை இவர் தானே ஜெயிப்பார் ?" என்று கேட்கலாம்.
இதையெல்லாம் விட இன்னொரு நேர்மையான விதம் ஒன்றிருக்கிறது. தன் எண்ணங்களை மக்களிடம் திணிக்காமல் " யார் இந்தமுறை ஜெயிப்பார் ?" என்று மட்டும் கேட்பது.
கேள்வி கேட்கப்படுபவரை தேர்ந்தெடுப்பதிலும் நடுநிலைமை வேண்டும்.
"இந்த ஆள பாத்தா அந்த வேட்பாளருக்கு சாதகமா பேசுவார் போல இருக்கு. அதனால இவன் வேண்டாம்," என்று ஒதுக்கி தள்ளுவதும் , "இந்த ஆள் நமக்கு சாதகமான பதிலைத்தான் தருவான் இவனை கேட்போம் ", என்று ஒருவரை தேர்ந்தெடுப்பதும் தவிர்க்கப்படலாம்.
மொத்தத்தில், நாம் விரும்பும்படி சர்வே முடிவு இருக்கவேண்டும் என்ற நினைப்பில் சர்வே எடுக்காமல், மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சர்வே எடுக்கப்படுமானால் இட்லிவடையின் மதிப்பு மேலும் உயரும்.

மெனக்கெட்டு said...

அப்படியா, பாலு MP தேர்தல்ல ஜெயிப்பாரா?

இவர் (கொஞ்ச நாள்) தமிழ்நாட்டு அமைச்சர் ஆவார் என்று கேள்வி!!

Anonymous said...

BJP too has a chance in South Chennai.